"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, June 5, 2024

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 16

                                                             இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு  


நாடி அருளாளர்:-  இப்ப நீங்க சொன்னிங்க இல்லையா, ஆசைகள் ஆசைகள் போக போக இந்த மெமரி கார்டுல இருக்குறது ஃபுல் ஆகிவிடும்.

குருநாதர்:- அப்பனே அனைத்தும் ஒரு அடியில் அப்பனே சிக்கிக் கொள்ளும் என்பேன். அதனால்தான் அப்பனே அனைத்தும் அப்பனே வந்து விடும். ஆனால் ஒரு அளவுக்குத்தான் சேகரிக்கும்.  அளவுக்கு மிஞ்சினால் அப்பனே எது என்று கூற அனைத்தும் அழிந்து விடும். மீண்டும் எழுந்திருக்க முடியாது. அப்பனே சொல்லி விட்டேன் அதனால் ஆசையை குறையுங்கள். குறையுங்கள் அப்பனே. எதனையும் மனதில் நினைக்க வேண்டாம். அப்படியே இறைவா என்று நினைத்துக் கொள்ளுங்கள் அப்பனே. மனதை சாந்தி அடையுங்கள் அதாவது சாந்திபடுத்துங்கள் அப்பனே. தியானம் செய்யுங்கள் அப்பனே மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் அப்பனே. தானாகவே குறைந்துவிடும். அப்பனே அவ் பதிவுகள் குறைய குறைய நீ வெற்றி ஆகலாம் என்பேன். ஆனால் அவ் பதிவு அதிகரிக்க அதிகரிக்க கடைசியில் பார்த்தால் எங்கோ போய்விடுவாய். ஆளே தெரியாமல் போய்விடுவாய்.

அடியவர்:- ( உரையாடல்கள்) அப்ப ஒரு அளவுக்குதான் ஸ்டோரேஜ். புல்லா ஆயிட்டா முடிஞ்சு போச்சு. யாராலும் காப்பாத்த முடியாது அப்ப புரியுதுங்களா.

குருநாதர்:- அப்பனே வாசி ( யோகம் ) ஒரே வார்த்தையில்  சொல்கின்றேன் அப்பனே. இதை நிச்சயம் கூற வேண்டும்?

அடியவர் 1:- வாசியோகத்தை யாராவது கூறுங்கள். 

அடியவர் 2:-  சிவம் தான் வாசி

குருநாதர்:- அப்பனே உண்மையே. அப்பனை இடது நாசியை மூடு. முன்னே இருப்பவனை சொல்கின்றேன். 

அடியவர்:- ( இடது நாசியை மூடினார்)

குருநாதர்:- அப்பனே இதனால் வாசி யோகம் பயிற்சியே அப்பனே இப்பொழுது எதில் இருந்து மூச்சு வருகின்றது.?

அடியவர் 1:- வலதில் இருந்து. ( வலது நாசி)

அடியவர 2:- சூரிய நாடியில் இருந்து

குருநாதர்:-  அப்பனே இதில் மூச்சு பின்  இப்படியே அப்படியே ஒரே வழியில் ( வலது நாசியில் மட்டும்) மூச்சை விட்டு ஒருவன் ( எப்போதும் சுவாசிக்கின்றானோ) அவன்தான் ஞானியாவான் என்பேன் அப்பனே. மற்றவர்கள் ஆகவே முடியாது என்பேன் அப்பனே. கர்மம் கூட இப்படித்தான் அப்பனே வலது நாசியில் வந்து விட்டாலே போதுமானது அப்பா அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய முடியாது அப்பா. இதை உங்களால் பண்புடனே செய்ய முடியுமா என்ன? அப்பறம் நிச்சயம் முடியாது அப்பா. இது தான் அப்பனே யோகம் வசியோகம்.  இதனால் பல நபருக்கு இது தெரிவதே இல்லை அப்பனே.

அடியவர்:- ஏழு எட்டு வருசமா (எனக்கு) இயற்கையாக அப்படி (வலது நாசியில் மட்டும் சுவாசம் எப்போதும் ) போற மாதிரி தோணுது.

குருநாதர்:- அப்பனே நம்பப்போவதில்லை யான் அப்பனே.

அடியவர்:- சரி….

குருநாதர்:-  அப்பனே அப்படிபோய் விட்டால் உனக்கு அனைத்துமே கிடைத்திருக்குமே? ஏன் கிடைக்கவில்லை அப்பனே? கிடைக்காததால் இங்கு வந்து கொண்டிருக்கின்றாய்  அப்பனே. பின் அப்படி வந்து விட்டால் நீ அங்கேயே இருந்திருப்பாய் என்பேன் அப்பனே.  எதுவுமே தேவை இல்லை என்று சொல்லியிருப்பாய் அப்பனே. ஆசைகள் கூட அப்பனே வேண்டாம் என்று சொல்லி விட்டு இருப்பாய் அப்பனே. புரிகின்றதா அப்பனே. அவ் நாசியில் (வலது நாசியில் மட்டும் ) பின் வந்து கொண்டே இருந்தால் அப்பனே ஆசைகள் போய்விடும் அப்பா. எவையும் வேண்டாம் என்று அப்பனே அமைதியான இடத்தைத் தேடி அப்பனே கண்ணுக்கு தெரியாமல் அப்பனே பின் சென்று விடுவான் அப்பனே. ஆனால் யாராவது உண்டா என்றால் சத்தியமாக இல்லை.

அடியவர் 1:- வலது சுவாசம் மட்டும் ஓடிட்கிட்டே இருக்கும்.

அடியவர் 2:- எதாவது செஞ்சுட போறீங்க. அவர் சொல்ரார். அதுவா வரனும். அது அதை (இடது சுவாசம்) நிறுத்துறதுக்காகதான்.

அடியவர் 3:- எனக்கு வலது சுவாசம் ஓடிஇருக்கு சில நேரங்களில்.

குருநாதர்:- அப்பனே ஆனாலும் அப்பனே பின் உன்னை நால்வர் வைத்து அப்பனே பார்க்க வேண்டியதான் அப்பனே. அவ்ளோதான் அப்பனே.

நாடி அருளாளர்:- ( வலது நாசியில் மட்டும் சுவாசம் வருகின்றது என்று சொன்ன அடியவரை) அப்ப உனனை நாலு பேரை வைச்சு செக்தான் பண்ணனும் அப்டின்னு சொல்கின்றார் குருநாதர். யாராவது நாலு பேரை வைத்து….

அடியவர்கள்:- ( சிரிப்பு )

குருநாதர்:- அப்பனே வசிதன்னில்( வாசி யோகம்) இதுவே கடைசியாகும் என்பேன் அப்பனே. ஆனால் எதை எதையோ கற்றுக் கொடுக்கின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அப்பா! ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆனால் இதுவும் இறை அருள் இருந்தால் இருந்தால் தான் வரும் அப்பா சொல்லி விட்டேன். அப்பனே ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுது பார் அப்பனே. ( மூச்சு ) இடது வலது அப்பனே மாறி மாறி வரும் என்பேன் அப்பனே. அதுபோலத்தான் வாழ்க்கை என்பேன் அப்பனே. வருத்தங்களும் எவை என்று கூற மாறி மாறித்தான் வரும் அப்பனே.சிறிது நேரம் தொழில். சில நேரம் தொழில் இல்லை. அப்பனே திருமணம் செய்தாலும் சில தரித்திரங்கள். அனைத்தும் அப்பனே சமநிலை படுத்தவேண்டும் என்றால் அப்பனே இதை யாங்கள் தான் கொடுக்க வேண்டும் எனபேன் அப்பனே. (சித்தர்கள் யாங்கள் அப்படி அருள் கொடுக்கும் போது)  யான் சொன்னேனே ( மூளையில் உள்ள ) அச்செல்லானது அப்பனே பின் (உடலை விட்டு ) பறந்துவிடும் என்பேன் அவ்வளவுதான். அப்பனே புதுமையான விசயத்தை சொல்லிவிட்டேன்.

அடியவர்:- காகபுஜண்டர் முறையில சில தீட்சைகள் கொடுக்கிறேன். அதை கொடுக்கலாமா? நிறுத்திக்கலாமா?

குருநாதர்:- அப்பனே என்ன தீட்சைகள் கொடுக்கின்றாய் அப்பனே. உன்னால் எதை என்றும் அறிய இங்கு ஒருவனுக்கு மரணகண்டம் இருக்கிறது அப்பனே. ஆனால் உன்னால் அவ் தீட்சை கொடுத்து அவனை காப்பாற்ற முடியுமா என்ன சொல்?

அடியவர்:- முடியாது அப்பா.

குருநாதர்:-  அப்பனே அதற்கு எதுக்கு அப்பா தீட்சைகள்.  அப்பனே வேண்டுமென்றால் வாயில் பொய் கூறலாமே தவிர தீட்சையினால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. அதனால் அப்பனே மற்றவர்களுக்காக வாழ வேண்டும். இதுவே  முதல் தீட்சையப்பா.  இதை எத்தனை பேருக்கு நீ சொல்லி இருக்கிறாய் அப்பனே கூறு?

நாடி அருளாளர்:-  முதல் தீட்சை என்ன தெரியுங்களா? 

அடியவர்:- மற்றவர்களுக்காக வாழவேண்டும்.

நாடி அருளாளர்:- இதுதான் முதல் தீட்சை. எத்னை பேருக்கு இதை சொல்லி இருக்கின்றீர்கள் என்று கேட்கின்றார்

அடியவர்:-  அப்பதான் இறையே வேலை செய்யும்.

நாடி அருளாளர்:- ஆம்.

குருநாதர்:- அப்பனே அனைத்தும் பொய்கள் அப்பா. எந்தனுக்கு தெரியும் எந்தனக்கு தெரியும். என்ன தெரியும் அப்பனே? பொய் கூறத்தான் தெரியும் அப்பனே. இப்படிதான் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே.  எந்தனக்கு தெரியும் யான் செய்கின்றேன் என்று. ஆனாலும் அப்பனே இது தான் பொய் அப்பா.

அடியவர்:- ( உரையாடல்கள் )

குருநாதர்:- அதனை நம்பி போனால் அப்பனே முதல் தீட்சை என்ன கூறு.

அடியவர்:- அது காகபுஜண்டர் முறையில நீங்க சொன்ன மாதிரியே வலது சுவாசத்த ஒடவிடுவது.

குருநாதர்:- அப்பனே கர்மா இருந்து அப்பனே என்று கூற நிச்சயம் ஒட்ட முடியாது. இவை என்ன ஓட்டுவதற்கு வண்டியா அப்பனே?

அடியவர்கள்:- ( சிரிப்பு )

அடியவர்:- ஒரு இருபத்து நாலு நிமிசம் ஒரு மண்டலத்துக்கு வந்து சூரிய கதி.  நீங்க சொன்ன மாதிரி வலது சுவாசத்தை ஓட்டுறது. அது வந்து குயில் குத்துன்னு சொல்றாங்க புஜண்டர் முறையில அத கதியில எழுதுரது….

குருநாதர்:- அப்பனே ஏற்கனவே புசண்டனுக்கு ( மாமுனிவர் காகபுசண்டர் ) மனிதன் மீது கோபம் அப்பனே. ஆனால் அதை கற்றுக் கொண்டாலும் அப்பனே அவனுடைய வாழ்க்கை என்ன வென்று நீ விளக்க வேண்டும் அப்பனே. ஆனாலும் பின் கற்றுக் கொடுப்பது  சரியான வழியில் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பனே! அப்படி இல்லையென்றால் அப்படியே அமைதியாக இருக்க வேண்டும் அப்பனே. ஆனால் சரியான வழியில் கற்றுக் கொள்வதில்லை அப்பா.  கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதப்பா. அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய வண்டி ஓட்டு அப்பனே பொய்கள் ஆக ஓட்டிக் ஒட்டிக் கொண்டிருக்கிறாய்  இவ்வளவு  நேரம் அவ்ளோதான் அப்பனே.

அடியவர்:- இல்ல இல்ல தெரிஞ்சு கேக்குறேன் (அகத்தியர்) அப்பாகிட்ட.

குருநாதர்:- அப்பனே என்னென்னவோ சொன்னார்கள் எதை என்று கூற ஒன்றாவது நடந்ததா உனக்கு? இல்லை அப்பா. அப்பொழுதாவது தெரியக்கூடாதா அப்பனே என்று எல்லாமே பொய் என்று எல்லாமே? அப்பனே உன் உள் இருக்கும் சக்தியை முதலில் எழுப்பு அப்பனே.மற்றவர் பேச்சை கேட்டு விடாதே.

அடியவர்:- வடக்க போலாமா? அது ஞானம்.. என்ன மாதிரி என்ன பண்ணனும்.

குருநாதர்:- அப்பனே அமைதியாக இரு அப்பனே தருகின்றேன் அப்பனே.  என்றால் அப்பனே அனைத்தும் அவை செய்கின்றார்கள். இவை செய்கின்றார்கள் எல்லாம் சொல்லிச் சொல்லி அதை செய்து இதை செய்து கர்மா உன்னிடத்தில் ஏற்றி வைத்து விட்டார்கள் அப்பா. அவ்வளவுதான் அப்பனே.  சித்தர்கள் ஆசியோடு நிச்சயம் கொடுக்கப்படும் அப்பனே பொருத்திருக்க  வேண்டும்.

(இந்த வாக்கு பலருக்கும் அவர்கள் கர்ம நிலையை உணர்த்தும் வாக்கு. பலர் இது போல பயிற்சியை - வாசி யோகம், மந்திர தீட்சை, சிவ தீட்சை - என எடுத்து பிறர் கர்மாவை வாங்கும் நிலையே உள்ளது என்பதை உணர்க.)

அடியவர்:- ஜோதிடம் எதும் பார்ப்பேனா?

குருநாதர்:- அப்பனே ஜோதிட ம் என்றால் என்ன கூறு?.

அடியவர்:- தன்னுடைய ஜோதியை உணர்ந்தவனே ஜோதிடன்.

குருநாதர்:- அப்படி அப்படி உணர்ந்தவன் யாராவது இருக்கின்றானா என்ன?

அடியவர்:- இல்ல

குருநாதர்:- அப்பனே அப்பொழுது ஜோதிடம் என்பது என்ன?

அடியவர்:- அமைதி

குருநாதர்:- அப்பனே தன்னை அறிந்தவன் அப்பனே ஜோதிடத்தில் இப்பொழுதெல்லாம் கற்றுக் கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு பணத்திற்காகவே  அப்பனே செய்கின்றார்கள் அப்பனே. அப்படி செய்தால் அப்பனே கர்மாதான் அப்பா. கிரகங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா அப்படியே ஒரு கிரகத்தை பற்றி கேள். சொல்கின்றேன்.

அடியவர்:- ராகு கேது

குருநாதர்:- அப்பனே இதை அதிகாலை உணர்வாயாக. அனைவருக்குமே தெரிவிக்கின்றேன் அப்பனே. இவ் கிரகங்கள் மிக பெரிய கிரகங்கள் அப்பனே. ஆனால் கண்ணுக்கு தெரியாது. ஏன் தெரியாது என்பது கூட வருங்காலங்களில் எடுத்துரைக்கின்றேன்.

அடியவர்:- ஐயா உன் உள் இறை தரிசனம் காண்பாயாக என்று உத்தரவு குடுத்து இருக்காங்க (அகத்தியர்) அப்பா. எனக்கு என்ன எப்டின்னு தெரியல.

குருநாதர்:- அப்பனே குழந்தையாகப் பிறந்து வளர்ந்து  இப்படி ஆளாகி இருக்கின்றாய் அப்பனே. ஆனால் உடனடியாக கிடைத்து விடும் என்றால் எப்படி அப்பா கிடைக்கும் என்பேன் அப்பனே.

அடியவர்:- இல்ல அது எனக்கு தெரியாது அய்யா உத்தரவு. அதனால..

குருநாதர்:- அப்பனே இதை யான் செப்பிக் கொண்டிருக்கிறேன் அப்பனே எப்போது எதை கொடுக்க வேண்டுமோ அதை தானாகவே வரும் இந்த அப்பனே உன் கடமை செய்து வா. நான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். அப்பனே புரிந்து கொண்டு , இதனால் அப்பனே ஒரு மனிதனுக்கு எப்போது கஷ்டங்கள் வருகின்றது என்பதை நீ கூற வேண்டும்.?

அடியவர்:- அவருடைய தீய கர்ம வினை அதற்கான தண்டனையாதான் கஷ்டங்கள் வருது.

குருநாதர்:- அப்படி இப்படி வரும்பொழுது பரிகாரங்களால் அப்பனே செய்ய முடியுமா? விளக்க முடியுமா என்ன?

அடியவர்:- பரிகாரங்கள் அதனால நல்ல தீர்வு கிடைக்கிறது ரொம்ப (கஷ்டம்தான்)

குருநாதர்:- அப்பனே எதற்கு பரிகாரங்கள் அப்பா?

அடியவர்:- நான் செஞ்ச தப்புக்கு…  அதுக்கு எப்டி சொல்றதுங்க….

குருநாதர்:- அப்பனே பின் செய்த தவறுக்குத்தான் பரிகாரங்கள் என்பேன் அப்பனே. ஆனால் அப்பொழுது கூட தண்டனைகள் உண்டு என்பேன். சொல்லி விட்டேன். ஏன் எதற்காக ஒருவன் பரிகாரம் பின் செய்கிறான் என்றால் அப்பனே அவன் தவறுகள் செய்திருக்கின்றான் அப்பனே. ஆனால் பின் செய்த தவறுக்கு பரிகாரங்களால் போக்க முடியுமா? தண்டனை கொடுத்து பின் போக்க முடியுமா கூறு அப்பனே?

அடியவர்:- தண்டனை கொடுத்து போக்கிக்கிறது நல்லது.

குருநாதர்:- அப்பனே அதுபோலத்தான் சித்தர்கள் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் அப்பனே போதுமா?

குருநாதர்:- அதனால் இயக்குபவனும் அவனே அனைத்தும் நீ ஆட்டி , படைப்பதும் அதனால் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள். ஆனால் புரிந்து கொண்டால் இவைதான் என்று கூற எவை என்று கூற. அம்மையே ஈசனை நோக்கி பாடலை பாடி நின்று கொண்டிருப்பவளே.

அடியவர்:- ( அம்மை பாட ஆரம்பித்தார்)

ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

நம ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

வில்வத்தால் அர்ச்சித்தேன் விஷ்வேஷா காத்திடுவாய்.

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அகத் தீசாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

குருநாதர்:- அம்மையே உன்னை தெரியாமலேயே யான் ஒரு கேள்வி கேட்பேன். கஷ்டங்கள் வராமல் என்னை கூப்பிட்டு இருப்பாயா என நீ கூற வேண்டும்.?

அடியவர்:- கஷ்டம் வந்ததினாலதான் அவரை நினைக்கிறேன். அப்போ அவரு என்னை நெருங்கிட்டாருன்னுதான் நினைக்கிறேன்.

குருநாதர்:- அதனால்தான் அம்மையே இதனை மீண்டும் மீண்டும் சொல்வேன். அம்மையே கஷ்டம் ஒன்று கொடுத்தால் தான் இறைவனே பின் தேடி தேடி வந்தடைகிறான். கஷ்டங்களே இல்லை என்றால் மனிதன் பின் அனைத்தும் செய்து விட்டு யான் தான் இறைவன் என்று சொல்லி விடுவான் தாயே அப்பொழுது கஷ்டங்கள் கொடுப்பது நல்லதா ? தீயவையா? 

அடியவர்:- கஷ்டங்கள் குடுக்குறது நன்மைதான். அப்ப இறைவன் என் கூட இருக்கிறார். அகத்தியப்பெருமான் என் கூடயே இருந்து கஷ்டங்கள் கொடுக்குறது அவரை நினைக்க வைக்கிறதுக்காகத்தான். இறைவன் ஏன் கஷ்டங்கள் கொடுக்கின்றான்? அவர நினைக்கிறதுக்காகத்தான்  கஷ்டங்கள் கொடுக்கிறான்.  அவர் தான் நடத்திகிட்டு…

குருநாதர்:- அம்மையே , அப்பனே உன் பிள்ளை உன் பேச்சை கேட்காவிடில் என்ன செய்வாய்? அம்மையே நீங்கள் என்ன செய்வீர்கள்?

அடியவர்:- அடிச்சு திருத்துவேன்

குருநாதர்:- அதேபோலத்தான் இறைவனின் பின் அனைத்தும் அதாவது இவ்உயிர்கள் இறைவனுக்கு சொந்தம். அதனால் பின் இறைவனை படைத்தாற்போல் நீங்கள் இல்லை. அதனால் அவ்வேலியை தாண்டும் போதுதான் இறைவன் கஷ்டம் என்ற நிலைக்கு வந்து சில ஆட்டங்கள் எதனால், ஏன், எதற்காக எவை என்று  அறிய அறிய திருமணங்கள் நடைபெறவில்லையே , இன்னும் வேலைகள் கிடைக்கவில்லையே இன்னும் எதற்காக என்றால் அனைத்தும் நீங்க செய்த தவறினால்தான் வந்தது என்பேன். இவையெல்லாம் எப்படி போக்க வேண்டும் இவ்தவறுக்கு இப்படியே தண்டனைகள். சில சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்கள் தெரிய வைக்க ஆனாலும் நிச்சயம் அதாவது ஆறாவது அறிவுக்கு வாருங்கள். நிச்சயம் கருமங்கள் இல்லாமல் வாழலாம்.

அடியவர்கள்:- ( நாம் ஆறாவது அறிவிற்கு வர வில்லை இன்னும் என்று உரையாடல் சில)

குருநாதர்:- அப்பனே ஆறாவது அறிவுக்கு எப்படி வர வேண்டும்? முதலில் அப்பனே நீங்கள் எதுக்கு இவ்ளவு நேரம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அல்லவா? மூளைக்கு வேலை கொடுங்கள் அப்பனே.

அடியவர்:- (முருகப்பெருமானின்) அறுபடை வீடுகளுக்கு போகனும்.

( அவ் அறுபடை வீடுகள்:

1.திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
2.திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
3.திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
4.திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
5.திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
6.பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)
———————————. )

குருநாதர்:- அப்பனே அங்கு சென்றால் மட்டும் வந்துவிடுமா என்ன? அப்பனே. அப்பனே யான் சொல்லியதை மீண்டும் எனக்கே திருப்பி சொல்லுகின்றாய் அப்பனே. நீ வில்லனப்பா.

அடியவர்கள்:- ( சிரிப்பு அலை …)

அடியவர் 1:- ஆசை அறுக்க வேண்டும்.

அடியவர் 2:- ஆசைகளை தொலைக்க..

அடியவர் 3:- பிற உயிர்களின் துன்பத்தை போக்க நினைக்கின்ற போது ஆறாவது அறிவு செயல்படும்.

குருநாதர்:- அப்பனே இதுவும் ஒரு நன்மை தான் அப்பா. அப்பனே இறைவன் அனைத்தும் அதாவது அனைத்து உயிர்களும் கூட இறைவனுக்கு சொந்தம் அப்பனே அதனால் தன் குடும்பம்போல் என்று எண்ணி அனைவருக்கும் பின் அதாவது அனைவரும் ஒன்றே என்று பிற உயிர்களை கூட அதாவது கொல்லாமல் தன்னை போன்று யார் ஒருவன்  நினைக்கிறானோ அவன் தான் முதலில் ஆறாவது அறிவுக்கு வந்து விட்டான் என்று அர்த்தம் என்பேன் அப்பனே. ஆனால் யாருமே வந்ததில்லை. அப்பனே கஷ்டங்கள் கொடுத்துத்தான் வரவழைக்க வேண்டும் என்பேன் அப்பனே. இன்றைய அளவில் இப்படியே சென்று கொண்டிருந்தால் அப்பனே உலகம் அழிந்துவிடும் அப்பனே. அதனால்தான் கஷ்டங்கள் பின் அதிக அளவு கொடுத்து மாற்றி வைத்துக் கொண்டிருக்கின்றோம் சித்தர்கள். அதனால் வரும் காலங்களில் கஷ்டத்தையே கொடுப்போம் அப்பனே. உங்களை மாற்றத்தான் என்பேன் அப்பனே.  உங்களை மட்டுமல்ல அனைவரையும் மாற்ற.

அடியவர்கள்:- ( அமைதி )

குருநாதர்:- அம்மையே உன்னை பார்த்தே கேள்விகள் கேட்கின்றேன் அம்மையே.  ஆசிரியராக இருக்கின்றாய். அம்மையே இப்பொழுது உன்னையே எதிர்த்து பேசிவிடுவார்கள்.  ஏன் எதனால் என்பது கூட இதனால்தான் கலியுகத்தில் இறைவனையே இல்லை என்று சொல்லுவார்கள் என்பேன் அம்மையே. அதனால் இறைவன் தண்டிப்பது குற்றமா? (குற்றம்) இல்லையா?

அடியவர்:- குற்றம்..( உடனே) குற்றம் இல்லை ஐயா

குருநாதர்:- அம்மையே வாய் வந்து விட்டது. ஆன்மா சொல்லிவிட்டது. ஆனால் இப்பொழுது பொய் சொல்லிவிட்டாய் அமையே.

நாடி அருளாளர்:- ஆன்மா சொல்லிவிட்டது குற்றம் என்று. ( அடியவர் சிரிப்பு) இப்ப வந்து வாய்விட்டீங்க.

அடியவர்:- ஐயா  நினைச்சு சொல்லல. ஆனா மனசுல வந்து தண்டனை அப்படிங்கறது வந்து நமக்கு வந்து குடுத்தா தான் வந்து நம்ம சரிவர நம்பளால வந்து எது சரி எது தப்பு ன்னு நம்ம அறிவுக்கு எட்டும்.

குருநாதர்:- எது என்றும் அறிய இன்னும் கேளுங்கள். யானே சொல்லிக் கொண்டிருந்தால் பின் மீண்டும் அதையே கேட்பீர்கள், கேட்பீர்கள். கேளுங்கள்.

அடியவர்:- உயிர் இரக்கம் என்று அப்பா சொல்றாங்க. மானூர் சுவாமிகள் (பழனியில் எந்த ஒரு படாடோபம் இல்லாமல் வாழ்ந்த மகான்களுள் ஒருவர் மானூர் சுவாமிகள்...இந்த மாகான் குறித்த தகவல்கள் அனைத்தும் ஆச்சரியமூட்டும். இணையத்தில் படித்து ஞான ரசம் அருந்துங்கள்) எல்லாம் அப்பாவே சொல்லிருக்காங்க. ஆனா அந்த மானூர்சாமிகள் எல்லாம் அசைவம் சாப்பிட்டதாக சொல்றாங்க. அது எனக்கு (விளக்கம் வேண்டும்)

குருநாதர்:- அப்பனே நீ பார்த்தாயா அப்பனே? அப்பனே பார்பதைப்போல் சொல்கின்றாயே. அப்படி (நீ அசைவம்) உண்டு விட்டால் அப்பனே் அங்கு சென்றால் ஒன்றுமே நடக்காதப்பா. அப்பனே உணர்ந்து செய்ய வேண்டும். இதனை பெரியோர்கள் சொல்லி விட்டார்கள் அப்பனே. மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அப்படி ஒன்றை எடுத்து விடுகின்றேன். அப்பனே கண்ணால் காண்பதும் பொய்.தெரிகின்றதா?  அப்பனே காதால்… சொல்ல அப்பனே?

அடியவர்:- கேட்பதும் பொய்

குருநாதர்:- கடைசியில் என்னதான் செய்ய வேண்டும்?

அடியவர்:- தீர விசாரிக்க வேண்டும்.

குருநாதர்:- அதனால் அப்பனே தீர விசாரிக்காமல் அப்பனே எது செய்தாலும் குற்றம் குற்றம்தான் அப்பனே.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 15 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-15.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 13 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-13.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 12 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-12.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-11.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html


Tuesday, June 4, 2024

அகஸ்தியர் வழிபாட்டுடன் கொண்டறங்கி மலை யாத்திரை..!!

 

                                                                இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.  

குருவருளால் அவ்வப்போது நாம் தல யாத்திரைகள் செய்து வருகின்றோம். இதில் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பிலும், குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்குரைத்து நமக்கு வழிகாட்டும் திருத்தலங்களுக்கு சென்று வருகின்றோம். வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் மலை யாத்திரை அமைவதும் உண்டு,. அது போன்று தான் கொண்டறங்கி மலை யாத்திரை  - அருள்மிகு கெட்டி மல்லீஸ்வரர் ஆலய தரிசனம் அமைந்தது.

இந்த மலையை பார்த்தவுடன் அதன் உச்சி சென்று அங்கிருந்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லாருக்கும் எழத் தான் செய்யும்! ஆனால் இந்த மலையின் உச்சியை அடைய மேற்கொள்ள வேண்டிய பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையை ஏறும் தரிசனம் செய்ய நமக்கு குருவருள் பணித்தார்கள். 

வழக்கம் போல் குருவிடம் வேண்டி பணிந்து நாம் யாத்திரையை தொடங்கினோம். சின்னாளபட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம். பின்னர் அங்கிருந்து கொடுமுடி செல்லும் பேருந்தில் ஏறி,  கீரனூர் பேருந்து நிறுத்தம் இறங்க வேண்டும் என்று பயணித்தோம்.பேருந்தில் பயணிக்கும் போதே கொண்டறங்கி மலை தரிசனம் காணும் பாக்கியம் கிடைத்தது.  இதற்கு முந்தைய பதிவுகளில் ஏற்கனவே யாத்திரை தொடங்கி, கொண்டறங்கி மலை ஏறி, மிக சரியாக உச்சியில் உள்ள கோயிலை அடைந்து விட்டோம்.



இம்முறை அகஸ்தியர் வழிபாட்டோடு பயணம் செய்தோம். இதோ. மலை உச்சியில் உள்ள கோயிலில் அந்த சிவபரம்பொருளிடம் இந்த நூலை சமர்ப்பித்து பெற்றுக் கொண்டோம்.

இங்கே நீங்கள் பார்ப்பது தான் கொண்டறங்கி மலை உச்சியில் உள்ள கோயில். இங்கே உள்ளே சென்று அந்த சிவபரம்பொருள் தரிசனம் பெற்றோம்.




பின்னர் அங்கிருந்த விநாயகர் பெருமானிடம் தரிசனம் பெற்றோம்.





பின்னர் அகஸ்தியர் வழிபாடு நூலை கண்ணை மூடி, ஒரு பக்கத்தை திறந்து , அதில் இருந்த உபதேசத்தை படித்தோம். அதில் அனைவருக்குமான செய்தியாக கோபம் ஏன் வருகின்றது என்று படித்தோம்.

கோபம் ஏன் வருகின்றது என்பது நம் அனைவருக்குமான செய்தி தான். சினம் என்றால் ஆறிவிட வேண்டும். ஆனால் நமக்கு ஆறாமல் அல்லவா வருகின்றது. இதைத் தான் ஒளவை பாட்டி நமக்கு ஆறுவது சினம் என்று கூறுகின்றார். கண்டிப்பாக நாம் சினத்தை கைவிட வேண்டும். அதுவும் ஆன்மிக பாதையில் நாம் சேர்க்கும் அனைத்து புண்ணியத்தையும் ஒரு நொடியில்உருவாகும் சினம் அழித்து விடும். இதனைத் தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானும் பலமுறை நமக்கு உபதேசமாக வழங்கி வருகின்றார்கள்.




இந்தப் பதிவின் நோக்கமாக கூட - கோபம் ஏன் வருகின்றது என்று சிந்தித்து நாம் செயல்பட வேண்டும். அப்படியே கோயில் மேல் தளத்தில் அமர்ந்து கண்ணை மூடி சற்று நேரம் அமைதியாக அமர்ந்து, அந்த சூழலை உள்வாங்கினோம்.


பின்னர் அங்கிருந்து மீண்டும் மலை உச்சி சென்று அங்கிருந்து இயற்கையை கண்டு ரசித்தோம். ஏன் சித்தர் பெருமக்கள் இது போன்ற மலைகளில் இருக்கின்றார்கள் என்று புரிந்து கொண்டோம். பின்னர் சுமார் 9:30 மணி அளவில் மேலிருந்து மலை அடிவாரம் நோக்கி இறங்க ஆரம்பித்தோம்.






இறங்கும் போது அப்பப்பா! சொல்வதற்கு வார்த்தை இல்லை.நீங்களே அந்த அழகை கண்டு ரசியுங்கள்.











இதோ. மலை அடிவாரம் நோக்கி வந்துவிட்டோம்.




திண்டுக்கல் மாவட்டம் வேடசத்தூர் கீரனூர் பகுதியில் உள்ள சிவ லிங்க வடிவிலான மலைக்கு தினந்தோறும் மேகக்கூட்டங்கள் வந்து அபிஷேகம் செய்து கொண்டே இருக்கும் அந்த மலை தான் கொண்டரங்கி மலை. கடல் மட்டத்தில் இருந்து 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியை பார்த்தால் வானத்தை தொட்டு கொண்டு இருப்பது போல் இருக்கும்!

கொண்டரங்கி மலை என பெயர் வரக் காரணம் என்ன வென்று பார்த்தால் கொண்டல் என்றால் மேகம் என்றும் அவை இறங்கி வந்து இந்த மலையை தொட்டு செல்வதால் கொண்டறங்கி மலை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூம்பு வடிவில் பூமியில் இருந்து 3825 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் தியானம் மேற்கொண்டால், வானில் இருந்து பல நேர்மறையான கதிர்கள் நம்மில் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்தி காட்டுவதாக நம்பப்படுகிறது. 

கொண்டராங்கி மலை என பெயர் வரக் காரணம் என்ன வென்று பார்த்தால் கொண்டல் என்றால் மேகம் என்றும் அவை இறங்கி வந்து இந்த மலையை தொட்டு செல்வதால் கொண்டராங்கி மலை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூம்பு வடிவில் பூமியில் இருந்து 3825 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் தியானம் மேற்கொண்டால், வானில் இருந்து பல நேர்மறையான கதிர்கள் நம்மில் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்தி காட்டுவதாக நம்பப்படுகிறது.கீரனூர் கொண்டராங்கி மலை பயணத்தை தொடங்கும் முன் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் கெட்டிமல்லிஸ்வரர் எனும் சிவன் கோயிலில் வழிபட்டோம். அந்த ஆலயத்தில் வெளிப்பகுதியில் கோயிலின் விவரங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின் அங்கிருந்த தோரண வாயில் வழியாக படிக்கட்டுகளில் ஏற தொடங்கினோம், மலைப் பாறைகள் செதுக்கப்பட்டு படிகளாக அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி இருக்கும் எந்த மலை இந்த கொண்டலிறங்கி மலை போல் என்பது தான் தனிச்சிறப்பு.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கெட்டி மல்லீஸ்வரரை கெட்டியாக பிடிக்க.! - கொண்டறங்கி மலை யாத்திரை..!! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_28.html

கொண்டறங்கி மலை யாத்திரை - அருள்மிகு கெட்டி மல்லீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_90.html

 வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

 கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html

 மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

 குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

  ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

 தேனி சண்முகநாத மலை தரிசனம் (2) - https://tut-temples.blogspot.com/2019/07/2_25.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html



Sunday, June 2, 2024

அகத்தியப்பெருமான் உரைத்த நல்வாக்குகள்!

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் வழக்கம் போல் ஜூன் மாத சேவைகளை தொடங்கி உள்ளோம். குருவின் கருணைக்கு எல்லை எது? சொல்லில் அடக்க முடியுமா என்பது சந்தேகமே? சொல்லை காட்டிலும் கடந்து செல்லும் அனுபவம் தான் குருவின் அன்பும்,கருணையும் ஆகும். குருநாதர் தற்போது வரை பற்பல ஞான உபதேசங்களை நமக்கு அளித்துக் கொண்டு வருகின்றார். நாம் தான் அவற்றை கடைப்பிடிக்கின்றோமா ? என்பது தெரியவில்லை. குருநாதர் சொல்வது போல் நாம் இன்னும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் பட்டப்படிப்பை / கல்லூரிப் படிப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றோம். கல்லூரிப் படிப்பை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லவா? இதற்கு நமக்கு குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த நல்வாக்குகளை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அதற்காகவே இந்த தொகுப்பை இங்கே பகிர்கின்றோம்.


  1. ​அப்பனே! ஒன்றை தெரிந்துகொள் அப்பனே! காலங்கள் அனைவருக்கும் உண்டு, அப்பனே! ஆனால், இறைவன் கட்டங்கள் வைத்துத்தான் திருத்துவான் என்பேன். இவைகளெல்லாம், மிக மோசமாகவே, இதற்கு முன் நடந்ததப்பா!  அப்பொழுது தொலை நோக்கி பார்வைகள் இல்லையப்பா. அனைத்தையும் மறைத்து விட்டார்கள். இப்பொழுது கையிலே இருக்கின்றதப்பா (செல்போன்).
  2. அப்பனே! இருக்கும் இடத்தில் கொடுப்பது (அன்னதானம்) மிகச்சிறப்பானது!
  3. அப்பனே! பொதுநலத்துக்காக விளக்கு ஏற்றுவது மிகுந்த பலனைத் தரும்!
  4. அப்பனே! எங்கு சென்றாலும், கடைசியில் வரவேண்டியது என்னிடத்தில் தான்!
  5. அப்பனே! ஒரு நொடியில் என்னால் அனைத்தையும் கொடுக்க முடியும். அதை கொடுத்தால், பக்குவங்கள் இல்லை என்றால், பயனில்லை அப்பனே! கட்டங்கள் கொடுத்தால்தான், பக்குவநிலை அடைய முடியும் அப்பனே! அதனால், யானே கொடுத்துவிட்டு, யானே பின்னர் வருந்தும் நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  6. அப்பனே! எது என்று அறிய! அறிய! மனிதன் என்றாலே இப்படித்தான். அப்பனே, வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே! உலகத்தில் பிறந்து, பிறந்து! அதனால் தான் அப்பனே, யாங்கள் எப்படியாவது மனிதனை, இப்படி சென்றால் நலமாகும் என்று அழைத்துக் கொண்டிருக்கின்றோம். பிறவிகள் வேண்டாம் என்று அப்பனே! அனைவருக்கும் சொல்லுகின்றோம் அப்பனே! பிறந்துவிட்டீர்கள், வாழ்க்கையில் எப்படிப்பட்ட கட்டங்கள் எல்லாம் அனைவரும் அனுபவித்துத்தான் வந்து கொண்டிருக்கின்றீர்கள். இது தேவையா? இப்பிறப்பு தேவையா? அப்பனே! என் வார்த்தையை கேட்டு வந்துவிட்டால், என் வழியில் வந்துவிட்டால் நிச்சயம் பிறவி கிடையாதப்பா. அதனால் தான், முட்டாள் மனிதன், எங்கெங்கோ சென்று அவ் மந்திரத்தை ஜெபித்தால் மோக்ஷம் கிட்டும் என்று உசுப்பேத்துகின்றான் அப்பா! அனைத்தும் வீணானதப்பா! பொய் சொல்லி திரிந்து கொண்டு இருக்கின்றானப்பா! கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறானப்பா! மாயையில் விழுந்துவிட்டானப்பா! ஈசனை விட மிக பலமாக இவ்வுலகத்தில் என்ன இருக்கிறது என்று சொல்.
  7. குருவுக்கு (அகத்தியனுக்கு) பெயர் வாங்கித் தாருங்கள் என்று யான் கேட்கவில்லை. பெயரை கெடுக்காதீர்கள் என்றுதான் யான் சொல்லுகின்றேன்!
  8. அப்பனே! எது என்று அறிய! அறிய! உங்களை காக்கவே யாங்கள் வந்துள்ளோம். அதனால், எங்களை வைத்து திட்டி தீர்த்து, கர்மாவை சேர்த்துக்கொண்டு, அப்பனே! அவ் கர்மாவே, ஒருநாள் உங்களை திருப்பி தாக்கும்! இது தேவையா?
  9. அப்பனே! யாங்கள் வரவில்லை என்றால், அகத்தியன் பொய் என்று திட்டுவார்கள் மனிதர்கள். அதனால் தான் யான் வந்துவிட்டேன். மனிதர்களை திட்டுவேன். காரி துப்புவேன் அப்பனே! இனி அங்கேயே கஷ்டத்தை கொடுப்பேன்.
  10. அப்பனே! மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே யாங்கள் வந்துள்ளோம் அப்பனே! அனைத்தும், இவ்வுலகத்தில் இறைவனை வைத்து, பணம்தான் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே! புண்ணியத்தை சம்பாதிக்கவில்லை அப்பனே! அப்படி பார்த்தால், கடைசியில் நோய்களும் பற்றிக்கொள்ளும், இறந்தும் விடுவான், இவன் மட்டும் பாபத்தை சம்பாதித்து கொள்ளவில்லை, பிள்ளைகளையும் தாக்கும் அப்பனே! இது தேவையா? மனித பிறப்பு!
  11. அப்பனே! எங்கள் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள், அப்பனே! கர்மாவை எடுத்து மாற்றுவேன். அதனால் தான் சில கட்டங்கள். அகத்தியன் அருகில் இருக்கின்றோமே? ஏன் கட்டங்கள் வருகின்றது என்று யாரும் கவலைப்படத் தேவை இல்லை அப்பனே! ஏன் என்றால் மனிதப் பிறப்பு வேண்டாம் அப்பனே!
  12. அப்பனே! உண்மைகள், இதனால், வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே! கலியுகம் என்பது கூட வாழ முடியாத காலமப்பா! ஏற்கனவே சொல்லிவிட்டோம் இதனை! ஆனால், வாழ்கின்றோம் என்ற தவறான கருத்தை மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே! ஆனால் ஒன்றை மட்டும் சொல்லுங்கள். என் தந்தை அகத்தியன் இருக்கின்றான் என்று. அப்பனே! இதுதானப்பா, கலியுகத்தில் மந்திரம்!
  13. எங்கள் அருள் இல்லாமல், எந்த மந்திரமும் பலிக்காதப்பா. அதனால், மண்ணை தின்பது போல்தான் இப்பொழுது மந்திரங்களும் ஆயிற்று. அப்பனே! மனித பிறப்பு என்பதே வீணான பிறப்பப்பா! கட்டங்கள் படுவதே இயல்பாக போய்விட்டது! அதனால் தான், மனிதர்கள், பாபங்கள் செய்து, கட்டங்கள் அனுபவித்து இப்படி எல்லாம் வாழ்கின்றானே என்றுதான், அவன் மனதுள் தோன்றி தோன்றி போராடிக் கொண்டு இருக்கின்றேன்! அதனால், சித்தர்களை சொல்லிக் கொண்டு, மனதை மாற்றிவிடாதீர்கள் அப்பனே! கடைசியாகவே எச்சரிக்கின்றேன் அப்பனே!
  14. அப்பனே! யானே அனைத்தையும் பார்த்துக் கொள்கின்றேன். அனைத்தையும், விதி என்று விட்டுச் செல்லுங்கள். அப்பனே! இப்படி செய்தால், மதியால், யான் உன்னை வெல்லச் செய்வேன்!
இதனுடன் குருநாதர் அளித்த உறுதிமொழிகளை தினந்தோறும் வழிபாட்டில் இணைத்து மனதில் இருத்தி வாருங்கள். மீண்டும் அவற்றை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.





குருநாதர் அகத்திய பெருமான் தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி 

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.

அகத்திய மாமுனிவர் வாக்கு:- 

எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.
  1. தர்மம் செய்வேன்
  2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
  3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
  4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
  5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
  6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
  7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
  8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
  9. பிறருக்காக உழைக்க வேண்டும்
  10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே

இதற்கு முன்னர் கூறிய தொகுப்பில் குருநாதர் கூறியபடி தர்மம் செய்வோம் என்று சூளுரைத்த நாம், தர்மம் செய்வதற்கு ஆதாரமாக உள்ள அன்பை இதயத்தில் இருத்தி , நம்மிடம் உள்ள போட்டி,பொறாமைகளை நீக்கி, இனி உயிர்ப்பலி இடுவதை தவிர்ப்போமாக! 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html