இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தமிழ் வருடத்தில் திரு குரோதி ஆண்டில் சித்திரை மாதத்தில் உள்ளோம். நம் குருநாதர் அகத்திய பெருமான் அருளாலும், சித்தர் பெருமக்களின் ஆசியாலும் தொடர்ந்து நம் தளம் சார்பில் சேவைகள் நடைபெற்று வருகின்றது. சித்திரை மாத உத்தரவாக காகபுஜண்டர் பெருமான் அருளிய வாக்கினை விதி மாற்றும் ரகசியம் என்ற பதிவில் சமர்பித்தோம். இதன் பொருட்டு, சித்திரை மாதம் நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்று இன்றைய பதிவினை தொடர்கின்றோம். சித்திரை மாதம் பேசுமா? என்பது கற்பனை அல்ல..உண்மையே..! நாம் பரிபூரண சரணாகதியில் இருந்தால் மாதம் என்ன? கல்லும் பேசும்! நாமும் இயற்கையுடன் தினமும் பேசலாம், இறையுடன் ஒன்றி வாழலாம் என்பதே குருநாதர் அகத்திய பெருமான் நமக்கு காட்டி வருகின்ற வழி ஆகும்.
குருநாதர் அகத்திய பெருமான் காட்டி வருகின்ற வழியில் நாம் பயணிக்க வேண்டும் என்றால் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பதிவு உங்கள் கண்ணில் படும். கண்ணில் பட்டால் மட்டும் போதுமா? கருத்தில் நுழைய வேண்டாமா? அடுத்து கருத்தில் நுழைந்தால் போதுமா? கருத்தை கைக்கொண்டு செயலாக்கம் செய்ய வேண்டும். அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக இருப்பதே புண்ணியம் தான். ஏதோ நாம் செஞ்ச புண்ணியம். நம் பெற்றோர் செய்த புண்ணியம். இவற்றால் நமக்கு குருநாதர் அகத்திய பெருமான் ஆசி கிடைத்து வருகின்றது.
இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் புண்ணியம் செய்திடுவோம்.
நமக்கு மீதம் உள்ள 11 மாத வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் தற்போது நம் கையில் உள்ள 10 நாளில் புண்ணியம் செய்வோம். அதுவும் அருட்புண்ணியமாகவும், பொருட்புண்ணியமாகவும் செய்ய வேண்டுகின்றோம்.
பறவைகளுக்கு உணவு, நீர், முடிந்த அளவில் அன்னசேவை, அனைத்தையும் இறைக்கு சமர்ப்பித்தல் என்று நாம் இந்த சித்திரை மாதத்தில் விதைப்பதே, மற்ற 10 மாதங்களில் அறுவடையாக பெற முடியும்.
விதையை விதைப்போம். இந்த சித்திரை மாதத்தில் விதைக்கின்ற விதை கனிந்து நமக்கு அடுத்த 11 மாதங்களுக்கு கனியாக நமக்கு கிடைக்கட்டும். இங்கே வள்ளுவர் கூறிய குறளும் நினைவிற்கு வருகின்றது. கனியா? காயா என்று கேட்கின்றார். அந்த திருக்குறள் மூலம் நாம் புண்ணியம் செய்திடலாம். நமக்கு கனி தான் வேண்டும் என்றால் விதைக்க வேண்டும். விதைத்த பின்னர் நாம் அறுவடைக்கு எதிர்பாக்கலாம். விதையை விதைக்காமல் ஆனால் நாம் நமக்கு கனி வேண்டும் என்றால் நமக்கு எப்படி கிடைக்கும்?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். ஆனால் குருநாதர் கூறிய வாக்கினை உணர்ந்த பிறகு சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் என்று தோன்றுகின்றது. மேலே உள்ள அருள்மொழியை நன்கு மூன்று முறை படித்து உள்வாங்கி கொள்ளுங்கள். இதனை இன்னும் உணர்த்த வேண்டி, கீழே காட்சிப்படங்கள் பகிர்ந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து, மனதுள் ஏற்றுங்கள்.
.jpg)

.jpg)


.jpg)
.jpg)

குருநாதர்
காட்டும் பாதையில் நாம் செல்வது என்பது பிறர் நலம் நோக்கல் ஆகும். இதில்
தானம், தர்மம், அன்னதானம், ஞான தானம், இறைவன் பால் பிறரை செல்ல வைத்தல்,
பிறர் நலம், பொது நலம், அனைத்து ஜீவராசிகளின் நலன், இயற்கையை பேணுதல்
போன்றவை அடங்கும். இப்போது குருநாதர் காட்டும் பாதை என்ன என்பது நமக்கு
நன்கு புரியும். மீண்டும் மீண்டும் இவற்றை மனதுள் இருத்துவோம்.
நமக்கு
கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தி, புண்ணியம் செய்ய கற்றுக்
கொள்வோம். மீண்டும் ஒருமுறை கர்ம வட்டமா? தர்ம வட்டமா? என்ற சிந்தனையில்
நாம் கர்ம வட்டத்தில் இருந்து விலகி தர்ம வட்டம் நோக்கி செல்ல குருவிடம்
வேண்டி பணிவோமாக!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!சர்வம் சிவார்ப்பணம்!!!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment