"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, April 30, 2020

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். பங்குனி மாத மோட்ச தீப வழிபாடு சுமார் 5 பேர் அளவிலே நடைபெற்றது. சித்திரை மாத மோட்ச தீப வழிபாடு ஆத்ம தீப வழிபாடாக நடைபெற்றது. இன்று இரவு  10 மணி முதல் நாளை இரவு  8 மணி வரை ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான பூசை இந்த முறை கிடையாது.

தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.

 அகத்தியம். பேச பேச திகட்டாதது. கேட்க கேட்க இனிமையானது. உண்ண உண்ண அமிர்தமானது. இன்றைய பதிவில் கும்பமுனி அகத்தியர் பற்றி நாங்கள் படித்தவற்றில் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம் .அகத்தியர் என்ற பெயருக்கே பெரிய மகிமை உண்டு,அவர்வரலாறு படிப்பதால் இன்னும் வாழ்வில் வேண்டிய நல்லன எல்லாம் பெறலாம்.

பதிவின் இடையிடையே திருச்சி பெரம்பலூரைச் சார்ந்த அகத்திய அடியவரான திரு. சதீஷ் அவர்களின் இல்லத்தில் வாரம் தோறும் புதன் கிழமை அன்று நடைபெறும் பூசையின் அருளை இணைத்துள்ளோம். அட..பதிவின் தலைப்பும் பொருத்தமாக உள்ளதே. அம்மையும் அப்பனாக...எந்தையும் தாயாக... அகத்தியர் லோபாமுத்ரா தரிசனம் இங்கே பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். எத்துணை பிறவி கடந்து வந்தோமோ? என்று நாம் அறியோம் பராபரமே!பதிவின் இறுதியில் ஆயில்ய ஆராதனை பற்றிய விபரங்கள் இணைத்துள்ளோம்.


அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,


 மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.


 முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.


 அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.




 மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.




 இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.
சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.
தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.


 அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.



வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.



சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.



இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.



புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.


 அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.








 அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

















அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.














அட. நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவிற்காக திருச்சி பெரம்பலூரைச் சேர்ந்த அகத்தியர் அடியவரின் கவிதை வண்ணம் மேலே.









 பதினாறு போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!










 அகத்திய முனிவரின் பூசா பலன்கள்

1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

இனி சென்ற மாத பூசையில் நாம் பெற்ற  அருள்நிலையை கீழே பகிர்கின்றோம்.








 சென்ற ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை காணொளி கீழே 


மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....
சித்திரை மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Wednesday, April 29, 2020

மதுரை திருக்கல்யாண விருந்தும், நித்ய அன்னதான தொண்டும்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். இப்போது தான் கூடுவாஞ்சேரியில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் கண்டோம். இன்னும் அந்த அருள் நிலை மனதுள் ஊஞ்சலாடுகிறது. மக்கள் கூட்டத்தில் சொல்லவே முடியவில்லை. இங்கேயே இப்படி கூட்டம் என்றால் மதுரை அரசாளும் மீனட்சி அம்மனின் திருக்கல்யாணம் என்றால் கூட்டம் எப்படி இருக்கும்? திருக்கல்யாணம் எப்படி இருக்கும் ? என்று நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த பதிவில் சித்திரைத் திருவிழா பற்றி சிறிது கண்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து பற்றி செய்திகளை தர குருவருளும்,திருவருளும் நம்மை கூட்டுவித்துள்ளது. தற்போது நிலவி வரும் சூழலில் இந்தாண்டு மதுரை திருக்கல்யாணம் விருந்திற்கு மாறாக பழமுதிர்ச்சோலை முருகன் பக்த சபையினர் செய்து வரும் நித்ய அன்னதான தொண்டு பற்றியும் இங்கே பகிர விரும்புகின்றோம்.

சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். சித்திரை திருவிழா பல ஊர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது, குறிப்பாக மதுரை, மானாமதுரை,பரமக்குடி, வீரபாண்டி என சொல்லலாம்.இருப்பினும் சித்திரைத் திருவிழா என்றாலே மதுரை தான். 
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.வருகின்றது








மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து
சோலைமலை முருகன் கோயிலில் 40 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.18 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது,
திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்துஅளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .


10 ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது.பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காவல்துறை தடைவிதித்தனர்.
இந்தாணடு திருக்கல்யாணம் ஊரடங்கு உத்தரவால் நடைபெறவில்லை. ஆனால் தற்போது நிலவி வரும் சூழலில் நித்திய அன்னதானம் நடைபெற்று வருகின்றது.சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.  
"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009 , Shop: 0452 2345601.
 சாமுண்டி விவேகானந்தன் , என்னை அழைக்க chamundihari@gmail.com

மதுரை பழமுதிர்சோலை முருகன் திருவருள் பக்தர்கள் சபை ஆன்றோர்கள் சான்றோர்கள் அறவோர்கள் அயராத அன்னதானம் பணியினை இடையறாத முறையில் செய்து வருகிறார்கள்.*

28.04.2020 திங்கட்கிழமை பதினோராம் நாளாக மதியம் உயர்தர வெஜிடபிள் பிரியாணி 1540 + தயிர் சாதம் 2770 = 4310 பார்சல்கள்,இரவு உணவு உயர்தர ரவா கிச்சடி 2200 பார்சல்கள்.
ஆக 6510 பார்சல்கள் சில்வர் பேப்பர் கன்டைனர்களில் வழங்கப்பட்டது என்பது மகா புண்ணியகரமான பணியாகும்.*

இதனை முன்னின்று செய்து வரும் அன்னதான கமிட்டியின் தலைமை நிர்வாகிகள்

தலைவர்: ஆன்மீக பெரியவர் திரு.சாமுண்டி விவேகானந்தர் அவர்கள் (அலைபேசி: 9442408009),

செயலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் திரு.எஸ்.ஆர்.வெங்கடேஷ் அவர்கள் (அலைபேசி: 9443744045),

திரு.எஸ்.கனக சுந்தரம் அவர்கள். 9842111056
நிதி உதவி மற்றும் பொருள் உதவியினை நேரடியாகவோ, மின்னஞ்சல் வங்கி மூலமாகவோ,
காசு ஓலையாகவோ, தாராளமாக வழங்கி இந்த மாபொரும் அன்னதான புனித பணியில் இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

அன்னதானம் பிரபுக்கள், கொடையாளர்கள், களப்பணியாளர்கள்,சமயற்கலை தொழிலாளர்கள் யாவரும் வாழ்க பல்லாண்டு!! என இங்கே நம் தளம் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.











இனி. திருக்கல்யாண விருந்து பற்றிய செய்திகளை காண்போம்.










சித்திரைத் திருவிழா அழைப்புக்கான சிறிய காணொளி இங்கே 

Madurai Sumptuous Wedding Feast 
A sumptuous feast awaits devotees on 7-05-2017 Sunday Madurai following the ‘Tirukkalyanam Virundhu ’ (celestial wedding) of Goddess Meenakshi and Lord Sundareswarar. The ‘Tirukkalyanam’ of Goddess Meenakshi with Lord Sundareswarar takes place on Wednesday at the junction of North and West Adi Streets.Being prepared by the Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai for the 16th consecutive year.
 The feast is being arranged for over 75,000 devotees , we are arrange at Sethupathi school, Madurai . “The menu comprises boondhi, Chakkarai Pongal , lemon rice, Tomato rice, Sambar rice and curd rice with water packet ”.The feast will commence at around 8.30 a.m. and go on till the last devotee leaves the place.
When we started providing the feast 18 years back, only around 1,500 devotees took part in the feast at Meenakshi temple itself. Now, it has grown to provide for over 75,000 . we arrange at Sethupathi school ,Madurai .
This year Feast will be on 27-04-2018 from morning 8:30 am. Apart from the ‘Tirukkalyaa Virundhu,’ another special feast was provided on 26-04-2018, Thursday evening  Known as ‘Mappillai Azhaippu Virundhu’ [Night Dinner] the feast comprising kesari, pongal, vadai was provided for people. We are welcome you come cutting of vegetable for feast and service .
We need volunteers for feast service ,if you are interests please get in touch with  us. 
Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 
C/o Chamundi Vivekanandan
Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 , Shop: 0452-2345601
ChamundiVivekanandan organizing this events , Regarding above feast call drop me chamundihari@gmail.com
published in below newspapers 
தினமணி : https://goo.gl/7vuQzz
மக்கள்குரல் : https://goo.gl/8ee8s6
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html


 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html