"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 30, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 குருநாதர் அருளால் ஐப்பசி மாத வழிபாட்டில் / சேவையில் சிறப்பாக கடைபிடித்து வருகின்றோம். ஐப்பசி உத்திரட்டாதி கோடகநல்லூர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமி முற்றோதுதல் டெலிக்ராம் செயலியில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம்  இரவு 10:45 மணிக்கு தொடங்கிய திருவாசகம் முற்றோதுதல் நள்ளிரவு  02:45 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 4 மணி நேரம் ஆனது. கடந்த ஜூன் மாதத்தில் திருவாசகம் முற்றோதுதல் குருவருளால் ஆரம்பித்தோம்.இடையில் ஒரு மாதம் விட்டுவிட்டோம். நேற்றைய முற்றோதுதல் 4 ஆம் முறை நடைபெற்றது. தற்போது வரை அப்படியே படித்து வருகின்றோம். ஆனால் இன்னும் சிந்தை கலங்காது தியானிக்க வேண்டி வான் கலந்த மாணிக்கவாசகரிடம் வேண்டிப் பணிகின்றோம். உண்மையான பக்தி செய்வதற்கும் வேண்டுகின்றோம்.

இனி நம் குருநாதர் ஐப்பசி மாத அகத்தியப்பெருமானின் உத்தரவு! பற்றி இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.

அகத்தியர் பல யுகங்கள் கண்ட மாபெரும் சித்த புருஷர்.நம் விதியை மாற்றும் ஒரே வல்லமை அகத்திய குருநாதருக்கு மட்டுமே உண்டு. அகத்தியர் வழியில் நடப்பவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை அவர்களின் குடும்பமே மோட்சம் என்பது அகத்தியர் ஜீவநாடி வாக்கு.தன் வாக்கில் தானே பிரம்மாகவும் விஷ்ணுவாகவும் மகேஸ்வரனாகவும் காலபைரவனாகவும் இருப்பதாக கூறி உள்ளார்

அகத்தியரால் முடியாத காரியம் என்பது இந்த உலகத்தில் எதுவுமே கிடையாதுஇவர் சித்தர் தானே நமக்கு எங்கு பணம் தர போகிறார் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.அனைத்து தெய்வத்தின் ஆற்றலும் அகத்தியருக்கு உண்டு.

அகத்தியர் கருணை கடல் நேர் வழியில் செல்லும் தன் அடியவர்களை காத்து ரட்சித்து விதியின் பாதையை மாற்றி நமக்காக பிரம்ம தேவனிடம் கூட நிறைய வாக்குவாதங்கள் செய்து கொண்டு இருக்கிறார்.எனவே அன்பர்களே! அகத்தியனை நம்பியவர்கள் ஒரு போதும் கைவிடப்பட்ட சரித்தரமே கிடையாது

இத்தகைய கருணை கடலின் வழி நடந்து எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள் 

1. சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் உத்தரவு! 

19/10/2022 நவமி திதி ஆயில்ய நட்சத்திரம் அன்று குருநாதர் அகத்திய பெருமான் இட்ட உத்தரவு!!!!

இவை என்று கூற அப்பனே ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் என் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும் அப்பனே

மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும் அப்பனே!!!!!

என்னுடைய நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள் அப்பனே!!!!

2. சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) 

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட நேர் எதை என்று எவற்றினின்று கூற அப்பனே ஆனால் இவ் மாதம் பின் எதை என்று சிறிதாக பின் வளிமண்டலத்திலிருந்து ஒரு ஒளி பின் தென்படும் அப்பனே!!!!

அது அண்ணாமலையிலே உதிக்கின்றது பின் இதை என்று கூட எவை என்று கூட ஐப்பசி பின் வரும் அதாவது எதை என்று கூட சிறிதளவு விரிவடையும் என்பேன் அப்பனே!!!

அது எங்கே விழுகின்றது என்றால் அப்பனே என் நதியான காவேரி நதியின் மீதே வந்து ஊர்ந்து செல்கின்றது என்பேன் அப்பனே!!!

இதையென்று அறிய அறிய அதனால் அங்கே குளிக்கச் சொன்னேன் யான்!!!!

ஆனால் இதையன்றி அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளும் ஆனாலும் எப்படி பின் எதை என்று கூட நீராட வேண்டும் என்பதைக் கூட தெரியாமல்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட அதிகாலையிலே பின் தியானங்கள் செய்து அப்பொழுது கூட எதையும் நினைக்க கூடாது அப்பனே!!!

எவை என்று கூட இவ்வாறு அவ் மாதத்தில்(ஐப்பசி) என்னுடைய நதி அதாவது காவேரி ஆற்றில் பின் குதித்து நீராடி வந்து கொண்டிருந்தாலே (ஐப்பசி துலா ஸ்நானம்) அப்பனே நிச்சயம் எதை எவற்றினின்று கூற.. 

3. ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

ஓம் முருகா சரணம்!

எனவே வாய்ப்புள்ள அன்பர்கள் குருநாதர் அருளிய ஐப்பசி மாத உத்தரவை சிரமேற்கொண்டு செய்யும்படி வேண்டுகின்றோம். நதி நீராடலின் போது நதியை அன்னையாக கண்டு, காவிரி,தாமிரபரணி போன்ற ஆறுகளை மங்கல பொருட்களை ( ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம், தேன் , தீபம்,பால் ) சமர்ப்பித்து நதி வழிபாட்டையும் மேற்கொண்டு தங்களால் இயன்ற சேவைகளை செய்யும் படி வேண்டுகின்றோம்.

தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.

இந்த மனநிலையில் நம் நாட்டில் உள்ள அனைத்து நதிகள்/ஆறுகளை இன்று போற்றி .மகிழ்வோம்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ 

ஓம் ஸ்ரீ தமிழக நதி தீர்த்தங்களே  போற்றி 

ஓம் ஸ்ரீ காவிரித் தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ தாமிரபரணித் தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ வைகைத் தாயே போற்றி
ஓம் ஸ்ரீ அமராவதித் தாயே போற்றி 

ஓம் ஸ்ரீ    அடையாறே போற்றி 
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான அமராவதி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   அரசலாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   அர்ச்சுணன் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   ஓடம்போக்கி  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான பவானி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   சிற்றாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சின்னாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   செஞ்சி ஆறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   செய்யாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கபினி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சின்னாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான கடனாநதி தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   கல்லாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோரையாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கெடிலம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கொள்ளிடம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குடமுருட்டி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குண்டாறு ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குந்தா ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   அமராவதியின் துணையாறான குதிரையாறு ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   அமராவதியின் துணையாறான குழித்துறை ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   நங்காஞ்சி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கெடிலம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோமுகி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோதையாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   மலட்டாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான அமராவதி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான மஞ்சளாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வெள்ளாற்றின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான திருமணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பாம்பாற்றின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பாம்பாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   மோயாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   முல்லை ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான நொய்யல் ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான     பச்சை ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பரளி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பாலாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான     பாலாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பரம்பிக்குளம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பைக்காரா  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சங்கரபரணி  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சண்முகா நதி தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சிறுவாணி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணை ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சண்முகா நதி தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பாலாறின் துணையாறான  நீவா ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான  உப்பாறு   தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   கிருதுமால் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான  வைப்பாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வெண்ணாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   வெட்டாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான  சனத்குமார நதி  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    மார்கண்ட  நதி  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    வாணியாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    கம்பையநல்லூர் ஆறு  தீர்த்தமே போற்றி 

ஓம் ஸ்ரீ இந்திய நதி தீர்த்தங்களே போற்றி 

ஓம் ஸ்ரீ கங்கைத்   தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ கோதாவரித்  தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ இந்திராவதி  தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ மஞ்சித நதி  தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ கிருஷ்ணா நதியே   தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ துங்கபத்ரா தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ நர்மதை தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ  மகாநதியே போற்றி 
ஓம் ஸ்ரீ தபதி நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ தாமோதர் நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ மாண்டவி நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ ஜாவேரி  நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ சிந்து நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ சட்லஜ் நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ பிரம்மபுத்திரா தாயே போற்றி 

ஓம் ஸ்ரீ அனைத்து நதி தீர்த்தங்களே போற்றி! போற்றி!!

ஓம் ஸ்ரீ குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ

மீண்டும் குருவின் பொற்பாதங்கள் பணிகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 13- தேனி கணேச கந்த பெருமாள் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/13.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 26.10.2020  - https://tut-temples.blogspot.com/2020/10/26102020.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 - https://tut-temples.blogspot.com/2023/09/26102023.html

 சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

 திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html
வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

Sunday, October 29, 2023

சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிஷேக தரிசனம் பெறுவோம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக சேவை மிக சிறப்பாக நடைபெற்றது. அன்னாபிஷேக சேவையாக வழக்கம் போல் பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர் ஆலய அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம். மேலும் அன்றைய தினம்  தேனியில் 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் கொண்ட உணவுப் பொட்டலங்கள் காலை உணவாக குருவருளால் பணிக்கப்பட்டோம். மேலும் ஐப்பசி பௌர்ணமி அன்று  14 மகளிருக்கு ரூ.3500 க்கு ( ரூ.250 க்கு ஒரு சேலை) என குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டு, நம் தளத்தின் சார்பில் தீபாவளி சேவை ஆரம்பித்துள்ளோம். இவை அனைத்தும் குருவருளால் தான் தான் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இனி சோற்றுக்குள் சொக்கன் தரிசனம் காண இருக்கின்றோம். நமக்கு கிடைத்த தரிசன பதிவை இங்கே பகிர விரும்புகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி மாமரத்து ஈஸ்வரர் அன்னாபிஷேக தரிசனம் 

2. தஞ்சாவூர் பெரிய கோயில் அன்னாபிஷேக அலங்காரம்.

3.  பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் தரிசனம்

4.  திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் அன்னாபிஷேகம் 

5. எழுசெம்பொன் கிராமத்தில் தென் திருகாளத்தீஸ்வரர் தரிசனம் 

6.சர்வேஸ்வரர் ஆலயத்தில் இருந்து அன்னாபிஷேக தரிசனம் 

7. திருஅண்ணாமலை தலத்தில் இருந்து தரிசனம் காண உள்ளோம்.

8.  மத்தள மலையில் ( மேலச்சேரி ) மதலேஸ்வரர் தரிசனம் 

9. திருச்சி திருவானைக்காவல் குபேர லிங்கம் அன்னாபிஷேகம் 

10. திருப்பூர், தாராபுரம் ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் தரிசனம் 

11.  மதுரையில் இருந்து சொக்கநாதர் தரிசனம் 

12. தேவதானப்பட்டியில் இருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் உடனுறை சிவபெருமான் ஆலயம் 

13. அகிலாண்டேஸ்வரர் அன்னாபிஷேக தரிசனம் 

14.  திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஆதி கைலாசநாதர் அருள்காட்சி 

15. அருள்மிகு ஆனந்த வள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.நும்பல்.சென்னை 

16. திருவள்ளூர், பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் 

17.  பழையூர் சிவன் திருத்தல அன்னாபிஷேகம் தரிசனம் காண இருக்கின்றோம். 

 திருச்சி கரூர் இடையே பெருகமணி ரயில் நிலையத்திலிருந்து நங்கவரம் செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளதே பழையூர் சிவாலயம். பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர். இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.

இதயத்தைக் காக்கும் துதியான 

இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்

என்னும் பாடலை இத்தலத்தில் 16 முறை ஓதி 16 முறை இறைவனை வலம் வந்து வணங்குவதால் இதய நோயகள் அகலும்.

பழையூர் சிவத்தலத்தில் அமைந்துள்ள அகத்திய பூர்வம் என்னும் இடப் பெயர்ச்சியால் இத்தல ஈசனின் வலது புறத்தில் ஆவுடையும் மாற்றத்தைக் கொள்கிறது அல்லவா ? இது மிகவும் அபூர்வமான ஆவுடை புனிதமாகும்.

குருவருளால் 10 ஆண்டுகளாக இத்திருக்கோயிலில் அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறிய அளவில் பொருளுதவி செய்து வருகின்றோம்.

பௌர்ணமி அன்னாபிஷேகம் தரிசனம் இங்கே பார்க்கும் போது, 
என்ன தவம் செய்தாயோ! அன்னமே (அரிசி)!
எத்தனை யுகம்  காத்திருந்தாயோ 
அன்னமே என் தலைவனை தழுவ 
அடுத்த ஜென்மம் (வேண்டாம்) 
இருந்தால் என் தந்தையை தழுவிய அரிசியாக பிறக்க வேண்டும். 
இன்று அன்னபிஷேகத்தில் ஒட்டி இருந்த ஒவ்வொரு பருக்கையும் லிங்கம் தான் 
என்று உணர்த்தப்பட்டோம்.

ஒரே பதிவில் எத்தனை தரிசனங்கள். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்றது அல்லவா? வான் கலந்த மாணிக்கவாசகர் கூறியது இங்கே நினைவில் தோன்றுகின்றது. இதில் சில ஆலயங்களில் நம் குருநாதர் ஜீவ ஓலையில் வாக்கு கூறியுள்ளார். இது போன்ற ஆலயங்களை நேரில் தரிசிக்க குருவருள் வேண்டி பணிகின்றோம்.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

 சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிஷேக தரிசனம் பெறுவோம்! - https://tut-temples.blogspot.com/2022/11/blog-post.html

சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிசேகம் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_7.html

ஐப்பசி அன்னாபிஷேகம் தரிசனம் - 2018 - https://tut-temples.blogspot.com/2019/10/2018.html

திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

Friday, October 27, 2023

திருவாசகம் ஓதுக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஐப்பசி பௌர்ணமி. அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். சோற்றுக்குள் சொக்கன் இருப்பதை உணர்த்தும் வழிபாடு இன்றைய அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய சேவையாக வழக்கம் போல் பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர் ஆலய அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம். மேலும் இன்று தேனியில் 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் கொண்ட உணவுப் பொட்டலங்கள் காலை உணவாக குருவருளால் பணிக்கப்பட்டோம். 

மேலும் இன்றைய நன்னாளில் 14 மகளிருக்கு ரூ.3500 க்கு ( ரூ.250 க்கு ஒரு சேலை) என குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டு, நம் தளத்தின் சார்பில் தீபாவளி சேவை ஆரம்பித்துள்ளோம். கொடு..கொடு..கொடுத்து பழகு..தர்மம் செய். தர்மம் செய் என்பதை நாம் வாழ்வின் அடிநாதமாக கொண்டாலே போதும். கொடுத்தால் தான் பெற தகுதி பெற முடியும். முடிந்தால் பொருள் கொடுங்கள். இல்லையென்றால் உடல் உழைப்பை சேவைகளில் கொடுங்கள்.இதுவும் முடியவில்லை என்றால் மனதார வாழ்த்துங்கள்.  அதுவும் நல்ல காரியங்கள் செய்பவர்களை மனதார வாழ்த்துங்கள். வாழ்த்துங்கள். வாழ்த்தப்படுவீர்கள். இதனைத் தான் திருமூலர் பின்வருமாறு கூறுகின்றார். 

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

- திருமந்திரம்

இந்த திருமந்திரத்தை சற்று நுணுகி பார்க்கும் போது,

இறைவனுக்கு நமக்கு கையில் கிடைக்கும் பச்சிலை கொண்டு வழிபாடு செய்ய கூறுகின்றார். ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப இறை வழிபாட்டில் அபிஷேகம் , மலர் மாலை சாற்றுதல் என செல்லலாம். ஆனால் பச்சிலை எங்கும் கிடைக்கும். எனவே பொருள் என்ற நிலையில் பாராது , அருள் நிலையாக கொண்டு இறைவனுக்கு பச்சிலை போதும் என்கின்றார்.

அடுத்த வரியில் யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை என்று கூறும் போதும், பசுவிற்கு ஒரு வாய் உணவு கொடுக்க சொல்கின்றார். இதற்காக நாம் பசுக்களை அமாவாசை நாட்களில் தேடி அலைந்து , மொத்த மொத்தமாக அகத்திக் கீரை கொடுப்பது அன்று. மிக இயல்பாக நம் வீட்டை பசுக்கள் கடந்து செல்லும் போது , நம் வீட்டில் இருப்பதை உணவாக கொடுப்பதே போதும். 

அடுத்து மீண்டும் யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி என்று கூறுகின்றார்.  இங்கே மீண்டும் உண்ணும் போது ஒரு கைப்பிடி உணவு மற்றவருக்கு கொடுக்க வேண்டும். அன்னதானமாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு கைப்பிடி உணவை எடுத்து யாருக்காவது கொடுக்க வேண்டும். உணவு சாப்பிடும் பழக்கமே காகம் சாப்பிடுவது போன்றது தான். காகம் எப்போதும் தனியாக உண்ணாது. எந்த உணவு கிடைத்தாலும் அது கரைந்து மற்ற காக்கைகளையும் அழைத்து தான் சாப்பிடும். நாமும் இது போன்று தான் அருகில் யாராவது பசியோடு இருக்கின்றார்களா ? என்று பார்த்து, அவர்களுக்கு ஒரு கைப்பிடி உணவு கொடுத்து சாப்பிட வேண்டும்.

இப்படி  உணவு உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றால் நம் அகத்தில் அன்பு வேண்டும். நம் அகத்தில் அன்பு இருந்தால் தான் அறம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த எண்ணம் வந்தால் தான் செயலில் நாம் இறங்க முடியும். இது தான் அகத்தியம் பேசும் நிலை. நம் குருநாதரின் போதனை. அனைத்து சித்தர் பெருமக்களின் உபதேசமும் ஆகும்.

அடுத்து , ஒரு கைப்பிடி உணவு இட்டு , உணவு உண்டு வந்த பின்னர் தான் , அன்னசேவை செய்து பசிப்பிணி ஆற்ற வேண்டும் என்ற நிலை நோக்கி நம்மால் நகர முடியும். அன்னசேவை செய்வதன் மூலம் 

1. இறைவனுக்கு அருகில் செல்கின்றோம் 
2.  கெட்ட கர்ம வினைகள் நல்ல கர்ம வினைகளாக மாறும் 
3. மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றது 
4. மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது.
5. குருவருளும், திருவருளும் கை கூடும்.

 அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

இங்கே அன்னம் என்பது நாம் உண்ணும் உணவு. இது பேரின்பமாக கருத்தில் கொண்டு பார்க்கும் போது , அன்னமாக இருப்பது அந்த இறை தானே. அப்படி என்றால் பசித்தோர் முகம் பார்த்தால் நாம் சும்மா இருக்கலாகுமா? பரம்பொருள் அருள் கிட்ட நம்மால் இயன்ற அன்னசேவையை தினமும் செய்வோம்.

கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையான வார்த்தைகளை பேசினாலே போது அதுவே கடவுளுக்கு பக்கமாக செல்லும் வழி என்று நான்காம் அடியில் சொல்லுகின்றார் மகான் திருமூலர். இதனைத் தான் வள்ளுவர் பெருந்தகையும் கனிஇருப்ப காய் கவர்ந்தற்று என்று கூறுகின்றார். 

இன்றைய தினம் மேலும் ஐப்பசி மாத அஷ்வினி நட்சத்திரம். இன்று திருமூலர் குருபூஜை நடைபெற உள்ளது. நம் தளம் சார்பில் நடைபெற்று வரும் கூட்டுப் பிரார்த்தனையில் திருமந்திரம் படிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது. அந்த விருப்பம் நிறைவேற திருமூலரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். இவற்றோடு இன்றைய பௌர்ணமி தினத்தில் திருவாசகம் ஓத வேண்டும் என்று நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் கூறியுள்ளார். அவற்றை இங்கே தொகுத்து காண்போம். நம் குழு சார்பில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவு 10 மணிக்கு மேல் திருவாசகம் முற்றோதுதல் குருவருளால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. விருப்பம் உள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டி பணிகின்றோம்.

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

கலி / கலி புருஷன் நம் கண்ணுக்கு தெரியா நிரந்தர (Covid) கொரோனா. நமக்கு தெரியாமலேயே பாதிப்புக்கள் அதிகம்.

அதை அழிக்க ஒரே வழி திருவாசகம் ஒவ்வொரு இல்லத்திலும் ஓதுதல் அவசியம். ஒவ்வொரு இல்லத்திலும் மன நிறைவு, மகிழ்ச்சி எப்போதும் நிலைக்க திருவாசகம் ஒதுதல் அதி மிக அவசியம். உங்கள் இல்லத்தில் சிவன் அடியவர்களை அழைத்து அவர்களை கொரவித்து , ஈசனாக பாவித்து அன்னம் அளித்து வர, இறைவன் அருளால் மிக்க நலம் விழையும்.

இது தொடர்பாக இறை , குரு நாதர் நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர்  திரு.ஜானகிராமன் அய்யா  அவர்கள்.

1. 20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

2. 11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

3. 14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

4. சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)

அப்பனே இதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட இன்னும் அப்பனே உச்சம் பெறும் என்பன் அப்பனே அவ் ஓளியானது!! அப்படி உச்சம் பெறும் பொழுது அப்பனே அதிகாலையிலே அவ் ஒளியானது அப்பனே வரும் என்பேன் அப்பனே

ஒவ்வொரு எதை என்று பின் ஆனாலும் இதன் தன்மையையும் ஈர்க்கும் சக்தி விஷ்ணு சகஸ்ரநாமம் எதை என்று கூட திருவாசகம் இவை இரண்டிற்கு மட்டுமே உள்ளது!!!

5. சித்தன் அருள் - 1288 - குருநாதர் வாக்கு - அனைவருக்கும் !

அனுதினமும் அப்பனே கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை அளித்து வரவேண்டும் மாலை நேரத்தில் வீட்டிலும் தீபம் ஏற்றி திருவாசகம் ஓதி வர வேண்டும் திருவாசகத்தில் இருந்து ஏதாவது ஒரு பதிகம் அனுதினமும் ஓதி வர வேண்டும்!!!! ஓதி வணங்கி பின்பு இனிப்புகளை தானமாக வழங்குதல் வேண்டும்.!!

6. சித்தன் அருள் - 1317 - திருவாசகம் ஓதுக!

அப்பனே நலமாக நலமாக என்னுடைய ஆசிகள் இருக்கும்பொழுது நலமாகவே இன்னும் சிறப்புக்கள் தோன்றும் என்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே யானும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அங்கே வாசகத்தை ( திருவாசகம்) அப்பனே குழந்தைகள் பாடும் பொழுது. அவர்களுக்கும் நல் ஆசிகள். இன்னும் உயரச்செய்ய வேண்டும். யானும் பலமுயற்சிக்கு எதை எதை என்று கூற அப்பனே இதைத்தன் தொடரந்து செய்ய புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. இன்னும் அதை சுற்றி நல்விதமாக உயர் பெரியோரின் அப்பனே ஆசிகள் கிடைத்து இன்னும் பன்மடங்கு ஆகட்டும் என்பது கூட எனது ஆசிகள் என்பேன் அப்பனே.

7. சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! 

அவை மட்டும் இல்லாமல் எதையன்றி கூறப்பின் இவை என்று கூற திருவாசகம் முற்றோதுதலை நிச்சயம் பின் பௌர்ணமிதனில் இரவு நேரத்தில் நிச்சயம் பின் அவனவன் இல்லத்தில் வைத்தால் நிச்சயம் எதை என்று கூற சந்திர திசை ஒன்றும் செய்யாது!!! 

8. சித்தன் அருள் -1186 - அன்புடன் அகத்தியர் - சித்தேஷ்வர் கோவில்!

(திருவாசகம்) 

வாசகத்தை!!! வாசகத்தை!!!பின் ஓதுங்கள் !!ஓதுங்கள்!!!என்றெல்லாம் ஆனால் எவந்தனுக்கு அப் புத்தி இல்லையோ!!!!! அவந்தனுக்கு புத்திகள் வளராது!!!

9. சித்தன் அருள் - 1300 - பொதுவாக்கு - 3 

30. திருஞானசம்பந்தர் தன்னை பாடினார். சுந்தரர்பெருமான்  பொன்னை பாடினார். திருநாவுக்கரசர் என்னை(சிவத்தை) பாடினார். இந்த வரிசையில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் எப்படி எடுத்துக் கொள்வது குருநாதா?

எப்படி எடுத்துக்கொள்வது? அதாவது, சிவாலயங்களை, எது என்று அறிந்து அறிந்து, அதாவது, இமயமலையில் வீற்றிருக்கும் வேதநாதன் என்று சொல்கிறார்களே, அவந்தனை சென்று பார்க்கச்சொல். (கேதார்நாத்). நிச்சயமாய் இதற்கான பதில் நேரில் சொல்கின்றேன்.

குருநாதர் உரைத்த படி, நாளும் திருவாசகம் ஓதுவோம். சிவத்தை உணர்வோம்.