அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய கார்த்திகை மாத ஷஷ்டி வழிபாடான ஸ்ரீ ஓதியப்பர் வழிபாடு நேற்று 09.12.2021 அன்று மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இன்னும் நம் மனம் ஓதிமலையில் தான் இருக்கின்றது. நேற்றைய தரிசனத்தில் பேசும் முருகன் ஓதியப்பர் தரிசனம் கண்டு மனம்,மொழி, மெய்யால் உருகினோம். இவற்றை தனிப்பதிவில் விரைவில் காண குருவிடம் வேண்டி, இன்றைய பதிவில் கோடகநல்லூர் வழிபாடு அறிவிப்பு மீண்டும் காண இருக்கின்றோம்.
குருநாதர் அருளால் கோடகநல்லூர் இரண்டாம் பூஜைக்கு தயாராகி வருகின்றோம். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாம் இறையருள் பெற்று வருகின்றோம். இதில் சில முக்கிய அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.
கோடகநல்லூர் வழிபாடு என்று நமக்கு உத்திரவு கிடைத்த உடன் நாம் இம்மாத அமாவாசை அன்று மாலை சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வேறொரு சங்கல்பம் செய்ய சென்றோம். அப்பொழுதான் தான் கோடகநல்லூர் வழிபாடு பற்றி உணர்த்தப்பட்டு சின்னாளப்பட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு சுற்று அளவில் துளசி மாலை சாற்றி கோடகநல்லூர் வழிபாட்டிற்கு சங்கல்பம் செய்தோம்.
அடுத்து, சின்னாளப்பட்டி ஸ்ரீ சதுர்முக பெருமான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தோம். வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானிற்கு மாலை சாற்றி ,கோடகநல்லூர் வழிபாட்டிற்கு சங்கல்பம் செய்தோம். இங்கே கவனிக்க வேண்டிய செய்தி நாம் இப்படி சங்கல்பம் செய்ய வேண்டும் என்று முன்கூட்டி திட்டம் தீட்டவில்லை. ஆனால் இவை குருவருளால் இயல்பாக நடைபெற்றது.
முதல் சங்கல்பம் ஸ்ரீ அஞ்சலி வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆவார். இதனை மீண்டும் உணர்த்தும் பொருட்டு, மீண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டில் நாம் செல்ல நம்மை குருவருள் பணித்தார்கள். அதனை இனிவரும் பதிவில் காண்போம்.
அடுத்து இன்று காலை கோடகநல்லூர் வழிபாட்டிற்கு தேவையான சில அபிஷேகப் பொருட்களை நாம் வாங்கலாம் என்று திட்டம் போட்டோம். நாம் திட்டம் தீட்டினால் சரியாகி விடுமா ? குருவின் திட்டம் வேறாக அல்லவா அமைந்தது.ஆம். கார்த்திகை மாத திருவோண நட்சத்திர நாளில் 08.12.2021 அன்று கோடகநல்லூர் வழிபாட்டிற்கு தேவையான சில அபிஷேகப் பொருட்களை இங்கேயே சின்னாளபட்டியில் வாங்கி உள்ளோம். இதிலும் குருவின் திருவிளையாடல் நன்கு தெரிகின்றது அல்லவா! தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இப்படி தான் ஒவ்வொரு நிகழ்விலும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் நம்மை வழிநடத்தி வருகின்றார். இந்த நிகழ்வுகளில் மூலம் நமக்கு பெருமாளின் அனுகிரமும் கிடைத்து வருவதை கண்கூடாக பார்த்து வருகின்றோம். இப்படி அருள்நிலைகளை நமக்கு அருளி வரும் நம் குருநாதர் பாதம் பணிவதை தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?













வணக்கம்! அடியவர்களே!
கோடக நல்லூர் பிரஹன் மாதவ
சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம்
12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.
என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும் என அவர் விருப்பம்.
திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.
+917904612352
அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.
மற்றவை பின்னர் பார்ப்போம்.
இங்கு
நாம் ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இங்கு நம்மால் ஆவது
ஒன்றும் இல்லை. அனைத்தும் குருநாதர் அருளால் தான் நடைபெற உள்ளது. TUT குழு
என்று அல்லாது அனைத்து அகத்திய அடியார்களும் இணைந்து இந்த இரண்டாம் பூஜையை
நடத்த வேண்டும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியது ஆகும். இது நம்
குழுவிற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வழிபாடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே பயண ஏற்பாடு செய்து
கொள்ளுங்கள். மேலும் ஏதேனும் தேவை என்றால் நம்மைத் தொடர்பு கொள்ளவும். இந்த
வழிபாடு சிறப்பாக நடைபெற்று லோக ஷேமத்திற்காக தினமும் பிரார்த்தனை செய்ய
வேண்டுகிறோம்.
நம் குருதாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் அருளின்படி, இம்மாதம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ள வழிபாடுகள் கீழே தொகுத்து தந்துள்ளோம்.
1. கோடகநல்லூர் - 12.12.2021 - ஞாயிறு
2. உத்தரகோசமங்கை - மார்கழி திருவாதிரை
3. ஶ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி - 23.12.2021 - வியாழன் - கூடுவாஞ்சேரி மற்றும் அனைத்து ஶ்ரீ அகத்தியர் கோவில்கள்
4. பாபநாச ஸ்நானம் - 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது.
இங்கு குறிப்பிட்ட நாள்களை பார்த்து கிடைத்தற்கரிய இந்த வழிபாட்டில் இணைந்து குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.
இந்த வழிபாட்டில் உதவி செய்ய விரும்பினால், நம்மைத் தொடர்பு கொள்ளவும்
நன்றி
வணக்கம்
ஓம் அகத்தீஸ்வராய நமஹ.

ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment