"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 31, 2022

மானுட நண்பனாய் "சன்மார்க்க நேசன்"

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்த பதிவில் நாம் அறிய இருப்பது நம்முடைய நண்பனை பற்றி. அந்த நண்பர் இங்கே நூல் வடிவில் அறிமுகம் ஆக உள்ளார்.இதுவரை இங்கே நாம் இரு நூல்கள் பற்றி பார்த்துள்ளோம். ஜீவ அமிர்தம், சிந்திப்போம் சிந்திக்க வைப்போம் என்ற வரிசையில் இன்று "சன்மார்க்க நேசன்"

சன்மார்க்கம் என்ற வார்த்தையை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? வள்ளலார் தானே ! ஆம் ! இந்த இதழ் ஒரு சமரச சுத்த சன்மார்க்கியால் வெளியாகின்றது. ஏன் இதனை இங்கே அழுத்தி சொல்கிறோம் என்றால்,நீங்களே ஆச்சர்யப் படுவீர்கள்.

அவர் தான் சன்மார்க்க நேசன்,இராமலிங்க அடிகளாரின் பக்தர்! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்"என்ற வள்ளலாரின் சித்தாந்தத்துக்குக் கிடைத்த வெற்றியாய் இருப்பவர்,அன்பே சிவம் என்பதை பூரணமாக உணர்ந்த சித்தாந்தவாதி,மனிதரில் மாணிக்கம்,உண்மையை உரைக்கும் உத்தமர்,சைவ நெறியாளர்,திருமந்திர உரையாளர்,சித்த மருத்துவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.அவர் தான் சுத்த சன்மார்க்கி திரு. மரு.M.A.ஹுசைன் அவர்கள்.


யோசித்துப் பாருங்கள்.ஒரு இஸ்லாமியர்,வள்ளலார் பற்றி பேசுகிறார்,எழுதுகிறார் என்றால் அவர் எவ்வளவு உணர்ந்திருப்பார். இவரைப் பற்றி எழுதவே ஒரு பதிவு போதாது.விரைவில் அவரை சந்தித்து,ஒரு வி.ஐ.பி சந்திப்பு பதிவாய் விரைவில் வெளியிட குருவருளும்,இறையருளும் துணை புரியட்டும்.அந்த சந்திப்பில் பொதுவான விசயங்கள் பற்றி பேசி,பதிவிட விரும்புகின்றோம்.உதாரணமாக வள்ளலார் தமிழ்மொழியை தந்தை மொழி என்று கூறிய நிகழ்வு,தமிழ் மொழி உலக மொழியில் சிறந்தது எவ்வாறு? தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலா? தை மாதத்திலா? என்பன போன்ற கேள்விகள்.

சரி ..நம் நண்பனை பற்றி அறிவோமா?

இந்த மாதஇதழின் முகப்புப் படம் காண்போமா? யாராலும் சற்று ஊகிக்க முடிகின்றதா? ஜோதி இல்லாமல் இருக்காது என்று நினைக்கலாம்.





























இதழின் முகப்புப் படம் மிக எளிமையாய் உள்ளதாய் தோன்றும்.ஆனால் இதழின் உள்ளே உள்ள செய்திகள் நம் உடல் நலம்,மன நலம் பற்றி ஏகப்பட்ட கருத்துக்களை பேசுகின்றது. மொத்தத்தில் சன்மார்க்க நேசன் அறிவியல் மற்றும் ஆன்மிக இதழாய் மணம் வீசுகின்றது. இது வியாபார நோக்கில் நடத்தப்படுவதில்லை.எனவே தான் அட்டைப்படம் மிக எளிதாய் உள்ளது.மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப இதழ் உள்ளது.

சன்மார்க்க நேசனின் இதயத்தை படித்து பார்க்கலாமா?


இதழைத் திறந்தால், உள்ளடக்கமாய் ஆசிரியர் உரை உள்ளது.இதில் பல்வேறு தலைப்புகளில் அக்குவேறு,ஆணி வேறு என்பதை ஆராய்கின்றார் ஆசிரியர். உதாரணத்திற்கு இன்றைய கல்வி முறை -தொழில் புரட்சி என்று பேசி பேசியே, விவசாயத்தை இழந்து கொண்டிருக்கின்றோம்.இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து,நம் சந்ததியினர் உணவிற்கு என்ன செய்ய போகின்றார்கள்? என்று தெரியவில்லை. 









ஒவ்வொரு பக்கத்தின் கீழே ஒரு பொன்மொழி உள்ளது, 2 1/2 மணி நேர ஆழ்ந்த உறக்கம் நல்ல ஆரோக்கியம் தரும்,தரை நோக்கி நடப்பவன் தடையின்றி நடப்பான் என்பது போன்ற செய்திகள்.அடுத்தாற் போல், விளம்பரக் கட்டணம் பற்றிய அறிவிப்பு உள்ளது.பதிவை படிக்கும் அன்பர்கள்,தங்களால் இயன்ற விளம்பரம் கொடுத்து உதவலாமே !




Nutirion and child care பற்றி ஆங்கில கட்டுரை எழுதி வருகின்றார்கள்.சாம்பிள் மேலே உள்ளது.




இல்லதிற்கேற்ற இனிய மருத்துவம் என்ற கட்டுரையில் இல்லத்திற்கு தேவையான மருத்துவக் குறிப்புகள் உள்ளது.உதாரணத்திற்கு கண் பயிற்சி பற்றிய செய்திகளை மேலே இணைத்துள்ளோம்.கண்ணுக்கு எப்படி ஓய்வளிப்பது என்றும் கூறுகின்றார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள வகுப்பறையில் ஒரு வகுப்பிற்கு 2-3 மாணவர்கள் தான் கண்ணாடி போட்டு இருப்பார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலை கீழ். சுமார் 2 -3 மாணவர்கள் தான் கண்ணாடி போடாமல் இருக்கின்றார்கள். எனவே இது போன்ற பயிற்சிகளை செய்து கண்ணாடிகளுக்கு  விடுதலை அளிப்போம்.










ஒரு மூத்த வழக்கறிஞரின் அனுபவத்தை ஆமாம் ! கனம் நீதிபதி அவர்களே என்ற தலைப்பில் சொல்கின்றார்கள்.






நம் தமிழகம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை ஒரு கட்டுரை வாயிலாக உணர்த்துகிறார்கள். 10-15 வருடங்களிலேயே பற்பல சொல்ல இயலாத மாற்றங்கள்.அப்படியாயின் சுமார் 1800 ஆண்டுக்கு முன்? எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்ய முடிகின்றதா? எந்த சமூகம்  பழமை மறந்து,புதுமை நோக்கி பாய்கின்றதோ, அது கண்டிப்பாக அழிந்தே தீரும். தமிழ்ச் சமூகம் அப்படி அழியலாமா? அழிய விடலாமா? என்று நம்மை நோக்கி சிந்திக்க தூண்டும் தொடரே இது.




இதழ் சொல்லும் அனைத்து கருத்துக்களும் ஏற்புடையதே. நம் பாரம்பரியத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது. ஆனால் இன்றோ? வெறும் 5 -6 வகைகள் தான். கடைக்கு சென்று நெல் வகைகள் பேர் சொல்லி அரிசி வாங்கிய காலம் மறைந்து,இன்று 50 ருபாய் அரிசி உண்டா? என்று விலை சொல்லி அரிசி வாங்கி காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கோம். அதுவும் பாரம்பரிய நெல் மாமருந்து என்று சொல்கின்றார்கள்.இது போன்ற செய்திகள் நமக்கே புதிது.இனி வரும் காலம்? கண்டிப்பாக உணர்த்துவது நம் கடமையே.



நம் வீட்டிலேயே கண் மை தயாரிக்கும் முறைகள் உண்டு என்று இல்லதிற்கேற்ற இனிய மருத்துவம் சொல்கின்றது.இது மட்டுமா? லேகியம் தயாரிக்கும் முறைகள் பற்றியம் சன்மார்க்க நேசன் பேசுகின்றார்.












இதழுக்கோர் உணவாய் சிறப்பான உணவுகள் பற்றியும் சொல்கின்றார்கள். உதாரணத்திற்கு கேழ்வரகு மாவு அடை பற்றி குறிப்பு மேலே காட்டி உள்ளோம்.


தோசையில் எவ்வளோ வகை உண்டு. அதில் பச்சைப் பட்டாணி தோசை பற்றி இதழுக்கோர் உணவில் தந்துள்ளார்கள்.இது போன்று நம் மரபு சார்ந்த உணவுகள் பற்றி எடுத்துரைத்து நம் ஆரோக்கியம் காக்க சன்மார்க்க நேசன் உதவுகிறார்.


மூலிகைக்  கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில் மாதம் ஒரு மூலிகை பற்றி அதன் பெயர்,குணம்,பயன்படுத்தும் முறை பற்றி எழுதி வருகின்றார்கள்.உதாரணத்திற்கு உளுந்து எனும் மூலிகை ..இதை நாம் பருப்பில் தான் சேர்க்கின்றோம். ஆனால் இங்கே மூலிகை பட்டியலில் சேர்த்து, அதன் குணம் பற்றி கூறி, உபயோகிக்கும் முறைகளும் பற்றி சூப்பராக எழுதி உள்ளார்கள்.


எளிய மருந்து இனிய வாழ்வு என்ற தொடர் சில சமயங்களில் கேள்வி பதிலாகவும்,சில சமயம் பொது கட்டுரை வடிவிலும் வருகின்றது. நீரை எப்படி நாம் குடிக்கின்றோம்? அண்ணாந்து தானே? அது தவறு.நின்று கொண்டு தானே? அதுவும் தவறு. பின் எப்படிக் குடிப்பது? மேலே உள்ள இணைப்பைப் பாருங்கள்.இது போன்ற சித்தர்களின் நெறிகளை நமக்கு வழி மொழிகின்றார்கள்.




கேள்வி பதில் பகுதியாக எளிய மருந்து - இனிய வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பான பதில்கள்.சாக்கு போக்கு சொல்லாமல், ஆதி முதல் அந்தம் வரை பேசுகின்றார்கள்.என்னப்பா? ஒரே ஆரோக்கியமாக உள்ளதே என்று நினைக்காதீர்கள். ஆரோக்கியமே ஆன்மிகத்தின் திறவுகோல். சுவரின்றி சித்திரம் வரைய முடியுமா? உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது போன்ற கருத்துக்கள் ஆரோக்கியம் பற்றி சொல்கின்றது.




ஆன்மிக வெளிச்சமாக அருள் அறிவியல் என்ற கட்டுரை பேசுகின்றது.மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பற்றியும் உரைக்கின்றார்கள்.ஆன்மிகத்தின் கடலில் பயணம் செய்ய வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல் உதவுகின்றது.







இவ்வாறு தலையங்கம் முதல் இதழின் கடைசி வரை ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகம் அள்ளித் தருகின்றார் நம் நண்பன் சன்மார்க்க நேசன். இதழை வாங்கி படியுங்கள். சன்மார்க்கம் பரப்புங்கள். சன்மார்க்கம் இல்லையேல், ஆன்மிகம் தழைக்காது.என்ன அன்பர்களே ! புதியதொரு நூல் பற்றி அறிந்து கொண்டீர்களா? வண்ணப்படத்திலே ஆசிரியரின் தொடபு எண் உள்ளது. வாங்கி படித்து,மரபைக் காப்போம்.

இனி நம் நண்பன் "சன்மார்க்க நேசன்" உடன் நம் பயணம் தொடரட்டும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாவ புண்ணியக் கணக்குகள் பார்க்கலாமா? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_7.html


Friday, January 28, 2022

செய்வன திருந்தச் செய்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

செயல் ஒன்றே இன்றைய தேவை. நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றும் அறம் நோக்கியதாக இருக்க வேண்டும். இதைத்தான் நம் தாத்தா/பாட்டி, பாட்டன்மார்கள், புலவர் பெருமக்கள், மகான்கள், ஞானிகள் நமக்கு சொல்லி உள்ளார்கள். நாம் இதனை விடுத்து மேற்கத்திய மோகத்தில் திளைத்து வருகின்றோம். அதற்கேற்ப நாம் தற்போது செயலுக்கு ஏற்ற விளைவை தினமும் அனுபவித்து வருகின்றோம். இன்றைய தலைமுறை ஏன்? எதற்கு? எப்படி என்று கேட்பது நன்றே. ஆனால் வினாவோடு நின்றுவிட்டோம். பழமை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தும் மறந்து விட்டோம். இவற்றையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும். இன்றைய பதிவில் சில வாழ்வியல் செயல்களை எப்படி திருந்த செய்வது என்று அறிய உள்ளோம்.

 இவற்றையெல்லாம் நம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது நாமே.பள்ளிகள் மதிப்பெண்களுக்காகவே.எனவே அதை மறந்து விடுங்கள்.ஊழியின் பிடியில் வாழும் நாம் இப்போதே இது போன்ற அறம் சார்ந்த செயல்களை செய்யுங்கள்.அப்படி செய்பவர்களை ஊக்கப்படுத்துங்கள்.


முதலில் உணவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். கூழானாலும் குளித்துக் குடி என்று ஒளவைப் பாட்டி கூறியதை இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாடு வெப்ப நாடு. வெப்ப நாட்டிற்கு ஏற்ற உணவு கூழ், கஞ்சி போன்ற திரவ உணவுகளே. ஆனால் இவற்றை இன்று மறந்து பீட்சா, பர்கர் , துரித உணவுகள் பக்கம் சென்று விட்டோம். இவற்றை வேண்டாம் என்று சொல்லவில்லை. இவற்றையே எப்போதும் உணவாக கொள்ள வேண்டாம். வாரம் இருமுறையாவது நம் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். உணவு சார்ந்து மேலும் சில தகவல்களை கீழே உள்ள இணைப்பு படத்தில் கண்டு, செயல்படுத்துங்கள்.


அடுத்து நாம் குளித்தல், உடை அணிதல் போன்ற வழிகளை எப்படி பின்பற்றுவது என்று கீழே உள்ள இணைப்பு கண்டு தெரிந்து கொள்ளலாம். குளிப்பதற்கு மூலிகை பொடிகளை பயன்படுத்தலாம். உடைகள் அணிவதன் நோக்கம் இன்று தடம் மாறி, பொருளாதார சிக்கலோடு சேர்த்து தடுமாறிக்கொண்டு இருக்கின்றோம். நெற்றியில் திருமண் அணிய வேண்டும், பெண்கள் நெற்றியில் கட்டாயமாக குங்குமம் வைக்க வேண்டும். இதெல்லாம் என்ன என்று கேட்கும் அளவில் நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். 


நம் தேச தலைவர்கள், தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் இன்னும் பலரின் வாழக்கை வரலாறு படிக்க வேண்டும். இதனை பார்க்கும் போது நாமும் வெட்கி தலை குனிகின்றோம். இன்னும் விவேகானந்தர் பற்றி முழுமையாக நாம் அறியவில்லையே. இத்துடன் நமது இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம், தமிழ் திருமறைகளான திருக்குறள், ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்கள், திருமந்திரம் என படிக்க வேண்டும். 


அடுத்து இறை வழிபாட்டில் பஞ்சோபசார பூஜை பற்றிய செய்தியை பகிர்கின்றோம். இவை அனைத்தும் பார்க்க எளிமையாய் தோன்றும். எளிமையாய் இருக்கின்றது என்று விட்டு விட வேண்டாம். தினசரி இறை வழிபாட்டில் இதனை தவறாது கடைபிடிக்க வேண்டுகின்றோம். சந்தனம்,பூக்கள்,தூபம்,தீபம், நைவேத்தியம் கொண்டு தினமும் பூஜை செய்வோம்.


அடுத்து நாம் காண இருப்பது மிக மிக முக்கிய செய்தி ஆகும். பிறந்த நாள் ஆங்கில மாதத்தில்  கொண்டாடுவதா? இல்லை பிறந்த நட்சத்திரமா? என்றால் நாம்  கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நட்சத்திரம் அன்று தான் கொண்டாடி வருகின்றோம். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.



அடுத்து பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்ற செய்தியை மேலே கூறி  உள்ளோம்.இங்கே நாம் பகிர்த்துள்ள செய்திகளை திருந்த செய்தோமானால் நாம் இன்பமாக வாழலாம் என்று கூற விரும்புகின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

நல்வினையாற்ற 19 வழிகள் - எதையாவது புதிதாய்ப் படை - https://tut-temples.blogspot.com/2022/01/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - உளம் ஆற உழவாரப் பணி செய்திடுவோம் - https://tut-temples.blogspot.com/2021/01/19.html


நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

Thursday, January 27, 2022

பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது நம்மை வழிநடத்தும் புத்தகங்கள் பற்றி தொட்டுக்காட்டுவது உண்டு. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நூல் பற்றி இங்கே பேச உள்ளோம். சில நாட்களுக்கு முன்னர் பாவ புண்ணியக் கணக்குகள் பற்றிய பதிவை பகிர்ந்து இருந்தோம். அன்பர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை விருப்பம் கொண்டு கூறவே, மீண்டும் நூல் ஒன்றை இங்கே பிடிக்க விரும்புகின்றோம்.

புத்தகங்கள் வாழ்வை புத்தாக்கம் பெற செய்பவை. இன்றைய கால கட்டத்தில் அனைவரும் அலைபேசியினூடே பல செயலிகள் மூலம் புத்தகங்கள் படித்து வருகின்றனர். என்ன தான் தொழில்நுட்ப நீட்சிக்கு சென்றாலும், நம்முடைய கையில் புத்தகம் வைத்து படிக்கும் சுகானுபவம் தனி தான்.

புத்தகங்கள் கையில் வைத்து படிக்கும் போது,அவை நம்மிடம் பேசும், நம்மை சிந்திக்க தூண்டும்.சில இடங்களில் அவற்றை செல்லமாக கிள்ளுவதுண்டு.சிலர் அடிக்கோடிட்டு கொஞ்சுவதுமுண்டு.இவ்ளோ ரசனையாக வாழ்ந்த நாம்,இன்று பிழைப்பு தேடி அவற்றை மறந்து விட்டோம்.


அனைத்து சாதனையாளர்களின் வாழ்விலும் கண்டிப்பாக ஒரு புத்தகம் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும்.அடியேனைக் கேட்டால் "புத்தகங்கள் மாபெரும் புதையல்கள்" என்பேன். இந்த வழக்கம் பணிக்கு வந்த பின்பு மறந்தே விட்டது.தற்போது தான் துளிர்விட ஆரம்பித்து இருக்கின்றது.எத்தனையோ பேர் வெளிநாட்டு சிந்தனையாளர்களின் தன்னம்பிக்கை நூல்களை ஓடி ஓடி வாங்குவது கண்டு, நமக்கு கோபம் கொப்பளிக்கிறது. வள்ளுவர் தராத சிந்தனையா?
பாட்டி அவ்வையார் தராத நீதி நூல்களா? என அடுக்கிக்கொண்டே போகலாம்.




ஆயிரக்கணக்கான இது போன்ற நூல்கள் பொதிந்து கிடக்கின்றன. மதிப்பெண்ணுக்காக படித்தது போதும்.வாழ்வில் மதிப்பு வர நூல்களை கையில் பிடிப்போம்.திருக்குறள்,ஆத்திச்சூடி போன்ற நூற்களை அதிகளவில் வாங்கி வைத்து படியுங்கள். படிக்க முடியாவிட்டால்,வீட்டில் அவை இருக்கட்டும்.ஒவ்வொரு தமிழனின் வீட்டில் இவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வீட்டில் இந்த நூல்கள் இருக்கும் போது,ஒரு நாள் கண்டிப்பாக புரட்ட ஆரம்பிப்பீர்கள்..பின்பு படிக்க ஆரம்பம் செய்வீர்கள்.இது போன்ற நூல்களை எப்போதும் கையில் வைத்து இருங்கள்.விழாக்கள்,நிகழ்வுகளில் பரிசளியுங்கள்.குழந்தைகளுக்கு நீதியை சொல்லிக் கொடுங்கள்.இப்படி எல்லாம் வளர்த்தால் தான் பிள்ளைகள்.இல்லையென்றால் அவர்கள் தொல்லைகள் என்பது உண்மை.நாள்தோறும் செய்தித்தாள்களில் எத்தனை எத்தனை குற்ற சம்பவங்கள் ..சொல்ல முடியவில்லை.இவற்றுக்கெல்லாம் காரணம் ..கேட்டால் கலி காலம்.அது ஒரு புறம் இருக்கட்டும். நீதியை புகட்டாது வளரும் குழந்தைகளின் எதிர்காலங்கள் நாம் நாளிதழில் காண்பது போலவே இருக்கும்.



சுகி சிவம் ஐயாவின் சொற்பொழிவில் கேட்டது தங்களின் பார்வைக்கு.சற்று கடின/கோப வார்த்தைகளே.

கருத்தரித்து பிறப்பதெல்லாம் பிள்ளைகள் அல்ல 
பெற்றோர் கருத்தை அறிந்து நடப்பவர்கள் தான் பிள்ளைகள் 

அனைவரையும் குற்றம் சொல்வதை நிறுத்துங்கள். அது சரி இல்லை.இது சரி இல்லை என புலம்ப வேண்டாம்.மாற்றத்தை தங்களிடம் இருந்தே துவக்குங்கள். சென்ற பௌர்ணமி திரு அண்ணாமலை கிரிவலம் முடித்து ஈசானிய லிங்கம் அருகில், கோவிலூர் மடம் சார்ந்து புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தது. அவ்வைப் பாட்டியைக் கண்டதும் கீழ்க்கண்ட புத்தகங்களை வாங்கி விட்டேன்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும், அவர்கள் என்னுடன் பேசுவது போல் உள்ளது. அவ்வையார் என்று சொன்னால் ஆத்திச்சூடி பற்றி தெரியும்.எத்தனை பேருக்கு நல்வழி,மூதுரை,கொன்றை வேந்தன் பற்றி தெரியும் ?





இவற்றையெல்லாம் நம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது நாமே.பள்ளிகள் மதிப்பெண்களுக்காகவே.எனவே அதை மறந்து விடுங்கள்.ஊழியின் பிடியில் வாழும் நாம் இப்போதே இது போன்ற அறம் சார்ந்த செயல்களை செய்யுங்கள்.அப்படி செய்பவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

புதிய அகம் தருகின்ற புத்தக வரிசையில் இன்று நாம் காண இருப்பது 

                                            சிந்திப்போம் சிந்திக்க வைப்போம் 




என்ற புத்தகமே. என்னைப் பொறுத்த வரை, பத்தே பத்து ரூபாயில் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆன்மிகம் பற்றி புரிய வேண்டுமா? முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.ஆன்மிகம் வேறு...வாழ்க்கை வேறு அல்ல...இரண்டும் ஒன்றே..வயதான முதியோர்கள் தான் ஆன்மிகம் பக்கம் செல்ல வேண்டும் எனபது போன்ற கருத்துக்கள் எல்லாம் போலியான பரப்புரைகள். வாழ்தல் புரிய வேண்டுமானால் ஆன்மிகம் முக்கியம்.இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.இந்த நூல் தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் மொழிகளில் கிடைக்கின்றது.

சரி..புத்தகத்திற்குள் சென்று மூழ்கி,முத்தெடுக்கலாமா?


புத்தகத்தை திறந்த உடன், ஒரு கட்டத்திற்குள் பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன என்று அடக்கி சொல்லி விட்டார்கள். இதை விட வேறென்ன வேண்டும்? மனித பிறவியே ! பாவ புண்ணிய கணக்கின் தீர்ப்பே ! இவை அனைத்தும் தெரிந்தும் நமக்கு பாவமா என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன என்று என்பது பற்றி யாரும் தெளிவாக சொன்னதில்லை.இத்தோடு வாழ்தல் பற்றியும் சொல்லி இருக்கின்றார்கள்.

நம்மைப் பொறுத்த வரையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாவ,புண்ணியம் பற்றி சொல்வார்கள். பொய் சொன்னால் பாவம். அடித்தால் பாவம். ஏமாற்றினால் பாவம். இந்த வரிசையில் லேட்டஸ்ட் கொன்னால் பாவம் தின்னால் தீரும். நம்மால் ஒரு முடிவுக்கு வர முடிகின்றதா ? என்றால் முடியவில்லை.இதைத் தான் தெள்ளத் தெளிவாக 

கடமையைச் செய்யும் போது தவிர மற்ற நேரங்களில் பிறருக்கு துன்பம் அளித்தால் பாவம்,பிறர் துன்பம் நீக்கினால் புண்ணியம் 

இது சரியாகத் தானே உள்ளது.இவ்வளவு எளிமையாக,புரியும்படி சொல்ல முடியமா? பாவ புண்ணிய கணக்குகள் பற்றி.ஆரம்பமே அட்டகாசமாக இருந்ததால்,இந்த புத்தகம் மேலும் என்னை உந்தியது.







அடுத்த பகுதிகளில் கீதாசாரம் இருந்தது.ஏற்கனவே  ?இது ஆன்மிக களஞ்சியம் என்று! பொருளடக்க பெட்டகத்துக்குள் சென்றேன். கருத்தாழமிக்க தலைப்புக்கள்.ஒவ்வொன்றும் சிறப்பான, சிந்திக்க தூண்டும் கருத்துக்கள் அடங்கிய தொகுப்புகள்.இது ஒரு வாழ்வியல் நூல்,ஆன்மிகப் பொக்கிஷம், அனுபவத் தென்றல், பசுமை நிறைந்த பூஞ்சோலை, வேறு என்ன வார்த்தைகள் உண்டோ அவை அனைத்தும் இங்கே பொருந்தும்.தங்களின் பார்வைக்கு பொருளடக்கம் 






கடவுள் என்ற தலைப்பில் ஆரம்பித்து, உறுதிமொழி மற்றும் பேராசைகளின் பட்டியல் உடன் நிறைவு பெறுகின்றது. இன்று கடவுளின் பெயரால் தானே ஏகப்பட்ட குழப்பங்கள்.என் கடவுள் பெரிதா? உன் கடவுள் பெரிதா? என்று போட்டிகள்,பொறாமைகள். கடவுளோடு மதங்களின் பெயரால் நடைபெறும் நிகழ்வுகள் பார்க்கும் போது மனம் பதறுகின்றது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இந்த கடவுள் கட்டுரை சிறப்பாய் கடவுள் பற்றி விளக்குகின்றது.தெளிவாக சொல்ல வேண்டிய கருத்துக்களை வேறொரு எழுத்துருவில்,சற்று தடிமனாக காட்டி உள்ளார்கள்.இதிலிருந்து, இவர்களின் நோக்கம் புரிகின்றது.உதாரணத்திற்கு கீழே பாருங்கள்.


இது போன்று தான் ஒவ்வொரு தலைப்பிலும் விளக்க கட்டுரைகள்.அனைத்தும் எளிமையின் வண்ணத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. அடுத்த தலைப்பு அஸ்வமேத யாகம் பற்றி. இங்கே நான் மேற்கொண்டு விளக்க விரும்பவில்லை. அனைத்துமே பலாச் சுளைகள் தான். அதுவும் வெறும் பலாச் சுளைகள் அல்ல. தேனில் ஊற வைத்த பலாச் சுளைகள். அவ்ளோ தித்திப்பு.புத்தகத்தை வாங்கி பருகுங்கள்.உங்கள் நட்புக்கள் மற்றும் உறவுகளிடம் தெரிவியுங்கள்.

சிறு குறிப்பாக ஆசிரியர் பற்றி. ஜே.பி.பால சுப்ரமணியம். தம் மகளை இழந்த பின்னர் எழுதிய நூல் இது. தம் மகளின் நினைவாக hemalathamemorialtrust நடத்தி வருகின்றார்.இவர்கள் நன்கொடை பெற்றுக் கொள்ள மாட்டார்களாம். இன்று தொண்டு,சேவையிலும் ஏமாற்று வேலை நடந்து வருவதை கண் கூடாய்க் காண்கின்றோம்.ஆனால் இவர்கள் நன்கொடை வெளியில் பெறாமல்,தங்கள் குடும்ப உறவுகளிடமே பெற்று நடத்தி வருகின்றார்கள். இவர்கள் செய்த தொண்டைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதி உள்ளார்கள்.இவருக்கு ஒரு ராயல் சல்யூட்.இப்படிப்பட்ட பெரும் மனிதரை, நாம் வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திக்க விரும்புகின்றோம். இறையின் சித்தம் எப்படியோ..அப்படியே நடக்கட்டும்.

சரி, நம் தளத்தின் உழவாரப் பணி உறவுகளுக்கு இந்த புத்தகத்தை அன்பளிப்பாக கொடுக்க நினைத்து தொடர்பு கொண்டோம். அதற்கு முன்பாக, இன்று நாம் எத்தனையோ பொருட்களை கூரியர் மூலம் பெறுகின்றோம். அதற்கென்று சேவை கட்டணம் நாம் செலுத்துகின்றோம்.இங்கே நான் தொடர்பு போது ,அவர்கள் புத்தகங்களின் தேவைக்கு ரூ 10 வீதம் அனுப்புங்கள் என்றனர். சேவைக் கட்டணம் பற்றி அவர்கள் சொல்லவே இல்லை.மீண்டும் நாம் அவர்களிடம்,கூரியர் சேவைக் கட்டணம் ஏதும்? என்றோம்.அவர்கள் நாங்கள் இங்கே சேவை செய்து வருகின்றோம்.இதுவும் அதில் அடக்கம்.எனவே வேண்டாம் என்றனர். அவர்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே செய்து வருகின்றார்கள் எனபது திண்ணம்.


இந்த நூலைப் பற்றிய அனுபவத்தை பின்னுரையாக, நூலின் கடைசி அட்டைப் பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.அதை மேலே தங்களுக்காக கொடுத்துடுள்ளோம்.பின்னுரை மேலும் நூலின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டும் என்பது உறுதி. அதில் ஒருவர் படுக்கைஅறையில் வைத்து படித்து கொண்டு வருகின்றார் என்பதும், இந்த நூல் கர்ம யோகம் பற்றி ஆழமாக பேசுகின்றது என்பதும் ஆகச் சிறந்த உதாரணங்கள். இந்நூல் படித்து ஒருவர் ஏழை பெண்களுக்காக இல்லம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்பது இந்நூலின் வெற்றியே.


இறுதியாக, நாம் எவ்வளோ செலவு பண்ணுகின்றோம். பொதுவாக,புத்தகத்திற்கான செலவு என்பது மூலதனமே. அப்படி பார்த்தால்,இந்த புத்தகம் சாதாரணமான ஒன்று அல்ல.எனவே 10 ரூபாய் என்பது மிக குறைந்த செலவே.இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் தகும்.எனவே இந்த பதிவை படிக்கும் அன்பர்கள், குறைந்த அளவு ஒரு 5 புத்தகமாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தங்களின் சுற்றம்,நட்பு என தெரிந்தவரிகளிடம் இந்த புத்தகம் கொடுத்து உதவுங்கள்.இதுவும் ஒரு வகையில்புண்ணியமே.யாம் அடுத்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த புத்தகம்  வாங்க உள்ளோம். வாங்க உள்ள புத்தகங்களை ஏதேனும் ஆசிரமம் சென்று, மூத்தோர்களுக்கு கொடுக்க உள்ளோம்.

hemalathamemorialtrust பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

 பாவ புண்ணியக் கணக்குகள் பார்க்கலாமா? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_7.html