"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 25, 2022

சத்தியமே அகத்தியம்! அகத்தியமே ஜெயம்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆவணி மாத ஆயில்ய பூஜை நேற்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. அந்த நாள் இந்த வருடம் ஓதிமலை தரிசன வழிபாடாக சின்னாளப்பட்டி ஸ்ரீ முருகப்பெருமான் கோயிலில் குருவருளால் பால் அபிஷேகம், மலர் அலங்காரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல் அனைவருக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது.  நேற்றைய குருநாள் அன்னசேவையாக 20 அன்பர்களுக்கு காலை உணவு குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். இன்றைய பதிவில் மீண்டும் அகத்தியம் பற்றி சில துளிகளை பேச உள்ளோம்.

  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!



நேற்றைய ஆவணி மாத ஆயில்ய ஆராதனையில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பெருமான் 


நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.

அடுத்து சித்தர்கள் காப்பு போற்றுவோம்.

காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.

-மகான் ரோமரிஷி

குரு பக்தியே கோடி நன்மை தரும். குருவின் பாதம் பிடித்து குருவின் பதம் படிப்போம். போற்றி போற்றி நம் வினைகளை களைந்திடுவோம். பக்தி செலுத்த செலுத்த பாவங்கள் குறையும். பாவங்கள் குறைய குறைய பண்புகள் ஓங்கும். பண்புகள் ஒங்க ஒங்க பரவசம் கிடைக்கும்.இவ்வாறு பக்தியினால் பரிவு உண்டாகும். நம் அகம் மிளிரும். சத்தியம் உணர்த்தப்படும். அகத்தியம் பேசும் நிலை உண்டாகும். இவற்றுக்கு எல்லாம் மூலம் குரு பக்தியே ஆகும்.


மகான் சட்டைமுனிநாதர் அவர்கள் இயற்றிய ஞானவிளக்கம் 51-ல் 21-ஆம் பாடல்


போடுவது திலதமடா மூலர் மைந்தர்

   போகர் கருவூராரைத் தியானம் பண்ணு

நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து

   நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா

ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று

   எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை

தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்

   செப்பாதே இக்கருவை(ரகசியத்தை) உலகத்தோர்க்கே.


இவ்வாறு சித்தர் பெருமக்கள் பல பாடல்களில் நமக்கு அருளி செய்துள்ளார்கள்.இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது குரு பக்தியே ஆகும். குரு பக்திக்கு அடிப்படையாக இருப்பது நம் அகம் ஆகும். அகம் என்றால் அன்பு தானே! எனவே நம்முள் உள்ள அன்பை கொண்டு குரு பக்தி செய்து வாழ்வில் வளம் பெறுவோமாக!


தேவரீர் திருவடிக்கு ஆளாகவும்
அட்டமா சித்தி தந்து அருள்புரியவும்
சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும்
சித்தம் வைத்து அருள் புரியவும்
பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம்
பறந்தோட அருள் புரியவும்
பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப்
பண்ணி வைத்து அருள் புரியவும்
நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தூடு
நடனமிட அருள் புரியவும்
நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள்
நழுவிடாது அருள் புரியவும்
மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.

-மகான் மஸ்தான் சாகிப்



குரு பக்தி செய்வோம். குறைவின்றி வாழ குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பிரார்த்திக்கின்றோம்.எண்ணும் எண்ணம் யாவிலும் அன்பை நிறைப்போம். இது ஒன்றே நம்மை அடுத்த நிலைக்கு இட்டு செல்லும். அன்பே அகத்துள் கொண்டால் சத்தியம் பிறக்கும். சத்தியம் பிறந்து விட்டால் அகத்தியம் மிளிரும். அகத்தியம் மிளிர்ந்தால் ஜெயம் தானே! பதிவின் தலைப்பும் இதனைத் தானே சொல்கின்றது.

நேற்றைய சின்னாளப்பட்டி பிரசாதம் இங்கே பகிர்கின்றோம். அனைவரும் கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள்.


ஓம் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

ஓம் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவரே சரணம் !!

ஓம் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் திருத்தாள் போற்றி! போற்றி!!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

 ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா! நமோ நம!  - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post.html

 அகரம் ஸ்ரீ உலோபமுத்ரா உடனுறை ஞான அகஸ்தீஷ்வர மூர்த்தி திருக்கோயில் - மஹா கும்பாபிஷேகம் - 11,12,13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/111213072022.html

குரு பூர்ணிமா (16/7/2018) சிறப்புப் பதிவு (2) - https://tut-temples.blogspot.com/2019/07/1572018-2.html

ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 24.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/24062021.html

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/0407-2020.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_4.html

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் - 2022-23 - https://tut-temples.blogspot.com/2022/04/2022-23_30.html

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

Tuesday, August 23, 2022

அந்த நாள் இந்த வருடம் (24.08.2022) - ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய நன்னாளில் அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பின் மூலம் இன்று ஓதியப்பர் வழிபாடு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற ஓதியப்பர் வழிபாட்டை அடுத்த பதிவில் கண்டு அருள் பெறுவோம். இன்றைய பதிவில் ஓதியப்பரின் புகழை ஓதுவோம். முருகா என்று சொல்வதற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். முருகா என்று ஓதினால் நாம் எதற்கும் பயம் கொள்ள தேவையில்லை. இதோ கீழே உள்ள இரு பாக்களை படித்து இன்னும் முருகன் அருள் பெறுவோம்.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன்.


முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே 

ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே

நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 

நம்பியே கை தொழுவேன் நான்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, நம்பி மலை, கோடகநல்லூர் என சென்று வருகின்றோம். 

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

24/08/2022 -ஆவணி மாதம் - புதன்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் (மாலை 3.35 முதல்).

இன்று ஓதிமலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு நடைபெறும். மேலும் தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்கள் நாளை மதியம் வரை இந்த சிறப்பு நேரத்தை அதாவது ஆவணி மாதம் திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் என்று கணக்கில் வைத்து கொள்ளலாம். நாம் என்ன கணக்கு வைத்தாலும் அவன் கணக்கில் தானே அனைத்தும் நடைபெற்று வருகின்றது.



ஓதிமலையாண்டவர்: 

ஒருமுறை பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டார். படைக்கும் தொழிலை செய்து வந்த முருகப்பெருமானுக்கு அந்த சமயம் ஐந்து முகங்களும், எட்டு கரங்களும் இருந்தது. முருகன், சிவபெருமானின் அம்சம் அல்லவா? அதனால்தான் எம்பெருமானை போலவே, முருகனும் இத்தலத்தில் ஐந்து முகத்துடன் காட்சி தருகின்றார். முருகப்பெருமான், படைக்கும் தொழிலில் ஈடுபட்டபோது இருந்த இந்த உருவத்தில் தான் ஓதிமலையாண்டவராக இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இந்த உருவத்தில் முருகனை வேறு எந்த கோவிலிலும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முருகனுக்கு ‘கவுஞ்சவேதமூர்த்தி’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, இக்கோவிலின் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு ரூபமாக காட்சி தரும் விநாயகரை வழிபட்ட பின்பே, முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். முருகன், ‘பிரம்மாவிடம் இருந்து பெற்ற படைக்கும் தொழிலை, திரும்பவும் பிரம்மா இடமே கொடுக்க வேண்டும்’ என்பதை கூறுவதற்காக கைலாயத்திலிருந்து சிவபெருமான் மட்டும்தான் இந்த இடத்திற்கு வந்தார். இதனால் இத்தலத்தில் அம்பிகைக்கு என்ற எந்த தனி சந்நிதியும் இல்லை. சிவபெருமானுக்கு மட்டும் மலை அடிவாரத்தில் ஒரு தனிக் கோவில் இருக்கின்றது. பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டு பிரம்மாவை இரும்பு சிறையில் அடைத்து விட்டார். இதனாலேயே இந்த ஊருக்கு ‘இரும்பறை’ என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. 



போகர் சித்தர் ஒரு முறை பழனி முருகரை தரிசிப்பதற்காக இந்த வழியில் வந்தார். அப்போது அவருக்கு பழனிக்கு செல்ல சரியான பாதை தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் முருகப் பெருமானை நினைத்து தவமிருந்தார். அப்போது இத்தலத்தில் உள்ள ஐந்து தலை முருகப்பெருமான், ஒரு தலை முருகனாக மாறி போகர் சித்தருக்கு பழனி மலைக்கு வழியை காட்டினார். ஒருமுகமாக அவதாரமெடுத்த முருகப்பெருமான் இத்தலத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறுமுக அவதாரத்தில் இருக்கும் முருகப்பெருமான், தன் உருவத்தை ஒரு முகத்துடன் மாற்றி போகருக்கு வழிகாட்ட சென்றதால், ஓதி மலையில் ஐந்து முகத்துடன் இருக்கின்றார் என்றும், மீதமுள்ள ஒரு முகத்தோடு குமாரபாளையத்தில் இருக்கின்றார் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது. 


தல வரலாறு: 

பிரம்மதேவன் ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக கைலாயத்திற்கு சென்றார். வழியில் இருக்கும் விநாயகரை மட்டும் தரிசனம் செய்துவிட்டு, முருகப்பெருமானை வணங்கிகாமலே சென்றுவிட்டார். பிரம்மதேவனை விட்டுவிடுவாரா முருகர்! பிரம்மாவை அழைத்து பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். வகையாக மாட்டிக் கொண்டார் பிரம்மதேவர். பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியவில்லை. ‘பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியாத நீ படைக்கும் தொழிலை செய்யக்கூடாது’ என்று கூறிய முருகப்பெருமான், பிரம்மாவை சிறையில் அடைத்துவிட்டு, படைக்கும் தொழிலை முருகப்பெருமானே ஏற்றுக்கொண்டார். முருகப் பெருமானின் இந்த படைப்பு ‘ஆதிபிரம்மசொரூபம்’ என்று அழைக்கப்பட்டது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தது. இதனால் அவர்களுக்கு இறப்பு இல்லாமல் பூமியில் பாரம்தாங்க முடியவில்லை. பூமாதேவி தவித்து போய்விட்டாள். இதனால் படைப்புத் தொழிலை முருகப்பெருமானிடம் திரும்பவும் பெற்று, பிரம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பூமா தேவி சிவபெருமானிடம் வைத்தார்கள். பூமாதேவியின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் முருகப் பெருமானிடம் சென்று, பிரம்மாவை விடுவித்து அவருக்கே படைக்கும் தொழிலை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததால் இத்தலம் ‘ஓதிமலை’ என்ற பெயரை பெற்றதாக கூறுகிறது வரலாறு. இந்த சம்பவத்திற்குப் பின்பு பிரம்மாவிற்கும் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கூறி, சிறையில் இருந்து விடுவித்து படைக்கும் தொழிலை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் முருகப்பெருமான். 



பலன்கள்: 

எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே தொடங்குவார்கள். இது தொழிலுக்கு மட்டுமல்ல. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்தாலும் இந்த முருகப்பெருமானிடம் வரத்தைக் கேட்டு விட்டுத்தான், தங்களது வீட்டில் நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் இந்த ஊர் மக்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும் இந்த முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளலாம். 

இனி சில தரிசன அருள்நிலைகளை இங்கே தருகின்றோம்.







சென்ற ஆண்டில் குருவருளால் நாம் பெற்ற ஓதியப்பர் வழிபாட்டின் சில துளிகளை இங்கே காட்சிப்பதிவுகளாக தருகின்றோம்.



















சென்ற ஆண்டில் ஓதியப்பர் வழிபாட்டில் குருநாள் அன்னசேவையாக சுமார் 30 அன்பர்களுக்கு ஓதிமலை அடிவாரத்தில் உணவு கொடுத்தோம். மேலும் இனிப்பு,காரம் கொண்ட பொட்டலங்கள் சுமார் 50 அன்பரக்ளுக்கு கொடுத்து, மூத்தோனை அடிவாரத்தில் வணங்கி. சாதுக்களின் ஆசி பெற்று, ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி, படி பூஜை செய்து அன்று மதியம் 1 மணி அளவில் ஓதிமலை முருகப்பெருமான் சன்னிதி அடைந்தோம். அகத்தியர் சக்திகள தீபமேற்றி லோக க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்து சிவபுராணம் கொடுத்து என இறை அருளில் திளைத்த நாள் அது! மீண்டும் அது போன்ற ஒரு நாளிற்கு ஏங்கி நிற்கின்றோம். அன்றைய தினம் வழங்கப்பட்ட பூ மாலை நம் குழு அன்பர் திரு.சரவணன் ஐயா வீட்டில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானிடம் மீண்டும் சேர்ந்தது. மீண்டும் அடுத்த பதிவில் விரிவாக பேசுவோம்.


ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் - 2022-23 - https://tut-temples.blogspot.com/2022/04/2022-23_30.html

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

Thursday, August 11, 2022

சர்வ வசிய தன ஆகர்ஷண சங்கல்பம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆடி மாத பௌர்ணமியில் இன்றைய குருநாள் அன்னசேவையாக 18 அன்பர்களுக்கு காலை உணவு நம் தளம் சார்பில் கொடுக்க பணிக்கப்பட்டோம். குரு பூர்ணிமா மற்றும் ஆடி அமாவாசை சேவைகள் நம் தளம் சார்பில் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது, இம்மாத சேவைகளுக்கும் நாம் நம்மால் இயன்ற பொருளுதவி செய்துள்ளோம். மேலும் தினசரி கூட்டுப் பிரார்த்தனையும் மிக மிக சிறப்பாக 220 நாட்களை தாண்டி நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது திருச்செந்தூர் திருப்புகழ் படித்து வருகின்றோம். என்னப்பா ! தலைப்பிற்கு எப்போது வருவாய் என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இதோ. இன்றைய பௌர்ணமி நன்னாளில் சர்வ வசிய தன ஆகர்ஷண சங்கல்பம்! என்ற வழிபாட்டு முறையை அனைவரும் பின்பற்றி வாழ்வில் அருளும், பொருளும் பெற வேண்டி நாமும் பிரார்த்திக்கின்றோம்.

பௌர்ணமி தினத்தில் சுக்கிர ஹோரையில், துரியம் நின்று இறை நிலையில் மனதை வைத்து  சர்வ வசிய தன ஆகர்ஷண சங்கல்பம்  சொல்லுதல் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளை நீக்க உதவும்.


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் முழுமையாக தன்னை சமுதாயத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட பின் கூடுவாஞ்சேரி குன்றில் ஓலைக் குடிசையை அமைத்து,  மெய்விளக்க தவமையம் என்ற பெயர் பலகையை வைத்தார்.


ஒரு நாள், ஒரு வயதானவர் அவ்வழியே சென்றார். குடிசைக்குள் வந்து, “தம்பி! நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

“தனிமனித அமைதியின் மூலம்தான் குடும்பம், சமுதாயம், உலகம் என்று படிப்படியாக விரிவடைய முடியும். தனிமனிதனின் வாழ்க்கை தேவைகள் சரியானபடி கிட்டுமானால், அவன் சார்ந்த சமுதாயப் பணி சரியாக நடைபெறும். சமுதாயம் வளமானதாக இருந்தால்தான், தனி மனிதனுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அதற்கான பயிற்சியை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் கற்றுக்கொள்வதற்கு தான் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள்” என்று மகரிஷி பதில் அளித்தார்கள்.

ஓர் உலக ஆட்சியை ஏற்படுத்த, இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது என்று பெரியவர் மகரிஷியை பாராட்டி விட்டு, நான் ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதை நீ சொல்லி வந்தாயானால், உனது நோக்கம் நிறைவேற்றத்தக்க அளவில் செயல்பாடுகள் நடைபெறும் என்று கூறி அந்த மந்திரத்தையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் விவரமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் ஒரு வருட காலம் வரை அமைதியாக தனது கடமைகளை செய்து வந்தார். ஒருவரும் இவரிடம் பயிற்சியை கற்றுத் கொள்ள வரவில்லை

ஒரு நாள் அந்தப் பெரியவர் கூறிய கருத்துக்கள் நினைவிற்கு வந்தது. மறுநாள் பெரியவர் சொல்லியிருந்த பிரகாரம் கீழ்க்கண்ட பொருட்களை சேகரித்தார்.

1) ஐந்து முக குத்துவிளக்கு
2) மல்லிகை மலர்
3) மஞ்சள் கலந்த அட்சதை அரிசி
4) அவல் பால் பாயாசம் 
விளக்கில் ஐந்து திரிகளையும் எரியவிட்டு மந்திரத்தை 108 முறை சொல்லி முடித்தார். தினசரி இதேபோல் செய்தார்.

ஒரு சில நாட்களிலேயே அன்பர்கள் சிறிது சிறிதாக வரத்தொடங்கினார்கள். பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு மகரிஷி, இது நமக்கு மட்டும்தான் பயன்படுமா? மற்றவர்களுக்கும் பயன்படுமா? என்று எண்ணி, சில அன்பர்களின் குடும்பம், தொழில், உடல்நலம், திருமணம் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து மந்திரத்தைச் சொன்னார். அவர்களுடைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்தது. அதுமுதற்கொண்டு வாழ்க்கைச் சிக்கலில் இருப்பவர்களுக்கு எல்லாம் சங்கல்பம் செய்தார்.

மெய் விளக்க தவ மன்றம், *#உலக_சமுதாய_சேவா_சங்கம் எனப் பெயர் மாற்றம் அடைந்தது. 
*#மனவளக்கலை மன்றங்கள் பல ஊர்களிலும் தொடங்கப்பெற்றது. மன்றம் தொடங்கும் நாள் என்று அநேகமாக தனது துணைவியார் அன்னை லோகாம்பாள் உடன் சென்று அந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு விரைவான வளர்ச்சி அடைந்தது. 
தேவைப்படும் அன்பர்கள் இல்லங்களிலும், அவ்வப்போது கூட்டமாக. சேர்ந்து சங்கல்பமாக இயற்றினார்கள்.

1990ஆம் ஆண்டு வரை மகரிஷி அவர்கள் பல மன்றங்களில் அந்த மந்திரத்தை “சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம்” என்று கூறி நடத்திய போது, 108 எண்ணிக்கைக்காக நாணயங்களை வைத்து செய்தார்கள்.

சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம்




தேவையான பொருட்கள் 

1) ஐந்து திரிகள் போடும் படியான பஞ்சமுக குத்து விளக்கு, பஞ்சு திரிகள். 
2) சுத்தமான விளக்கெண்ணெய். 
3) மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன், முனை முறியாத பச்சரிசி சேர்த்து பிசைந்த அட்சதை அரிசி. 
4) மல்லிகை மொட்டு அல்லது வெள்ளை மலர்கள். 
5) அவல் பால் பாயசம். 
6) ஆகர்ஷன சங்கல்பம் 108 எண்ணிக்கைக்கு நாணயம் அல்லது மலர்மலர். 
7) இரும்பு கலவாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

செய்முறை: 

1) ஒரு விரிப்பின் மீது வாழை இலை அல்லது பேப்பரைப் போட்டு, அதன்மேல் குத்து விளக்கை வைத்து வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்று கூறிக்கொண்டே ஐந்து திரிகளையும் பற்றவைத்தல்.

2) கூட்டு சங்கல்பம் நடத்துகிறபோது அனுபவம் உடையவர் நிகழவிருப்பதை பற்றி இந்த நிமிடம் சிற்றுரை ஆற்றல். அவரே துரிய தவம் இயற்றி நாணயம் போடுபவராகவும் செயலாற்றல்.

3) இறை வணக்கம், குரு வணக்கம் - அனைவரும் கூறல்.
4) அருட்காப்பு 3 முறை அனைவரும் கூறல் 
5) துரியாதீததவம் 
6) துரிய நிலையில் இருந்து யாருக்காக செய்கிறோமோ, அவருடைய பெயரை கூறி வசிய வசிய ஓம் ஸ்வாஹா என்றும், அறக்கட்டளை அல்லது தவமையம் வசமாக என்றும் இறுதியில் மூன்று முறை மகா சபையில் உள்ள எல்லோர் வசமாக என்றும் அனைவரும் சொல்ல வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 108 முறை சொல்லும்போது எங்கள் குடும்பம் வசமாக என்று கூறிக்கொள்ளவும்.

7) ஒவ்வொரு முறை செல்லும் போதும், ஒரு நாணயம், மலர், அட்சதை அரிசியை கையில் வைத்திருந்து ஸ்வாஹா என்னும் போது விளக்கின் அருகில் போட வேண்டும். மற்றவர்கள் மலர் அட்சதை அரிசியை ஒரு பேப்பரில் போட்டு வைக்கவும்.

சரியான உச்சரிப்புடன் சொல்வதற்கு ஐந்தாறு முறை சொன்னவுடன் வாயில் உமிழ் நீர் நிரம்பி விடும். விழுங்கிய பிறகுதான் சொல்ல முடியும். காரணம் *#பிட்டியூட்டரி* *#பீனியல்* ஆகிய இரு சுரப்பிகளும் அதே நேரத்தில் இயங்கி மூளை திரவத்துடன் உமிழ்நீர் சுரந்து இனிப்பாக இருக்கும். சங்கல்பம் முடித்தவுடன் உடல், மனம் லேசாகவும் சக்தி மிகுந்தும், செல்களும், சிற்றறைகளும் புத்துணர்வுடன் இருப்பதையும் உணரலாம்.
பிரபஞ்ச சக்தியை மிகுதியாக ஆவாகனம் செய்து இருப்பதால் அன்று முழுவதும் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து இருக்கும்.

9) கருவமைப்பு தனது மற்றும் பிறரது முரண்பாடான, எண்ணம், சொல், செயல், கோள்கள் நிலை அல்லது சந்தர்ப்ப மோதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சரியில்லாததன் இதன் காரணமாகத்தான் காரியத் தடைகள் ஏற்பட்டு இருக்கும்.
குண்டலினி யோகிகளாக சிலர் இணைந்து தவமியற்றி சங்கல்பம் செய்ததால், அந்த இடத்தின் வான்காந்த களம் தூய்மையாகி அமைதி நிலையில் இருப்பதால், இனி அக்காரியம் தொடர்பான எண்ணங்கள் இயற்கைக்கு ஒத்த முறையில் செயல்பட்டு வெற்றியைக் கொடுக்கும். அந்தக் குடும்பத்தினருக்கு சங்கல்பத்தில் கலந்துகொண்ட அத்தனை அன்பர்களின் மனவலிமையும் கிடைத்து செயல்திறன் கூடும்.

10) சங்கல்பம் கூறி முடித்த பின்னர், ஒரு கப் நைவேத்திய பாயசத்தில் அனைத்து அறைகளும் சங்கமம் ஆகி இருப்பதை மொத்த பாயசத்தில் ஊற்றி கலக்கி அனைவருக்கும் பருகக் கொடுக்கவும்.

11) நல்ல அலைகள் நிரம்பிய மலர்களை, வீட்டிலேயே ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அரிசியை கழுவி சமைத்து சாப்பிடலாம்.

12) இந்த சங்கல்பத்தை குரு, சுக்கிரன் ஆகிய ஓரைகளில் செய்வது மிகச் சிறப்பு.

13) ஒருமுறை கூட்டாக செய்த பின்னர், அந்தக் குடும்பத்தினர் தினசரி அல்லது முடிந்து நாட்களில் எல்லாம் செய்து வரலாம்.



இன்றைய பௌர்ணமி நன்னாளில் வாய்ப்புள்ள அன்பர்கள் சர்வ வசிய தன ஆகர்ஷண சங்கல்பம் செய்யுங்கள். இதில் தனிப்பட்ட விருப்பத்துடன் லோக ஷேமத்திற்காகவும் இணைத்து செய்து வாருங்கள். 

வாழ்க வையகம் வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் குருவே துணை !

மீண்டும் குருவின் பொற்பாதங்கள் பணிகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்... - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_14.html

குரு வாழ்க! குருவே துணை!! குருவே சரணம்!!! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_13.html

 வாழ்க வளமுடன்! என்ற மந்திரச் சொல் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_53.html

குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html

குரு உரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_54.html

குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (2) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/2_12.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_40.html

Wednesday, August 3, 2022

ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆடி பெருக்கு நன்னாளில் மீண்டும் அனைவரையும் இந்தப் பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளில் நதி வழிபாடு மிக மிக சிறந்த வழிபாடாக அமைகின்றது. இதனை உணர்த்தவே ஆடிப்  பெருக்கு நாளில் அனைத்து நதிகள்,ஆறுகளில் மிக சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. காவேரி ஆறு பாயும் அனைத்து ஊர்களிலும், இதே போன்று தாமிரபரணி பாயும் அனைத்து ஊர்களிலும் இன்றைய நாளில் வழிபாடு நடைபெற்று வருகின்றது. இதற்கு முந்தைய பதிவில் காவிரித் தாய் தரிசனம், பாபநாசம்,கோடகநல்லூர் போன்ற ஊர்களில் தாமிரபரணித் தாய் தரிசனம் பெற்றோம். இன்றைய பதிவில் மீண்டும் அன்னையின் தரிசனம் தொடர உள்ளோம்.

நதியை நாம் அன்னையாக போற்றுகின்றோம் . எனவே இந்த ஆடி மாதத்தில் சக்தி வழிபாடாக இந்த நதி வழிபாடு இன்னும் உயிர்ப்பு பெறுகின்றது. அன்னையை ஸ்ரீ  மகாலட்சுமி தாயாக இன்று போற்றி வழிபடுவோம்.

இந்த ஆண்டு மாசி மக கும்ப ஹோம பௌர்ணமி திருவிழாவிற்கு பாபநாசம் சென்றோம். அப்போது அங்கே இது போன்று வண்ணவிளக்கு அலங்காரத்தில் தாமிரபரணி தாயை கண்டு தரிசித்து மகிழ்ந்தோம். குருநாதரின் பெயரை இது போல் கண்டோம். இது பற்றி மேலும் பாபநாசத்தில் காணலாம் என்றார்கள். அடுத்து அன்று காலை ஹோமம் முடித்து , வீட்டிற்கு கிளம்பும்போது தாமிரபரணி அன்னை காண சென்றபோது,வண்ண விளக்கு அலங்காரத்தில். அடடா..சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்களே பாருங்கள்.













ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! என்று போற்றிக் கொண்டே இருந்தோம். அடுத்து நாம் திருநெல்வேலி மாவட்ட நவகைலாய யாத்திரையில் தாமிரபரணி தாயின் தரிசனம் இங்கே காண இருக்கின்றோம்.







முதலில் சூரியன் ஸ்தலமான பாபநாசம் சென்று அங்கே தாமிரபரணி தாயை வணங்கி, மலர் தூவி வழிபாடு செய்தோம். அங்கே உள்ள ஆற்றி கரையில் உள்ள பரம்பொருளை கண்டீர்களா? அப்பப்பா. அன்றைய நவகைலாய யாத்திரை இங்கிருந்து தான் துவங்கியது. அடுத்து சேரன்மகாதேவி நோக்கி சென்றோம்.





சேரன்மகாதேவியிலும் தாமிரபரணி தாயை தரிசித்து மலர் கொடுத்து வழிபாடு செய்தோம். அங்கே நமக்கு சிறு சத்சங்கம் திரு.வமுஷ்கர் ஐயா அவர்கள் வழங்கினார். சந்திரன் அம்சமான சேரன்மகாதேவியில் ஸ்ரீ அம்மைநாதர் தரிசனம் பெற்றோம். அடுத்து கோடகநல்லூர் நோக்கி சென்றோம்.





செவ்வாய் ஸ்தலமான கோடகநல்லூரில் பெற்ற அருள் கண்டு குருநாதர் திருவடி என்றும் பணிகின்றோம். அந்த அனுபவத்தை தனிப்பதிவில் காண்போம். வழக்கம் போல் மலர் தூவி தாமிரபரணி அன்னையை கோடகநல்லூரில் வழிபட்டு மகிழ்ந்தோம். அடுத்து மணிமூர்த்தீஸ்வரம் தரிசனம் கீழே காணலாம்.


அடுத்து முறப்பநாடு தாமிரபரணி தரிசனம் பெற்றோம். உங்கள் பார்வைக்கு கீழே சமர்ப்பிக்கின்றோம்.




அடுத்து திருவைகுண்டம் தாமிரபரணி தாயின் தரிசனம் பெற்று, மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்ததை கீழே நீங்கள் காணலாம்.






அடுத்து தென்திருப்பேரை தலத்தில் ஸ்ரீ கைலாசநாதர் தரிசனம் பெற்று விளக்கேற்றி வழிபாடு செய்து மகிழ்ந்தோம். இங்கிருந்து ராஜபதி செல்லும் வழியில் இருந்த தீர்த்தத்தில் மலர் தூவி வழிபாடு செய்தோம்.






அடுத்து எட்டாவது தலமான ராஜபதி சென்றோம். அங்கே கோயிலுக்கு எதிரே உள்ள தாமிரபரணி அன்னையிடம் மலர் கொடுத்து வழிபாடு செய்தோம்.





ஒன்பதாம் தலமான சேர்ந்தபூமங்கலம் கண்டு, அங்கே தீபமேற்றி, சிவபுராணம் படித்து, லோக க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தோம்.



பின்னர் சேர்ந்தபூமங்கலம் தாமிரபரணி தாயை தரிசித்து மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்தோம்.










இவ்வாறாக நவகைலாய யாத்திரையில் குருவருளால் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர்,குன்னத்தூர்,முறப்பநாடு,திருவைகுண்டம்,தென்திருப்பேரை,ராஜபதி மற்றும் சேர்ந்தபூமங்கலம் தளங்களில் உள்ள எம்பெருமானை தரிசனம் செய்து, நம் தளம் சார்பில் வஸ்திரம், தேன்,திருநீறு போன்ற பூஜை பொருட்கள் கொடுத்து வழிபட்டது கண்டு மெய் உருகி நிற்கின்றோம். அதே போல் ஒவ்வொரு தலத்திலும் சிவபுராணம் புத்தகம் வழங்கினோம்.




மேலும் ஒவ்வொரு தலத்திலும் தீபமேற்றி , லோகஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தோம். சில காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.
















எப்படி இருக்கின்றது அன்பர்களே! மேலும் ஒவ்வொரு தலத்திலும் உள்ள தாமிரபரணி தாய்க்கு நன்றி கூறி, மலர் இட்டு வழிபாடு செய்தோம். ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தால் குருவருள் கண்டு மகிழ்கின்றோம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். இந்த மனநிலையில் நம் நாட்டில் உள்ள அனைத்து நதிகள்/ஆறுகளை இன்று போற்றி .மகிழ்வோம்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ 


ஓம் ஸ்ரீ தமிழக நதி தீர்த்தங்களே  போற்றி 

ஓம் ஸ்ரீ காவிரித் தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ தாமிரபரணித் தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ வைகைத் தாயே போற்றி
ஓம் ஸ்ரீ அமராவதித் தாயே போற்றி 

ஓம் ஸ்ரீ    அடையாறே போற்றி 
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான அமராவதி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   அரசலாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   அர்ச்சுணன் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   ஓடம்போக்கி  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான பவானி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   சிற்றாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சின்னாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   செஞ்சி ஆறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   செய்யாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கபினி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சின்னாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான கடனாநதி தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   கல்லாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோரையாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கெடிலம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கொள்ளிடம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குடமுருட்டி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குண்டாறு ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குந்தா ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   அமராவதியின் துணையாறான குதிரையாறு ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   அமராவதியின் துணையாறான குழித்துறை ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   நங்காஞ்சி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கெடிலம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோமுகி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோதையாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   மலட்டாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான அமராவதி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான மஞ்சளாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வெள்ளாற்றின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான திருமணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பாம்பாற்றின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பாம்பாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   மோயாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   முல்லை ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான நொய்யல் ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான     பச்சை ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பரளி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பாலாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான     பாலாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பரம்பிக்குளம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பைக்காரா  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சங்கரபரணி  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சண்முகா நதி தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சிறுவாணி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணை ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சண்முகா நதி தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பாலாறின் துணையாறான  நீவா ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான  உப்பாறு   தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   கிருதுமால் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான  வைப்பாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வெண்ணாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   வெட்டாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான  சனத்குமார நதி  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    மார்கண்ட  நதி  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    வாணியாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    கம்பையநல்லூர் ஆறு  தீர்த்தமே போற்றி 

ஓம் ஸ்ரீ இந்திய நதி தீர்த்தங்களே போற்றி 

ஓம் ஸ்ரீ கங்கைத்   தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ கோதாவரித்  தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ இந்திராவதி  தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ மஞ்சித நதி  தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ கிருஷ்ணா நதியே   தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ துங்கபத்ரா தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ நர்மதை தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ  மகாநதியே போற்றி 
ஓம் ஸ்ரீ தபதி நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ தாமோதர் நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ மாண்டவி நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ ஜாவேரி  நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ சிந்து நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ சட்லஜ் நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ பிரம்மபுத்திரா தாயே போற்றி 

ஓம் ஸ்ரீ அனைத்து நதி தீர்த்தங்களே போற்றி! போற்றி!!

ஓம் ஸ்ரீ குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ

மீண்டும் குருவின் பொற்பாதங்கள் பணிகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_31.html

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html