"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 1, 2020

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாதம் சக்தியைப் பெருக்கும் மாதம். ஆடி மாதம் அம்மன் வழிபாடு சக்தியைப் பெருக்கி வருகின்றது.தற்போது தான் வரலட்சுமி நோன்பு பற்றி பார்த்தோம். அனைத்து வளங்களையும் நாம் பெறுவதற்கே இந்த ஆடி மாத வழிபாடு என்பது தெள்ள தெளிவாக தெரிகின்றது. நாளைய ஆடிப் பெருக்கு வழிபாடு பற்றிய சில செய்திகளை இங்கே நாம் பகிர்கின்றோம்.

"சக்தி"யின் அவதாரங்கள் தான் எத்தனை எத்தனை! சிவனாரிடம் உமையவளாகவும், ஸ்ரீ நாராயணரிடம் லட்சுமி தேவியாகவும், பிரம்மனிடம் சரஸ்வதியாகவும் கண்டு வருகின்றோம்.இது ஆதி சக்தியின் அம்சம். இது போன்று சந்திரனிடத்தில் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமதேவனிடம் ரதி தேவியாகவும், அக்னியிடம் சுவாஹாதேவியாகவும், ( யாகத்தில் சுவாஹா என்று அழைப்பது இதனால் தான்) யமனிடத்தில் சுசீலா அருந்ததியாகவும், வசிஷ்டரிடம் அருந்ததியாகவும், காஷ்யபரிடம் அதிதியாகவும், அகத்தியரிடம் லோபாமுத்திரையாகவும், கௌதமரிடம் அகல்யையாகவும், திகழ்கிறது சக்தியின் அம்சம்.இந்த சக்தி குபேரனிடம் செல்வதாகவும், கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, வைகை என புண்ணிய நதிகளாகவும் திகழ்வதை நாம் காண முடிகின்றது. எனவே பல திருநாமங்களில் திகழும் சக்தியை வணங்கிட, சகல தேவர்களின் அருளும், முனிவர்களின் ஆசியும் பெற்று சிறப்பிக்கலாம். இதனால் நாம் அருளும் பொருளும் பெற முடிகின்றது.

மற்றொரு வழியில் பார்த்தால் நதி வழிபாடு நம் ஆதி வழிபாடு ஆகும். நதி வழிபாட்டின் மூலம் அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்ற தத்துவத்தில் நம் உடலில் உள்ள நீர் சக்தியைப் பற்றி, போற்ற வேண்டும் என்ற செய்தி நமக்கு உணர்த்தப்படுகின்றது.

இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் போதே, நமக்கு ஆடிப் பெருக்கு ஆசிகள் வெளிநாட்டிலிருந்து TUT குழுவின் அன்பர் ரேவதி அம்மாவிடம் இருந்து பெற்றோம். இந்த ஆசிகளோடு இந்தப் பதிவை தொடர்கின்றோம்.

ஆடிப் பெருக்கு விழா தமிழ் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா ஆகும். ஆனால் இந்த ஆண்டு கிருமி தொற்று அசாதாரண சூழலால் அனைவரும் வீட்டில் இருந்து தான்  நாளை கொண்டாட வேண்டும்.

ஈரோட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது  அதிகாலை முதலே காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கூடி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் குறிப்பாக பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.எங்குப் பார்த்தாலும் புதுமண தம்பதிகளாக தெரிவார்கள். இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் மக்கள் அதிகளவு கூடுவார்கள். ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 

சுமங்கலிப் பெண்கள் தங்களது நாத்தனார் உறவினர்களுடன் வந்து மஞ்சள் கயிற்றை மாற்றி புதிய கையில் அணிவார்கள். இவ்வாறாக ஆடிப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே அனைவரும் வீட்டில் இருந்து தான்  நாளைஆடிப்பெருக்கு வழிபாட்டை  கொண்டாட வேண்டும்.


இந்தப் பதிவில் மீண்டும் நாம் சென்ற ஆண்டு ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்தில் பெற்ற காவிரித் தாயின் தரிசனம் தர இருக்கின்றோம்.

.


காவிரி தந்த கருணையாளர் யார்? நம் குருநாதர் அகத்திய பெருமான் ஆவார். முதலில்  அவரின் தாள் பணிவோம்.

 தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.

அன்றைய தினம் மாலை அம்மாமண்டபம் முன்பு உள்ள படித்துறைக்கு சென்றோம். ஏன் இது போன்ற மண்டபங்கள் கட்டினார்கள் என்று யோசித்தோம்.

காவிரி ஆற்றையொட்டி கரைப் பகுதிகளில் அந்தக் காலத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டன. காவிரி பாய்ந்தோடி வருகிற வேளை என்பதால், மக்கள் நதியில் இறங்கி வணங்கும்போது சுழலில் சிக்கி, அதன் வேகத்துக்கு அவர்களை இழுத்துக் கொள்ளாதபடி, கரைப் பகுதியில் கொஞ்சம் மேடான இடமாகப் பார்த்து மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்சியில் அகண்ட காவிரியாக பிரமாண்டத்துடன் ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடுவார்கள். நாங்கள் அம்மா மண்டபத்துக்கு முன்னே உள்ள இடத்திற்கு  மாலை 5 மணி அளவில் சென்றோம். கூட்டம் சற்று இருந்தது. மாலை நேரம் இப்படி என்றால் அன்று காலை கூட்டம் அமோகமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.



ஆரம்ப காலத்தில் விவசாயம் செழிக்கவேண்டும், காடு கரையெல்லாம் நீரால் நிறைந்திருக்கவேண்டும், போட்ட விதையெல்லாம் பொன்னெனத் திகழ வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இன்று இல்லம் செழிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குடும்பம் சகிதமாக அனைவரும் வந்திருந்தார்கள்.

அனைவரும் காவிரி நீரில் நீராடி பின்னர் படையலிட்டு வணங்குவதைக் கண்டோம். புதுமண தம்பதிகள் ஆடிப் பெருக்கு அன்று தாலி பிரித்து போட்டு கொண்டாகின்றார்கள்.


நாமும் அப்படியே காவிரித்தாயை தொட்டு,உள்ளே இறங்கினோம். அகத்தியரை வேண்டினோம், சகல குருமார்களையும் சில நொடிகளில் வேண்டினோம். புனித நீரை தலையில் தெளித்துக்கொண்டு மூத்தோனின் ஆசி பெற விநாயகரை வேண்டினோம்.அங்கிருந்தே நேரே பார்த்தால் அட..நம்ம உச்சிப்பிள்ளையார். வேறென்ன வேண்டும்? அப்படியே திரும்பினோம்.


அப்படியே திரும்பி ரங்கநாதரை வேண்டினோம். பின்னர் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அகிலாண்டேஸ்வரி அம்மையையும், ஜம்புகேஸ்வரரையும் மனதார வேண்டினோம்.


இல்லத்தரசியார் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் படையலிட்டு, வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு காவிரியை
வணங்கிக் கொண்டிருந்ததை கண்டோம். அங்கே நாமும் நோன்பு இருப்பவரிடம் ஆசி வாங்கி, கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டோம்.










அடுத்து அங்கே ஒரு பிள்ளையார்  ஆல மரத்தடியில் அருள் தந்து கொண்டிருந்தார். அங்கு சப்த கன்னியர்களும் இருந்தார்கள். ஆல மர விநாயகர் மிகவும் விசேஷம் என்பார்கள்.


சப்த கன்னியரை மஞ்சள் தூவி, மஞ்சள் நூல் அந்த மரம் முழுதும் கட்டி வழிபட்டார்கள். பின்னர் தீபமேற்றி விநாயகரை வழிபட்டார்கள்.



பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார். எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்பது இங்கே:-

வில்வமர விநாயகர்: தெற்கு நோக்கியவாறு இருந்தால் சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை, ஏழைக்குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்து வணங்கினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர்.

அரசமர விநாயகர்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.

ஆலமர விநாயகர்: வடக்கு நோக்கி இருந்தால் சிறப்புடையது. நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

வேப்பமரத்து விநாயகர்: கிழக்கு முகப்பிள்ளையார் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும்.

மாமர விநாயகர்: கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு, அளித்து வந்தால் பகைமை, கோபம், பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

புன்னைமர விநாயகர்: ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீர் அபிஷேகமும் செய்து நெசவுத்துணிகளை பிள்ளையாருக்கு அணிவித்து அதனை ஏழை நோயாளிகளுக்கு அளித்து வந்தால் கணவன்-மனைவியிடையே உள்ள மனக்கசப்பு நீங்கி தாம்பத்திய உறவு சீர்பெறும்.

மகிழமர விநாயகர்: அனுஷ நட்சத்தித்தில் இந்த மகாகணபதிக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வந்தால் ராணுவம், வெளிநாடுகளில் உள்ளோர் நலம் பெறுவர். மகிழ மரப்பிள்ளையாரை முறைப்படி தொழில் செய்வினைகள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பொறாமை, கண்திருஷ்டி நீங்கி, கவுரவமான வாழ்வு மலரும்.

வன்னிமர விநாயகர்: அவிட்டம் நட்சத்திரந்தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண காரியத்தில் வரும் தடை நீங்கி, மகிழ்ச்சியான குடும்பம் அமையும். ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தும், மணவாழ்க்கையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனக்கசப்போடு பிரிந்து வாழ்பவர்கள் சஞ்சலம் அகன்று சுகவாழ்வு காண்பார்கள். வன்னிமரப் பிள்ளையாரைக் காண்பதே அரிது. வன்னிமரத்திற்கு விசேஷ அம்சங்கள் உண்டு. வன்னி மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி நள தமயந்தி முன் வினை நீங்கி நலன்பெற்றதாக வரலாறு இருக்கிறது. 



நாமும் மூத்தோனை வணங்கினோம்.








ஆடிப் பெருக்கு அன்று நம் குருநாதர் கால் பட்ட இடத்தில், நம் மனதை ஒன்றை செய்தோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்தோம். பின்னர் அங்கு பிரசாதம் உண்டு , அங்கிருந்து நகர்ந்தோம். ஆடிப் பெருக்கு நன்னாளில் நதி வழிபாடு, விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, சிவனார் வழிபாடு என அனைத்தும் ஒருங்கே பெற்றோம். இப்போது யோசித்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கின்றது.

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி.போற்றி !!

ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவர் அகத்திய மாமுனிவர் பாதம் போற்றுவோம்.

குருவின் தாள் பணிந்து மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
             
குரு திருவடி சரணம்! சரணம்!


ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_31.html
 
காவிரித் தாயே போற்றி! போற்றி!! - ஆடிப் பெருக்கு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_5.html

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment