அனைவருக்கும் வணக்கம்.
நம் தளத்தில் வெகு நாட்களாக உழவாரப் பணி பற்றிய பதிவுகள் இல்லாது இருப்பது போல் தோன்றலாம். ஆனால் சுமார் 4 உழவாரப் பணி அனுபவப் பதிவுகள் நம்மிடம் உள்ளது. கொளத்தூர் ராஜராஜேஸ்வரி,பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், கோடகநல்லூர் உழவாரப்பணி, கூடுவாஞ்சேரி நூலாக உழவாரப்பணி, குன்றத்தூர் கோவிந்தன் அட..நம்ம திருஊரகப்பெருமாள் கோயில் என பட்டியல் நீளுகிறது. உழவாரப் பணி எப்போது எப்படி நமக்கு வாய்க்கும் என்பது நம் கையில் இல்லை.
கூடுவாஞ்சேரி நம்மை உயிர்த்து வரும் பூமி. சென்னையில் பல இடங்களில் நாம் இருந்திருக்கின்றோம். ஆனால் கூடுவாஞ்சேரி தான் நமக்கு வாழ்வின் புரிதலை இன்னும் கற்பித்து வருகின்றது. நமக்கு என்று இன்னும் உழவாரப் பணி கருவிகள் கூட இன்னும் வாங்கவில்லை. ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக நம்மால் முடிந்த வரை இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றோம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது.ஒவ்வொரு முறை உழவாரப்பணியின் போதும் "எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம் " என்பது நமக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் நாம் அன்னசேவை செய்வது உண்டு. அப்படி செய்யும் போது நமக்கு சில அன்பர்கள் அறிமுகமாக கிடைத்தார்கள். அவர்கள் திருக்குறள் பேரவை வைத்துள்ளதாக கூறினார்கள். அதில் நாம் உழவாரப் பணி செய்வது பற்றி சொன்ன போது, கூடுவாஞ்சேரி நூலகத்தில் , நூலக விழா கொண்டாட இருக்கின்றார்கள்.தங்களால் முடிந்தால் நூலகத்தை சுத்தம் செய்து தர முடியுமா என்றார்கள்.
அறிவுக்கு திருக்கோயில் கட்டிய எம் குரு வேதாத்ரி மகரிஷி பிறந்த மண்ணில் முதல் உழவாரப் பணி செய்ய நமக்கு குருவருள் கிடைத்துள்ளது. அதுவும் அறிவின் திருக்கோயில் என கருதப்படும் நூலகத்தில் என்று நினைத்த போது மனம் மகிழ்வுற்றது.உடனே ஆயத்தப்பணிகள் தயாரானது. நம் அன்பர்களிடம் இதனை தெரிவித்து விட்டோம். பொதுவாக உழவாரப் பணி என்றால் கோயிலில் மட்டும் தான் செய்வார்கள் என்று நினைத்தால், உங்கள் எண்ணமே தவறு. உழவாரம் பக்தியில் மட்டுமல்ல; நம் புத்தியில் இருக்க வேண்டும். இது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டால் தான் பூமிப் பந்தில் பூக்கள் முளைக்கும். இல்லையேல் களைகள் தான் முளைக்கும். சரி வாருங்கள் நம் அனுபவத்திற்கு செல்வோம்.
திருக்குறள் பேரவை அன்பர்களிடம் சரி என்று சொன்னதும், அவர்கள் அறிவிப்பு பதாகை வைத்து விட்டார்கள். நமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அன்றைய தினம் காலை சுமார் 9 மணி அளவில் சில அன்பர்கள் வந்தனர். நூலகம் என்றதும் நூற்களை அடுக்கி வைப்பது,சுத்தம் செய்வது என்று நாம் நினைத்தோம். ஆனால் அங்கு நடந்ததே வேறு. நூலகம் சுற்றி தேவையற்ற புற்கள்,செடிகள்,களைகள் என நிறைந்து இருந்தது.
நம் அன்பர்கள் சிலர் வந்து சேரும் முன்பே, நாம் பணியில் ஈடுபட தொடங்கிவிட்டோம். அன்று மற்றொரு அன்பர் அறிமுகமானார்.விரைவில் தனிப்பதிவில் அதனை காண்போம்.
நாமும்,அந்த அன்பரும் சேர்ந்து கையாலே களைகளை பிடுங்க ஆரம்பித்தோம்.
அதற்குள் பாருங்கள். நாம் நீக்கிய செடிகளை. ஒவ்வொருவராக அன்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.
கையில் கையுறை அணிந்து, மண் வெட்டி பிடித்து களப்பணி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.மொத்தம் ஐந்து பேரோடு பணியை தொடர்ந்து கொண்டிருந்தோம்.,
அட..கொடிமரம் தெரிகின்றதா? இவற்றை முழுதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து பணியை செய்து கொண்டிருந்தோம்.
திரு திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கு நன்றி.இவர் தான் நமக்கு இந்த வாய்ப்பை அளித்தார்கள்.
நூலகம் சுத்தம் செய்தது நமக்கு புதுவித அனுபவமாக இருந்தது. மேலே உள்ள படங்களை நீங்களே பாருங்கள்.
திருமதி சுபாஷினி அவர்களும் அன்றைய தினம் கலந்து கொண்டார்கள்.
சும்மா இருக்க முடியுமா என்ன? இந்த தள்ளாத வயதில் திருநாவுக்கரசு ஐயா
அவர்களும் தானும் தூய்மை செய்கின்றேன் என்று களத்தில் இறங்கிவிட்டார்கள்.
லேட்டாக வந்தாலும் ..தன் பங்கை செவ்வனே ஆற்றும் தம்பி வினோத்தும் அன்று வந்தார். அருமையாக உழவாரப் பணி நடைபெற்று வந்தது.
நம்மால் முடிந்த வரையில் சுமார் 6 பேரோடு அந்த நூலகத்தின் வெளிப்பகுதியை தூய்மை செய்தோம்.
பதிவின் தலைப்பை பாருங்கள். நல்லவே எண்ணல் வேண்டும். அந்த நல்ல உள்ளங்கள் இங்கே நம்மோடு இணைந்து இருந்தார்கள்.
ஒரு வழியாக சிறிய மலை அளவில் களைகளை குவியலாகி வைத்தோம்.அள்ளிப்போட நம்மிடம் போதிய உபகரணங்கள் இல்லை.
சிறிய தேநீர் இடைவெளி கொடுத்து மீண்டும் உழவாரப் பணி தொடர்ந்தது. நீங்களே பார்த்திருப்பீர்கள். எப்படி இருந்த இடம் இப்போது ஏதோ கொஞ்சமாவது தூய்மையாக உள்ளது அல்லவா? அன்றைய தினம் எங்கள் அனைவருக்கும் மற்றொரு நாள் அன்று. புதிய நாளாகவே அமைந்தது. அடுத்து நாம் என்ன செய்தோம்? உடலுக்கு மட்டுமா அன்று செவிகளுக்கு அன்று பெரிய விருந்து காத்திருந்தது.
- மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்.
மீள்பதிவாக:-
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

இப்போது கொடிமரம் எப்படி தெரிகின்றது? இதற்கு முன்னர் கொடிமரத்தை நம்மால்
கண்டுபிடிக்க முடியவில்லை. அவளோ செடிகள்,களைகள். இப்போது அவை நீக்கப்பட்டு
விட்டது.
திருமதி சுபாஷினி அவர்களும் அன்றைய தினம் கலந்து கொண்டார்கள்.
லேட்டாக வந்தாலும் ..தன் பங்கை செவ்வனே ஆற்றும் தம்பி வினோத்தும் அன்று வந்தார். அருமையாக உழவாரப் பணி நடைபெற்று வந்தது.
உள்ளே நூலகத்தில் குருவின் அருள் பெற்றோம்.
நம்மால் முடிந்த வரையில் சுமார் 6 பேரோடு அந்த நூலகத்தின் வெளிப்பகுதியை தூய்மை செய்தோம்.
பதிவின் தலைப்பை பாருங்கள். நல்லவே எண்ணல் வேண்டும். அந்த நல்ல உள்ளங்கள் இங்கே நம்மோடு இணைந்து இருந்தார்கள்.
ஒரு வழியாக சிறிய மலை அளவில் களைகளை குவியலாகி வைத்தோம்.அள்ளிப்போட நம்மிடம் போதிய உபகரணங்கள் இல்லை.
அருமையான தலைப்பு கொண்ட நூல். உழவாரப் பணி அன்பர்களுக்கு கிடைக்க இருப்பது கண்டு நாமும் மகிழ்ந்தோம்.
சிறிய தேநீர் இடைவெளி கொடுத்து மீண்டும் உழவாரப் பணி தொடர்ந்தது. நீங்களே பார்த்திருப்பீர்கள். எப்படி இருந்த இடம் இப்போது ஏதோ கொஞ்சமாவது தூய்மையாக உள்ளது அல்லவா? அன்றைய தினம் எங்கள் அனைவருக்கும் மற்றொரு நாள் அன்று. புதிய நாளாகவே அமைந்தது. அடுத்து நாம் என்ன செய்தோம்? உடலுக்கு மட்டுமா அன்று செவிகளுக்கு அன்று பெரிய விருந்து காத்திருந்தது.
- மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்.
மீள்பதிவாக:-
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html
No comments:
Post a Comment