"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, July 25, 2019

TUT தளம் கொண்டாடிய பஞ்செட்டி சதய பூசை திருவிழா

 அனைவருக்கும் வணக்கம்.

என்னப்பா? பஞ்செட்டி சதய பூசை  திருவிழா என்று யோசிக்கிக்கின்றீர்களா? ஆம். பொதுவாக பஞ்செட்டி சதய பூசை வழிபாடு என்று தான் நாம் உணர்வோம், உணர்த்தப்படுவோம். ஆனால் TUT குழுவின் சார்பில் புரட்டாசி  மாதம் 7 ஆம் நாள் (23/09/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற சதய பூசை வழிப்பாட்டை தாண்டி திருவிழா என்ற நிலைக்கே நம்மை இட்டுச் செல்கின்றது. அந்த அனுபவத்தை சொல்லில் வடிப்பது கடினம். இருப்பினும் இங்கே கொஞ்சம் முயற்சி செய்கின்றோம்.

அன்றைய தினம் சுமார் 3 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் இருந்து வேன் மூலம் புறப்பட்டோம்.செல்லும் வழியில் ஊரப்பாக்கம்,பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் அகத்திய சொந்தங்களை வேனில் ஏற்றிக்கொண்டு, அப்படியே கோயம்பேடு சென்றோம். அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். இதனைத் தவிர நம்மால் வேறு தறிப்பிடங்களை ஏற்பாடு செய்ய இயலவில்லை.







பின்னர் கோயம்பேட்டில் இருந்து யாத்திரை ஆரம்பமானது.



சுமார் 5 மணி அளவில் கோயிலை அடைந்து விட்டோம், பூசை முடித்து குழு காட்சிப்படம் எடுக்கலாம் என்று நினைத்தால் இருட்டிவிடும் என்பதால், அப்போதே மாலை வேளையில் சில படங்கள் எடுத்தோம்.பின்னர் கோயிலின் உள்ளே சென்று பூசைக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். அடுத்து சிலரை அழைத்து ஒவ்வொரு சன்னதியிலும் தீபமேற்றி வழிபட வேண்டினோம்.






விநாயகர்,முருகன் என ஒவ்வொரு சன்னதியிலும் வழிபாடு செய்தோம் 






அடுத்து பூக்கள் என்னென்ன உள்ளது என்று சரிபார்த்தோம்.






இங்கே சில அகத்திய அடியார்கள் சிலர் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியிலும், சிலர் வில்வம் பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.


அன்று உழவாரமும் நடைபெற்றதை மேலே நீங்கள் காணலாம். உழவாரப் பணி என்றால் கூட்டம் சேர்த்து செய்ய வேண்டியது என்று நீங்கள் எண்ண வேண்டாம். கூட்டத்தில் ஒன்றாய் இருப்பினும் நீங்கள் கோயிலில் ஒரு சிறு தூசியைத் துடைத்தாலும் அது உழவாரப் பணியே.







நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தார்கள்.


இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அபிஷேகம் தொடங்கியாகி விட்டது.
















இரவின் மடியில் கோபுர தரிசனம்.






அட..கூட்டத்தை பார்க்கும் போது திருவிழா போன்று தான் அல்லவா தெரிகின்றது.









அபிஷேகம் முடித்து,தீபாராதனை காட்டிய உடன், சங்கல்பம் செய்ய கேட்ட போது நாம் நம் அலைபேசியில் இருந்து ஒவ்வொரு அன்பரின் பெயரை சொன்னோம். ஆவூரு அன்பரின் பெயரை சங்கல்பத்திற்காக சொன்ன போது, அகத்திய பெருமானிடம் இருந்து ஒவ்வொரு பூவாக கீழே விழுந்தது. இது தான் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். வேறென்ன வேண்டும் நமக்கு? அடுத்து அன்னம்பாளிப்பு தான்.







அன்றைய தினம் அகத்தியரின் தரிசனம் இதோ..அனைவருக்கும் தரப்படுகின்றது.






அன்றைய பூசையில் TUT குழுவின் மூலம் தான் பூசை/அபிஷேகப் பொருட்கள் கொண்டு வர சொன்னோம். அனைத்தும் அதிகமாக இருந்தது. பூக்களா? இரண்டு, மூன்று வண்ணங்களில், பஞ்சாமிர்தமா? ஒரு பெரிய தட்டு நிறைய..கடைசியில் கொடுத்த அன்னமா ..சுமார் 10 வித அன்னங்கள்..உயரிய சுவையில்..இவ்வாறு நம் உடல்,பொருள் தாண்டி நாம் கொடுத்தோம். அகத்தியரும் முருகப் பெருமானின் பரிபூரண தத்துவத்தை அங்கே காட்டி, அங்கே வந்த அனைவரையும் கண் திறந்து பார்த்தார். அவரின் கடைக்கண் பார்வை பட்டபின் என்ன வேண்டுவது? அன்பே..அகத்தீசா ? யாமொன்றும் அறிந்திலோம். 
முருகனின் ஆசி கிடைக்கும்  என்று  நாம் அன்று எண்ணவில்லை. அனால்  பூசை அறிவிப்பின் பதிவை முன்கூட்டியே வேலுண்டு துணை வருங்கால் - TUT சதய பூசை அழைப்பிதழ் என்றே அளித்தோம். நாம் வழக்கமாக சொல்வது தான். நாம் எதனையும் திட்டம் இடுவது கிடையாது, நடப்பது எல்லாம் நம்மை வழி நடத்தும் குருவின் வசம் தான்.
வாழ வழி காட்டும் அகத்தியருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து சென்றோம். இதே போல் அடுத்த பூசைக்கு நாம் 2019 ஆம் ஆண்டிலும் காத்திருக்கின்றோம்.
இந்த ஆண்டிற்கான அழைப்பிதழை விரைவில் தனிப் பதிவில் தருகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 
மீள்பதிவாக:-

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5





No comments:

Post a Comment