அனைவருக்கும் வணக்கம்.
இது சென்ற ஆண்டு நாம் பெற்ற தரிசனம். மீண்டும் இங்கே மீள் பதிவாக தருகின்றோம். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை அன்று முருகன் அருள் பெற தவம் இருக்கின்றோம். சரி..பதிவிற்குள் செல்வோமா?
சென்ற வாரம் நாம் நம் குழுவினருடன் பர்வத மலை யாத்திரை சென்று வந்தோம். அனைத்தும் அவன் அருளாலே தான். அருமையான தரிசனம் கிடைத்தது. நம்முடன் 62 வயதுடைய அன்பர் ஒருவரும் வந்தார். ஏறும் போது கடினமாகத் தான் இருந்தது. அந்த வலி அனைத்தும் ஐயனைக் கண்டதும் பறந்தே போனது. என்ன பாக்கியம் செய்தோம். ஐயனை உச்சி தொட்டு நம் கைகளால் அபிடேகம், அலங்காரம் செய்தோம். நிறைவை முழுமையாக உணர்ந்தோம். இந்த அனுபவத்தை மற்றொரு பதிவில் காண்போம்.
பர்வத மலை தரிசனம் முடித்து அடுத்த நாள் ஆடிக் கிருத்திகை. நாம் ஏற்கனவே மாற்றம் அதனை தந்திடுவான் மீஞ்சூரான் என்று கூறி இருந்தோம். அன்றைய தின தரிசனக் காட்சிகளை இங்கே தருகின்றோம்.ஏற்கனவே ஆடிக் கிருத்திகை பற்றி கூறி இருந்தோம்.இன்று நேரே தரிசனத்திற்கு செல்கின்றோம்.
பர்வத மலை யாத்திரை அடுத்து ஆடிக் கிருத்திகை எங்கு சென்று முருகனை தரிசனம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது, நம் குழு உறவாம் திருமதி.அருணா அவர்கள் மீஞ்சூர் முருகன் வழிபாடு பற்றி தகவல் கேட்டிருந்தார்கள். நமக்கு மீஞ்சூர் சென்று வரலாம் என்று தோன்றியது. ஆடிக் கிருத்திகை காலை பதினோரு மணி அளவில் கூடுவாஞ்சேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி சென்றோம்.
சரியாக சுமார் 2 மணி அளவில் திருப்பதி நகரில் அருள்பாலிக்கும் முருகனை கண்டோம். மரகத முருகன் இவர் ஆவார். நம் மனக்கவலைகளை அவரிடம் சமர்பித்தோம்.பின்னர் மதிய உணவு உண்டோம். அறுசுவை கலந்த உணவு..இன்னும் அந்த பஞ்சாமிர்த ருசி நம் நாவில் இனிக்கின்றது. சரி. முருகப் பெருமான் தரிசனம் பெறலாமா?

காலையில் நடைபெற்ற யாகக் காட்சிகள் இதோ.
மீண்டும் மீண்டும் அழகன் தரிசனம்."கந்தனுக்கு அரோகரா,முருகனுக்கு அரோகரா ,வேலனுக்கு அரோகரா , விமலனுக்கு
அரோகரா" என்று மனதில் சொல்லிக் கொண்டே இருந்தோம்.என்ன புண்ணியம் செய்து
விட்டோம் ..முருகா உன்னை நான் அழைப்பதற்கே என்று தோன்றியது.
வடபழனி ஆண்டவர், சிறுவாபுரி முருகன்,திருச்செந்தூர் திருமுருகன் என
அனைவரையும் ஒன்றாக இங்கே தரிசித்தோம். அன்று மாலை உற்சவர் ஊர்வலம். நேரம்
மணி 5 ஆனது. வரும் வாரம் மோட்ச தீபம் மற்றும் இன்ன பிற வேலைகள்
இருந்தமையால், திரு.அரவிந்தன் ஐயா 7 திரு.ரமீரா அசோக் அவர்களிடம்
சொல்லிவிட்டு நகர்ந்தோம். உற்சவர் மூர்த்தி அலங்காரம் இதோ.கண்ணில் ஒற்றிக்
கொள்ளுங்கள்.
பின்னர் அன்று இரவு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர், வேலி அம்மன் கோயிலில்
நமக்கு கிடைத்த முருகன் அருள் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.
அடுத்து வேலி அம்மன் கோயிலில்....
அடுத்து குமார வயலூர் செல்வோமா? தற்போது தான் வயலூர் சென்று வந்தோம். தனிப்பதிவில் வயலூர் முருகன் தரிசனம் பெறலாம்.
அடுத்து கொளத்தூர் திருப்பதி நகரில் உள்ள
திருமால் மருகன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் முருகப்பெருமானுக்கு
ஷண்முகார்ச்சனை செய்து ஆறு வகை மலர்கள், ஆறு வகை நைவேத்தியம், ஆறு வகை
பழங்கள் கொண்டு ஆடிக்கிருத்திகை கொண்டாடப்பட்டது.இதில் சுமார் 250 க்கு
மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதோ அந்த காட்சிகள் ..
இதோ..இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை தரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது.
இந்தப் பதிவில் ஒரு சிறப்பு உள்ளது.அது என்ன? என்று கண்டுபிடியுங்கள்
பாப்போம். பதில் இனி வரும் பதிவுகளில் சில நாட்கள் கழித்து சொல்வோம்.
முருகன் அருள் முன்னிற்க அடுத்த பதிவில் இணைவோம்.
மீள்பதிவாக:-
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

No comments:
Post a Comment