அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
என்ன வளம் இல்லை இந்த தமிழ் நாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ற பாடலை நாம் கேட்டிருப்போம். அது போன்ற நிலையில் தான்
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில்?
என்று கேட்க தூண்டுகின்றது. நம் தமிழ் மொழியில் இல்லாத சிறப்பா? தமிழ் மொழியின் அருமையை பற்றி பேச ஒரு நாள் போதாது..எழுத ஒரு பதிவு போதாது. எத்தனை அருளாளர்கள், மகான்கள். எத்தனை பக்தி நூல்கள். இன்றைய பதிவில் நாம் சகல கலாவல்லிமாலை படிக்க இருக்கின்றோம். இந்த பதிவை படிக்கும் உங்களிடமும் இதைத் தான் கேட்கின்றோம். இது போன்ற தமிழ் சிறப்பை எடுத்து கூறும் நூட்களை, பாடல்களை எங்களுக்கு தொட்டுக் காட்டுங்கள்.
எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.
இந்த தொகுப்பில் சகலகலாவல்லி மாலை பற்றி சிறிது காண்போம். சகலகலாவல்லி மாலை என்ற நூலை கருவாக்கியவர் குமரகுருபரர் ஆவார். யார் இந்த குமரகுருபரர்?
குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்புதங்களும் செய்தவர்.
குமரகுருபரர் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமி அம்மையார். குமரகுருபரர் ஐந்து வயதுவரை வாய் பேசாது இருந்தார். தங்கள் மகன் வாய் பேசாது இருப்பதைக் கண்ட குமரகுருபரரின் பெற்றோர் மனம் வருந்தினர்; குமரகுருபரருடன் திருச்செந்தூருக்குச் சென்றனர். அங்கே முருகன் அருளால் குறை நீங்கப் பெற்று முருகனைப் போற்றும் வகையில் கந்தர் கலிவெண்பாப் பாடலைப் பாடினார். இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.
இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர்,காசிக்குப் பயணமானார்.

No comments:
Post a Comment