"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, July 27, 2019

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க!

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

மீண்டும் ஸ்ரீ அகத்தியர்  விழாவைப் பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். சென்ற ஆண்டின் இறுதியில் நாம் கொடுத்த பதிவாக மஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் அழைப்பிதழ் என்ற பதிவு இருந்தது. இன்றும் தங்கள் அனைவரையும்  பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க என்று அழைக்க விரும்புகின்றோம்.

இது நம்ம வீட்டுக் கல்யாணம். ஆமாம் அகத்தியர் அனைவருக்கும் சொந்தம். சித்தர்கள் அனைவரும் அப்படித் தான். இவர்களுக்கு பிறந்த  நட்சத்திரம் போன்ற கணிப்புகள் கிடையாது. அகத்தியருக்கு பொதுவாக நாம் ஆயில்ய பூசையும், பஞ்செட்டியில் சதய பூசையும் செய்து வருவதை பார்த்து வருகின்றோம்.

அகத்தியர் ஒரு பேருண்மை. கற்பக தரு ஆவார். அகத்தீ யர் யார் என்று உணர்ந்து பாருங்கள். நம் உள்ளத்தின் உள்ளே உள்ள அகத்தீ கொண்டு நாம் நம்மை மேம்படுத்த வேண்டும். இந்த அகத்தீ கொண்டு உள்ளே அக்னி வளர்த்து நம் மன மாசுக்களை பொசுக்க வேண்டும். அப்படி பொசுக்கி விட்டால் என்ன கிடைக்கும். நம் உள்ளத்தின் ஈசன் வெளி வருவார். இது புறமாக செய்ய வேண்டிய செயல் அல்ல. இது அக மார்க்கமாக செய்ய வேண்டும். அகத்தில் ஈசன் வெளிப்பட்டால் அந்த அகத்தீசனை நாம் உணரலாம்.இதனையே தான் அகத்தின் ஈசனே அகத்தீசன் என்றும் சொல்வது உண்டு. 

இங்கே அகத்தியர் அக்னி அம்சமாக உள்ளார். இவரே அதற்கு எதிர்குணமான நீர் அம்சமான காவேரியை மணந்தார் என்பது நம் அறிவின் தெளிவாம். இதோ இந்த பதிவிலும் நாம் மஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம்.











 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அகத்தியர் உறையும்  உன்னத இடம். நாம் இதனை இரண்டு மூன்று முறை உணர்ந்து இருக்கின்றோம். உணர்ந்ததை நம்மால் வார்த்தையில் சொல்ல இயலாது. அனுபவிக்க மட்டும் தான் முடியும். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று அகத்தியர் வழிபாடு வெகு  விமரிசையாக நடைபெற்று வருகின்றது.


































































அகத்தியத்தை நமக்கு ஊட்டி வரும் அகத்திய தம்பதிகளின் பாதம் பணிகின்றோம். ஒவ்வொரு மாத பூசையிலும் பொறுமையாக பூசித்து, அபிஷேக அலங்காரம் செய்து, யாரெல்லாம் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்து, பிரார்த்தனை பூர்த்தியாயின் நன்றி சொல்ல வராதவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லியும் வரும் இவர்களின் பரிவும் பாசமும் போதும். 




மெய்யன்பர்களே..கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.விடுமுறை தினமாதலால் வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகின்றோம்.




இனி திருக்கல்யாண தரிசனம் பார்க்க செல்வோமா? இந்த பதிவை ஒரே பதிவாக தர இயலவில்லை. தொடர் பதிவாக தர விரும்புகின்றோம். ஏனெனில் அன்று நடைபெற்ற ஹோமம், திருக்கல்யாணம் என அனைத்தும் ஒரே பதிவில் அடக்க முடியுமா என்ன?

அன்றைய தினம் 6 பேர் மகிழுந்தில் பாண்டிச்சேரி சென்றோம். ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் நம்மை அன்போடு வரவேற்றார்கள்.  அபிஷேகம்,யாகம்,திருக்கல்யாணம் என்று பதிவை தொடர உள்ளோம். நேரே அபிஷேகத்திற்கு செல்வோம்.




                 அனந்த கிருஷ்ணன் ஐயா அவர்கள் தேன் அபிஷேகம் செய்த காட்சி





திருக்கல்யாண மாலைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் யாக குண்டமும் தயார்.

















அடுத்து அன்பர்கள் ஒவ்வொருவராக பால் அபிஷேகம் செய்கின்றார்கள்.

















அடுத்து பெரம்பலூர் டாக்டர் சதீஷ் அவர்கள் பால் அபிஷேகம் செய்கின்றார்.

























அடுத்து எங்கள் குருநாதர் திரு.சுவாமிநாதன் ஐயா அவர்கள் அபிஷேகம் செய்யும் காட்சிகள்.







அன்றைய தரிசனத்தில் கயிலையில் நாம் இருப்பதை உணர்வதாக இருந்தோம். சித்த மார்க்கத்தில் ஆதி எடுத்து வைக்கவே கொஞ்சம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். சற்று சிந்தித்து பாருங்கள். நம் தமிழ் நாட்டினை உருவாக்கியவர் அகத்தியர் தான். இரு பெரும் நீர் தர்மத்தை உருவாக்கியவர். காவிரி, தாமிரபரணி என இரண்டும் உருவாக்கியவர் அகத்தியர். அவரின் நாமத்தை உச்சரிக்கவே இந்த பிறப்பாக நாம் கருதுகின்றோம். அதில் அவருடைய ஜெயந்தி விழாவில் திருக்கல்யாண வைபவத்தில் அவருக்கு நம் கரங்களால் அபிஷேகம் செய்கின்றோம் என்றால் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தானே!

- திருக்கல்யாண தரிசனம் மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

  பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html
ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5






No comments:

Post a Comment