"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, January 27, 2024

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும்! - ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 102 ஆம் ஆண்டு குருபூஜை!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இன்றைய தை மாத மக நட்சத்திரத்தில் ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 102 ஆம் ஆண்டு குருபூஜை காணும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இன்று சதானந்த சுவாமிகள் ஆசிரமம் சென்று தரிசனம் செய்தோம். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. குருவருளால் நாம் மூன்று முறை உழவாரப்பணி இங்கே செய்துள்ளோம். சில முறை மக பூசை வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளோம். நமக்கும் , சதானந்த சுவாமிகள் ஆசிரமத்திற்கு நெருங்கிய உறவு உண்டு. தமிழ் கூறும் நல்லுலகம் என்று ஒரு சிறிய விழா, TUT குழுவின் அகத்தியர் கீதம் இசைத்திட்ட இரண்டாம் ஆண்டு விழா என ஒவ்வொன்றும் முத்தாய்ப்பாக இங்கே நடைபெற்றது. தற்போது திரும்பி பார்க்கும் போது இறைவா! அனைத்தும் நீயே!! என்றும் குருவிடம் சரண் அடைகின்றோம் 

இன்றைய பதிவில் ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 102 ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்வின் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம். அதற்கு முன்பாக குரு பக்தி பற்றி நாம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். 

ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும். இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள். ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.

ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர். மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி. கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது. நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது. அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.

அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று கேட்டார் ராமானுஜர். மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள். ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது. ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள். பிறகு, வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்… அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.

ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார். “அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. “சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.

“அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர். “இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன்.
‘இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர்.
மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள். “சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.

இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். ‘நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார்.

பின்னே… ஒரு கடிதம் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே! அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். ‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர். எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பெருமாள் கொடுக்காமலா இருப்பார்?! தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய் மலர்ந்தார்.

அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டனர். ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா?

உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது!

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

இனி இன்றைய தரிசன நிலைகளை காண உள்ளோம்.

நம்மை வரவேற்கும் இடம் 

பூக்கள் அலங்கரிப்பில் 

சுவாமிகளை தரிசிக்க நீண்ட வரிசையில் 

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் அருளிய இடம் 

102 ஆம் ஆண்டு குருபூஜை தரிசனம்.

அடடா..தன்வந்திரி சித்தரின் அருள்நிலையை சரியாக எடுக்க வில்லையே! என்று தோன்றுகின்றது. இன்றைய குருபூஜை தரிசனம் எப்படி இருந்தது? சித்தர் பெருமக்களின் பாதம் பணிகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தைப்பூச சிறப்பு பதிவு - குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_25.html

 தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்! - இன்றைய வழிபாடு அழைப்பிதழ்கள் - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_24.html

 மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே! - https://tut-temples.blogspot.com/2021/04/blog-post.html

 ஓம் ஸ்ரீ பெரியபுன மங்கையாம் வாலைத்தாய் திருவடிகள் போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_23.html

 தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்! - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_18.html

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

 உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - உலோபாமுத்ரா சமதே அகத்தியர் பெருமான் - வருஷாபிஷேகம் - 24.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/24012024.html

அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html

 தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_15.html

 பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_81.html

 தைத் திருநாள் வாழ்த்துக்கள்  - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_15.html

 திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

Thursday, January 25, 2024

தைப்பூச சிறப்பு பதிவு - குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! என்று ஏற்கனவே நம் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளோம். இந்த பதிவையும் குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! என்று நாம் பகிர பல காரணங்களை நாம் கூற முடியும். குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! என்ற பதிவில் நீங்கள் சென்று பார்த்தால் குருநாதரின் அருள்நிலை படங்களை காண முடியும். ஏனென்றால் குருவின் தாளினை எப்போதும் போற்ற வேண்டும் என்றால் குருவினை காண வேண்டும். அதன் பொருட்டே அப்படி ஒரு நிலையாக குருவின் தரிசனம் காண கிடைத்து வருகின்றது. 

இன்றைய தைப்பூச சிறப்பு பதிவில் நம் குருநாதர் தரிசனத்தை பொதிகையில் இருந்து பெற உள்ளோம். ஏன்?எப்படி ? என்பது போன்ற கேள்விகள் இல்லை. எப்பொழுதும் பதிலாக நம் குருநாதர் இருக்கின்றார்.

வாழ வழி காட்டும் குருவை போற்றுகின்றோம். குருவின் தாளினை எப்போதும் போற்றி மகிழ்கின்றோம்.

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

--திருவள்ளுவ ஞானம்

இந்தப் பதிவு பொதிகை மலை யாத்திரை பற்றியது ஆகும். எம் அலுவலக அன்பர்கள் யாத்திரை சென்று வந்து, அந்த அருள்நிலையை பதிவு செய்தார்கள். நாம் அவர்களிடம் இருந்து அந்த தரிசன அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம்  வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம். போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று பயணம் துவங்கலாம். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.

முதல் அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும். 

அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர். மறுநாள் காலை  அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடம் வரவேற்கும்.  இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு  (ரோப்) பிடித்துக் கொண்டு  கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

அங்கு சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படும்.

இனி 7 ஜனவரி 2024 அன்று கிடைத்த நம் குருநாதர் தரிசனத்தை இங்கே பகிர உள்ளோம். ஒவ்வொரு அருள்நிலைகளை பார்த்து கண்கள் வழியாக உள்ளத்துள் எடுத்து செல்லுங்கள்.

மூத்தோனை வணங்கி, யாத்திரை ஆரம்பம் 

அதற்கு முன்பாகவே நம் குருநாதர் தரிசனம் பெறலாம் 

மேலே நீங்கள் காண்பது முதல் நாள் தொடங்கி, அடுத்த நாள் காலை வரை உள்ள நிகழ்வின் துளிகள். இங்கே நாம் அடுத்து பொதிகை வேந்தர் தரிசனம் காண உள்ளோம். இரண்டாம் நாள் காலை 7 மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தால் நாம் சுமார் 10 மணி அளவில் பொதிகை வேந்தர் தரிசனம் பெறலாம். இனி நாம் காண கிடைக்காத நம் குருவின் தரிசனம் பெற உள்ளோம்.

மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் தரிசனம் ..உள்ளத்தில் பெருங்கோயிலை கட்டி, அங்கே நம் குருநாதரை வைக்க வேண்டும் என்று அல்லவா விழைகின்றோம். அனைத்தும் குருவருளால் எனும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றுகின்றது. எப்படி இருக்கின்றது இன்றைய தைப்பூச சிறப்பு பதிவு. தங்களின் கருத்துக்களை கூறவும். இன்றைய நாளில் நாம் கூடுவாஞ்சேரியில் பெட்ரா வள்ளலார் தரிசனத்தில் பின்வரும் பாடல் கேட்டு மகிழ்ந்தோம். நாமும் இங்கே பாடி மகிழ்வோம்.

 1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்