"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 14, 2022

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளம் சார்பில் நடைபெறும் ஆலய தரிசனம், அன்னசேவை போன்ற அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இங்கு தான் செல்ல இருக்கின்றோம் என்று நாம் எதுவும் தீர்மானிப்பதும் இல்லை. இப்படி தான் சென்ற ஆண்டில் தீபாவளி ஆடை தானம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டிலும் சேவை தொடர்கின்றது. அடுத்து நம் தளத்தின் யாத்திரை பதிவின் தலைப்பை பார்த்தாலே புரிந்து இருக்கும். ஆம். திருஅண்ணாமலை யாத்திரை நாளை முதல் இரண்டு நாட்கள் தீபாவளி சேவையாக நடைபெற உள்ளது.

இணையவெளியில் தேடிய பொழுது கிரிவலம் எப்படி செல்ல வேண்டும் என்று திரு.இளையராஜா அவர்களின் குரலில் ஒரு ஒலிக்கீற்றை கேட்டோம். கேட்பதற்கு முன்பு நாம தான் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் போறோம்ல என்று நினைத்தோம். ஒலிக்கீற்றை கேட்ட பின்பு அட..ஒரு தடவ கூட இன்னும் முறையாக கிரிவலம் போகலனு தான் தோணுது. எப்போ இந்த அருள்நிலை நமக்கு கிடைக்கும் என்று அருணா..கருணா..என்று அண்ணாமலையாரிடம் விண்ணப்பிக்கின்றோம்.

அண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் மலை. ஆனால் நாம் நினைக்கின்றோமா என்பது தான் கேள்விக்குறி? நினைத்தாலும் எப்படி நினைக்க வேண்டும்? மனம்,மொழி,மெய்களால் அல்லவா நினைக்க வேண்டும். இந்த நினைப்பில் இருந்து தான் நாம் தொழ முடியும். இப்படி நாம் நினைத்து நினைக்க நமக்கு தொழ வாய்ப்பு கிடைக்கும். அப்படி தொழ ஆரம்பித்து விட்டால் 

அண்ணாமலை தொழுவார் வினை வலுவா வண்ணம் அறுமே 

என்று திருஞானசம்பந்தர் கூறுவது திண்ணம்.






அதுவும் எப்படி தொழ வேண்டும் என்றால் ஆடிப்பாடி தொழ வேண்டும் என்கின்றார் திருநாவுக்கரசர்.

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்

நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்

ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ

ஓடிப் போம்நம துள்ள வினைகளே. 

தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.



அண்ணாமலை அங்கு அமரர்பிரான் 

வடிவு போன்று தோன்றுதலும்   

 கண்ணால் பருகிக் கை தொழுது 

கலந்து போற்றும் காதலினால்    

உண்ணா முலையாள் எனும் பதிகம் 

பாடி தொண்டருடன் போந்து 

தெண்ணீர் முடியார் திருவண்ணா

மலைச் சென்று சேர்வுற்றார்     

என்று சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்தில் கூறியுள்ளார்.

திருஅண்ணாமலை, திருவண்ணாமலை என்று கேட்டாலோ, படித்தாலோ நம்முள் ஒரு வித உணர்வு ஏற்படுகின்றது. இது நம்மை அன்பே சிவம் என்ற நிலை நோக்கி நகர செய்கின்றது அல்லவா? இது தான் அண்ணாமலையாரின், நம் அன்பில் கலந்தோன் உணர்த்தும் நிலை. நாம் பல முறை திருஅண்ணாமலை சென்றாலும் மீண்டும் மீண்டும் ஒரு காந்தமாக இருந்து இரும்பாகிய நம்மை ஈர்க்கும் மலை திருஅண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் மலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கும் மலை. மேலும் திருஅண்ணாமலை என்று சொன்னாலே கிரிவலமும் பிரசித்தம். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

இதற்கு முன்னர் நம் தளம் சார்பில் நடைபெற்ற திருஅண்ணாமலை துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.


வழக்கம் போல் குருவருளால் நடைபெற்ற அன்னசேவை 


இதோ கிரிவலம் ஆரம்பிக்க உள்ளோம் 



இந்திரலிங்கம் தரிசனம் பெற உள்ளோம்.


கோயிலினுள்ளே தீபமேற்றி வழிபாடு செய்ய தயாரானோம்.




அப்படியே அடுத்து எமலிங்கம் தரிசனம் 



இங்கும் தீபமேற்றி வழிபாடு செய்த காட்சிகள் 







அடுத்து நிருதி லிங்கத்தில் தீபமேற்றி வழிபாடு செய்த போது 





சில துதிகள் மற்றும் காயத்ரி மந்திரங்களை அங்கே ஒரு தரிசனத்தில் பெற்றது. இங்கே அவற்றை பகிர்கின்றோம்.










அடுத்து வருண லிங்கம் தரிசனம் பெற்று, அங்கும் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.




அடுத்து அருள்மிகு ஆதி அருணாச்சலேஸ்வரர் தரிசனம் பெற்றோம்.








அடுத்து வாயுலிங்கம் தரிசனம் பெற்றோம்.





இப்படியே சென்று கொண்டு இருந்த போது , அடுத்து குபேர லிங்கம் தரிசனம் பெற்றோம். திருஅண்ணாமலை தரிசனம்  முழுதும் பெற ஒரு வாரம் குறைந்தது வேண்டும். அடிக்கொரு லிங்கம் காணும் திருஅண்ணாமலை என்று கூறுவார்கள். ஆம். ஒவ்வொரு அடியிலும் ஒரு வித உணர்வை இங்கே பெற முடியும். அடுத்து திருஅண்ணமலை வாழ் மகான்கள் என்றும் தொடரலாம். 

குகை நமச்சிவாய தேவர்,  குகை நமச்சிவாய சுவாமிகள், அருணகிரிநாதர்,திருஅண்ணாமலை தின நுமுதல் குருமூர்த்தி, தேசிக பரமாச்சாரிய சுவாமி, பாணி பத்திர சுவாமி, அன்னை மங்கையர்க்கரசியார், சோணாசல தேவர், ஞானப்பிரகாசர் என பட்டியல் நீண்டு செல்கின்றது.

 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

-  மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

 தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

No comments:

Post a Comment