"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 11, 2022

கொடு(த்து) பெறு(க)!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் 

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி விட்டது. பண்டிகை, திருவிழா அனைத்தும் அன்பின் வெளிப்பாடு தானே. தம்மால் முடிந்தவற்றை மற்றவருக்கு கொடுப்பதின் மூலம் நாம் பெறுவதற்கும் தயாராகின்றோம். இதற்கு முந்தைய பதிவிலும் மஹாளய பட்ச இறைப்பணி என்ற பதிவில் நம் தளம் சார்பில் நடைபெற்ற சேவைகளை தொட்டு காட்டி இருந்தோம். அதிலும் கொடுப்பது பற்றி சில செய்திகள் பேசி இருந்தோம். மீண்டும் அவற்றை இங்கே மனதில் இருத்துவோம்.

கொடுப்பதற்கான பொருள், கொடுக்கும் மனம், தர்மம் கொடுப்பதற்கான வாய்ப்பு என இவை மூன்றும் இருந்தால் தான் தர்மம் செய்ய முடியும். இவை மூன்றையும் ஏற்படுத்திக் கொடுப்பவர் இறைவனே ஆவார்.இப்போது நன்கு சிந்தித்து பாருங்கள். இது குருவருள் துணையின்றி நடக்காது. கடந்த 3 ஆண்டுகளாக மஹாளய பட்ச இறைப்பணி  தங்கு தடையின்றி குருவருளால் நடை பெற்று வருகின்றது.



ஆங்கில மாதக் கணக்கில் பார்க்கும் போது புதிய மாதமாக அக்டோபர் மாத சேவைகளை நம் தளம் சார்பில் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. திருஅண்ணாமலை அன்னதானம் 

3. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை 

4. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை 

5. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

6. எண்ணெய் - 1 டின் உபயம் 

7. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

8. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

9. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

10. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். இம்மாதம் தீபாவளி திருநாளிற்கான சேவைகளை ஏற்பாடு செய்து வருகின்றோம். இனி நம் தளம் சார்பில் சென்ற ஆண்டு தீபாவளி திருநாள் சேவைகளை இங்கே சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.



முதலில் மதுரையில் தீபாவளிக்காக ஆடைகள் வாங்கினோம். இது நம் தளம் சார்பில் முதன் முதலில் குருவருளால் செய்யப்பட்ட ஆடை தானம் ஆகும். அடுத்து அங்கிருந்து திருப்பரங்குன்றம் பாலாம்பிகை அருட்குடில் சென்றோம். வினை தீர்க்கும் விநாயகர் தரிசனம் பெற்று உள்ளே சென்றோம்.





ஆடை தானத்தோடு இனிப்பும் சேர்த்து கொடுக்க பணிக்கப்பட்டோம். 



இனிப்பு, புதிய ஆடைகள் அனைத்தும் பாலாம்பிகை அருட்குடிலில் வழங்கப்பட்டது. ஆடைகள் மட்டும் சுமார் 15000க்கு வாங்கினோம். இங்குள்ள குழந்தைகள், அத்திரி மலை அடிவாரம் சிவசைலம் ஒளவை ஆஸ்ரமத்திற்கும் ஆடைகள் வழங்கி வந்தோம்.


அடுத்து ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் நடைபெற்ற சேவையின் துளிகளை இங்கே பகிர்கின்றோம். 





அம்மா மண்டபத்தில் ஒரு நாள் உணவுப் பொட்டலங்கள் கொடுத்தோம். சென்ற ஆண்டில் தீபாவளி அன்று புதுத் துண்டுகள் கொடுத்தோம். அன்பர்கள் வாங்கி மகிழ்ச்சியாய் இருந்த தருணத்தை கீழே பகிர்த்துள்ளோம்.







ஒரு நாள் அங்கிருந்த சுமார் 20 அன்பர்களுக்கு தேநீர், வடை வாங்கி கொடுத்தோம். கீழே நீங்கள் பார்ப்பது சின்னாளப்பட்டி சேவைக்கானது ஆகும்.



சின்னாளப்பட்டி அன்னசேவையில் உள்ள அன்பர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப, கைலி,துண்டு, கோயில் பூவிற்கும் அன்பருக்கு சேலை, வேஷ்டி,துண்டு என குருவருளால் கொடுத்தோம்.

அடுத்து திருச்சி மயில் மார்க் இனிப்பு கடையில் வாங்கிய இனிப்புகளை அன்பர்களுக்கு கொடுத்தோம். சில பதிவுகள் தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.












இது போன்ற சேவை குருவருள் துணை கொண்டு நடைபெற்று வருகின்றது என்பதை மீண்டும் மீண்டும் இங்கே உணர்த்தப்பட்டு வருகின்றோம்.



இந்த சேவையில் நம்மோடு இணைந்து உறுதுணையாக இருந்த அன்பர் திரு.சங்கிலி கருப்பு அவர்களுக்கும் நம் தளம் சார்பில் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தோம்.

அடுத்து நீங்கள் காண்பது கூடுவாஞ்சேரி சேவைகளின் துளிகள் ஆகும். நண்பர் சத்யராஜ் அவர் துணைவியார் இருவரும் சேர்ந்து தீபாவளி சேவைகளை சிறப்பாக செய்தார்கள்.













கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் அமைப்பிற்கு நம் தளம் சார்பில் நேரில் சென்று அரிசி வழங்கி, தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை பெற்ற காட்சிகளை நாம் இங்கே காண முடிகின்றது. அடுத்து கூடுவாஞ்சேரியில் சேவை செய்து வரும் சில அன்பர்களுக்கு சுமார் 5 சேலை வாங்கி கொடுத்துள்ளார்கள். அனைத்தும் கீழே நீங்கள் காணலாம்.





அடுத்து ஒளவை ஆசிரமத்தில் நம் தளம் சார்பில் சேர்ப்பித்த துணிகள் 


இனி மேலும் சில சிந்தனையை கேள்வி, பதில் தொகுப்பாக தருகின்றோம்.

கேள்வி - அறம், தர்மம் எல்லாமே இங்கே ஆளாளுக்கு மாறுபடுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் இருக்கிறது. ஒவ்வொரு சமயங்களும் தங்களுக்கென்று தனித் தனியான தர்மங்களை வகுத்து வைத்துள்ளன. இதில் இதுதான் சரியான அறம் என்ற,தர்மம் என்றோ நாம் எப்படிக் கண்டு கொள்வது ?

இராம் மனோகர் - சமயங்களை ஏன் சொல்லுகிறீர்கள் ? திருக்குறள் சொல்லும் வகையில் அறத்தைக் கடை பிடியுங்களேன் ? அது பொது மறைதானே ? நானும் கூட எப்பொழுதும் சொல்வது பொதுவான அறம் பற்றிதான். எத்தனை அற வழிகள் வகுக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் என்றுமே மாறுவதில்லை. அவரவர் சமயங்கள் தோன்றிய இடம், காலம், பழக்க வழக்கங்களுக்குத் தோதாக அறங்கள் வகுக்கப்பட்டிருக்கும். ஆனால், தர்மம் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது. அதை யாராலும் மாற்ற முடியாது. தர்மம் என்பது இயற்கையின் விதி. அற வழிகளைப் பொருத்த வரை நல்லது, கெட்டது என்று வரையறுக்கும் பொழுதுதான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. மேலும் அவரவர்களுக்கு வகுக்கப்பட்ட அற வழிகளை அவரவர்கள் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து கடைபிடித்து ஒழுகும் பொழுது தர்மத்தின் சாரம் முற்றிலுமாக அங்கே தொலைந்து போகிறது.

அந்நிலையில் புண்ணியச் செயல்களுக்கேற்ப பல பிரிவினைகள் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பிட்ட புறத் தோற்றங்களை வழிபடுவதும், குறிப்பிட்ட கிரியைகளைச் செய்வதும், குறிப்பிட்ட நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதும்தான் அறம் என்றும், தர்மம் என்றும் அவரவர்கள் அழுத்தமாக எண்ணிக் கொள்கிறார்கள். இது ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கும் பொழுது பிரிதொருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போய் விடுகிறது. இருப்பினும் ஞானிகள், சான்றோர்கள் இத்தகைய முரண்பாடுகளை, சமயப் பூசல்களை வேரறுக்க உண்மையின், இயற்கையின் தர்மத்தை எடுத்து விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால் முதலில் எது புண்ணியம் ? எது பாவம் ? என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். எது புண்ணியம் ? எது பாவம் ?

தனக்கோ, மற்றவர்களுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ துன்பம் ஏற்படுத்துவதும், அவர்களது இயற்கையோடு இசைந்த வாழ்வில் அமைதியைக் குலைப்பதுமான செயல்களைச் செய்வதும்தான் பாவமாகும். அதற்கு மாறாக, மற்றவர்களுக்கு உதவுவதும், அவர்களது இசைவான வாழ்க்கைக்கும், அமைதிக்கும் உதவி செய்வதும் புண்ணியமாகிறது. இது எந்தவொரு இடத்திற்கோ, காலத்திற்கோ கட்டுப்பட்ட விதியல்ல. இது எல்லோருக்கும், எல்லாவிடத்திலும் பொதுவான இயற்கையின் விதியாகிறது. இதுவே தர்மமாகிறது. இந்த அடிப்படை தர்மத்திற்கு பங்கம் நேராமல் நடந்து கொள்வதுதான்அறமாகிறது. இந்த அறம் எந்த நிலையில் மீறப்படுகிறது அல்லது அடிப்படை தர்மம் அடியோடு குலைந்து போகிறது ? என்பதைப் பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயற்கையின் நியதிப்படி அமைந்த வாழ்வில் ஒருவர் கோபம், பயம், வெறுப்பு போன்ற உணர்வுகளை மனதில் ஏற்படுத்திக் கொள்ளாத வரை பிற உயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு செய்யப் போவதில்லை. இத்தகைய தீய, கொடுமையான உணர்வுகள் மனதில் எழும் பொழுதுதான் ஒருவர் பிறருக்கு தீங்கிழைப்பதோடு மட்டுமல்ல தனக்குத் தானேயும் நரக வேதனைகளை அனுபவிக்கிறார். அதைப் போலவே ஒருவர் மனதில் அன்பும், கருணையும், நல்லெண்ணமும் விளங்குமேயானால் அவரால் பிற உயிரினங்களுக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு செய்ய முடியாது. அத்தகைய நல்ல பண்புகளை உடையவர்கள் பிறருக்கு நன்மைகள் செய்வதோடு, தனக்குள் தானே ஆனந்தத்தையும், அமைதியையும் அடைந்து கொள்கிறார்கள். எனவே மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். மற்றவர்களுக்கு நன்மை செய்வபவன் தனக்குத் தானே நன்மை செய்து கொள்கிறான். இதுவே தர்மம். இதுவே சத்தியம். இதுவே இயற்கையின் தர்ம நியதி. இதை கடைபிடிப்பதற்கு எந்த சமயங்களும் தடை விதிப்பதில்லை.


தீபாவளி சேவைக்கு நமக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய செய்தியை இங்கே பகிர்கின்றோம். இந்த நன்றிகள் அனைத்தும் தேடல் உள்ள தேனீக்கள் குழுவிற்கு தான் உரியது. சென்ற ஆண்டில் தீபாவளி சேவை செய்த இடங்களை பாருங்கள்.

1. பாலாம்பிகை அருட்குடில் - ஆடை தானம் 

2. சிவ சைலம் ஒளவை ஆசிரமம் - இனிப்பு, ஆடை தானம் 

3. சின்னாளப்பட்டி - இனிப்பு, ஆடை தானம் 

4. திருச்சி அம்மா மண்டபம்  - இனிப்பு, ஆடை தானம்

5. கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் அமைப்பு - அரிசி

6. கூடுவாஞ்சேரி - ஆடை தானம் 

இவையெல்லாம் குருவருளால் தான் என்பது கண்கூடு. விழாக்கள், பண்டிகைகள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடு தானே. அந்த அன்பை நமக்கு வெளிப்படுத்த வாய்ப்பளித்த குருவருளுக்கு என்றும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். ஏனென்றால் இந்த தீபாவளி சேவை கடநத 3 ஆண்டுகளாக சிறிய அளவில் மட்டுமே நடைபெற்று வருகின்றது. சென்ற ஆண்டில் மிக மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இவை அனைத்திற்கும் பொருளுதவி, அருளுதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த ஆண்டுக்கான தீபாவளி சேவைகளை குருவருளால் ஆடை தானத்தோடு ஆரம்பிக்க உள்ளோம். நீங்களும் சேவைகளில் இணைய விரும்பினால் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம். பதிவின் தலைப்பை மீண்டும் உள்வாங்கிக் கொள்வோம். 

இது போல் சென்ற ஆண்டில் நடைபெற்ற மகாளய பட்ச சேவைகளையும் விரைவில் கண்டு அறிவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பேசுவோம்.

மீள்பதிவாக:-

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 21.09.2021 முதல் 06.10.2021 வரை - https://tut-temples.blogspot.com/2021/09/21092021-06102021.html

தானமும் தவமும் தான்செயல் அரிது - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post.html

குருவருள் பரிபூரணமாகுக! - https://tut-temples.blogspot.com/2022/05/blog-post_11.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html


 மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

 மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

 திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment