"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 31, 2023

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் கடந்த இரண்டு வாரங்களில் விடுமுறை நாட்களில் ஆலய தரிசனம் மிக அருமையாக நமக்கு கிடைத்தது. அனைத்து ஆலயங்களும் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வாக்குரைத்த ஆலயங்கள். சோழர் காலத்தில் சம்பந்தப்பட்ட ஆலயங்கள். மேலும் தற்போது திருப்பணி நடைபெற்று வரும் ஆலயங்களாக அமைந்தது. இதனையொட்டியே இன்றைய பதிவில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயம் கொண்டான் வட்டத்தில் உள்ள வாணத்திரையன் பட்டினம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் 
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் கண்டு, அனைத்து அடியார் பெருமக்களிடம் ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டி பணிகின்றோம்.

பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று

"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"

சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"சிவன் கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

-காஞ்சி மஹா பெரியவர்

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :

எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள்,  நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

 முக்கியமான விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.

எந்த ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார் என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது என்கிறார்கள்....

அப்படிப்பட்ட சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு அந்த ஈசன்  தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது.

இனி நாம் ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய தரிசனமும், திருப்பணி காட்சிகளும் காண இருக்கின்றோம்.

முதலில் கோயிலினுள் சென்று பெருமான் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.

நம் குழு சார்பில் பூ மாலை, வஸ்திரம்,பூஜை பொருட்கள் கொடுத்து அபிஷேகம் கண்டு மகிழ்ந்தோம்.

அபிஷேகம் நிறைவு பெற்று , பெருமான் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.

சுமார் 2 மணி நேரம் அங்கே அமர்ந்து,  திருவாசகத்தில் சிவபுராணம் படித்து, வழிபாடு செய்து மகிழ்ந்து, பின்னர் அம்மையின் தரிசனம் பெற்றோம். பெரியநாயகி ..பெரிய நாயகியே தான். அன்பில், அருளில் என பெரிய நாயகி தரிசனம் பெற்று மகிழ்ந்து, பின்னர் குருக்களுக்கு சிறு மரியாதை செய்து. பின்னர் கோயிலை வலம் வந்தோம்.

கோயில் திருப்பணி காட்சிகளை மேலே பகிர்ந்து உள்ளோம். முழு வீச்சில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இந்த பதிவை காணும் அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்யுமாறு வேண்டுகின்றோம்.இப்போது புதிதுபுதிதாகக் கோயில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதைக்காட்டிலும், பழைய கோயிலின் புனர் நிர்மாணப் பணிகளுக்கு உதவுங்கள். உங்களுக்கும் புண்ணியம்; உங்கள் மூதாதையர்களுக்கும் புண்ணியம்’’ என காஞ்சி மகான் என்று போற்றப்படும் மகா பெரியவா அருளியுள்ளார்.

 நாம் எத்தனை பிறவியில் என்ன என்ன புண்ணியம் செய்தோமோ, இறைவனுக்கு ஆலயம் கட்டக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை சிவபெருமான் நமக்கு தந்து அருளியுள்ளார். ஒரு சிவாலயத் திருப்பணி நடக்கும் பொழுது அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் ஒருவர் இறை தொண்டு செய்கின்றாரோ அவர் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்ற சான்றோர்களின் வாக்கு சத்தியமே. ஆகையால் அனைவரும் திருப்பணியில் பங்கு கொண்டு சிவபெருமானுடைய பரிபூரண அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ  பெரியநாயகி உடனுறை சென்னீஸ்வரர் ஆலயம். வாணதிரையன்பட்டணம் கிராமம் உடையார்பாளையம் வட்டம் ,ஜெயம் கொண்டான். 
அரியலூர் மாவட்டம் .

ஆலயம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

ஆலயம் தொடர்பாக விபரங்களை அறிய அணுக வேண்டிய எண். 

திருமதி :ஆனந்தி 8056116062

ஸ்ரீ சென்னீஸ்வரர் பக்தர்கள் அறக்கட்டளை
Contact no:8524844709 வாணதிரையன்பட்டணம்
அறக்கட்டளையின் பதிவு எண் - 6/2019
Acc.Name – SRI CHENNESWARAR PAKTHARGAL TRUST
Bank Name - State Bank of India.
Acc.No – 38992242280.
IFSC – SBIN0000998.
Branch – Jayankondacholapuram.
Branch Code – 998.

வலைத்தள இருப்பிடம் :- 

அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில்,
https://goo.gl/maps/FyN8pj5oNCbYCipf8

11.157102,79.345467

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/06082023.html

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/23072023.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம் - https://tut-temples.blogspot.com/2022/02/01.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

Friday, July 28, 2023

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் குழு சார்பில் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. மோர் தானம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. வியாழன் தோறும் நம் குழு சார்பில் 10 பேருக்கு அன்னசேவை செய்து வருகின்றோம். இந்த நிலையில் மீண்டும் குருவருளால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருவாசகம் வகுப்பில் இணைந்து திருவாசகத் தேனை பருகி வருகின்றோம். இது குருவருளால் நடைபெற்று வருகின்ற செயல் ஆகும். சில முறை திருவாசகம் படித்து இருந்தாலும் திருவாசகத்திற்கான பொருள் நமக்கு பிடிபடவில்லை. 

முதலில் அடுத்த வார ஞாயிற்றுக் கிழமை 06.08.2023 அன்று தஞ்சாவூரில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா அழைப்பிதழை கண்டு இன்புறுவோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டி பணிகின்றோம்.

குருவருளால் வருகின்ற 06.08.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் நெடார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் அகிலமே பழமலைநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பாக நடைபெற உள்ளது. அடியார் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டி அன்புடன்  அகத்தியர் அடியார்கள் சார்பில் அழைத்து மகிழ்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு: 7904612352

காணொளி அழைப்பிதழ் கீழே பகிர்ந்துள்ளோம். அனைவரும் கண்டு மகிழுங்கள்.

இது தொடர்பாக இறை, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான்  நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர்  திரு.ஜானகிராமன் அய்யா  அவர்கள்.

=========================================================

20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

=========================================================

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

=========================================================

14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

- அகத்திய மஹரிஷி

=========================================================

பன்னிரு திருமுறைகளை  பொருள் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று முதலில் நாம் நினைப்பது தவறு. முதலில் இவற்றையெல்லாம் படிக்க துவங்க வேண்டும். பொருள் தெரிந்தால் தான் படிப்பேன் என்றால் அப்படியே காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நம் தமிழ் வேதங்களை படிக்க ஆரம்பித்தால் நாளடைவில் நம் தரத்திற்கேற்ப பொருள் புரிய நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்படி தான் நமக்கு குருவருளால் மன்னார்குடி ரெங்கசாமி ஐயா அவர்கள் மூலம் தினந்தோறும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் திருவாசகம் படித்தும்,கேட்டும் உணர்ந்தும் வருகின்றோம். மாணிக்கவாசக பெருமானார் கூறியது போல கீழே கண்டு நீங்கள் திருவாசகத்திற்கான விளக்கம் பெறலாம்.

ஆம். திருவாசத்திற்கான மெய்ப் பொருள் விளக்கம் சிவமே ஆகும். சிவம் என்றால் அன்பு தானே? அன்பே சிவம் என கொண்டு ஐம்புலன்களிலும் நாம் உணர்ந்து, ஊனினை உருக்கி, நம் உள்ளொளி பெருக்கி இறையைப் தினமும் போற்றி வந்தால் நாமும் சிவத்தை உணரலாம். மிகப் பெரும் செல்வமாக இருப்பது சிவமே ஆகும். தற்போது திருவாசகம் நூலை தொட்டாலே சிவத்தை தொடுவதாக உணர்கின்றோம்.

திருவாசகம் நமக்கு எப்படி அருளைத் தருகின்றதோ, அதே போன்று குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் பாதங்களை பணிகின்றோம். அப்படித் தான் தஞ்சாவூரில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் சென்ற ஞாயிற்றுக் கிழமை தல யாத்திரையில் நமக்கு வரமாக கிடைத்தது . சென்ற ஆண்டில் நமக்கு இந்த திருக்கோயில் பற்றி கூறினாலும், இந்த ஆண்டில் தான் நேரில் தரிசனம் பெறும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. அடடா. ஓராண்டை வீணாக்கி விட்டோமே என்று தோன்றியது. ஆம். நேரில் கோயிலை கண்டு நாம் அழுது விட்டோம். 

நாம் நேரில் இந்த ஆலயம் கண்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு கோயில் சிதிலமடைந்து உள்ளது. மழை பெய்தால் கோயிலினுள்ளே நீர் வந்து விடும். கோயிலின் மேற்புறத்தில் மிக பெரிய ஓட்டை .இதன் வழியே ஆகாயத்தை காண முடிகின்றது. நாமெல்லாம் எப்படி வசதியாக வீட்டில் இருக்கின்றோம். ஆனால் பெருமானார் ஓட்டை உள்ள திருக்கோயிலில், மின் விளக்கு வசதியின்றி சொல்வதற்கே வார்த்தை வர வில்லை. இந்த கோயில் தரிசனமும், கோயில் சிறப்பை பற்றி குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கூறிய வாக்குகளையும் அடுத்த பதிவில் காண்போம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/23072023.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம் - https://tut-temples.blogspot.com/2022/02/01.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

Friday, July 21, 2023

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் குழு சார்பில் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. மோர் தானம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. வியாழன் தோறும் நம் குழு சார்பில் 10 பேருக்கு அன்னசேவை செய்து வருகின்றோம். இந்த நிலையில் மீண்டும் குருவருளால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருவாசகம் வகுப்பில் இணைந்து திருவாசகத் தேனை பருகி வருகின்றோம். இது குருவருளால் நடைபெறுவருகின்ற செயல் ஆகும். சில முறை திருவாசகம் படித்து இருந்தாலும் திருவாசகத்திற்கான பொருள் நமக்கு பிடிபடவில்லை. 

முதலில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 23.07.2023 அன்று தேனி மாவட்டம் வீரபாண்டி தலத்தில் உள்ள 
ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா அழைப்பிதழை கண்டு இன்புறுவோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டி பணிகின்றோம்.

பன்னிரு திருமுறைகளை  பொருள் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று முதலில் நாம் நினைப்பது தவறு. முதலில் இவற்றையெல்லாம் படிக்க துவங்க வேண்டும். பொருள் தெரிந்தால் தான் படிப்பேன் என்றால் அப்படியே காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நம் தமிழ் வேதங்களை படிக்க ஆரம்பித்தால் நாளடைவில் நம் தரத்திற்கேற்ப பொருள் புரிய நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்படி தான் நமக்கு குருவருளால் மன்னார்குடி ரெங்கசாமி ஐயா அவர்கள் மூலம் தினந்தோறும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் திருவாசகம் படித்தும்,கேட்டும் உணர்ந்தும் வருகின்றோம். மாணிக்கவாசக பெருமானார் கூறியது போல கீழே கண்டு நீங்கள் திருவகத்திற்கான விளக்கம் பெறலாம்.

ஆம். திருவாசத்திற்கான மெய்ப் பொருள் விளக்கம் சிவமே ஆகும். சிவம் என்றால் அன்பு தானே? அன்பே சிவம் என கொண்டு ஐம்புலன்களிலும் நாம் உணர்ந்து, ஊனினை உருக்கி, நம் உள்ளொளி பெருக்கி இறையைப் தினமும் போற்றி வந்தால் நாமும் சிவத்தை உணரலாம். மிகப் பெரும் செல்வமாக இருப்பது சிவமே ஆகும். தற்போது திருவாசகம் நூலை தொட்டாலே சிவத்தை தொடுவதாக உணர்கின்றோம்.

இப்பதிவை இங்கே எழுதும் போதே, தபால்காரர் நம்மை அழைத்தார். அவரிடம் பேசிவிட்டு, நமக்கு வந்த புத்தகத்தைப் பிரித்து பார்த்தால்..கண்ணில் நீர் தான் வருகின்றது.ஆம். நாம் ஏற்கனவே வாங்க விழைந்த திருவாசகம் புத்தகம் நம் கைகளில் தவழ்கிறது. இது எப்படி சாத்தியம்? மிக சரியாக இன்றைய திருவாசகம் பற்றி பதிவு எழுதும் போது , மிக மிக சரியான நேரத்தில் நமக்கு திருவாசகம் புத்தகம் கிடைக்கின்றது. திருவாசகம் நூல் நாளை கிடைத்தால் நமக்கு ஒன்றும் தோன்றாது. இல்லையேல் திருவாசகம் நூல் இன்று கிடைத்து நாளை நாம் இந்த பதிவை எழுதி இருக்கலாம். ஆனால் மிக மிக சரியாக நடப்பதெல்லாம் காரணமின்றி நடக்கின்றது. இதன் மூலம் காரணமின்றி காரியமில்லை எனபது மீண்டும் நமக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு குருவிற்கு நன்றி கூறி மகிழ்கின்றோம்.

திருவாசகம் நமக்கு எப்படி அருளைத் தருகின்றதோ, அதே போன்று குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் பாதங்களை பணிகின்றோம். அப்படித் தான் வீரபாண்டி ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் தரிசனம் சென்ற ஆண்டில் அமைந்தது. மிக அருள் நிறைந்த இடம். இயற்கை சூழ்ந்த இடம். 18 சித்தர்கள் தரிசனம். வள்ளல் பெருமான் குடில் என ஒவ்வொன்றும் நம்மை ஈர்த்தது. தனிப்பதிவில் வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் தரிசனம் பெறுவோம். மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி , ஆயில்ய நட்சத்திரம் வழிபாடு என நடைபெற்று வளர்கின்றது. இங்கே சில அருள்நிலைகள் பகிர்கின்றோம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

Monday, July 17, 2023

பிரார்த்தனை எனும் மகா சக்தி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரையும் இன்றைய பதிவில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். TUT தளத்தின் மூலமாக கொரோனா தொற்றுக்காலத்தில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை ஜூம் செயலியில் ஆரம்பித்தோம். குருவருளால் தற்போது டெலிகிராம் செயலியில் வார நாட்களில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. சுமார் 460 நாட்களை தாண்டி தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம் என்றால் இது குருவருளால் தான் என்பது திண்ணம்.

ஆரம்ப காலங்களில் விநாயகர் வழிபாடுதான் கூட்டுப் பிரார்த்தனை தொடங்கியது.  முதல் நாளில் ஒளவையார் அருளிய விநாயகர் அகவலுடன் , நக்கீரர் அருளிய விநாயகர் அகவல் பாடி பிரார்த்தனை செய்தோம். பொதுவாக விநாயகர் அகவல் என்றாலே ஒளவையார் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் நக்கீரரும் விநாயகர் அகவல் அருளியுள்ளார் என்பது பின்னர் தான் தெரிந்தது. நாளொரு மேனியாக அப்படியே திருவாசகம் படிக்க ஆரம்பித்தோம். அடுத்து கரு முதல் திரு வரை நூல் என ஒவ்வொரு நாளாக தமிழ் மொழியில் திளைக்க ஆரம்பித்தோம். சில நூட்களை இங்கே தொட்டுக்க காட்ட விரும்புகின்றோம்.

1. விநாயகர் அகவல் - ஒளவையார் & நக்கீரர் 

2. கணபதி கவசம் 

3. விநாயகர் அட்டகம் 

4. திருவாசகம் 

5. கரு முதல் திரு வரை 

6. ஸ்ரீ அகத்தியர் தேவாரத் திரட்டு 

7. கந்த ஷஷ்டிகவசங்கள் - 6

8. கந்தர் அனுபூதி 

9.கந்தர் அலங்காரம் 

10. கந்தர் அந்தாதி 

11. அபிராமி அந்தாதி 

12. முருகவேள் பன்னிரு திருமுறை - 1

13. முருகவேள் பன்னிரு திருமுறை - 2

14. முருகவேள் பன்னிரு திருமுறை - 3

15. முருகவேள் பன்னிரு திருமுறை - 4

16. சித்தர் வழிபாடு தொகுப்பு 

17. ஸ்ரீ ரமண கீதம் 

என பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இந்த தினசரி கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு சில அன்பர்கள் கோரிக்கை அனுப்புவது உண்டு. இவற்றையும் குருவின் பாதத்தில் சிரத்தையோடு சமர்ப்பித்து வருகின்றோம். குருநாதர் அருளால் நிறைவேறிய  கோரிக்கைகளுக்கு நன்றி சொல்லியும் வருகின்றோம். மிக விரைவில் மேலே நாம் படித்த நூற்களை தனி தனி பதிவாக தர விரும்புகின்றோம். 

அண்மையில் நமக்கு பிரார்த்தனை பற்றிய அருமையான செய்தி கிடைத்தது,அதனை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.

உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.
வழியில் பெரும் பனிப்புயல். அவரால் காரை ஓட்ட முடியவில்லை.
ஒரு கிராமத்தை தாண்டியபொழுது, சாலை  பல பிரிவுகளாக பிரிந்தது.வழிகாட்டிபலகையும் அந்த பனிப்புயலால்  தூர வீசப்பட்டிருந்தது.

டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியவில்லை.
இதுவாகத்தான் இருக்கும் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு, ஒரு வழியில் காரை பயணித்தார்.ஆனால் அந்த வழி ஆள் அரவமற்ற காட்டின் வழியே சென்றது. புயலும் அதிகமாக வீசியது. டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஒதுங்க எந்த இடமும் இல்லை.
தூரத்தில் ஒரு சிறு வீடு தெரிந்தது. டாக்டர் அங்கே சென்று கதவை தட்டினார்.
ஒரு இளம் பெண் கதவை திறந்தார். அவர் இருந்த நிலையை பார்த்து உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.

ஏழ்மையான வீடு. வீட்டில் யாரும் இல்லை. இரண்டு வயது குழந்தை ஒன்று தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது.அந்த பெண் அன்போடு சூடான தேநீர் ஒன்றை கொடுத்து அருந்த சொன்னார்.
பின் விசாரித்ததில் அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், நீங்கள் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினார்.

பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். நான் prayer செய்து விட்டு வருகிறேன் என்று கூறி, அறையின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு வெகு நேரம் பிரார்த்தி விட்டு, மீண்டும் டாக்டர் அருகில் வந்து அமர்ந்தார்.

என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? என்று டாக்டர் வினவினார்.

அப்பெண் கண்ணீர் மல்க, தன் குழந்தையை காட்டி, அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை.Brain nerves சரியாக வேலை செய்யவில்லை. இதை சரி செய்வதென்றால் ஒரே ஒருவரால்தான் முடியும். பெரும் செலவாகும். என் ஏழ்மை நிலையில் கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி அழுதார்.யார் அந்த டாக்டர்? என்று கேட்டார்.புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் என்று அந்த பெண் சொன்னவுடன், டாக்டர் அதிர்ந்துவிட்டார்.

அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்.

அந்த எளிய பெண்ணின் பிரார்த்தனையே இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்று உணர்ந்தார்.பின் நடந்தது காவியம். அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே அழைத்து சென்று சரியான மருத்துவம் செய்து குழந்தையை காப்பாற்றினர்.

பிரார்த்தனை வலிமை வாய்ந்தது.

நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
அலை இயக்க தத்துவம் புரிந்தவர்களுக்கு, எண்ணத்தின் வலிமையும், செயலாற்றும் தன்மையும் எளிதில் புரியும்.எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி. விரிந்து முடியும் இடமோ அகண்டாகரம்.இதனை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உண்ணும் உணவு உடல் முழுதும் பாயும்.
எண்ணும் எண்ணம் எங்கும் பாயும் என்று சொல்லி "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த சொல்கின்றார்.

இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவரும் "வாழ்க வளமுடன்" என வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.