"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, July 21, 2023

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் குழு சார்பில் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. மோர் தானம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. வியாழன் தோறும் நம் குழு சார்பில் 10 பேருக்கு அன்னசேவை செய்து வருகின்றோம். இந்த நிலையில் மீண்டும் குருவருளால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருவாசகம் வகுப்பில் இணைந்து திருவாசகத் தேனை பருகி வருகின்றோம். இது குருவருளால் நடைபெறுவருகின்ற செயல் ஆகும். சில முறை திருவாசகம் படித்து இருந்தாலும் திருவாசகத்திற்கான பொருள் நமக்கு பிடிபடவில்லை. 

முதலில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 23.07.2023 அன்று தேனி மாவட்டம் வீரபாண்டி தலத்தில் உள்ள 
ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா அழைப்பிதழை கண்டு இன்புறுவோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டி பணிகின்றோம்.


பன்னிரு திருமுறைகளை  பொருள் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று முதலில் நாம் நினைப்பது தவறு. முதலில் இவற்றையெல்லாம் படிக்க துவங்க வேண்டும். பொருள் தெரிந்தால் தான் படிப்பேன் என்றால் அப்படியே காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நம் தமிழ் வேதங்களை படிக்க ஆரம்பித்தால் நாளடைவில் நம் தரத்திற்கேற்ப பொருள் புரிய நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்படி தான் நமக்கு குருவருளால் மன்னார்குடி ரெங்கசாமி ஐயா அவர்கள் மூலம் தினந்தோறும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் திருவாசகம் படித்தும்,கேட்டும் உணர்ந்தும் வருகின்றோம். மாணிக்கவாசக பெருமானார் கூறியது போல கீழே கண்டு நீங்கள் திருவகத்திற்கான விளக்கம் பெறலாம்.




ஆம். திருவாசத்திற்கான மெய்ப் பொருள் விளக்கம் சிவமே ஆகும். சிவம் என்றால் அன்பு தானே? அன்பே சிவம் என கொண்டு ஐம்புலன்களிலும் நாம் உணர்ந்து, ஊனினை உருக்கி, நம் உள்ளொளி பெருக்கி இறையைப் தினமும் போற்றி வந்தால் நாமும் சிவத்தை உணரலாம். மிகப் பெரும் செல்வமாக இருப்பது சிவமே ஆகும். தற்போது திருவாசகம் நூலை தொட்டாலே சிவத்தை தொடுவதாக உணர்கின்றோம்.

இப்பதிவை இங்கே எழுதும் போதே, தபால்காரர் நம்மை அழைத்தார். அவரிடம் பேசிவிட்டு, நமக்கு வந்த புத்தகத்தைப் பிரித்து பார்த்தால்..கண்ணில் நீர் தான் வருகின்றது.ஆம். நாம் ஏற்கனவே வாங்க விழைந்த திருவாசகம் புத்தகம் நம் கைகளில் தவழ்கிறது. இது எப்படி சாத்தியம்? மிக சரியாக இன்றைய திருவாசகம் பற்றி பதிவு எழுதும் போது , மிக மிக சரியான நேரத்தில் நமக்கு திருவாசகம் புத்தகம் கிடைக்கின்றது. திருவாசகம் நூல் நாளை கிடைத்தால் நமக்கு ஒன்றும் தோன்றாது. இல்லையேல் திருவாசகம் நூல் இன்று கிடைத்து நாளை நாம் இந்த பதிவை எழுதி இருக்கலாம். ஆனால் மிக மிக சரியாக நடப்பதெல்லாம் காரணமின்றி நடக்கின்றது. இதன் மூலம் காரணமின்றி காரியமில்லை எனபது மீண்டும் நமக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு குருவிற்கு நன்றி கூறி மகிழ்கின்றோம்.




திருவாசகம் நமக்கு எப்படி அருளைத் தருகின்றதோ, அதே போன்று குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் பாதங்களை பணிகின்றோம். அப்படித் தான் வீரபாண்டி ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் தரிசனம் சென்ற ஆண்டில் அமைந்தது. மிக அருள் நிறைந்த இடம். இயற்கை சூழ்ந்த இடம். 18 சித்தர்கள் தரிசனம். வள்ளல் பெருமான் குடில் என ஒவ்வொன்றும் நம்மை ஈர்த்தது. தனிப்பதிவில் வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் தரிசனம் பெறுவோம். மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி , ஆயில்ய நட்சத்திரம் வழிபாடு என நடைபெற்று வளர்கின்றது. இங்கே சில அருள்நிலைகள் பகிர்கின்றோம்.










அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html


கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment