"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, June 27, 2023

பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023 அன்று மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இதே போன்று அன்றைய தினம் பல்வேறு தலங்களில் குருநாதர் வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது.  மேலும்  திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நேரில் கலந்து கொண்டு திருமந்திரம் 3000 படிக்க வாய்ப்பு கிடைத்து, சிவ இன்பத்தில் மூழ்கினோம். அன்று மாலை திருச்சி உத்தமர்சீலி சிவன் கோயிலில் அருள்பாலிக்கும் திருமூலர் தரிசனம் பெற்று வந்தோம். மிக இத்துடன் திருமூலர் துதியும்,திருமந்திரத் துளியும் பெற்று மகிழ்ந்தோம். இந்த நூலை நாம் தினசரி வழிபாட்டிற்கு என பயன்படுத்தலாம் என்று நமக்கு உணர்த்தப்பட்டோம்.குருவருளால் மிக விரைவில் தனிப்பதிவாக தர குருவருள் நம்மை வழிநடத்த வேண்டி பணிகின்றோம். 

நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அடிக்கடி கூறுவது தர்மம் செய் என்பது தான். நாமும் நம் தளத்தின் மூலம் இதனை நோக்கி பயணித்து வருகின்றோம். இம்மதத்திற்கான அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூஜை

2. கூடுவாஞ்சேரி விநாயகர் கோயில் -  பூசம்  வழிபாடு  

3. மாதந்தோறும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் - சிறு தொகை 

4. மாதந்தோறும் ஒரு நாள் - ERS டிரஸ்ட் சார்பில் நடைபெறும் அன்னதானம் 

5. தென்காசி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் தினமும் மதியம் ஒரு அன்பருக்கு அன்னசேவை 

6. மாதந்தோறும் திருஅண்ணாமலை சாதுக்கள் அன்னதானம் - சிறு தொகை உபயம் 

7. மாதந்தோறும் தர்ம சிறகுகள் அறக்கட்டளை - சிறு தொகை உபயம் 

8. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் குடிநீர் உபயம் 

9. சின்னாளப்பட்டி நீர் மோர் சேவை - எண்பது நாட்களுக்கும் மேலாக 

10. சின்னாளபட்டி - வாரந்தோறும் வியாழன் அன்று சுமார் 18 அன்பர்களுக்கு மதிய உணவு 

11. சின்னாளபட்டி அஞ்சுகம் காலனி - கார்த்திக் மருத்துவ உதவி ( கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக )

12. TUT - ஏழாம் ஆண்டு சேவையாக - விக்கிரமசிங்கபுரம் - செல்வ விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - மஞ்சள் பை பிரசாதம் 

இங்கே நாம் சில சேவைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இன்னும் குருவருளால் பல சேவைகள் தொடர்ந்து வருகின்றது.இது தவிர மாதந்தோறும் நமக்கு கிடைக்கும் பொருளுதவி கொண்டு மேலும் பல கோயில்களுக்கு நம்மால் இயன்ற சேவைகள், மருத்துவ உதவி, ஞான தானமாக திருவருள் பயணம் இதழ் சந்தா, TUT தளத்தின் பதிவுகள்  என இன்னும் பல... அனைத்தும் நீங்கள் தருகின்ற பொருளுதவியாலும், அருளுதவியாலும் தொடர்ந்து செய்து வருகின்றோம். இன்னும் பற்பல சேவைகளை நாம் குருவருளால் செய்ய வேண்டியுள்ளது. நமக்கு உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் உள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம்.




இது போன்ற சேவைகளை நாம் செய்வது குருவருளால் மட்டும் தான் என்பது ஒவ்வொரு நிகழ்விலும் பரிபூரணமாக உணர்த்தப்பட்டு வருகின்றது. குருநாதர் நம்மில் புகுந்து நம் அகத்தை அழகாக்கி வருகின்றார். அகம் சுத்தம் ஆனால் தான் புறம் சுத்தம் அடைந்து நம்மால் இது போன்ற தொண்டினை செய்ய முடியும். இது போன்ற தொண்டினை,சேவைகளை செய்ய முடியாவிட்டாலும் அறம் செய்ய விரும்பவாவது முடியும். இதனை தான் ஒளவைப் பாட்டியும் கூறியுள்ளார். திருமூலர் பெருமானும் இதனை திருமந்திரத்தில் நமக்கு உரைத்துள்ளார்.


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

- திருமந்திரம்

இந்த திருமந்திரத்தை சற்று நுணுகி பார்க்கும் போது,

இறைவனுக்கு நமக்கு கையில் கிடைக்கும் பச்சிலை கொண்டு வழிபாடு செய்ய கூறுகின்றார். ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப இறை வழிபாட்டில் அபிஷேகம் , மலர் மாலை சாற்றுதல் என செல்லலாம். ஆனால் பச்சிலை எங்கும் கிடைக்கும். எனவே பொருள் என்ற நிலையில் பாராது , அருள் நிலையாக கொண்டு இறைவனுக்கு பச்சிலை போதும் என்கின்றார்.


அடுத்த வரியில் யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை என்று கூறும் போதும், பசுவிற்கு ஒரு வாய் உணவு கொடுக்க சொல்கின்றார். இதற்காக நாம் பசுக்களை அமாவாசை நாட்களில் தேடி அலைந்து , மொத்த மொத்தமாக அகத்திக் கீரை கொடுப்பது அன்று. மிக இயல்பாக நம் வீட்டை பசுக்கள் கடந்து செல்லும் போது , நம் வீட்டில் இருப்பதை உணவாக கொடுப்பதே போதும். 

அடுத்து மீண்டும் யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி என்று கூறுகின்றார்.  இங்கே மீண்டும் உண்ணும் போது ஒரு கைப்பிடி உணவு மற்றவருக்கு கொடுக்க வேண்டும். அன்னதானமாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு கைப்பிடி உணவை எடுத்து யாருக்காவது கொடுக்க வேண்டும். உணவு சாப்பிடும் பழக்கமே காகம் சாப்பிடுவது போன்றது தான். காகம் எப்போதும் தனியாக உண்ணாது. எந்த உணவு கிடைத்தாலும் அது கரைந்து மற்ற காக்கைகளையும் அழைத்து தான் சாப்பிடும். நாமும் இது போன்று தான் அருகில் யாராவது பசியோடு இருக்கின்றார்களா ? என்று பார்த்து, அவர்களுக்கு ஒரு கைப்பிடி உணவு கொடுத்து சாப்பிட வேண்டும்.



இப்படி  உணவு உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றால் நம் அகத்தில் அன்பு வேண்டும். நம் அகத்தில் அன்பு இருந்தால் தான் அறம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த எண்ணம் வந்தால் தான் செயலில் நாம் இறங்க முடியும். இது தான் அகத்தியம் பேசும் நிலை. நம் குருநாதரின் போதனை. அனைத்து சித்தர் பெருமக்களின் உபதேசமும் ஆகும்.


அடுத்து , ஒரு கைப்பிடி உணவு இட்டு , உணவு உண்டு வந்த பின்னர் தான் , அன்னசேவை செய்து பசிப்பிணி ஆற்ற வேண்டும் என்ற நிலை நோக்கி நம்மால் நகர முடியும். அன்னசேவை செய்வதன் மூலம் 

1. இறைவனுக்கு அருகில் செல்கின்றோம் 
2.  கெட்ட கர்ம வினைகள் நல்ல கர்ம வினைகளாக மாறும் 
3. மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றது 
4. மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது.
5. குருவருளும், திருவருளும் கை கூடும்.

 அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

இங்கே அன்னம் என்பது நாம் உண்ணும் உணவு. இது பேரின்பமாக கருத்தில் கொண்டு பார்க்கும் போது , அன்னமாக இருப்பது அந்த இறை தானே. அப்படி என்றால் பசித்தோர் முகம் பார்த்தால் நாம் சும்மா இருக்கலாகுமா? பரம்பொருள் அருள் கிட்ட நம்மால் இயன்ற அன்னசேவையை தினமும் செய்வோம்.







திருமந்திரம் கூறிய நான்காம் வரியை பற்றி பேச மறந்து விட்டோம். அடுத்த பதிவில் இதனை மீண்டும் சிந்திப்போம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 



மீள்பதிவாக:-

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

குருவருளால் ஏழாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2023/04/tut.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் 104 வது ஜெயந்தி விழா - 01.12.2022 - https://tut-temples.blogspot.com/2022/11/104-01122022.html

 கோஅருணை சலத்தில் நின்ற "குகை நவசிவாயலிங்கம்" - ஸ்ரீலஸ்ரீ குகைநமசிவாயர் 522 ஆம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2022/11/522.html

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி விழா - 01.12.2021 - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 116 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2021/09/116.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

No comments:

Post a Comment