"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 14, 2020

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2)

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) & தள உறவுகளுக்கும், உழவாரப்பணி, அன்னதானம் மற்றும் இன்னபிற சேவைகளுக்கு பொருளுதவி செய்தும், தளத்திற்கு மாதந்தோறும்  விருப்ப சந்தா அளித்து உதவும் உள்ளங்கள் அனைவருக்கும், தளத்தில் பதிவுகளை படித்தும், பகிர்ந்தும் நமக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் சார்வரி  வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பிறக்கும் புத்தாண்டு எல்லோரும் இன்புற்று வாழ வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.இன்றைய புத்தாண்டில் நம் தளம் நான்காம்  ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

ஏற்கனவே நாம் நம் தளம் சார்பில் செய்து வரும் அன்னதானம் பற்றி பேசி உள்ளோம். இன்றைய பதிவில் நமது அடுத்த சேவையான உழவாரப் பணி பற்றி காண உள்ளோம்.

உழவாரப் பணி அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்கள் இருக்கலாம். அவர்களுக்காக சில செய்திகளை இங்கே பகிர உள்ளோம்.


பொதுவாக நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும்  கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப்  பணி  அருமருந்தாக அமைந்துள்ளது . ​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்  நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான். இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீகப்  பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது. மற்றொரு விதத்தில்  கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.

மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.


அடுத்து நாம் செய்த முதல் உழவாரப்பணி அனுபவத்தை இங்கே பகிர இருக்கின்றோம். தேடல் உள்ள தேனீக்களை குழுவின் மூலம் அன்னசேவை செய்து கொண்டிருந்த நேரத்தில் 2016 ஆண்டு  ஜூன் 5 ம் தேதி  ( 05.05.2016) அன்று பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவிலில்  குருவருளால் செய்தோம்.

எப்படி ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை. ஆனால் பெருங்களத்தூரில் உள்ள நண்பரின் முயற்சியால் இந்த உழவாரப்பணி செய்யும் வாய்ப்பு கிட்டியது. உளமார இந்த உழவாரப் பணி தற்போது வரை நம் தளத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றது. இன்னும் உழவாரப்பணிக்கென்று கருவிகள் கூட நாம் வாங்கி வைக்கவில்லை. நமக்கே இது ஆச்சர்யம் தான். எங்கு உழவாரப்பணி செய்ய நமக்கு இறையருள் கூட்டுவிக்கின்றதோ, அங்கு முன்கூட்டியே சென்று பார்த்து வருவோம். அதற்கு முன்னர் உழவாரப்பணி கருவிகள் வாங்கி வைத்து விடுவோம். பணி நிறைவில் அந்த கருவிகளை அந்த கோயிலுக்கே மீண்டும் கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

பெருங்களத்தூரில் தொடங்கிய முதல் உழவாரப்பணி குருவருளால் தற்போது வரை பல கோயில்களில் நடைபெற்று வந்துள்ளது.

1. பெருங்களத்தூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவில் 
2. அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயம் பெருங்களத்தூர் 
3. கூடுவாஞ்சேரி நூலகம் 
4. கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் கோயில்
5. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில்
6. ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் கோயில் 
7. குழந்தைவேலர் சித்தர் கோயில், மயிலாப்பூர் 
8. பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் 
9. கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் திருக்கோயில் 
10. குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயில் 
11. கொளத்தூர் திருமால் மருகன் ஆலயம்
12. ஆப்பூர் ஸ்ரீ நித்ய கல்யாண ப்ரஸன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 
13. குன்றத்தூர் ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயம் 
14. கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயம்

மேற்கண்ட கோயில்களில் நாம் உழவாரப்பணி செய்திருக்கின்றோம். அதிலும்  குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உழவாரப்பணி செய்து வருகின்றோம். கொளத்தூர் திருமால் மருகன் ஆலயதில் 2 முறையும், குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில் 2 முறையும், கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயதில் உழவாரபாணியோடு மரம் நடு விழாவும், பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமதில் மூன்று முறையும் செய்துள்ளோம். இவற்றில் நாம் வெளியூர் சென்று செய்த பணிகளாக ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் கோயில் , கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் கோயில், பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் என அடங்கும். 

நம் உழவாரப்பணியின் சிறப்பாக சிறப்பு தரிசனம் நமக்கு கிடைத்து வருகின்றது என்று சொல்லலாம். ஓதி மலை யாத்திரையில் நமக்கு உழவாரப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அடுத்து 
பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப்பணி அங்கு ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழாவிற்காக நமக்கு அருளப்பட்டது. இதே போன்று குன்றத்தூர் உழவாரப்பணி என்றால் கண்டிப்பாக ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயம், திருஊரகப்பெருமாள் கோயில், குன்றத்தூர் முருகப் பெருமான் என கிடைத்து விடும். தற்போது நாம் செய்த ஆப்பூர் உழவார்ப்பணியில் நமக்கு ஒரு நாள் யாத்திரையாகவே அமைந்தது. அனைத்தும் குருவருளால் என்று நமக்கு உணர்த்தப்பட்டும் வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு உழவாரப்பணியின்  போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.





எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,

அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நன்றி 

மீண்டும் ஒரு முறை  வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

No comments:

Post a Comment