அன்பு நெஞ்சங்களே...
உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலம் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. நம் தளத்தில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் பதிவை இதற்கு முன்பு தந்திருந்தோம். மீண்டும் பங்குனி உத்திரம் 2018 ஆம் ஆண்டில் நாம் கொண்டாடிய துளிகளை இங்கே தருகின்றோம்,
தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் நாளை காலை 10 மணி முதல் 06.04.2020 காலை 8 மணி உத்திர நட்சத்திர நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.
நம் பதிவை தொடர்ந்து படித்து வரும் அன்பர்களுக்கு முருகன் அருள் நம்மை வழிநடத்தி வருவதை உணர முடியும். 2018 ஆம் ஆண்டில் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்தோம். கொஞ்சம் பூக்கள் வாங்கி கொடுத்தோம். அன்று மாலை ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் திருக்கல்யாண தரிசனம் கண்டோம்.
சென்ற ஆண்டில் நதி வழிபாடும், நந்தி வழிபாடும் நமக்கு கிடைத்தது. ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் திருக்கல்யாண தரிசனம் சென்ற ஆண்டில் ஆத்மார்த்தமாக கண்டோம். பின்னர் பாபநாசத்தில் நதி வழிபாடு செய்து, கல்யாண தீர்த்தத்தில் ஸ்ரீ லோபாமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற்றோம்.
இனி..2018 ஆண்டு கொண்டாடிய நிகழ்வின் துளிகள்.
சென்ற வெள்ளியன்று நாம் நம் தளம் சார்பாக கொண்டாடிய பங்குனி உத்திரம் பற்றிய தகவல்களை இங்கே பதிய விரும்புகின்றோம்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி வீட்டில் பூசை செய்தோம். கந்த ஷஷ்டி கவசம்,கந்த குரு கவசம் போன்ற முருகன் பாமாலை பாடி செய்த பூசை நமக்கு மகிழ்வைத் தந்து.பின்னர் சுமார் 8 மணி அளவில் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயில் சென்றோம். அங்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அருள் தருவது நமக்கு பூரணமாய் இருந்தது. அங்கு பூதேவி ஸ்ரீதேவி சமேத பெருமாளும் உள்ளார். ஆனால் நாம் இத்துணை நாளாக அங்கே செல்லாது இருந்தோம்.கடந்த இரண்டு, மூன்று தரிசனத்தில் நாம் பெருமாள் தரிசனம் பெற்றும் வருகின்றோம். எனவே முதலில் அவர்களை விஸ்வரூப தரிசனத்தில் சந்திக்க காத்துக் கொண்டிருந்தோம்.
சரியாக 8 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் பெற்று மன மகிழ்ந்தோம். பங்குனி உத்திரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் -ரெங்கமன்னார் திருமணம் நடந்தேறியது. முதல் தரிசனம் முத்தாய்ப்பாக இருந்தது.
பின்னர் இடையிடையே கந்த குரு கவசம் நம்மை ஆக்கிரமித்தது. முருகனுக்கான செய்திகளும் வளர்ந்து கொண்டே போனது.
அப்போது நம் தளத்தினை சேர்ந்த திரு. சிவசங்கர் நம் எண்ண ஓட்டத்தை பிடித்து விட்டார். ஆம். முருகன் என்றால் அழகன்..
அழகன் என்றால் நமக்கு மன்மதன் தான் என்று சொல்வார்கள். மன்மதனையும் விஞ்சியவன் நம் முருகன் என்றால்...கற்பனைக்கு எட்டா கள்வன் அவன்
அடுத்து “தமிழ்” திருப்புகழ்,மயில் விருத்தம்,வேல் விருத்தம், கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம், வேல்மாறல் போன்ற பாடல்கள் கண்கூடு
பின்னர் மாலை அனைத்து குறிப்புகளையும் தொகுத்தோம்.
முருகா என்றால் நம் நினைவிற்கு வந்தது
1. டி.எம்.சௌந்தர்ராஜன்
2.ஓதிமலை
3. வேல்மாறல்
4. ஓம் நமோ பகவதே என்ற முருக மந்திரம்
5. கந்தபுராணம்
6. கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள்
7. சாக்கடை சித்தர்
8. திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
10.கந்த சஷ்டி கவசம்
11. காவடி
12.கந்த குரு கவசம்
13. சண்முக கவசம்
14. அறுபடை வீடு
15. திருப்போரூர் கந்தசுவாமி கோயில்
16. கந்தகோட்டம்
17.பாம்பன் ஸ்வாமிகள்
18. குமரகுரு ஸ்வாமிகள்
19. கிருபானந்த வாரியார்
20. வேல்விருத்தம்
21. சரவணப் பொய்கை
22. கார்த்திகைப் பெண்கள்
23. அவ்வையார்
24. அகத்தியர்
25. சூரசம்காரம்
26. நக்கீரர்
27. அழகன்
28. அகத்தியர்
29. பழனி
30 . பாதயாத்திரை
31. அரோகரா
32. பங்குனி உத்திரம்
33. பித்துக்குளி முருகதாஸ்
34. நவபாஷாண சிலை
35. மயில் வாகனம்
36. வேல்
37. குகன்
38. 'ஐந்து முகம் ஒதிமலை முருகன் '
நாமாக சிந்தித்தால் கூட ஒண்டிரண்டு என்று தான் யோசிப்பாம். குழுவில் உள்ள அனைவரும் தங்களின் பங்களிப்பைத் தந்த போது, பட்டியல் நீண்டது. இது முருகன் அருள் முன்னிற்க நடந்த தெய்வீக விளையாட்டே.
நமக்கு கிடைத்த செய்தியாக 30/3/18 வெள்ளிக்கிழமை மாலை6-00மணிமுதல்இரவு8-30மணிவரை பங்குனி உத்திரம் திருகல்யாணம் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமாமரத்துஈஸ்வரருக்கும் நடைபெறும் என்பதே.அன்று மாலை 7:30 மணி அளவில் மாமரத்து விநாயகர் கோயில் சென்றோம். முதன் முதலாய் தெய்வீக திருக்கல்யாணம் காண சென்றோம். கோயிலில் நல்ல கூட்டம் வேறு. உள்ளே சென்று மூத்தோனை வணங்கி விட்டு, திருக்கல்யாண வைபவத்திற்கு சென்றோம். எட்டி எட்டி பார்க்கும் அளவிற்கு கூட்டம். கல்யாணம் என்றாலே கூட்டம் இருக்கும். அதுவும் தெய்வீக திருக்கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். மேளம் சத்தம் கயிலையில் கேட்டிருக்கும். சரியாக சுமார் 8 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் திருஷ்டி சுற்றி போட்டார்கள்.
நாமும் அனைவருக்குமாக பிரார்த்தனை செய்து விட்டு, அங்கிருந்து அருள் பெற்று சென்றோம். பிரசாதமாக வெற்றிலை,பாக்கு,வாழைப்பழம்,பூ அடங்கிய மாங்கல்ய மஞ்சள் சரடு அனைவருக்கும் கொடுத்தார்கள்.
சென்ற ஆண்டு, பங்குனி உத்திரம் அன்று பக்தி என்றால் கிலோ என்ன விலை? என்று மனம் நொந்து இருந்தோம். ஆனால் இந்த ஆண்டு எத்துணை தரிசனம், இரண்டு கோயில், விநாயகர், பெருமாள், முருகன், சிவன்,சக்தி, பௌர்ணமி தரிசனம், திருக்கல்யாணம் என நமக்கு கிடைத்து என்றால் ? பதிவின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். அவன் அருளின்றி இது சாத்தியமே இல்லை. ஆங்..இடையில் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். அன்று நாம் நம்மால் முடிந்த அளவு சிறு தொகையை திருச்செந்தூர் அகத்தியர் கோயிலுக்கி அனுப்பி வைத்தோம். எல்லாம் அவன் அருள். என்றும் அவன் தாள் வணங்கி, வேலை வணங்குவதே நம் முதல் வேலையாக கைக் கொள்வோம்.
- முருகன் அருள் முன்னிற்க அடுத்த பதிவில் சந்திப்போம்
மீள் பதிவாக :-
பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html

பின்னர் முருகப் பெருமானை தரிசிக்க சென்றோம். ஆனால் அங்கு மிக மிக எளிமையாக
முருகப் பெருமான் இருந்தார். சாதாரண அலங்காரம் மட்டும் தான். குருக்களிடம்
விசாரித்த போது, இங்கு பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் இல்லை என்றார்கள்.
நம்மால் முடிந்த கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டி குருக்களிடம் கேட்டோம். 15
முழம் பூக்கள் வாங்கி கொடுங்கள் என்றார். நம் தள உறுப்பினர் கொடுத்த
தனத்தில் சுமார் 400 க்கு பூக்கள் வாங்கி கொடுத்து, நம் தள உறவுகள்
அனைவர்க்கும் சங்கல்பித்து அர்ச்சனை செய்தோம். சற்று மனதில் திருப்தி
இருந்தது.பௌர்ணமி பூசைக்காக வேலி அம்மன் தாயாராகிக் கொண்டு இருந்தார்கள்.
சரி. மணி 9 நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படியே மாமரத்து விநாயகர் கோயில்
சென்றோம். அங்கு ஒவ்வொரு சந்நிதியாக அர்ச்சனை முறையே விநாயகர், சிவன்,
அம்பாள்,முருகன், ஐயப்பன் என களை கட்டி கொண்டிருந்தது. நமக்கும் இது புது
அனுபவமாய் இருந்தது.தரிசனம் முடித்து குருக்களிடம் அன்று மாலை நடைபெறும்
திருக்கல்யாண வைபவத்தில் மங்கல இசைக்காக எங்களின் தனத்தை ஏற்றுக் கொள்ள
பணித்தோம். சரி. மாலை திருக்கல்யாணம் காணலாம் என்று முடிவெடுத்து மீண்டும்
வேலி அம்மன் கோயில் வந்தோம்.
நேரமும் காலை 10 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.இன்றைய நன்னாளில் தீபம்
ஏற்ற நாம் ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டோமே என்று மனம் வருந்தினோம். நாம்
மனத்தில் பேசியது அம்மனின் செவிகளுக்கு எட்டியது போலும். அங்கிருந்த
சுற்று விளக்கில் நம்மை தீபமேற்ற அன்னை பணித்தாள். மனம் மகிழ்ந்தோம். ஒரு
விளக்கிற்கு பதிலாக பல விளக்குகள் ஏற்றும் பாக்கியம் கிடைத்தது கண்டு
அன்னையின் அருளில் மெய் சிலிர்த்தோம்.
நிறைவாக பௌர்ணமி பூசை கண்டும் முடித்தோம். மனம்,மொழி, மெய் என சக்தி நிலை
பெருகுவதை கண்டு இன்புற்றோம். கருவறை தீப எண்ணெய் வாசத்தில், மலர்களின்
மணத்தில், அப்பப்பா..இந்த உலகையே ஆண்டு கொண்டிருக்கும் ..சக்தி வடிவை காண
இரு கண்கள் போதாது நின்றோம்.
இந்த செய்திகள் அனைத்தும் நம் குழுவிற்கு தெரிவித்து, அன்றைய தினம் முருகனை
பற்றி சிந்திக்க வேண்டும் என்று எண்ணி விளையாட்டாக, முருகன் என்றால்
நமக்கு என்னென்ன நினைவிற்கு வருகிறது என்று சொல்லுங்கள். கடைசியாக விடைகளை
தொகுக்கலாம் என்று கூறி 1.டி.எம்.சௌந்தர்ராஜன்
2.ஓதிமலை
3.வேல்மாறல் என்று ஆரம்பித்து வைத்தோம். ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை
நிறைவாக செய்தார்கள். அப்போது தான் அட..நாமே மிக மிக முக்கியமான குறிப்பை
விட்டும் விட்டோமே என்று கூறி, ஒவ்வொருவரையும் முருக இன்பத்தில் ஆழ்த்தி
கொண்டிருக்க செய்தோம். காரணம் அவன் தானே..யார் சரியாக நாம் சொல்ல
விரும்பும் கருத்தை பிடிக்கிறார்கள் பாப்போம் என்று காத்திருந்தோம்.
அன்று காலை பெங்களூரில் பால் குடம் எடுத்தார் நம் அன்பர் திரு.சதீஷ் குமார்
ஐயா அவர்கள். முருகன் அருள் வழங்கும் திருநாளில் நாம் கோயிலுக்கு சென்று
தரிசனம் பெறுங்கள் என்று கூவிக் கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற பால்
அபிஷேகம் செய்வது, அதுவும் பெங்களூரில் எனும் போது, முருகனின் அருளை
பெறுவதே இன்றைய நாளின் நோக்கம் என்றானது. கண்ணீர் துளிகளும் எட்டிப்
பார்த்தது.
அப்போது நம் தளத்தினை சேர்ந்த திரு. சிவசங்கர் நம் எண்ண ஓட்டத்தை பிடித்து விட்டார். ஆம். முருகன் என்றால் அழகன்..
அழகன் என்றால் நமக்கு மன்மதன் தான் என்று சொல்வார்கள். மன்மதனையும் விஞ்சியவன் நம் முருகன் என்றால்...கற்பனைக்கு எட்டா கள்வன் அவன்
அடுத்து “தமிழ்” திருப்புகழ்,மயில் விருத்தம்,வேல் விருத்தம், கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம், வேல்மாறல் போன்ற பாடல்கள் கண்கூடு
பின்னர் மாலை அனைத்து குறிப்புகளையும் தொகுத்தோம்.
முருகா என்றால் நம் நினைவிற்கு வந்தது
1. டி.எம்.சௌந்தர்ராஜன்
2.ஓதிமலை
3. வேல்மாறல்
4. ஓம் நமோ பகவதே என்ற முருக மந்திரம்
5. கந்தபுராணம்
6. கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள்
7. சாக்கடை சித்தர்
8. திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
10.கந்த சஷ்டி கவசம்
11. காவடி
12.கந்த குரு கவசம்
13. சண்முக கவசம்
14. அறுபடை வீடு
15. திருப்போரூர் கந்தசுவாமி கோயில்
16. கந்தகோட்டம்
17.பாம்பன் ஸ்வாமிகள்
18. குமரகுரு ஸ்வாமிகள்
19. கிருபானந்த வாரியார்
20. வேல்விருத்தம்
21. சரவணப் பொய்கை
22. கார்த்திகைப் பெண்கள்
23. அவ்வையார்
24. அகத்தியர்
25. சூரசம்காரம்
26. நக்கீரர்
27. அழகன்
28. அகத்தியர்
29. பழனி
30 . பாதயாத்திரை
31. அரோகரா
32. பங்குனி உத்திரம்
33. பித்துக்குளி முருகதாஸ்
34. நவபாஷாண சிலை
35. மயில் வாகனம்
36. வேல்
37. குகன்
38. 'ஐந்து முகம் ஒதிமலை முருகன் '
நாமாக சிந்தித்தால் கூட ஒண்டிரண்டு என்று தான் யோசிப்பாம். குழுவில் உள்ள அனைவரும் தங்களின் பங்களிப்பைத் தந்த போது, பட்டியல் நீண்டது. இது முருகன் அருள் முன்னிற்க நடந்த தெய்வீக விளையாட்டே.
நமக்கு கிடைத்த செய்தியாக 30/3/18 வெள்ளிக்கிழமை மாலை6-00மணிமுதல்இரவு8-30மணிவரை பங்குனி உத்திரம் திருகல்யாணம் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமாமரத்துஈஸ்வரருக்கும் நடைபெறும் என்பதே.அன்று மாலை 7:30 மணி அளவில் மாமரத்து விநாயகர் கோயில் சென்றோம். முதன் முதலாய் தெய்வீக திருக்கல்யாணம் காண சென்றோம். கோயிலில் நல்ல கூட்டம் வேறு. உள்ளே சென்று மூத்தோனை வணங்கி விட்டு, திருக்கல்யாண வைபவத்திற்கு சென்றோம். எட்டி எட்டி பார்க்கும் அளவிற்கு கூட்டம். கல்யாணம் என்றாலே கூட்டம் இருக்கும். அதுவும் தெய்வீக திருக்கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். மேளம் சத்தம் கயிலையில் கேட்டிருக்கும். சரியாக சுமார் 8 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் திருஷ்டி சுற்றி போட்டார்கள்.
நாமும் அனைவருக்குமாக பிரார்த்தனை செய்து விட்டு, அங்கிருந்து அருள் பெற்று சென்றோம். பிரசாதமாக வெற்றிலை,பாக்கு,வாழைப்பழம்,பூ அடங்கிய மாங்கல்ய மஞ்சள் சரடு அனைவருக்கும் கொடுத்தார்கள்.
சென்ற ஆண்டு, பங்குனி உத்திரம் அன்று பக்தி என்றால் கிலோ என்ன விலை? என்று மனம் நொந்து இருந்தோம். ஆனால் இந்த ஆண்டு எத்துணை தரிசனம், இரண்டு கோயில், விநாயகர், பெருமாள், முருகன், சிவன்,சக்தி, பௌர்ணமி தரிசனம், திருக்கல்யாணம் என நமக்கு கிடைத்து என்றால் ? பதிவின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். அவன் அருளின்றி இது சாத்தியமே இல்லை. ஆங்..இடையில் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். அன்று நாம் நம்மால் முடிந்த அளவு சிறு தொகையை திருச்செந்தூர் அகத்தியர் கோயிலுக்கி அனுப்பி வைத்தோம். எல்லாம் அவன் அருள். என்றும் அவன் தாள் வணங்கி, வேலை வணங்குவதே நம் முதல் வேலையாக கைக் கொள்வோம்.
- முருகன் அருள் முன்னிற்க அடுத்த பதிவில் சந்திப்போம்
மீள் பதிவாக :-
பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html
நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html
பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_3.html
No comments:
Post a Comment