"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, August 30, 2020

ஆவணி திருவோணம் - வண்டிக்கார சுவாமி ( எ) தினகரன் சிவயோகி சுவாமிகள் 37-ஆம் ஆண்டு குருபூஜை விழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது.

சென்னை ஒரு ஆன்மிக பூமி. பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது. சென்னை மட்டுமல்ல...ஒட்டுமொத்த தமிழ்நாடும் சித்தர்களின் பரிபூரணம் நிறைந்து காணப்படுகின்றது.

நாம் கூடுவாஞ்சேரி வந்த பிறகு, சித்தர்களின் தேடலில் வண்டிக்கார  சுவாமி ( எ) தினகரன் சிவயோகி சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்று தரிசனம் செய்தோம். இந்த முறை சுவாமிகள் குருபூஜை பற்றிய தகவல் கிடைக்கவே, இன்றைய பதிவில் வண்டிக்கார  சுவாமிகள் பற்றி காண இருக்கின்றோம்.



சென்னையில் வடபழனி மற்றும்  கோடம்பாக்கம் பகுதியில் சித்தர்கள் அருள் நிறைந்து  காணப்படுகிறது. கோடம்பாக்த்தில் பரத்வாஜ முனிவர் வழிப்பட்ட பரத்வாஜர்  திருக்கோயில், வியாக்ரபாதார்  முனிவர் ,பஞ்சலி முனிவர்  வழிப்பட்ட வேங்கீஸ்வரர்  கோயில் மற்றும் வடபழனி முருகன் கோயில் உருவாக காரணமாக இருந்த,அண்ணா சாமி தம்பிரான், பாக்கியலிங்க தம்பிரான்,இரத்தின சாமிகள்  ஆகியோர், தமிழகம் முழுதும்   அதிகமான பக்தர்கள் கொண்ட வடபழனி பரஞ்சோதி பாபா, ஒம்காரசுவாமிகள், சின்னையா(எ) வெங்கட்ராம சுவாமிகள் ஆகியோரை அறியாத  பக்தர்கள் இருக்கமுடியாது. 

இவர்களை போலவே வடபழனி   வேங்கீவரர்  திருக்கோயில் அருகில் தவம் செய்து, சிறிய வண்டியில் சித்த மருந்துகளை எழை நோயாளிகளுக்கு இலவசமாக  வழங்கியும், தனது தவ ஆற்றலால் மன  நலம் குடும்ப நலம், தொழில் நலம், ஆகியவற்றை வழங்கி அருளாட்சி செய்தவர்   தினகர சிவயோகியாவார். இவரது பூர்வீக குடும்பம், பரம்பரை, பிறப்பு, இதர விவரங்கள் தெரியவில்லை. 1983-ம் ஆண்டு தனது சீடர் திரு அகத்திலகம் என்பவரை அழைத்து இன்னும் 48 நாட்களில் ஜீவ சமாதி அடைய போவதாகவும் அதற்கான இடம் தேர்வு  செய்ய துறைமுகத்தில் வேலை செய்யும் இரு சீடர்கள் அழைத்து வரும்படி ஆணையிட்டார்.மேற்படி சீடர்  அவர்களை அழைத்து அவர்கள் மின்சார இரயில் பயணம் செய்தபடி பேசிக்கொண்டிருக்கையில், பக்தர்  ஒருவர்  எங்கள் ஊரில் மழையில்லை நாங்கள் கஷ்டப்படுகிறோம், உங்கள் சுவாமியை எங்கள் ஊரில் தங்க வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அதன்படியே சுவாமியை கூடுவாஞ்சேரில் உள்ள களத்துமேடு பகுதியில்  சுவாமியை குடிசைபோட்டு தங்கவைத்திருந்தனர். பார்ப்பதற்கு  எளிமையாகவும் மெலிந்தஉடலும் உயரமான தோற்றம் கொண்டவர். நீளமான தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்டவர். தவலிமையுடன்  ஒரு கம்பீரத்துடன் காணப்படுவார். இவருக்கு பக்தர்கள் அதிகமாக இருப்பினும்  யாரையுமே அருகில்  வைத்துக்கொள்ளவில்லை. இவர் தம்  வாழ் நாட்களில் எப்போதுமே வண்டிலேயே பல காலம் வாழ்ந்தவர். அதனால்  வண்டிக்கார சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சுவாமிகள் சொன்னது,போலவே 1983-ம்ஆண்டு ஆவணி திருவோணம்  நட்சத்திரம் அன்று ஜீவ சமாதியானார். 

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாம் நம் நண்பர் உடன் சேர்ந்து கூடுவாஞ்சேரி களத்துமேடு பகுதிக்கு சென்றோம். அப்படியே சுவாமிகள் தரிசனம் பெற எண்ணினோம். சுவாமிகள் ஜீவ சமாதி களத்துமேடு  ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ளது. களத்துமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். நாம் சென்ற நேரம் நடை சாத்தி இருந்தமையால் வெளியே இருந்து இறை தரிசனம் பெற்றுக்கொண்டிருந்தோம்.




கோயிலின் வெளி பிரகாரத்தில் ஆஞ்சநேயர் தரிசனம், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தரிசனம்  ஸ்ரீ கால பைரவர் தரிசனம் பெற்றோம். இதோ..நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.




அடுத்து கோயில் அருகில் உள்ள பாதை வழியே சென்றோம்.


வண்டிக்கார  சுவாமி தரிசனம் பெற உள்ளோம் என்று மனம் துள்ளிக்குதித்தது. ஆனால் யாரும் அங்கே இல்லை. நமக்கு தரிசனம் கிடைக்குமா? கிடைக்காதா என மனதில் ஒரு ஏக்கமும் இருந்தது.



வெளிய இருந்த கதவை திறந்து  வண்டிக்கார  சுவாமி தரிசனம் பெற்றோம். நீங்களும் ஒருமுறை அல்ல..பலமுறை பெற்றுக்கொள்ளுங்கள்.




ஒரு வித மெல்லிய உணர்வின் ஆதிக்கத்தை அங்கே உணர முடிந்தது. உடல் சற்று லேசானது. மனதுள் மகிழ்ச்சி பற்றிக் கொண்டது. இந்த அனுபவத்தை நம்மால் வார்த்தைகளில் அடக்க இயலவில்லை.





சுமார் 20 நிமிடம் அங்கே அமர்ந்து சுவாமிகளிடம் அனைத்து உயிர்களும் ஆனந்தமாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்தோம்.


பின்னர் அங்கிருந்து விடை பெற்றோம். 

நாம் ஏற்கனவே சொன்னபடி வண்டிக்கார  சுவாமிகள் குரு பூஜை ஆவணி திருவோணமான நாளை காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

வண்டிக்கார  சுவாமி தரிசனம் பெற முகவரி:-

கூடுவோஞ்சேரி, பெரிய தெரு,(joyce nursary school)

களத்துமேடு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயில் வெளிபுற வளாகம்

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html

குரு உரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_54.html

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! - இன்று பட்டினத்தார் குருபூசை - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_1.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

Thursday, August 27, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற பதிவில் திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம். இன்றைய பதிவில் மீண்டும் அரசண்ணாமலையார் கோயிலில் 120 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை பதிவை தொடர விரும்புகின்றோம்.


 சில சிவாலயங்களில் அர்த்த ஜாம பூசை என்பது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும்.  சிவராத்திரி அன்று ஆறுகால பூசை என்பது நிச்சயம் உண்டு.  பெரும்பாலும் சாதாரண நாட்களில் நள்ளிரவு நேரத்தில் சிவனுக்கு பூசை செய்வதில்லை.  ஆனால் இதையெல்லாம் தாண்டி அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஆறுகால பூசையும் செய்யமுடியாத அந்தக் கோயிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒரு முறை அகஸ்தியர் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள் அர்ச்சனை அபிஷேகம் செய்வதும், அதை மானசீகமாகக் கோயிலின் வெளியிலிருந்து கேட்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது என்பதை ஜீரணிக்க என்னால் முடியவில்லை.

இது ஒரு சித்து விளையாட்டு என்றுதான் முதலில் எண்ணினேன்.  அதன் உண்மையான சூட்ச்சுமத்தை அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அன்றைக்கு மாத்திரம் யாராவது ஒருவர் என்னுடன் அங்கு தங்கியிருந்தால் இந்த சந்தோஷத்தை விடிய விடியப் பங்கு போட்டிருப்பேன்.

ஆனால் யாரும் எனக்குத் துணையில்லையே என்பதால் அந்த சந்தோஷமான திகில் அனுபவம் மனதில் சோகத்தையும் ஏக்கத்தையும் கொடுத்தது.

இந்த அற்புதமான சம்பவத்திற்குப் பின் எனக்கு தூக்கமே வரவில்லை.  எப்பொழுது பொழுது விடியும், கீழே இறங்கி யாரிடத்திலேயாவது இதைப் பற்றிப் பெசமாட்டோமா என்ற ஆவல் உந்த, கூண்டில் அடைபட்ட புலிபோல் அந்தக் கோயிலையே நள்ளிரவில் வலம் வந்து கொண்டிருந்தேன்.

விடியற்காலை ஐந்து மணி அளவில் மிதமான குளிர்ந்த காற்று வீசியது.  அந்தக் காற்றில் புஷ்பங்களின் அன்றலர்ந்த மனமும் நாசிக்கு அபூர்வமாகச் சில மருந்துச் செடிகளின் வாசனையும் உடல் சோர்வை மெல்ல அகற்றியது.

சூரியன் நன்றாக உதிக்கும் வரை அந்த இயற்கையின் செழிப்பில் தன்னை மறந்து தூங்கினேன்.  முகத்தில் சூரியன் பட்டது.

வாரிச் சுருட்டிக் கொண்டு சிவபெருமானை வணங்கி விட்டு மெதுவாக அந்த மலையிலிருந்து கீழே இறங்கினேன்.  அப்படியே என் கண்கள் கீழே பார்த்த பொழுது, சுமார் இருபது அல்லது முப்பது பேர்கள் மலையடிவாரத்தில் கூட்டமாக நின்று கொண்டு என்னை நோக்கிக் கையைக் காண்பித்து தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"சரிதான்! சரியாக இவர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டோம்" என்ற பயம் மனதில் எழுந்தது.

இவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். வேறொன்றும் பொய் சொல்லவும் முடியாதே.  "அகஸ்தியர்" என்றால் இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ? அதுவுமின்றி, கிராமத்துக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி தண்டனை தரலாம்.  அது எந்த தண்டனையோ?  என்று பலவாறு சிந்தித்துப் பின்னர் "எது நடந்தாலும் என்ன? வருவதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்!

மலையடிவாரத்தில் "எப்படி திரும்பி வந்தான்?" என்று ஒருவர்கொருவர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள்.

சிலரது பார்வையில் என் மீது வெறுப்பு இருப்பது தெரிந்தது.  பலர் எனக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டுத் தான் போகவேண்டும் என்ற ஆத்திரம் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.  இன்னும் பலருக்கு மலையில் ராத்திரி என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதுபோல் தோன்றியது.

"ஏய்! தம்பி, இங்கே வாங்க"

ஒரு வயது முதிர்ந்த மீசைக்காரர் என்னைஅதிகாரத்தோடு தன் பக்கம் அழைத்தார்.  மௌனமாக அவரிடம் போனேன்.

"வணக்கம் சொல்லுங்க.  அவருதான் இந்த கிராமத்துக் கர்ணம்" என்று கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் எனக்கு உத்தரவிட்டார்.

கையோடு கொண்டு வந்த பையைக் கீழே வைத்துவிட்டு மரியாதைகாகக் கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

என்னைப் பற்றி அதிகாரத் தோரணையில் விசாரித்தார்.  அவரது இடது கை அடிக்கடி மீசையைத் தடவிக் கொண்டிருந்தது.  அதோடு அவரிடம் நான் சொன்னதை அவர் லேசில் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

"ஐம்பது வருஷமா இந்தக் கோயில்ல யாரும் ராத்திரி நேரம் தங்கறதே இல்லை.  அப்படியே தெரியாத்தனமாக இந்த மலையிலே தங்கினவங்க மறுநாள் செத்த பிணமாகத்தான் ஆகியிருக்காங்க.  இதுல நீ ஒருத்தன் தான் இப்போ உயிரோடு வந்திருக்கே" என்றார் கர்ணம்.

"எல்லாம் அகஸ்தியர் அருள்!" என்றேன்.

இது அவருக்கு துளியும் பிடிக்கவில்லை. கோபத்தோடு என்னை பார்த்தார்.

"சும்மா கதைவிடாதே.  நான் இதேல்லாம் துளியும் நம்பரவனில்லை.  ஏன் இந்த கிராமத்து ஜனங்களும் நம்ப மாட்டாங்க.  உன்னைப் பார்த்த சந்தேகமா இருக்கு.  கோயிலில் ஏதாவது நகை நட்டுக் கிடைக்கும் திருடிப் போகலாமுன்னு வந்திருப்பே" என்றார் கர்ண கடூரமாக.

"சத்தியமாக அப்படி இல்லை.  வேணும்னா என்னை நீங்க எல்லோரும் இங்கேயே சோதித்துப் பார்க்கலாம்" என்று சொன்னேன்.  என்றாலும் நிலைமை இப்படி விபரீதமாகப் போகும் என நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.  போகிற போக்கைப் பார்த்தால், அவசரத்திலோ அல்லது ஆத்திரத்திலோ அங்குள்ள மரத்தில்கட்டி வைத்து தொலை உரித்தாலும் உரிக்கலாம் என்றுதான் தோன்றியது.

குறிப்பாக நேற்றைக்கு என்னை வழிமறித்த கோயில் குருக்களுடைய பார்வை அவ்வளவு கடூரமாக இருந்தது.  போதாக் குறைக்கு அந்தக் கர்ணத்திடம் ரகசியமாக அடிக்கடி காதில் ஏதேதோ ஊதிக் கொண்டிருந்தார்.

"ஊர்ப்பஞ்சயத்தைக் கூட்டி அப்புறம் இந்த வெளியூர் ஆளுக்கு தீர்ப்பு சொல்லலாம்" என்றனர் சிலர்.

"அதெல்லாம் அப்புறம்.  முதல்ல இவன் பையை எல்லாம் சோதனை போட்டுப் பாருங்க.  அதற்கப்புறம் முடிவு செய்யலாம்" என்றார் அவர்.

"பையனைப் பார்த்தா கோயில்ல திருட வந்த மாதிரி தெரியல்ல.  தெரியாத்தனமாக வந்திட்டான்.  இரண்டு தட்டு தட்டி புத்திமதி சொல்லி அனுப்புங்க" என்றனர் பலர்.

"கர்ணம், தலையாரி அய்யா அவசப்பட்டு எந்த முடிவும் செய்திடாதீங்க.  பையன் மலையிலே தங்கி உயிரோடு வந்ததே, தெய்வத்தின் அருள்.  சட்டென்று தவறா மதிப்புப் போட்டு தெய்வக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம்.  மலையிலே என்ன நடந்துச்சுன்னு மொதல்ல விலாவாரியாக விசாரியுங்க" என்று பாதிப்பேர் ஒரே சமயத்தில் குரல் கொடுத்தனர்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தாங்கள் கருத்தைத் தலையாரி, கர்ணத்திடம் புட்டுப்புட்டு வைத்தனர்.

கால் மணி நேரம் கழிந்தது.

"என்னப்பா வெளியூர்ப் பிள்ளை.  அவங்கதான் கேட்கிறாங்கல்ல.  மலையிலே என்னதான் நடந்துச்சு சொல்லு" என்று உத்தரவிட்டார்.

நான் என்ன நடந்தது என்பதை ஒன்று விடாமல் சொன்னேன்.  இப்படிச் சொல்லும் முன்பு அகஸ்தியரிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டேன்.  ஏனெனில் இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே எனக்கு உத்திர விட்டிருந்ததால் அவரிடம் மனிப்புக் கேட்டபிறகு சொல்ல வேண்டியதாயிற்று.

சொன்னதை கேட்டுக் கொண்டார்களே தவிர, பெரும்பாலோர் இதை முழுமையாக நம்பவில்லை. எப்படி அவர்களை நம்ப வைப்பது என்று தெரியாமல் திகைத்த நான், தலையாரி, கர்ணம் ஆகியோரிடம் அகஸ்தியர் நாடியைப் பார்த்து விட்டுச் சொல்வதாகவும் ஆனால் அதற்கு முன்பு நான் பல் தேய்த்து, குளித்து முறைப்படி பூசை செய்ய வேண்டும்.  அதற்கு ஏற்பாடு செய்து தந்தால் அவர்கள் அத்தனை பேர்க்கும் அகஸ்தியர் அருளால் எனக்குக் கிடைத்த அதே அனுபவத்தை நான் பெற்றுத் தருவேன் என்று உறுதி கொடுத்தேன்.

அரை மணி நேரத்திற்குப் பின் அந்த கிராமத்து மக்கள் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், என்னைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்தத் தலையாரியே எனக்கு அவர் வீட்டில் தங்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

ஒரு மணி நேரம் கழிந்தது.

காலையில் வந்திருந்த அந்தக் கூட்டம் இப்படி அப்படி நகராமல் தலையாரி, கர்ணம் வீடு வாசலில் அப்படியே தரையில் துண்டு போட்டு ஏதோ ஒரு அரசியல்வாதியின் மீட்டிங் கேட்பது போல் உட்கார்ந்திருந்தது.

கொல்லைப்புறம் இருக்கும் வயல்காட்டு வழியாக நான் தப்பிச் சென்றாலும் சென்று விடுவேன் என்ற சந்தேகம் காரணமாக அங்கும் நான்கு பேர்கள் காவல் இருந்தார்கள்.

ஏதாவது பொய் சொன்னால் அந்தக் கிராமத்துப் பஞ்சாயத்தில் ஏதாவது தண்டனை கிடைத்திருக்கும்.  அவர்களிடமிருந்து லேசில் தப்ப முடியாது.  நல்லவேளை "கர்ணம்" மனம் இறங்கினார்.

பிரார்த்தனை முடிந்ததும் அகஸ்தியர் நாடியை எடுத்தேன்.

"என்னைப் பற்றி அகஸ்தியர் என்ன சொல்கிறார், முதல்ல சொல்லு.  இது உண்மையாக இருந்தால் போதும்.  மற்றது எதுவும் படிக்க வேண்டாம்" என்றார் அந்த கர்ணம்.

"அய்யா, படிக்கிறேன்" என்று படிக்க ஆரம்பித்தேன்.

"உங்கள் பெயர் அவினாசிலிங்கம்.  கூடப் பிறந்தவர் ஒரு சகோதரன்.  இளம் வயதில் நல்ல சொத்து சுகம் உள்ள குடும்பம்.  உங்கள் தந்தைக்கு இரண்டு மனைவிகள்.  இதனால் குடும்பம் பின்னால் உடைந்தது.  உங்களது தம்பி, திருமணம் செய்து கொண்டு ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார்.  பத்தாண்டுகளாக அவர் திரும்பி வரவே இல்லை.

தம்பி ஊருக்குத் திரும்பி வராததர்க்குக் காரணம் அவன் ஸ்ரீநகரில் நடந்த பாகிஸ்த்தான் யுத்தத்தில் மாண்டு விட்டதாகச் சொல்லி, அவனது சொத்தையும் அபகரித்துக் கொண்டீர்கள்.  அதோடு மட்டுமின்றி, அவனது மனைவியையும் வலுக்கட்டாயமாக உங்களுடைய காமக் கிழத்தியாகவும் மாற்றிக் கொண்டீர்கள்.  இதனால் உங்களது முதல் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.  இது உண்மை தானே?" என்று மளமளவென்று அகஸ்தியர் ஜீவ நாடி மூலம் சொன்னதை நிதானமாக அழுத்தம் திருத்தமாகப் படித்தேன்.

இந்தச் செய்தியை எதிர் பார்க்காத அந்தக் கர்ணம் வெலவெலத்துப் போனார்.  ஊர் ஜனங்களுக்கும் அந்த ரகசிய வாழ்க்கை ஏற்கனவே தெரிந்ததினால், அவர்களால் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று.

சுற்றுப்புறச் சூழ்நிலையை ஒரு கண்ணோட்டம் விட்டு "அய்யா! மேற்கொண்டு படிக்கலாமா?" என்று கேட்டேன்.

மௌனமாக தலையை ஆட்டினார்.

"இறந்து போனதாகச் சொன்ன உங்கள் தம்பி இன்னும் எட்டு மணி நேரத்தில் ஊனத்தோடு இங்கு வரப்போகிறான்.  இனி எப்படிச் சமாளிக்கப் போகிறீர்?" என்று அகஸ்தியர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு நிறுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அந்த கிராமத்து மக்களிடம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.  திண்ணையில் கால் மேல் கால் போட்டு அலட்ச்சியமாக என்னை ஏளனமாக முதலில் பார்த்தவர், அகஸ்தியர் நாடியைப் படிக்கப் படிக்க முகம் வெளுத்து, உடலில் பதற்றம் ஏற்பட குற்றவாளி போல் ஆனவர், தன் தோளின் மேல் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.  விருட்டென்று எழுந்து அங்குள்ள எல்லோரையும் பார்த்து சட்டென்று திண்ணையிலிருந்து கீழே இறங்கினார்.

இப்பொழுதுதான் எனக்கு உண்மையில் பயமேர்ப்பட்டது.  ஏதாவது இல்லாதது பொல்லாததைச் சொல்லி வசமாக மாட்டிக் கொண்டேனா? அகஸ்தியர் என்னைக் கை கழுவி விட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.  பிரார்த்தனை செய்து கொண்டேன்.

திண்ணையிலிருந்து கீழே இறங்கிய அந்தக் கர்ணம் கிராமத்து மக்களை நோக்கி ஒரு தடவை பார்த்து "அவசப்பட்டு நான் செய்த தவறுக்கு என் மனைவியைப் பறிகொடுத்து விட்டேன்.  எனது இரண்டாவது மனைவியும் பயங்கரமான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இப்பவோ அப்பவோ என்று சாகக் கிடக்கின்றாள்.  என் தம்பியைச் செத்து விட்டதாகச் சொல்லி, அவன் சொத்தை அபகரித்ததும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும்.  இதற்கெல்லாம் ஒன்று சேர்த்து நான் அணுஅணுவாக நொந்து கொண்டிருக்கிறேன்.  இந்தத் தம்பி நாடி மூலம் சொன்னதெல்லாம் உண்மை.  இப்போ என் தம்பி இந்த ஊருக்கு வரப்போகிறான்னு தம்பி சொல்லுது,  அது மட்டும் உண்மையாக இருந்தால் அகஸ்தியரை நம்புகிறேன்.  இந்த தம்பியையும் நம்புகிறேன்" என்றார் கர்ணம்.

ஊர் மக்களும் கர்ணம் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.

"அப்பாட தப்பித்தேன்!" என்று அப்போது நான் நினைத்து சந்தோஷப் பட்டாலும் மதியம் இரண்டு மணி வரை பதைபதைப்பாக இருந்தது.

அந்தக் கர்ணம் தன்னால் என்ன காரியம் எனக்குச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொடுத்தார்.

மதியம் மூன்று மணிக்கு ஒரு வில் வண்டியில் அவரது தம்பி வந்து இறங்கினார்.  ஊர் மக்களே அவரை வரவேற்க ஓடி வந்தனர்.

வண்டியிலிருந்து அவர் இறங்கச் ஸ்ரமப்பட்டார்.  நானும் ஆவலோடு வண்டி அருகே சென்று எட்டிப் பார்த்தேன்.

அவருக்கு ஒரு கால் இல்லை.  கால் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

பதறிப் போனார்கள் அவர்கள் அத்தனை பேர்களும்.  அவர்களோடு நானும் உண்மையில் நொந்து போனேன்.

அகஸ்தியரின் அருள்வாக்கு நல்லபடியாக நடக்கும் என்றாலும் இப்படியொரு சோகத்தைக் கர்ணத்திர்க்குக் கொடுத்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.

தம்பியைக் கட்டிப் பிடித்துத் தேம்பி தேம்பி அழுதுவிட்டுப் பின்னர் என்னை நோக்கி வந்த கர்ணம் "தம்பி நீங்க எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் இங்கே தங்கலாம்.  மலைக் கோயிலுக்குப் போகலாம்.  உங்களுக்கு துணையாக நானும் இந்த கிராமத்து மக்களும் இருப்போம்.  சரிதானா?" என்றார் என்கையைப் பிடித்துக் கொண்டு.

ஜீவநாடி அற்புதங்கள் மீண்டும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஜீவ நாடி அற்புதங்கள்  தொடர்பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி அருளிய வாக்கின் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் அமைய உள்ளது. வருகின்ற 28.10.2020 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்விற்கான செய்திகளை நாம் இங்கே தர விரும்புகின்றோம்.




பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று


"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"


சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"சிவன் கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

-காஞ்சி மஹா பெரியவர்



எந்த ஒரு ஜோதிடரிடமோ அல்லது மகானிடமோ சென்ற உடனேயே அதிசய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தடுமாற்றமே தன்னிலை மறந்து முன்னிலை வகிக்கும்.அவரவர் கர்மவினை நன்றாக இருந்தால் ஒழிய அதிசயம் நடப்பது அபூர்வம்.

      நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திருப்பணிக்கு, ஆலயக்கட்டுமானத்திற்கு முதல் பணியாக அடித்தளம் அமைத்து, பணி ஆரம்பிக்கப்பட்டு 08 வருடங்கள் பூர்த்தியாகிறது.

அக்காலத்தில் மன்னர்கள் கருங்கற்களைக் கொண்டு ஆலயத்தை எழுப்பியதுபோல், ஸ்ரீஅகத்தீஸ்வரர் மற்றும் அம்பாள் ஸ்ரீசாெர்ணாம்பிகை சன்னதிக்கு, கருங்கற்களை காெண்டு சன்னதிகள் தனித்தனியாக எழுப்பப்பட்டது.

பின் படிப்படியாக ஒவ்வொரு பணியும் ஜீவநாடி வாயிலாக வாக்கு கேட்டு ஸ்ரீமுருகப்பெருமான் அருளாலும், ஸ்ரீஅகத்திய மாமுனிவர் அருளாலும் பல தடைகளையும் தாண்டி திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திருப்பணியில் இணையக்கூடிய அனைத்து அன்பர்களும், அடியார்களும் முற்பிறவி தொடர்பாளர்கள் என்பது ஜீவநாடி வாக்கு.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால் பிராப்தம் உள்ள மனிதர்களை இவ்வாலயத் திருப்பணிக்கு எம்பெருமான் கூட்டுவித்து, இந்த திருப்பணியில் இணைந்து, தங்களால் இயன்ற பொருள் உதவியும், பணஉதவியும் பல வருடங்களாக செய்து வருகின்றனர். அவர்களுள் இந்த ஆலயத்திருப்பணிக் குழுவில் உள்ள அடியார்களும் அடங்கும்.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால் ஆலய திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில எஞ்சியுள்ள பணிகள் மட்டுமே உள்ளன.

நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்ககூடிய நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கு தேதி ஸ்ரீமுருகப்பெருமான் அருளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற ஐப்பசி 12 ஆம் (ஆங்கில தேதி 28/10/2020) நன்னாளில் புதன்கிழமை அன்று ஆலயத்திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருக்குடமுழுக்கு தமிழ் தேதி : ஐப்பசி 12 ஆம் தேதி (புதன்கிழமை)

ஆங்கில தேதி : 28/10/2020.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால் நம் குழுவிலுள்ள அடியார் பெருமக்கள் அனைவரும், நம் ஆலய கலசவிழாவில் கலந்துகொண்டு எம்பெருமான் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்!

ஓம் ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருவடிகள் போற்றி!

   
                           

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் :



இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில், மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் திருக்கோவில். திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்கக்கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டப்படுகின்ற ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது திருப்பணிக்கு நிதி தேவைப்படுகிறது.

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 17/05/2019(வெள்ளி)

ஈரோடு - அந்தியூர் முருகப்பெருமான் ஜீவநாடியில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமான் உரைத்த ஸ்தல புராணம் :

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம். 

பதினெண் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும். 

அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம். 

பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம். 

சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப்பட்ட திருத்தலம். 

உன்னத சக்திகள் நிரம்பப்பெற்ற  தலம். 

பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். 

இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும், அது தக்க காலத்தில் வெளிப்படும். 

இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும். 

குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன், ஆடலரசன், ரிஷிகள், நவகோடி சித்தர்கள், லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். 

 திருப்பணியில் பங்கு கொள்ளும் லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மீகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும். 

போகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில்.

தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  
ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடியில் முருகப் பெருமான் உரைத்தார்.

தற்போது வரை நடைபெற்று வரும் திருப்பணிக்காட்சிகளை கீழே தருகின்றோம்.

























                                                ஆலவாய் அண்ணலின் கொடிமரம்



திரு. பாலமுருகன் (அமெரிக்கா) மற்றும் அவரது துணைவியார் திருமதி. மகேஸ்வரி தம்பதியர் இணைந்து, நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு 4 அடி உயரமுள்ள இரண்டு குத்துவிளக்கை ஆலயத்திற்கு அளித்துள்ளார்கள்.

உபயதாரரான திரு. பாலமுருகன் (அமெரிக்கா) அய்யா அவர்கள் குடும்பத்தினர் சார்பில் இந்த இரண்டு குத்துவிளக்கு நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளும், அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகை தாய் அருளும் நிரம்பப் பெற்று குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன்!

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்  ஆலய வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்!

பெயர் : ஸ்ரீஅகத்தீஸ்வரர் அறக்கட்டளை (Sri Agatheeshwarar Trust),

வங்கி : கனரா வங்கி (Canara Bank),

A/C No : 6161101002984

IFSC Code : CNRB0006161

MICR: 600015165

கிளை : திருநின்றவூர் கிளை (Thirunindravur Branch),

தொடர்புக்கு  என்றும்  இறைப்பணியில் :

திரு. கஜேந்திரன் அவர்கள்,

+919789053053(Whatsapp)
+919080590956

அனைவரும் எதிர்பார்க்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கீழே பகிர்கின்றோம்.










அழைப்பிதழை தரவிறக்க:- https://drive.google.com/file/d/16A_ovDH1ThQJXHDwM3aojdftYeKUomq1/view?usp=sharing

மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html