"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 3, 2019

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய்

முருகன் அருள் முன்னிற்க!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம்.ஆவணி மாத ஆயில்ய பூசை சிறப்பாக நடைபெற்றது. ஆவணி மோட்ச தீப வழிபாடும் ஆவணி அமாவாசை அன்று சிறப்பாக நடைபெற்றது. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் அன்று பூசைக்கு வந்த அனைவரும் இரு வழிபாட்டிலும் ஆயில்ய வழிபாடு மற்றும் மோட்ச தீப வழிபாடு என இரண்டிலும் இணைந்தனர்.ஜீவ நாடி அற்புதங்கள் மீண்டும் மீண்டும் படித்தால் தான் சித்தர் பெருமக்கள் நமக்கு உணர்த்தும் உன்னத நிலை புரியும்.

நமக்கு கிடைத்த ஜீவ நாடி அற்புதங்களை, பொது வாக்குகளை இங்கே உணர்த்த விரும்புகின்றோம்.




 நாடியை பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர். தமிழ்நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு!  அதில் ஒன்று தான் நாடி.  இது நமது எதிர்காலத்தை அல்லது கடந்தகாலத்தை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள சித்தர்களால், நமக்காக எழுதிவைக்கபட்டவை.  இது மிகவும் அற்புதமானது. நாடியிலிருந்து வரும் விளக்கங்களை, பரிகாரங்களை செய்து தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொண்டவர்கள், ஆரோகயத்தை, அமைதியை வாழ்வில் திருப்பி பெற்று கொண்டவர்கள் ஏராளம். சரி! சித்தர்கள் யார்?

முக்காலத்தையும் அறிந்தவர்கள். ஞானிகள்.  ஒரு கம்பெனி தலைவருக்கு செக்ரட்டரி போல, இறைவனுக்கு தூதுவர்கள். இறைவனை பிரார்த்தனை செய்தும் நற்காரியம் எதுவும் பெறாத பக்தர்கள் பலர், இவர்களை நாடி வந்து, இவர்கள் மூலம் நன்மை பெற்றவர்கள் ஏராளம்.  இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் நடப்பதாக தெரியவில்லை.

ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்."


இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள்.  இப்படி அவர்கள் எழுதி வைத்த ஓலை சுவடிக்கு பெயர் தான் "நாடி". நம் பிரச்சனைகளை தீர்க்க நாம்தான் சித்தர்களை தேடி போகவேண்டும்.  அவர்களாக வரமாட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அன்று மூத்தோன் குறித்து உரைத்த அற்புதமான வாக்கு.

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமாய் இஃதொப்ப எமது வாக்கை கேட்க வேண்டும் என்று எண்ணி, அஃதும், முன்னர் கூறிய வாக்கினை மீண்டும் கேட்க வேண்டும் என எண்ணி, அதனை பலருக்கும் பகிர வேண்டும் என எண்ணி, இன்னவன் இதழ் ஓதுபவன் இஃதொப்ப ஓலை தன்னை எடுத்திட்டாலும் இஃதொப்ப செயல் சிறப்பு என்று கூறுவதற்கு இல்லை. இல்லையப்பா, ஒரு முறை கூறிய வாக்கை அதைப்போல மீண்டும் கூற ஜீவ அருள் ஓலையில் விதி. என்றாலும் சில சமயம் கூறுகிறோம், சில காரணங்களுக்காக.

இருப்பினும் அதனையே வலிமையாய் பிடித்துக் கொண்டு அடிக்கடி எமை நாடுவது சிறப்பல்ல. என்றாலும் இதன் மேலும் பிரம்ம முகூர்த்த நாழிகை பூர்த்திக்கு பிறகும் கேட்பது சிறப்பல்ல என்றாலும் இஃதொப்ப ஆர்வம் கொண்ட சேய்கள் அஃதொப்ப சேய்கள் தன் மன வருத்தம் கொண்டிடாமல் இருக்க இஃதொப்ப நல்விதமாய் இன்று மட்டும் இஃதொப்ப சில்வாக்கை கூறுகிறோம், இறையருளால்.

இறையருளால் இத்தருணம் இதனை கூறுவதால் இதனையே அன்றாடம் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது சிறப்பல்ல என்பதை புரிந்து கொள்வது எம் சேய்களுக்கு அவசியம் ஆகும். ஆகுமப்பா, இஃதொப்ப நல்விதமாய் பரிபூரண சரணாகதி இறை வழிபாடும். தன்னலம் கருதா தொண்டும், சாத்வீக எண்ணமும், வாழ்வும் அவசியம். இஃதொப்ப வழியில் எமை நாடும் சேய்கள் நாளும் செல்ல இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். 

இயம்புகிறோம், சில்வாறாய் முன்னர் கூறிய மூத்தோன் குறித்த வாக்கு தன்னை, ஆனாலும், சற்றே இத்தருண கிரக நிலைக்கு ஏற்ப மாற்றித்தான், மாற்றித்தான் கூறுவதால் அஃதொப்ப வாக்கு வேறு, இஃதொப்ப வாக்கு வேறு என எண்ணாமல் அனைத்தும் இறையருள் என்று எண்ணுவதே சிறப்பு அப்பா. இஃதொப்ப நன்றாய் எமது வாக்கை புரிந்துகொண்டு இறை வழியில் வர நல்லாசிகள். எம் சேய்கள் அனைவருக்கும்.

மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இம்மண்ணின் மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்றால் வேழ முகத்தோன் என்ற பொருள் கொண்ட அஃதொப்ப மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.  
எதற்கும் முன்பாக, எச்செயலுக்கும் முன்பாக மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப தடைகள் வாராது செயல் நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, 
என்றென்றும், எதற்கும் முன்மாதிரியாக மூத்தோனை வணங்கு. நல்விதமாய் செயல் நடக்க மூத்தோனை வணங்கு.
நற்காரியம் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு. 
நலம்தான் தொடர என்றென்றும் மூத்தோனை வணங்கு. 
நன்மைகள் நாளும் பெருக நாள்நாளும் மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் பாவ வினைகள் குறைய நன்றாய் மூத்தோனை வணங்கு. 

நவில்கின்றோம், விருக்ஷத்தின் அடியில், வன்னி விருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருக்கும் மூத்தோனை வணங்கு. தேக நலம் பெருகும். 
நவில்கின்றோம் நன்றாய், விருக்ஷத்தின் அடியில், அரச விருக்ஷத்தின் அடியில் உள்ள மூத்தோனை வணங்கு. அஃதும் தேக நலத்தோடு வம்ச விருத்தியையும் நல்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய் இஃதொப்ப கிழக்கு திசை பார்த்த மூத்தோனை வணங்கு. நல்விதமாய் இஃதொப்ப லோகாய வெற்றிகள் கிட்ட வாய்ப்பை நல்கும்.
நவில்கின்றோம், மேல் திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்து கொள்ள, எதனையும் நன்றாய் புரிந்துகொள்ள அஃது உதவுவதோடு தேகத்தையும் காக்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய், தென் திசை பார்க்க உள்ள மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்துகொள்ளலாம். இஃதொப்ப அச்சங்கள் குறைய, எஃது குறித்தும் அச்சங்கள் குறைய இஃதொப்ப வழிபாடு உதவும். 
நவில்கின்றோம், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வட திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. இஃதொப்ப நன்றாய், வட திசை நோக்கிய மூத்தோனை வணங்க நாள் நாளும் செல்வம் பெருகுவதோடு நன்றில்லா ருண குழப்பம் தீருமப்பா.

இஃதொப்ப கூறுகிறோம் மீண்டும், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் காரியங்கள் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
எஃதொப்ப செயல் துவங்கும் முன்னர் மூத்தோனை வணங்கு. எச்செயல் ஆனாலும் அதற்கு முன் மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப நன்றாய் பயணத்தின் முன் மூத்தோனை வணங்கு. இயம்புகிறோம், சுப மங்கள நிகழ்வுக்கு முன்னால் மூத்தோனை வணங்கு. 
இயம்புகிறோம் மேலும் நன்றாய், காரிய தடை கண்டு கலங்காமல் இருக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்னும் வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.

கூறுகிறோம் நன்றாய், வாசியோகம் சித்திக்க மூத்தோனை வணங்கு. 
நல்விதமாய் வாழ்வு நிலை சித்திக்க மூத்தோனை வணங்கு. நவில்கின்றோம் நன்றாக காரியங்கள் யாவும் வசப்பட்டு நிச்சயமாய் அனைத்தும் கிட்ட மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கூறுகிறோம், உள்ளிருக்கும் ஆத்ம ஒளியை தரிசிக்க மூத்தோனை வணங்கு. 
உள்ளே இருக்கும் அஃதொப்ப ஒளி தன்னை உணர மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், அனைத்து கிரக தோஷம் குறைய மூத்தோனை வணங்கு. 
குறிப்பாக, சிகியின் தாக்கம் குறைய மூத்தோனை வணங்கு. கூறுகிறோம் மேலும், சர்ப்ப தாக்கம் குறைய, முழுமையாய் சர்ப்ப தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், மங்கல தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
நன்றாய், குண்டலினி சக்தியை உணர்ந்து, உணர்ந்து மேலேற்ற மூத்தோனை வணங்கு. 
நவில்கின்றோம் இஃதொப்ப லோகாயம் தாண்டி மேலேற, மேலேற, ஆத்ம வழியில் மேலேற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப மூச்சடக்கி இஃதொப்ப முக்காலம் தவத்தில் இருக்கும் அஃதொப்ப பயிற்சி சித்திக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கிரகங்கள் மாறும் காலம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 

அன்றாட வாழ்வில் எதிர்படும் அனைத்து சிக்கலையும் குறைக்க அஃதொப்ப கர்ம வினை தடுத்து, தடுத்து வாட்டும் நிலை மாற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. ஆசிகள்.


ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.

தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள்.

சரி.இனி மூத்தோன் தரிசனம் பெறலாமா? விநாயகர் சதுர்த்தி அன்று நம் உறவுகள் கொண்டாடிய நிகழ்வின் துளிகளை இங்கே தெளிக்க விரும்புகின்றோம்.




தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள  என் பெரியப்பாவிற்கு சொந்தமாக கோயிலில் இருந்து. முன்னோர்கள் கட்டிய 100 ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் .விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பால சித்தி விநாயகர் தரிசனம்.



கோவை சந்தானம் ஐயாவின் வீட்டிலிருந்து 



விபூதி விநாயகர்



நான்கு வகை கணபதி, நடுவில் வெள்ளி கணபதி


கருணை கணபதி





என் கைகளால் செய்த சித்தி விநாயகர்



அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே போற்றி பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தரிசனம். திரு பிரேம்சந்த் அவர்களிடமிருந்து.



தேனியில் உள்ள அன்பார் திரு.ராஜேஷ் கண்ணா 




விநாயகர் சதுர்த்தி திருநாளில் கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா வரசித்தி வலம்புரி விநாயகரை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவோம்





திருச்செந்தூர் அகத்திய அடியார் திரு மணிகண்டன் அய்யாவிடமிருந்து நாம் பெற்ற அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.






திருமதி  கல்பனா வீட்டிலிருந்து 


ஊரப்பாகத்தை சார்ந்த திரு.கந்தசாமி அவர்களின் வீட்டிலிருந்து, வணக்கம்,  தமிழ் முறைப்படி ஐங்கரன் பூசை 




திரு.சத்யராஜ் வீட்டில் இருந்து பிள்ளையார் தரிசனம்.


அடுத்து எங்கள் வீட்டுப் பிள்ளையார் தரிசனம் பெற வாங்க...



அடுத்து அகத்தியர் தபோவனம் மலேசியா அன்பர்கள் கொண்டாடிய அருள் துளிகள் இதோ.









குருவின் தாள் பணிந்து மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html


கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

2 comments:

  1. மிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete