"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 5, 2019

சந்தோசம் கொடுத்த சதானந்த சுவாமிகள் அருளிய உழவாரப் பணி

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி 2018 பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் அருளிய உழவாரப் பணி பற்றிய பதிவை இங்கே தர விரும்புகின்றோம்.

குருவின் அருளில் திளைப்பது நாம் இந்த பிறவியில் செய்த புண்ணியமே ஆகும். குரு தான் இறையை நமக்கு காட்ட முடியும். எந்த மார்க்கமாக இருந்தாலும் குரு இன்றேல் திரு இல்லை. மாதவா என்று நாம் அந்த பரம்பொருளை அழைக்கின்றோம். இதனை பொருள் விளக்கமாக
 மாதா வா! என்று எடுக்கவும். அன்னையின் மூலமே இந்த பிறவி நமக்கு கிடைத்து இருக்கின்றது.அன்னையை தொழாது நாம் இந்த பிறவி நோக்கம் அடைய முடியாது. இறை உணர்த்திய மகான்கள் கூட அன்னை என்றதும் வந்தார்கள் அல்லவா? பட்டினத்தார், ஆதி சங்கரர் போன்றோர் அன்னையின் மகிமையை நமக்கு உணர்த்திய பெரு மகான்கள் ஆவர். அடுத்து
மா தவா! என்று ஒரு நிலையை நாம் குருவின் மூலம் அடைய வேண்டும். குருமார்கள் ஒன்றும் காணக் கிடைக்கும் நபர்கள் அல்லர். குருமார்கள் உணர வேண்டிய உத்தமர்கள் ஆவர். குரு என்பது நபர்களைத் தாண்டிய ஒரு நிலை. குரு என்பவர் ஊசி போன்றவர். துணியாகிய இறைவனையும், நூலாகிய நம்மையும் குரு என்ற ஊசி தான் இணைக்கிறார். இன்னும் குரு பற்றி பேசுவோம்.

வழக்கம் போல் சுமார் 10 மணி அளவில் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் அடைந்தோம்.ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். சுமார் 6 பேர் இருந்திருப்போம்.






முதலில் குருவிடம் விண்ணப்பம் செய்து விட்டு அன்றைய மகம் நட்சத்திரத்தில் பணியை செய்ய தொடங்கினோம்.





அன்னதானம் செய்வதற்கு அன்னக்கூடத்தில் இருக்கைக்களை பாலா சரி செய்து கொண்டிருந்தார்.



கண்டிராஜ் சுவாமிகள் சுத்தம் செய்த போது எடுத்த காட்சி.







ஆடவர் குழு அங்கே இருந்த தியான மண்டபத்தை சுற்றிலும் தூய்மை செய்தார்கள்.

















மகம் பூஜை நடந்து கொண்டிருந்தது. கண்களுக்கு கண்கொள்ளா காட்சி, காதுகளுக்கு அருமையான விருந்து.





                         பூசை பொருட்களை கழுவி காய வாய்த்த போது
























                           இதோ. தரிசனம் செய்ய தயார் நிலையில்.






குருவே சரணம் 


திருவே சரணம் 



அற்புதக் காட்சி தந்து நம்மை ஆட்கொள்ளும் குருவிடம் சரணாகதி வேண்டினோம்.







அடுத்து அன்னசேவை நடைபெற்றது. இரை உண்ணும் முன் இறையை நினைத்து உண்ணும் வழக்கம் இங்கு கண்டோம்.















ஆண்டுகள் பல கடந்தாலும் எப்போதும் சதானந்த சுவாமிகள் அருளிய உழவாரப் பணி இன்னும் நம் மனதில் பசுமையாக உள்ளது.

 அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயத்தில் சென்ற சிவராத்திரி பூசைக்காக நம் செய்த உழவாரப் பணி அனுப்பதோடு விரைவில் உங்களை சந்திக்கின்றோம்.

மீள்பதிவாக:-

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

உழவாரப் பணி அழைப்பிதழ் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - 24.08.2019 & 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/24082019-25082019.html

 திரும்பி பார்க்கின்றோம் : சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_36.html

 நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

2 comments:

  1. மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.அங்கே பல முறை நாங்கள் சென்று வாசி யோகா வகுப்பில் கலந்து கொண்டதுண்டு. அங்கேயே குளித்த காலை கடன் கழித்து யோகா வகுப்பில் பங்கு கொண்டு இருந்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஐயா.

      இது போன்ற இயற்கை எழில் சூழ்ந்த அருளான இடம் வேறெங்கும் இல்லை


      வணக்கம்
      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete