"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 30, 2019

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம்  தளத்தின் சேவை 28.09.2019 & 29.09.2019 ஆகிய இரு நாட்களிலும் சிறப்பாக நடைபெற்றது. 28.09.2019 அன்று நடைபெற்ற மோட்ச தீபம் குருவருளால் சிறப்பிலும் சிறப்பாக நடைபெற்றது. அன்று நாம் வழக்கமாக செய்யும் அன்னதானத்தை விட அதிகமாக தான் ஏற்பாடு செய்தோம்,இருப்பினும் நம்மால் சமாளிக்க முடியவில்லை. ஒரு திருவிழா போல் இருந்தது. அடுத்து 29.09.2019 அன்று நம் தளம் சார்பில் நடைபெற்ற உழவாரப்பணியும்  ஒரு நாள் யாத்திரையும் இன்னும் சிறப்பாக இருந்தது. இதற்கும் சுமார் 25 அன்பர்களுக்கு மேலாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிகழ்வைப் பற்றியும் தனித்தனியாக பதிவு தரலாம். அவ்வளவும் குருவருளால் தான் எனும் போது மகிழ்வாக இருக்கின்றது. நேற்று நடைபெற்ற ஆலய தரிசனத்தில் நவராத்திரி கொலு தரிசனமும் கண்டோம். அடடா.. நாம் தான் நேற்று பாட்டு பாடி நவராத்திரி முதல் நாளை வரவேற்றோம். அதுவும் எங்கே? திருக்கச்சூர் கோயிலில் நமக்கு வாய்ப்பு கிடைத்தது. இது மட்டுமா? மேலும் ஸ்ரீ சக்கரம் தரிசனமும் இந்த நவராத்திரி காலத்தில் கிடைத்ததும் என்பது நம் குழு செய்ய பாக்கியமே. சரி..நவராத்திரி தரிசனம் காண்போமா?

உழவாரம் முடித்து திருக்கச்சூர் சென்றதும் நன்றாக வெடி எல்லாம் போட்டு அமர்க்களமாக மருந்தீஸ்வரர் கோயில் இருந்தது. உடனே அங்கிருந்த அறிவிப்பு பதாகை கண்டோம். அட..நவராத்திரி விழா பற்றி இருந்தது.


அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டி,...அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.


சுமார் 3:30 மணி அளவில் அங்கிருந்தோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நேரம் அதிகமாக இருந்ததால் குழந்தைவேலு சுவாமிகள் சித்தர் கோயிலுக்கு சென்றோம். இந்த ஆண்டு முதல் கொலு தரிசனம் இங்கே தான் நமக்கு கிடைத்தது. அது மட்டுமா அங்கு 1சுமார்  மணி நேரம் இருந்தோம். சித்தர்களின் அருள் அங்கே பரிபூரணமாக இருந்தது. மௌனத்தில் மௌனித்தோம். ஒரு சத்சங்கம் நமக்கு கிடைத்தது.




அடுத்து திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் தரிசிக்க சென்றோம். இங்கு நாம் இரண்டாவது கொலு கண்டோம். அங்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் உழவார செய்து வருகின்றோம் என்று சொன்னது தான் தாமதம் நம்மை உபசரித்த விதமே வேறு...கொலு தரிசனம் காண நம் இரு கண்கள் போதவில்லை. நீங்களே பாருங்கள்.









நேரம் அதிகமாக இருந்ததினால் அங்கிருந்த குருக்கள் நம்மை அமர வைத்து அம்மன் பாடல்கள் பாட சொன்னார்கள்.




நம் குழுவின் அன்பர் திரு செல்லப்பன் அவர்கள் முதலில் ஒரு திருப்புகழ் பாடல் பாடினார். அடுத்து செல்வி சாருமதி அவர்களின் தாயார் கைத்தல நிறைகணி , வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள் என்று பாடினார்.




புதிதாக சேவையில் இணைந்த கார்த்திகை பிரபா அவர்கள் சாய்ராம் பற்றிய பாடல் பாடினார்கள்.மீண்டும் கற்பக வள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன் என்று மற்றொரு பாடல் பாடினோம்.

அடுத்து நாம் அடுத்த கோயிலுக்கு செல்ல தயாரானோம்.அப்போது தான் குருக்கள் வேகமாக ஓடி வந்து நமக்கு இனிப்பு வழங்கினார். அடடா..மனது குளிர்ந்தது. யாத்திரையில் தேநீர் சாப்பிட எங்காவது இறங்கலாம் என்று நினைத்தோம். அருமையான உணவு, தேநீர், வடை, இனிப்பு என அனைத்தும் நமக்கு திருக்கச்சூர் கோயிலில் கிடைத்தது என்றால் இது இறையின் பிரசாதம் தானே!




அடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள ஸ்ரீ காளத்தீஸ்வரர் தரிசனம் பெற்றோம். 


மூன்றாவது கொலு தரிசனம் நமக்கு இங்கே கிடைத்தது.





நவராத்திரிக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது சால பொருந்தும் தானே! ஒரு நாள் யாத்திரையில் நவராத்திரி கொலு தரிசனம் மிக சிறப்பாக இருந்தது.

 நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

 நமக்கு அருள் பாலிக்கும் அம்மன்  அலங்காரங்களை தங்கள் தரிசனித்திற்காக இப்பதிவில் அளிக்கின்றோம்.

மதுரை மீனாட்சி அம்மன் - நவராத்திரி மஹோத்சவம் 2017 - முதல் நாள் - ராஜராஜேஸ்வரி அலங்காரம்







அன்னை மீனாட்சி நவராத்திரி இராஜராஜேஸ்வரி அலங்காரம், 2ம் நாள் இன்று 22.09.17 ஊஞ்சல் சேவை




மாமரத்து விநாயகர் கோயில் - தன லட்சுமி அலங்காரம் 



வேலி அம்மன் ஆலயம் 


                           
                                                       அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம்


அம்மையப்பனாய் கண்ட தரிசனம் ..கண்ணுள் இன்னும் நிறைந்து உள்ளது. கண்களில் மட்டும் அல்ல..மனதிலும் தான். அடுத்தபதிவில் மூன்றாம் நாள் அலங்காரம் காண்போம்.

முந்தைய பதிவுகளுக்கு:- 

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html
கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

No comments:

Post a Comment