"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 4, 2019

மூத்தோனின் ஆசியுடன் மூன்றாம் ஆண்டில்... வள்ளிமலை அற்புதங்கள் (4)

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 2017 ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி  முதல் பதிவாக அனைவருக்கும் வணக்கம் என்று கூறி நம் இணையப் பதிவுகளை ஆரம்பித்தோம். இன்று வரை ஆன்மிகத்தில் இன்னும் ஒரு புள்ளி வடிவில் தான் நிலைபெற்று இருக்கின்றோம். தேடல் உள்ள தேனீக்களாய் குழு ஏன் ஆரம்பமானது? எப்படி ஆரம்பமானது? என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கே வியப்பாக தான் உள்ளது.

2019 மார்ச் மாத இறுதியில்  நம் TUT நட்புகளோடு வெள்ளியங்கிரி யாத்திரை சென்றோம். அங்கு சனிக்கிழமை இரவு தங்கினோம்.சுமார் 10 பேர் நம்மோடு வந்திருந்தார்கள். அனைவரிடமும் தங்களுக்கு எப்படி இந்த சித்த மார்க்கம் அறிமுகமானது, TUT உடனான உறவு எப்படி என்று கேட்டோம். ஒவ்வொருவரின் அனுபவம் கண்டு அசந்து போய் விட்டோம். அப்போது தான் புரிந்தது தேடல் உள்ளவர்களுக்காக தான் இந்த வலைத்தளமும், நம் சேவைகளும் என்று.

இந்த பதிவின் மூலம் நாம் கடந்த ஓராண்டில் என்ன செய்தோம் என்று திரும்பி பார்க்க விழைகின்றோம். ஒவ்வொரு நாளும் நாட்காட்டியின் தேதியை கிழிக்கும் போது இன்று நாம் உருப்படியாய் என்ன செய்தோம் என்று நாம் நம் மனதை கிழித்து பார்க்க விரும்புகின்றோம்.இதோ..நரை கூடி விட்டது. வந்த வேலையில் உருப்படியாய் என்ன செய்தோம்? என்றும் நாம் நம்மை நாமே கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்,

சென்ற ஆண்டு பதிவில் தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில்  தரிசனம் செய்தோம். இந்த ஆண்டு என்ன பதிவு அளிக்கலாம் என்று யோசித்துகொண்டு இருக்கும் போதே, மூத்தோனின் ஆசியுடன் என்று நாம் இங்கே சொல்லி இருக்கின்றோம். நாம் தற்போது நம் தளம் வாயிலாக செய்து வரும் தொண்டினை அதிகமாக வெளியே சொல்வதில்லை. நேற்று ராம நவமி. கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம். நம் தளம் சார்பில் விசிறி வாங்க உபயம் செய்துள்ளோம். சென்ற முறை மருதேரி சென்ற போது பைரவர்களுக்கு ரொட்டியும், கோமாதாவிற்கு தீவனுமும் வாங்கி கொடுத்துவிட்டு வந்தோம். இன்று திருஅண்ணாமலையில் காலை சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டியுள்ளோம். இன்று காலை 5 மணிக்கு கூடுவாஞ்சேரி அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனையும் நடைபெறும்.

 இவை அனைத்தும் குருவருளால் தான். சரி விசயத்திற்கு வருவோம்.

பல யுகங்கள் கண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கும் தமிழர்க்கும் உண்டு. ஆனால் சில நூறு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லை. அவற்றில் ஒன்று தான் ஆங்கிலப் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுவது. நாம் உண்மையில் கொண்டாடவேண்டியது தமிழ்ப் புத்தாண்டு தான். இன்று  சித்திரை 1 தமிழ் புத்தாண்டு.

இதையொட்டி தமிழகத்தில் முருகனின் சில குறிப்பிட்ட தலங்களில் பின்பற்றப்படும் அருமையான நடைமுறை ஒன்றைப் பற்றி பார்ப்போம். தமிழ் புத்தாண்டை ஒட்டி ஒரு நல்ல விஷயத்தை உங்கள் மனதில் பதியவைக்கவேண்டி நாம் அளிக்கும் சிறப்பு பதிவு இது.

ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்தைய தினம் வள்ளிமலையில் படி உற்சவம் நடைபெறும். வள்ளிமலை என்பது வள்ளி பிறந்த இடம். வேலூரிலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 30 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது வள்ளிமலை. முருகன் வள்ளியை மணம் புரிந்த இடம் வள்ளிமலை. முருகப் பெருமானின் திருப்பாதம் அதிகம் தோய்ந்த இடங்களுள் வள்ளிமலையும் ஒன்று. இந்துக்கள் அனைவரும் குறிப்பாக முருகனடியார்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் வள்ளிமலையை சென்று காணவேண்டும் என்பது வாரியார் ஸ்வாமிகள் வாக்காகும்.

ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளும், தமிழ் புத்தாண்டுக்கும் முந்தைய தினமும் (ஏப்ரல் 13) வள்ளிமலையில் படி உற்சவம் நடைபெறும்.

படி உற்சவம் என்றால் என்ன?

மலையை சுற்றி திருப்புகழை பாடிக்கொண்டே கிரிவலம் வந்து பின்னர் அடிவாரத்தில் முதல் படியில் துவங்கி மலையில் உள்ள ஒவ்வொரு படிக்கும் கற்பூரம் ஏற்றி, தாம்பூலங்கள் வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு திருப்புகழை பாடிக்கொண்டே மலை மீது ஏறுவார்கள். மலையுச்சியில் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமியை சென்று தரிசிப்பார்கள். இது தான் படி உற்சவம்.

இந்த படி உற்சவம் வள்ளிமலை மட்டுமல்லாது அறுபடை வீடுகளிலும் பிற்பாடு பிரபலமாகியது. நமக்கு இதை அறிமுகப்படுத்தியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், பிரபலப்படுத்தியது கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

தை மாதம் நடைபெற்ற படி உற்சவத்திலும், இன்று பங்குனி 30 – வருடத்தின் கடைசி நாள் – நடைபெற்ற படி உற்சவத்திலும் கலந்துகொள்ளும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. நேற்றைக்கு மதியம் வேலூர் புறப்பட்டு சென்றோம். நண்பர் ராகேஷ் உடன் வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து வள்ளிமலைக்கு பயணம். நேற்றிரவு வள்ளிமலையில் தங்கி, காலை சீக்கிரம் எழுந்து நீராடிவிட்டு படி உற்சவத்தில் பங்கேற்றுவிட்டு இன்று மாலை சென்னை திரும்பினோம். (தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்டவைகளை பற்றி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விரிவாக சொல்கிறோம்.)

படி உற்சவம் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. அது பற்றி பார்ப்போம்.

பழனியில் கல்லுக்கட்டி சாமியார் என்று அழைக்கப்பட்ட கணபதி சுவாமிகள் என்ற ஒருவர் இருந்தார். அவரோடு மைசூர் அரண்மனையில் சமையற்காரராக வேலை பார்த்த ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தற்செயலாக ஒரு நாள் கல்லுக்கட்டி சாமிகள் திருப்புகழை பாடும்போது அதை இந்த சமையற்காரர் கேட்டார். மெய்மறந்தார். மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் இந்த சமையற்காரர் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்.

சமையற்காரரின் சொந்த ஊர் திருச்செங்கோடு. ஆனால் மைசூருக்கு பல ஆண்டுகள் முன்பே சென்றுவிட்ட குடும்பம். அரண்மனை சமையற்காரர் என்றால் சும்மாவா? கைநிறைய பொருளை சம்பாதித்தபோதும் அதில் ஏனோ மனநிறைவு ஏற்படவில்லை. அப்படியே புறப்பட்டு பழனி வந்தவர் கணபதி சுவாமிகளிடம் திருப்புகழ் கேட்டார். திருப்புகழின் சந்தமும், ஓசை நயமும் கருத்துக்களும் பொருட்செறிவும் அவரை கவர்ந்தன. திருப்புகழுக்கு அடிமையானார்.

அதை தாம் அனுபவிப்பதிலும் பிறரை அனுபவிக்கச் செய்வதிலும் நிபுணரானர். பழநியிலிருந்து திருவண்ணாமலை வந்து, ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளைச் சந்தித்து பின்பு வள்ளிமலையை அடைந்தார். பின்பு மலைமேல் ஓர் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு வள்ளிமலை சுவாமிகளாக அங்கேயே தங்கிவிட்டார். அங்குள்ள மக்களுக்கு திருப்புகழ் பாடல்களைக் கற்பித்து வந்தார். மலைமேல் பொங்கி அம்மனுக்கு கோயில் ஒன்றும் அமைத்து வழிபட்டு வந்தார். 1950ஆம் ஆண்டு ஆஸ்ரமக் குகையில் மகா சமாதி வாய்க்கப் பெற்றார்.

வள்ளிமலை ஸ்வாமிகளை பலர் காணச் சென்றனர். திருப்புகழின் வீச்சு அவரது பேச்சால் பரவத் தொடங்கியது. வரும் அனைவருக்கும் உணவளித்தார். இதன்பொருட்டு 20 க்கும் மேற்ப்பட்ட கறவை பசுக்களை வாங்கினார்.

எப்போதும் கூட்டம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதிகாரிகள் பலர் வரத்தொடங்கினர். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் அதிகமில்லை. சுவாமிகள் ஏன் என்று கேட்டார். அன்று ஜனவரி ஒன்று. ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் அனைவரும் தங்கள் மேலதிகாரியை பார்க்கச் சென்றுவிடுவர் என்று பதில் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புது வருடப் பிறப்பன்று அரசுப் பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரிகளை பழங்கள் மாலைகளுடன் சந்திப்பது வழக்கம்.

“எல்லோருக்கும் மேலதிகாரி முருகன் அல்லவா? வெள்ளைக்கார துரையை எதுக்கு போய் கால்கடுக்க நின்னு சந்திக்கணும்?? அதுக்கு பதில் இந்த துரையை பாருங்க. இவனைக் கேட்டீங்கன்னா எல்லாமே கொடுப்பான். ஏன்னா இவன் ராஜதுரை!” என்று மக்களுக்கு உரைத்து இறைவனை வணங்குவதற்காக வள்ளிமலை சுவாமிகளால் 31-12-1917 மற்றும் 1-1-1918 ஆம் ஆண்டுகளில் திருத்தணித் திருப்புகழ் படித்திருவிழா ஆரம்பிக்கப்பட்டது.

திருப்புகழ் ஓதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் பெருமாளே
பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல்
திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ் அருள்வேளே

என்ற அருணகிரிநாதர் திருத்தணித் திருப்புகழ் பாடலின்படி, இந்த படித் திருவிழாவை வள்ளிமலை சுவாமிகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்பு திருப்புகழ் மணி டி.எம். கிருஷ்ணஸ்வாமி, தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை முதலியோரால் பிரபலப்படுத்தப்பட்டு, தற்சமயம் நூற்றுக் கணக்கான சபைகள் இந்த படித் திருவிழாவில் பங்கு கொண்டு திருப்புகழ் பாடல்களைப் பாடிக்கொண்டு மலையேறி தணிகேசனைத் தரிசித்து வருகின்றனர்.

கருவறையில் தணிகைப் பெருமான் இடக்கரத்தை தொடையில் வைத்தும் வலக்கரத்தில் வேலைத் தாங்கியும் நின்ற வண்ணமாகத் தனித்து காட்சி தருகின்றார். இவர் “ஞான சக்தீதரர்’ ஆவார். இங்கு மயிலுக்குப் பதில் யானை வாகனமாக உள்ளது. இந்த ஐராவத யானை இந்திரன் சீதனமாக வழங்கியது. இது முருகப் பெருமானை நோக்காமல் கிழக்கு (எதிர்) நோக்கிய வண்ணம் உள்ளதால் தேவலோகத்தைப் பார்த்தவாறு இருப்பதாக ஐதீகம். தென் பகுதியில் வள்ளி நாயகியும் வடபகுதியில் தேவசேனா தேவி சந்நிதிகளும் உள்ளன.

இங்கு முருகன் திருமார்பின்மீது அணிவிக்கப்பட்ட சந்தனம் (ஸ்ரீபாதரேணு) பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் 1008 பால் குடங்கள் அபிஷேகம் நடைபெறுகிறது.

பழநி, குன்றத்தூர், சுவாமிமலை, திருக்கழுக்குன்றம், மயிலம், சோளிங்கபுரம், ஞானமலை, குரோம்பேட்டை குமரன் குன்றம் முதலிய திருக்கோயில்களிலும் படி உற்சவம் நடைபெறுகின்றது.

வாரியார் ஸ்வாமிகள் இதை வள்ளியின் பிறப்பிடம் என்று தெளிந்து ஏற்றுக்கொண்டார். அதனால் மலையை வலம் வரும்போது கூடை நிறைய பூக்களை வைத்துக்கொண்டு அர்ச்சித்துக்கொண்டே திருப்புகழ் பாடிக்கொண்டே, கூடவே விரிவுரை சொல்லிக்கொண்டே நடப்பார்.

படிவிழா பங்குனி மாதம் கடைசி நாளன்று நடக்கும். அதாவது ஏப்ரல் 13 அன்று. 12 ஆம் தேதியே சுவாமிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வள்ளிமலைக்கு வந்துவிடுவார்கள். கச்சேரி நடக்கும். மதுரை மாரியப்ப ஸ்வாமிகள், பெங்களூர் ரமணியம்மாள், என பலரின் கச்சேரி நடக்கும். வள்ளிமலையே திமிலோகப்படும்.

வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் வள்ளிமலை கிரிவலம் முடித்து மலை ஏற காத்திருக்கின்றோம்.



கிரிவலம் முடித்து தூரத்தில் பார்த்த போது வள்ளிமலை தரிசனம்.



வள்ளிமலை அடிவாரக்கோயில் தரிசனம்.





இதோ ..படி ஏற துவங்கி விட்டோம்.



அழகிய , ரம்மியமான குளம். இங்கே மீன்களுக்கு பொறி வாங்கிப் போட்டோம்.





அடுத்து மீண்டும் மலை ஏற தொடங்கினோம்.













வள்ளியம்மை சன்னதியில் தரிசனம் பெற்று, மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.




வேல் தரிசனம் பெற்றோம்.









சிறிது தூரத்தில் அருள்மிகு அருணகிரிநாதர் ஆலயம் கண்டோம். அருள் பெற்றோம்.மீண்டும் மலை ஏறினோம். நன்கு கவனித்தீரா? அகத்தியர் தரிசனம் பெற்றுக் கொள்ளுங்கள்.













நாம் ஏற்கனவே படி உற்சவம் பற்றி சொல்லி இருந்தோம் அல்லவா? இங்கே பாருங்கள். உங்களுக்கு நாம் சொல்வது புரியும்.











இப்படி மலை ஏறும் போது ஓரிடத்தில் தங்குவது போன்ற இடம் வரும். இங்கே நன்கு கவனிக்கவும். இந்த இடத்தில் அப்படி என்ன விசேஷம் என்று அடுத்த பதிவில் தருகின்றோம்.

நம் தளம் சார்பில் கிரிவலமும், படி உற்சவமும் செய்ய விழைகின்றோம். வேண்டுதல் வேண்டாமை இலாதவனிடம் இது போன்ற சில விஷயங்களை வேண்டித்தான் பெற வேண்டும்.


- வள்ளிமலை அற்புதங்கள் தொடரும்.

மீள்பதிவாக:-

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

  தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment