அன்பிற்கினிய நெஞ்சங்களே.
அனைவருக்கும் வணக்கம். சென்ற பதிவில் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
...என்ற தலைப்பில் திருப்பரங்குன்றம் சென்று வந்தோம். பதிவின்
இறுதியில் திருப்பரங்குன்றம் மலை யாத்திரை தொடருவோம் என்று சொல்லி
இருந்தோம்..இதோ இன்றைய பதிவில் தொடர்கின்றோம்.
நம்மை பல மலைகளுக்கு அந்த எம்பெருமான் அழைத்து அருள் கொடுத்து வருகின்றார்.
வெள்ளியங்கிரி,சதுரகிரி, பர்வத மலை என பட்டியல் நீண்டாலும்,
இந்த திருப்பரங்குன்றம் மலை யாத்திரை நமக்கு சுவாரசியமாக அமைந்தது. மேலும்
இந்த யாத்திரை நாம் தனியே சென்று வந்த யாத்திரை..சரி மலை மேல் ஏறலாமா?
திருப்பரங்குன்றம் சென்றதும் முதலில் குமரனின் தரிசனம் பெற்றோம்.
தரிசனம் முடித்து வெளியே வந்ததும் மச்சமுனி அருள்பாலிக்கும் திருப்பரங்குன்றம் மலை எப்படி
செல்வது என்று கேட்டோம். அங்கிருந்த பூக்கடைக்காரர்களிடம் விசாரிக்க..இங்கே அறுபடை வீடுகளில் ஒன்று இருக்க, ஏன் மலை மேல் உள்ள கோயில்..இது இப்போது தான் பிரபலமாகி வருவதாகவும் சொன்னார்கள். நமக்கு இன்னும் ஆர்வம் மேலிட்டது. அப்படியே மலையை சுற்றி சென்றால் அங்கு ஒரு வழிப்பாதை இருக்கும். அப்படியே மேலே ஏறினால், நீங்கள் சொன்ன தரிசனம் கிடைக்கும் என்றார்கள்.
இதோ..அப்படியே அந்த பாதை வழியே சென்றோம். அட..போட வைத்தார்கள் நம் முருகப்
பெருமான். அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் கண்டு தரிசித்தோம்.
அங்கு தரிசனம் முடித்து வெளியே வந்தால் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் வழி என்று அறிவிப்பு இருந்தது.அப்படியே மலை ஏற ஆரம்பித்தோம்.
சற்று தூரம் ஏறும் வரை பாதை முழுதும் சரி இல்லாது இருந்தது. குப்பைகளாக இருந்தது. பின்னர் கொஞ்ச தூரம் சென்ற பின், பாதை நன்கு இருந்தது. கற்கள் கொண்டு பாதை அமைத்து இருந்தார்கள்.
மலை ஏற, ஏற பசுமை சாரலில் ஏகாந்தமாக இருந்தது. நாம் மட்டும் தனியே சென்று கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் இஸ்லாமியர்கள் மலை ஏறி வந்தார்கள். நமக்கு என்ன இது? காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் இவர்களும் வருகின்றார்கள் என்று அவர்களிடம் விசாரித்தோம். மேலே ஒரு தர்கா இருப்பதாக சொன்னார்கள். அட..சூப்பர் என்று மனதிற்குள் சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தோம்.
மலையின் பாதி தூரத்தில், மலைப்பாதையில் இருந்து மற்றொரு பாதை பிரிந்து சென்றது. என்ன என்று நம்மால் விசாரிக்க இயலவில்லை. நாம் நமக்கான பாதையில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தோம். கோயில் செல்வதற்கான மலை தூரம் எவ்வளவு போன்ற பல கேள்விகள் நம்மை துளைத்தன..அத்தனையும் அவனுக்கே வெளிச்சம் என்று கூறி நடையை தொடர்ந்தோம்.
தனியே அங்கு ஒரு பாதை பிரிந்து சென்றது ..இங்கே ஒரு கோயிலுக்கு செல்வதாக தெரிந்தது.
கொஞ்ச நேரத்தில் மலை ஒன்று தெரிந்தது. மலை மீது என்ற வேண்டும் என்று நமக்குத் தோன்றியது.
நடந்து செல்ல வசதியாக பாறையில் செதுக்கி வைத்து இருந்தார்கள். இதனால் இங்கு எளிதாக நடக்க முடிந்தது. நாம் காலை வேலையில் மலை ஏற்றம் செய்து கொண்டிருந்தோம். வெயில் உச்சிக்கு வருவதற்குள் மலை ஏறி தரிசனம் செய்து திரும்பிவிட நினைத்து நடந்தோம்.
அந்த மலையை அடைந்ததும் அப்படியே இயற்கை அழகில் திருப்பரங்குன்றத்தை பார்த்து ரசித்தோம். அடுத்து அப்படியே இன்னும் மேலே செல்ல வேண்டும். சுமார் 20 நிமிட நடை பயணத்தில் இந்த இடத்தை அடைந்தோம். இன்னும் மலையேற்றம் எப்படி இருந்தது. என்பது போன்ற கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment