"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 27, 2019

அந்த நாள் இந்த வருடம் (27.08.2019) ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

நம் தளம் தமிழ் புத்தாண்டு ( ஏப்ரல் 14) 2017 அன்று தொடங்கப்பட்டது. நம் தளம் ஆரம்பித்த பின்னர் நாம் ஓதிமலை தரிசனம் பெற்று வந்தோம்.இப்போது நினைத்தாலும் இன்னும் ஓதியப்பர் நம்மை ஆட்கொள்கின்றார் என்பதே உண்மை. இது அந்த நாள் இந்த வருடம் என்ற சித்தன் அருளின் பதிவே ஆகும்.

அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2018ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.


 நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறோம்.

அந்த வகையில் பார்க்கும் போது இன்று ஓதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்.

ஓதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 
28/08/2019 -ஆவணி மாதம் - புதன் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்


ஓதியப்பரின் பிறந்த நாளில் ஓதியப்பர் தரிசனம் பெறலாமா? இதோ ஓதியப்பர் தரிசனம் பெறுங்கள்.பெறுதற்குரிய பேறு இது தான்.




கால்களால் பயன்என்...
படிகள்பல ஏறி
ஓதிமலை வரதனை,கோலாகலனை,
வேலாயுதனை தரிசிக்காத
கால்களால் பயன்என்...


ஆக்கையால் என்பயன்...
ஓதிமாமலை ஏறி,
அவன்கோவில் வலம்வந்து,
கந்தவேளை போற்றி நில்லா
இவ் ஆக்கையால் பயன் என்...


உற்றார் ஆர்உளரோ உயிர் கொண்டுபோம் பொழுது,
ஓதிமலை உறையும் கந்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆர்உளரோ....



கைகாள் கூப்பித்தொழீர்...
கார்முகில் வாகனனை ஓதியஙகரி வாசனை
கைகாள் கூப்பித்தொழீர்...


நெஞ்சே நீ நினையாய்...
போகரை ஆட்கொண்டு
வழிகாட்டிய ஓதிவடிவேலனை
நெஞ்சே நீ நினையாய்...



வாயே வாழ்த்து கண்டாய்...
மறை பரமர்க்கு ஓதிய பெருமையனை
வாயே வாழ்த்து கண்டாய்...

மூக்கே நீ முகராய்...
ஓதி மா மலை வாசத்தை
மூக்கே நீ முகராய்...



செவிகாள் கேண்மின்கொலோ...
எம் ஐயன் ஓதியப்பன் வள்ளியை
ஆட்கொண்ட வினோதத்தை
செவிகாள் கேண்மின்கொலோ...

கண்காள் காண்மின்கொலோ..
தேவர்களை சிறைமீட்ட ஜோதியனை
கண்காள் காண்மின்கொலோ..

தலையே நீ வணங்காய்
ஓதிமலையில் மயிலேறி ஆடும்
தலைவனை தலையே நீ வணங்காய்...




ஓதியப்பன் கோளறுபதிகம்

ஐமுக எண்கர ஓதிமலைகுமரன் வெற்றிவேல்கரத்தன்,
மிகநல்ல மயில்மேல் வலம்வரும் பாலன்,
அடியார்க்கு நலமேஅருளும் கந்தன்,
என்உளமே புகுந்த அதனால்,
கோள்கள் அனைத்தும் நல்ல நல்ல,
அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே...


பாடவேண்டும் அடியேன் நினையே பாடி பாடி
நைந்து நைந்து உருகி ஆடவேண்டும்....
இப்புழுக்கூடு நீக்கி உந்தன் பாதம்
தந்தருள் ஓதிமாமலை ஞானபண்டிதா...




கருணை முகத்தானை, ஆருளும் கறத்தானை,
அதிகார தோரணையானை,மயிலேரும் வடிவானை,
வேல்தாங்கும் கறத்தானை,
ஐமுக எண்கற ஓதிமலை குமரனை
போற்றாத நாள்எல்லாம் பிறவா நாளே...



ஓதிமலை மீதினிலே போறவளே
பொன்னுரங்கம்..ரங்கம்..
நில்லு கொஞ்சம் நானும் வாஆரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே..
ஐயர் வர நேரமாகும் முகூர்த்தம் அதிகம்
இன்று கண்மணி...
முத்தையன் முக அழகை காண எனக்கும்தான்
ஆசை கண்ணே...
அழகனை அழகு செய்து பார்க்காமல்,
என்னை அழகுசெய்து மோசம் போனேனே பொன்னுரங்கம்
பிரமனை சிறைவைத்த பெருமையனை பாடாமல்,
சினிமா பாடலை பாடி காலம்கழித்தேனடி கண்மணீ..
முப்புரம் எறித்த தீரனின் குமரனை பார்தாலன்றோ
நம்கலி தீரும் ஞானப்பெண்ணே...
பால் மணக்குது..பழம் மணக்குது ஐயன் மலையிலே,
அதை அறியாமல் டீ கடையிலே நியாயம் பேசி
காலம்கழித்தேனடி ஞானப்பெண்ணே..
நந்தவனத்து ஆண்டியைப்போல்
மோசம் போனேனே-ஓதியப்பா..
கடலினில் எழுந்த நஞ்சை கணத்தினில் அடக்கிய
அமரனின் அன்பு குமரனை சீக்கிரம் வா
பார்போம் கண்ணே...
ஐயர் வந்துவட்டாரடி ஞானப்பண்ணே,
அவன் அபிஷேகங்கள் பார்ப்போம் வா ஞானப்பெண்ணே...



சீரும்.. திருவும்.. பொலியும்..
ஓதிமலை நாயகன் சேவடிக்கீழ்,
ஆரும்பெராஆஆத அறிவு பெற்றேன்..,
பெற்றது ஆர் பெருவார் உலகில்`?
 ஓதிமலை மேல் நின்று அருளும்
எங்கள் நாயகனே போற்றி..
ஐமுக எண்கர செவ்வேளே போற்றி..
போகருக்கு அருளிய கோவே போற்றி..
மனிதர்களை சித்தர்களாக்கும் பெருமையனே போற்றி..
சோதியே போற்றி..சுடரே போற்றி..
எம் ஈசனே போற்றி..
எம் ஆருயிரே போற்றி போற்றி.




தெளிவு ஓதியப்ப சற்குரு திருமேனி காண்டல்...,
தெளிவு ஓதியப்ப சற்குருவின் திருநாமம் செப்பல்..,
தெளிவு ஓதிமலை சென்று ஐயனை தொழுதல்..,
தெளிவு அவன் கோவில் வலம் வருதல்..,
தெளிவு ஓதியப்ப சற்குருவை சிந்தித்தல்தானே...


வேண்டதக்கது அறிவோய் நீ ஓதிமலையானே...
வேண்டாமலே அனைத்தும் தருவோய் நீ அப்பா...
வேண்டாமலே என்னை பணிகொண்டாய் அய்யனே நீ...
வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில்.,
ஓதியப்பா அதுவும் உந்தன் விருப்பன்றே....

ஐமுக எண்கர ஓதிமலை கந்தவேளே..
அடியேன் வயதுபல சென்றது,
பற்கள்பல உதிர்ந்தன,முதுகும் வளைந்தது.,
திரிபுரம் பொடிசெய்த சங்கரன் பாலா.,
பரமனுக்கு பிரணவப்பொருள் வளம்பிய
ஓதிமலை அரசே..
இடிமுழங்கிய வேற்படை விடுவோனே.,
கந்த பராக்ரமா..
அடியேன் முன் எமபடர்கள் வாராமல் கா...
ஓதியப்பா உன்னை அன்றி
கதியேதும் இல்லை குமரேசா...





ஓதிமலையானை காணகண்களை தந்து,
வணங்கத் தலை வைத்து,
வார் கழல் வாய் வாழ்த்த வைத்து..
மலை ஏற கால்களையும் கொடுத்து..
இணங்க அடியார் கூட்டமும் தந்து..
நல்ல பூசை செய்ய மனம்படைத்த,
ஐயனையும் தந்த எம்ஈசன்,
ஓதிமலை குமரேசனை
என்சொல்லி ஏத்துகேனே...

ஓதியப்பா, உன் மரகத வடிவம்
செங்கதிர் வெய்யிலால் வாகாய் வாடாதோ..
மதிமுகம் முழுதும் தண்துளி தரவே
காண்போர் கறையாரோ...
ஓதிமாமலை உறையும் தண்தமிழ் முருகா
தாலோ தலேலோ....தாலோ தலேலோ...

ஓதியப்பா.. ஓதியப்பா..
சூரன் மார் பிளக்க
வேலை விடவல பெரிய நீ..
சிறிய என்னை ஆள் விரும்பி
என் மனம் புகுந்த எளிமையை
ஓதியப்பா....என்றும் நான் மறக்கேன்...

வேலை பிடித்தது என்ன என்ன வெண்நீறு அணிந்தது என்ன என்ன ஓதியப்பா...
போகருக்கு அறுளியது என்ன என்ன..ஓதிமலையானே,
அயனை சிறைஇட்டது என்ன என்ன..
அரனுக்கு உறைத்ததும் என்ன என்ன அப்பனே...
அடியார்களுக்கும் அருள்வதும் என்ன என்ன என்ன...
என்னே உனது அருள் ஓதிமலையானே....




மந்திரம் ஆவது உன் நீறு..ஓதியப்பா..
தந்திரம் ஆவதும் உன் நீறு.ஓதியப்பா...
போகர் பெருமானுக்கு கிடைத்ததும் உன் நீறு..
அடியேனுக்கும் தரவேணும் உன் நீறு ஓதியப்பா..



இந்த நன்னாளில் ஓதிமலை பற்றிய நாடி அனுபவத்தை இங்கே பகிர்கின்றோம்.


நாடியை மூடி வைத்துவிட்டு, வந்திருந்த இருவரையும் பார்த்தேன்.  அகத்தியர் சொன்னது அத்தனையும் எனக்குள் ஒரு அதிர்ச்சியை தந்தது.  அவனை பற்றி சொன்ன வரை அவன் தவறு எதுவும் செய்யவில்லை என்று என்வரையில் புரிந்தாலும், வசமாக பிரச்சினையில் மட்டிக்கொண்டுவிட்டான் என்று உணர முடிந்தது.  அகத்தியர் ஒருவரால் மட்டும் தான் இனி அவனை காப்பாற்ற முடியும். 
"சரி! அவன் என்ன சொல்லி அனுப்பினான், என்ன கேட்டு சொல்லவேண்டும்?" என்றேன்.
வந்தவர்களில் ஒருவர், சுருக்கமாக நடந்ததை சொல்லிவிட்டு,
"சாமி! அன்னதானம் நின்று போனதில் அவனுக்கு மிக வருத்தம்.  அப்படிப்பட்ட காட்டில் வந்து தரிசனம் செய்கிற பக்தர்கள் யாரும் பசியுடன் திரும்பி போகக்கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் மட்டும் தான் அன்ன தானம் செய்து வந்திருக்கிறார்கள்.  அது மறுபடியும் தொடங்கி நன்றாக நடக்க வேண்டும்.  அவன் அங்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் அன்னதானம் மட்டும் மீண்டும் தொடங்கி நடக்கவேண்டும்.  இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தெளிவான விடை வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வர சொன்னார்".
மறுபடியும் நாடியை படிக்க தொடங்கினேன்.
"சதுரகிரியை பற்றி உங்கள் எல்லோருக்கும் என்ன தெரியும்.  அங்கு உறையும் பெருமான் எப்படிபட்டவர் என்று தெரியுமா?  அது எங்களின் யாக சாலை.  நாங்களே அங்கு கால் அடி எடுத்து வைக்க அவரிடம் முன் அனுமதி வாங்கித்தான் செல்வோம்.  அங்கு உள்ளே கால் வைக்கும் முன்னர் காப்பு கட்டிக்கொண்டுதான் செல்வோம்.  எங்களுக்கே இப்படி என்றால், உங்களை போன்ற மனிதர்களுக்கு அது மிக மிக முக்கியம்.  இத்தனை வருடங்களாக ஒருவர் கூட, எந்த ஒரு நேரத்திலும் காப்பு கட்டிக்கொள்ளவில்லை.  போகட்டும் என்று அந்த பெருமானார் பொறுத்துக் கொண்டார். அன்ன தானம் செய்தவர்கள், அதற்கு உதவி செய்ய நின்றவர்கள்  ஒருவர் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.  புரிந்து கொண்ட ஒரு சிலரும் இதை நம்பவில்லை.  மிக பெரிய அளவிலும் நிறைய தவறுகள் நடந்துள்ளது. "
"அவன் நேர்மையாகத்தான் இருந்தான்.  இருந்தாலும் அவன் சேர்ந்து இருந்த மனிதர்கள் செய்த தவறினால் இன்று பிரச்சனைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறான்.  இதை தான் சகவாச தோஷம் என்போம்.  தவறு செய்யவில்லை என்றாலும், தவறு செய்தவர்களுடன் இருந்த தோஷத்தினால் அவனுக்கும் பாதிப்புகள் உண்டு.  இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு அவன் நம் தேசத்துக்குள் எங்கு கால் வைத்தாலும் கைது செய்யப்படுவான்.  இங்கு எங்கும் வராமல் விலகி இருக்க சொல். 
அன்னதானம் கலியுகத்தில் மிக உன்னதமான பணி.  அதையும் எம்பெருமானார் சார்பாக செய்கிறோம் என்றே நினைத்து அப்படியே கூறி வந்ததினாலும், ஒரு முறை கூட நாங்கள்/நான் செய்கிறேன் என்று நினைக்காததினாலும், யாம் அவனுக்கு உதவுவோம். இனி நாம் சொல்வதை செய்யட்டும்.  உண்மையாக நல்ல மனதுடன் செய்தால் கண்டிப்பாக எல்லா பிரச்சனையும் விலகிப்போகும்.
முதலில் மலை மேல் இருக்கும் ஒரு முருகா கோவிலில், செவ்வாய் கிழமை இரவு "சத்ரு சம்ஹார யாகம்" ஒன்றை செய்ய வேண்டும். 
தினமும் ஐம்பத்து நான்கு முறை முருகனின் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்.
தினமும் வெளியில் செல்லும் முன் முப்பத்தி ஆறுமுறை "பிரத்தியங்கிரா தேவியின்" மூல மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.
ஜபத்தை தொடர்ந்தது தொண்ணூறு நாட்களுக்கு ஜெபித்துவர, எதிரிகள் காணாமல் போய் விடுவர். மூன்று அமாவாசைக்கு பின் அன்னதானம் மறுபடியும் தொடங்கி நடந்து வரும்.
அதற்கு பின்னரேனும் தவறுகளை விலக்கி கொள்ள வேண்டும்.
எதற்கும் கவலை வேண்டாம்.  எல்லாவற்றையும் இந்த அகத்தியன் பார்த்துக்கொள்வான்":
"அவனை தொண்ணூறு நாட்களுக்கு எங்கும் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே இருக்கச்சொல். காவல்துறையின் விசாரிப்பு வரும்.  அதற்கு போய் தான் ஆகவேண்டிவரும்.  உண்மையை சொல்ல சொல்.  இந்த வழக்கு ஒன்றும் இல்லை என்று ஆகிவிடும்.  அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.  "சத்ரு சம்ஹார யாகம்" செய்ய அவன் சென்றுதான் ஆகவேண்டும்.  வேண்டிய பாதுகாப்பை யாம் தருவோம். கவலை வேண்டாம் என்று சொல்."
"ஆனால், இன்னும் சில நாட்களுக்கு அவன் மனது வருத்தப்பட்டு தான் ஆகவேண்டும்.  அவன் நம்பியவர்களே அவனை கை விடுவார்கள்.  தகாத வார்த்தைகளை பேசுவார்கள்.  எதற்கும் பதில் சொல்ல கூடாது.  பொறுமை அவசியம்.  அப்படி அமைதியாக இருந்தால், அனைத்தையும் யாம் பார்த்துக்கொள்வோம்.  விதைத்ததை என்றேனும் அறுவடை செய்துதான் ஆக வேண்டும்.  பெரிய இழப்புகள் இன்றி அவன் காப்பாற்ற படுவான்."
இந்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.
கேட்டதும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான்.  ஆம்.  பல காலங்களாக அவன் நம்பி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான விடையை அகத்தியர் நாடி வழியாக சொல்லி விட்டார். இனிமேல் தான் கண்ணாடி மேல் நடப்பதுபோல் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
நாடி வாசிக்க சென்ற நண்பரிடமே அவர் ஊரில் ஏதேனும் மலை மேல் முருகர் கோவில் உள்ளதா, இருந்தால் "சத்ரு சம்ஹார யாகம்" நடத்த எவ்வளவு ஆகும் என்று விசாரிக்க சொன்னான்.
நண்பரும், ஒரு கோவிலை கண்டுபிடித்து, விசாரித்து, இருபது முதல் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்று சொன்னதாக தெரிவிக்க, அவன் மனம் தளர்ந்து போனான்.  அத்தனை பணம் அவனிடம் இல்லை.  அன்னதான குழுவில் கேட்கலாம் என்றால், அத்தனை பெறும் இவன் மீது கடுப்பில் இருந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், தவித்திருக்கும் போது, மலைக்கு வந்து பரிச்சயமான ஒரு பக்தர் ஒருநாள் அவனை தொடர்புகொண்டு,
"என்ன சாமி! இப்படி ஆயிட்டது! இனி என்ன செய்ய போறீங்க" என்று  விசாரித்தார்.
நடந்த உண்மைகளை அப்படியே சொல்லி, அகத்தியர் நாடியில் வந்து உரைத்ததையும் சொல்லி, "அவர் யாகம் செய்ய சொல்லி இருக்கிறார், என்னிடம் இப்போது அவ்வளவு வசதி கிடையாது. அது செய்தால் இந்த பிரச்சினைகள் கண்டிப்பாக விலகும் என்று சொன்னார்.  என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறினான்.
"இவ்வளவு தானா!  நான் கூட்டி கொண்டு போகிறேன்.  ஏற்பாடு பண்ணுகிறேன்.  எனக்கு தெரிந்த ஒரு மலை கோவில் இருக்கிறது.  அந்த பூசாரியிடம் கேட்டு சொல்கிறேன்" என்றார்.
இரண்டு நாட்கள் சென்று, அவரிடமிருந்து தகவல் வந்தது.
"கோவில் பூசாரியிடம் கேட்டு விட்டேன்.  அனைத்தையும் நான் ஏற்பாடு பண்ணி தருகிறேன். அனைத்து செலவும் என்னுடையது.  நீங்கள் வந்து யாகத்தில் கலந்து கொண்டால் மட்டும் போதும்" என்று பக்தர் சொல்ல, உண்மையில் நெகிழ்ந்து போனான்.
இப்படியும் வசதிகளை அகத்தியர் மறைமுகமாக செய்து கொடுப்பாரா?  அவருக்கு மனதார நன்றியை சொல்லிவிட்டு, கிளம்பி செல்வதற்கான ஏற்பாட்டை செய்ய தொடங்கினான்.
அவனறியாமலே அவனை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகத் தொடங்கி இருந்தது.  திங்கள் கிழமை கிளம்பி செவ்வாய் அன்று காலையில் பக்தரை சந்தித்து, அவருடன் சேர்ந்து ஒரு பரந்த வெளியில் இறங்கி நின்று பார்க்க, 
"ஹோ! என்று பெரு மூச்சு விடும் அளவுக்கு, ஒரு மிக பெரிய குன்று தனியாக நின்று கொண்டிருந்தது.  அதன் உச்சியில் ஒரு கோவில்."
இவன் எண்ணத்தை புரிந்து கொண்ட பக்தர்,  "வாருங்கள்! இதுதான் ஒதிமலை, மேலிருந்து அருள் புரிபவன், எம்பெருமான் "ஒதிமலை சுப்பிரமணியர்"" என்று அறிமுகம் செய்து வைத்தார்.

மெய் சிலிர்க்கிறது அல்லவா? ஆம். சித்தர்களின் அருள் கிடைத்தால் மெய் சிலிர்க்கும்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-



No comments:

Post a Comment