"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 24, 2019

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

அனைவருக்கும் வணக்கம்.

தினமும் முருகன் புகழ் பாடுவோம். அந்த வரிசையில் வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் வள்ளிமலை கிரிவலம் செல்ல இருக்கின்றோம்.அனைவரும் தயாரா?

அன்னை வள்ளி அவதரித்த இடம் வள்ளிமலை. மலையடிவாரத்திலும் மலை மீதும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது திருப்புகழ் பாடப்பெற்ற தலம். முருகன் பாதம் தோய்ந்த இடம். அந்த ஒரு சிறப்பே போதுமே இந்த மலையின் புனிதத்துவத்தை சொல்ல…!





வள்ளிமலை ஒரு அற்புதமான பதி. பல மகத்துவங்களை உள்ளடக்கியது. மற்ற ஆலய தரிசனங்களை போல ஒரே ஒரு ஆலய தரிசனப் பதிவில் வள்ளிமலையை அடக்கிவிடமுடியாது. எனவே தான் வள்ளிமலை அற்புதங்கள் என்ற தொடரையே துவக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டொரு மாதத்தில் வள்ளிமலையில் நமது தளம் சார்பாக நம் வாசகர்கள் பங்கேற்கும் கிரிவலமும், படி உற்சவமும் நடைபெறவிருக்கிறது. எனவே வாசகர்கள் இந்த பதிவை கவனத்துடன் படிக்கவும்.

வள்ளிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பிலும் சித்திரை பிறப்பிலும் கிரிவலமும் படி உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இதை பல்வேறு ஆன்மீக குழுக்கள் நடத்துவார்கள். மலையடிவாரத்தில் பல சத்திரங்கள் உள்ளன. அவற்றில் அனைவரும் தங்கிக்கொள்வார்கள்.

வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.



பேருந்தில் இருந்து இறங்கியதும்  ஈர்த்த நுழைவாயில். இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்போது தான் வள்ளிமலை அடிவாரக்கோயில் தரிசனம் கிடைக்கும்.



                                                     நம்மை  ஈர்க்கும் வள்ளிமலை



இதோ நெருங்கி விட்டோம்.

                            வள்ளிமலை அடிவாரக்கோயில் கோபுரம் தெரிகின்றதா?



                                  நம் கண்களுக்கு கிடைத்த செய்தி.



                                         மூத்தோனை வணங்கிவிட்டு கிரிவலம் ஆரம்பம்.







முதல் முறையாக வள்ளிமலை கிரிவலம். யாரும் நம்முடன் இணையவில்லை.இது போன்ற சூழலில் நமக்கு தனிமை தான் விருப்பம் பெறுகின்றது.சுமார் 7 மணி அளவில் கிரிவலம் ஆரம்பித்தோம். எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? பாதை  எப்படி இருக்கும் ? போன்ற எந்த கேள்விகளும் இல்லை.








வள்ளிமலையில் இயற்கை எழில் சூழ்ந்த பாதையில் கிரிவலம் செல்வது ஒரு உன்னதமான அனுபவம். திருவண்ணாமலை போன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் கிரிவலம் செல்பவர்கள் ஒரு முறை வள்ளிமலையில் கிரிவலம் செல்லவேண்டும். அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணரமுடியும்.






இருபக்கமும் குன்றுகளும், பச்சைப் பசேல் வயல் வெளிகளும், பார்ப்பதற்கே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கும்.














அகத்தியர் கீதம் கேட்டுக்கொண்டே நடந்தோம், சுமார் 30 நிமிட நேரம் சென்றிருக்கும். மலை,பசுமை,காலைக் கதிரவன் என இங்கு கிரிவலம் செல்வது இன்னும் நம்மை ஆழப்படுத்தியது.














வழியில் வள்ளியின் பூர்வாசிரம தகப்பனாரான மகாவிஷ்ணுவுக்கு ‘தென் வெங்கடாச்சலபதி’ கோவில் என்ற ஒன்று உண்டு. சிவனை நோக்கி திருமால் தவம் செய்தபோது மான்வடிவில் திருமகள் வர அவள்மீது மோகப்பார்வை வீச, அது கருவாகி அந்தமான் வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் மகவை ஈன்றது. இந்தச் சம்பவம் கந்தபுராணத்தில் வருகிறது. அது நிகழ்ந்த இடம் இது தான் என்று நமக்கு செய்தி கிடைத்தது.




பெருமாள் சிவமுனிநிவராக தவம் செய்த அந்த இடத்தில் முருகப் பெருமானின் மாமனுக்கு தற்போது ஒரு அழகிய ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

நாம் முதன்முதலாக சென்றதால் கோயிலுக்கு உள்ளே செல்லவில்லை. மேலும் கிரிவலம் எப்போ முடியும் என்று  எண்ண ஆரம்பித்து விட்டோம். வெயில் சற்று ஆரம்பித்து விட்டது.அடுத்த தரிசனத்தில் முறையாக வழிபாடு செய்வதாக வேண்டிக்கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.






அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்த உடன்,  வள்ளியம்மை தவப்பீடம் கண்டோம். உள்ளே சென்று  விரும்பியது.உடனே உள்ளே சென்று வழிபாடு .செய்தோம்.


வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் எப்படி  இருந்தது? கிரிவலம் எப்போது முழுமை பெற்றது போன்ற கேள்விகளுக்கு சில பதிவுகளில் விடை தருகின்றோம்.அதுவரை பொறுமை காக்கவும்.

- வள்ளிமலை அற்புதங்கள் தொடரும்.

மீள்பதிவாக:-

  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment