"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, August 25, 2019

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம்

அன்பர்களே...

திருப்பரங்குன்றம் மலையேற்றம் பற்றி நாம் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக முந்தைய பதிவுகளில் திருப்பரங்குன்றம் பற்றியும், அடுத்து மலையேற்றத்தையும் ஆரம்பித்து விட்டோம். இந்த யாத்திரையில் தற்போது நாம் மலை உச்சியில் உள்ள மிகப்பெரிய பாறை போன்ற பகுதியில் உள்ளோம். இனி இங்கிருந்து யாத்திரை ஆரம்பம்.







இந்த மலைப்பாதையை கடந்து சென்ற போது, ஒரு மரம் பக்கத்தில் ஒரு பாதை பிரிந்து சென்றது.
அங்கே ஒரு வீடு போன்ற இடமும் இருந்தது.இப்படியே இங்கிருந்து சென்றால் தர்கா வருமோ என்று நமக்கு ஐயப்பாடு வந்தது.





அட..நாம் நினைத்தது சரி தான். இதோ அறிவிப்பு பலகை.



நாம் மீண்டும் நம் பயணத்தை தொடர, அங்கே...ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் வழி என்று அறிவிப்பு பதாகை கண்டோம். கண்டதும் மகிழ்ந்தோம்.அட..கோயிலின் பக்கத்தில் நெருங்கிவிட்டோம் என்று தோன்றியது .மச்சமுனி தீர்த்தம் செல்லும் வழியும் அங்கே இருந்தது. கொஞ்சம் தெம்போடு நடக்க ஆரம்பித்தோம்.



இங்கிருந்து நாம் எந்த பாதையில் செல்வது என்று குழப்பம் வந்தது. மற்ற மலைகள் என்றால் யாராவது சென்று கொண்டிருப்பார்கள், அவர்களிடம் கேட்கலாம். இங்கே யாரிடம் கேட்பது. பாதை செல்லும் இடத்தை பார்த்து மீண்டும் நடந்தோம்.




இங்கிருந்து முழுதும் படிகள் கொண்ட பாதை இருந்தது. அப்படி என்றால் நாம் வேறொரு மலைப்பாதை வழியே வந்திருக்கின்றோம். இந்த பாதையில் கீழே இறங்கலாம் என்று  முடிவு செய்து மீண்டும் நடந்தோம்.





மேலே அங்கிருந்து, கீழே கண்ட காட்சி.. மலை உச்சி, மிதமான தென்றல் காற்று, ஏகாந்த தனிமை, பசுமை போர்த்திய இடம் என ஒவ்வொன்றும் நம்மை அங்கே ஈர்த்தன.


இதோ..கோயிலை அடைந்து விட்டோமோ? என்று நடந்தோம். அனால் இது இளைப்பாறும் இடம் ஆகும். அங்கே சற்று இளைப்பாறி விட்டு. மீண்டும் தொடர்ந்தோம்.


அப்படியேய் அங்கிருந்து இறங்கியவுடன் ஒரு கோயில் தெரிந்தது. அங்கே சென்று மனதார ஒருமித்து வழிபாடு செய்தோம். பின்னர அங்கே மச்சமுனி சித்தர் பற்றி  விசாரித்தோம். அவர்கள் நம்மை கோயிலின் பின்புறம் அழைத்து சென்றார்கள்.




மச்ச முனி சித்தர் மீன் ரூபத்தில் அருள் புரியும் இடம் இதுவே ஆகும்.மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்சமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். இவர் மகிமை பொருந்திய தலங்களாக நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களும் குறிக்கப்படுகின்றன. மேலும், நேபாளத்தின் காட்மண்டுவில் 'பாக்மதி' என்ற இடத்தில் அமைந்துள்ள மச்சேந்திரநாதர் கோயிலில் இவர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்ற கருத்தும் உண்டு.













அங்கிருந்த முருகப்பெருமானையும் தரிசித்தோம்.



இங்கு செல்லும் போது அவசியம் பொரி வாங்கி செல்லுங்கள். மேலும் இங்கே பெரிய அளவில் கடைகள் இருக்காது எனவே தேவையான பொருட்களை அடிவாரத்தில் வாங்கி கொண்டு இங்கு வருவது உசிதம். நல்ல ஒரு தரிசனம் பெற்றோம். மச்ச முனி சித்தரின் அருளில் திளைத்தோம். பின்னர் நன்றி கூறிவிட்டு அங்கிருந்தும் நகர்ந்தோம்.

மீள்பதிவாக:-

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment