"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 14, 2019

குரு உரு சிந்தித்தல் தானே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆகஸ்ட் 14. வேதாத்திரி மகரிஷி பிறந்த நாள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் இது தான் நம் பண்பாடு, வாழ்வியல். மாதா நம் பிதாவை காட்டுகின்றார். நம் தந்தை குருவைக் காட்டுகின்றார். குரு தெய்வத்தை காட்டுகின்றார்.இந்த நெறி நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. ஆனால்  இன்று குரு என்றால் யார்? என்று கேட்கும் அளவிற்கு பல குழப்பங்கள் இருந்து வருகின்றது. லட்சக்கணக்கில் செலவு செய்து பல குருமார்கள் இருக்கின்றார்கள். குருவை சரியாக பிடித்திட வேண்டும். நாம் தயாராக இருந்தால் நமக்கு சரியான குரு கிடைப்பார். அதென்ன சரியான? என்று ஒரு வார்த்தை. ஆம். இன்று பல போலிகள் நிறைந்துளார்கள். நமக்கு சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியரும், பெருமாளின் அம்சமாக திகழும் பிருகு மகரிஷியும் குருவாய் வழிகாட்டி வருகின்றார்கள். இவர்களை அடுத்து நமக்கு பள்ளிப்பருவத்திலே குருவாய் கிடைத்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். சுவாமிஜி அவர்கள் வெறும் குரு மட்டுமல்ல. அவர் இயற்பியல் விஞ்ஞானி,வேதியல் விஞ்ஞானி ,வானியல் வல்லுனர், தத்துவஞானி, சமுகவாதி, மெய்ஞ்ஞானி, சீர்திருத்தவாதி,உயிரியல் விஞ்ஞானி , சித்தர், கர்மயோகி, பிரம்ம ஞானி, இறை தூதர்,இயற்கை ஆய்வாளர் என சொல்லிக் கொண்டே போகலாம்.

அணு தோன்றிய விதத்தையும் அதன் செயல்பாடுகளை பற்றி பேசும் போது இயற்பியல் விஞ்ஞானி .
மூலகங்கள் அவற்றின் அமைப்புகள் பற்றி பேசும்போது வேதியல் விஞ்ஞானி . அண்டகோடிகளின்  இயக்கங்கள் பற்றி பேசும் போது வானியல் வல்லுனர் .பிறப்பதற்கும் இறப்பிற்கும்  இடையில்
உள்ளவற்றை உணர்ந்து பேசுவதால் தத்துவஞானி . இயற்கை நீதியையும் வாழும் நெறியையும் பற்றி பேசுவதால் சமுகவாதி.எல்லாவல்ல இறைவனை முற்றிலும் உணர்ந்ததால்  மெய்ஞ்ஞானி .

சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாக சிந்தித்து தெளிவாய்  என கூறுவதால் சீர்திருத்தவாதி சுத்தவெளியிலிருந்து அணுக்கள் தோன்றி பிரபஞ்சமாகவும் ஒரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள பரிணாம  வளர்ச்சியை பேசுவதால் உயிரியல் விஞ்ஞானி . உடற்பயிற்சியையும் காயகல்பமும்
தந்ததால் சித்தர்.கர்மயோகம் தந்ததால் கர்மயோகி.பிரம்மத்தை போதித்த பிரம்ம ஞானி ,

இறைத்தத்துவம்  தந்ததால் இறை தூதர்.இயற்கையை உணர வைத்து இயற்கை காத்த இயற்கை ஆய்வாளர்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்  என்னும் தாரக மந்திரத்தை உலகமக்கள் அனைவரும்
உச்சரிக்க செய்த உத்தமர் .வையகத்தோர் அனைவரும் உய்வதற்குரிய வழிமுறைகளை வகுத்து சொன்ன தத்துவவித்தகர்.உலக அமைதிக்கு அடித்தளம் அமைத்த உலக நல தொண்டர்,

இன்னும் பல்வேறு  பரிமாணங்களை பெற்றஉலக நல தொண்டர்  வேதாத்திரி மகரிஷி , அவர்கள்  வகுத்த பாதையில் நாம் தடம் மாறாது பயணிப்போம் மற்றவர்களையும் பயணிக்க வைப்போம் என்று இந்த நன்னாளில் உறுதி மொழி அனைவரும் எடுப்போம். இந்த உலகிற்கு நன்மை செய்ய விருப்பமா? அன்னதானம் போன்ற சேவைகளில் ஈடுபட வசதி இல்லையா? கவலை வேண்டாம். காலையில் எழுந்ததும்,இரவில் உறங்கும் முன்பும்  உங்களால் எவ்வளவு முடியமா அத்தனை முறை

                        "வாழ்க வையகம்...வாழ்க வளமுடன் "

என மனதார வாழ்த்துங்கள். சுமார் 6 மாதங்களில் நீங்கள் நல்ல மாற்றம் உடல்,மனதளவில் பெறுவீர்கள் என்பது உறுதி.

சரி..நம் முப்பாட்டன் திருமூலரிடம் சென்று குரு என்றால் யார்? எப்படிப்பட்டவர்? அவரை எப்படி பின்பற்றுவது  என்று கேட்டோம்.இதோ அவர் சொல்கின்றார்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.

அட..குருவின் திருமேனி கண்டு, அவரின் திருநாமம் சொல்லி, அவரின் திரு வார்த்தை கடைபிடித்தாலே குருவின் அருள் பெற முடியும் என்று சொல்வது தெளிவு தானே..இதனை தான் நம் குரு வேதாத்திரி மகரிஷியும் கீழ்காணும் குரு வணக்கத்தில் சொல்கின்றார்.



 அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப் பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவுகூர்வோம்.

எளிய கவி தான்.படித்தாலே புரியும். சில இடங்களில் சித்தர் பாஷையும் உண்டு. இந்த ஒரு கவியில் குருவின் நிலை, தெய்வம் என பலவற்றை கூறியுள்ளார். இன்றைய நன்னாளில் குருவின் திருவடி பற்றுவோம். 



இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவரும் அருட்பேராற்றல் கருணையாக உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் பெற்று வாழ்ந்திட வேண்டி சகல குருமார்களின் பாதம் தொட்டு சங்கல்பம் செய்கின்றோம்.

     வாழ்க வையகம்!                                                                                  வாழ்க வளமுடன் !!

- மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (2) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/2_12.html

 வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_40.html


No comments:

Post a Comment