அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவரும் விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாட தயாராகிக் கொண்டு இருப்பீர்கள். இந்த பதிவிலும் கொண்டாட்டம் தொடர்கின்றது. மூத்தோன்..முதல்வன்..எத்தனை முறை பேசினாலும் திகட்டாத ஞானம் தருபவர். நம் TUT தளத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. நம் உறவுகள்,அன்பர்கள் கொண்டாடிய நிகழ்வுகளை இங்கே காட்சிகளாக தருகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் விகடன் தொகுப்பு, பிள்ளையார்பட்டி தரிசனம், நம் TUT குழுவில் இருந்து பெரம்பலூர் சதீஷ், ராஜ்குமார் ஐயா, பனப்பாக்கம் செந்தில்வேல் ஐயா, கீரனூர் சண்முகம், திரு.வெங்கடகிருஷ்ணன் ஐயா என பட்டையைக் கிளப்பிய விநாயகர் தரிசனம் கண்டோம்.
இன்றைய பதிவிலும் தரிசனம் மேலும் தொடர்கின்றது. சென்ற ஆண்டு ஒரே பதிவாக கொடுத்தோம். இந்த ஆண்டு பதிவின் நீளம் கருதி இரண்டு பதிவுகளாக இங்கே தொடர்கின்றோம்.அனைத்தும் அவன் அருளாலே அன்றி வேறில்லை.
நம் குழுவில் தற்போது இணைந்த திரு.திலீப் சண்முகராஜா அவர்கள் வீட்டின் பிள்ளையார்

ஊரப்பாகத்தில் உள்ள கந்தசாமி ஐயா வீட்டின் கணபதி பூசை
செல்வி கல்பனா வீட்டில் இருந்து
போளூர் உமா மகேஸ்வரி வீட்டில் இருந்து விநாயகர் தரிசனம்.
அடுத்து கோயம்புத்தூரில் உள்ள என் தங்கை ராகினி வீட்டில் இருந்து விநாயகர் தரிசனம்
நம் அன்னதான சேவையில் ஈடுபட்டு வரும் திரு.சிவகுமார் அலுவலகத்தில் நடைபெற்ற காட்சிகள் இங்கே.
அவர் வணங்குவதை பார்த்தால் நம்மையும் அழைப்பது போல் இருக்கின்றது. பொறுங்க..அடுத்த ஆண்டு வேளச்சேரிக்கு வந்து கொண்டாடிடுவோம்.
அடுத்து நம் நண்பர் திரு மோகன்குமார்.
அகத்திய விநாயகர் தரிசனம் பெற அனைவரும் தயாரா? இதோ. மலேஷியா அகத்தியர் வனம்
குழுவின் குருவார அகத்தியர் பூசையில்..அகத்தியர் விநாயகராக அருள்
தருகின்றார். இது நம் தளத்திற்கு கிடைத்த பிரத்யேக தரிசனம். நீங்களே கண்டு
மகிழுங்கள்.
என்ன ஒரு அலங்காரம். இப்படி ஒரு தரிசனம் நமக்கு கனவிலும் கிடைக்காது.
அகத்தியர் ஞானம் தருபவர். விநாயகப் பெருமானும் ஞானம் தருபவர். இருவரும்
ஒன்றாக கொடுக்கும் தரிசனம் அருள் நிறைவாம். சத்தத்தின் உள்ளே சதாசிவமும்,
சித்தத்தின் உள்ளே சிவலிங்கமும் காட்டும் தரிசனம் இதுவாம்.
நேற்றைய நம் வீட்டில் தரிசனம் முந்தைய பதிவில் இணைத்தோம். நேற்று காலை
பாண்டிச்சேரியில் இருந்து சுவாமிநாதன் ஐயா காலையில் அழைத்து இருந்தார்.
பின்னர் மதியம் பேசிய போது தான் தெரிந்தது, நேற்றைய தினமலர் செய்தித்தாளோடு
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் போட்டோ தனியாக கொடுத்துளார்கள் என்று.
என்ன ஒரு ஆச்சர்யம். நேற்று காலை தமிழக ஆளுநர் புரோஹித் அவர்கள் இங்கு
வந்து தரிசனம் செய்துளார்கள். அனைத்தும் கீழே தந்துள்ளோம்.
நேற்று காலை நாம் தரிசிக்க விரும்பினோம். ஆனால் முடியவில்லை.நேற்று மாலை
சென்று தரிசித்தோம். நல்ல கூட்டம். கூட்டத்தில் ஒருவனாய் தரிசித்தோம். நல்ல
அலங்காரம். வினை தீர்க்கும் விநாயகர் இங்கே இடர் நீக்கும் இடம்புரி
விநாகயர், வளம் தரும் வலம்புரி விநாயகர் என்று தரிசனம். அப்பப்பா..கண்கள்
போதவில்லை. உற்சவ மூர்த்தியாகவும் அருள் பாலித்தார்.
அடுத்து உற்சவர் தரிசனம்.
இதோ..மூலவரின் தரிசனமும் நமக்கு கிடைத்தது. நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்து அங்கிருந்து கிளம்பி, வேலி அம்மன் ஆலயம் சென்றோம். அங்கிருக்கும்
கணபதியை தரிசித்தோம். TUT குழுவினர் அனைவருக்கும் சங்கல்பம் செய்து வழிபாடு
செய்தோம்.
சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்படி சென்றது? நினைவில் இல்லை.. அதாவது
வீட்டில் மட்டும் பூசை.ஆனால் இந்த ஆண்டு மனதில் என்றும் இருக்கும் வண்ணம்
TUT உறவுகள் இல்ல பூசை,கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் தரிசனம்.வேலி அம்மன்
ஆலய தரிசனம் என கொண்டாட்டமாகவே நமக்கு இருந்தது.
- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html
No comments:
Post a Comment