"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, August 30, 2019

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...

அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.


-கொங்கணார் கடைக்காண்டம்.

ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது  என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில்  அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தர சித்தம் கொண்டுள்ளோம். இந்தப் பதிவிற்காக இணைப்பு படங்களை தேடிய போது தான், சட்டென்று நமக்கு இவர் நினைவிற்கு வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லட்சக்கணக்கில் மக்கள் தரிசனம் பெற்று வந்துள்ளார்கள். தரிசனம் பெறாத அன்பர்களுக்குகா இங்கே அவரை அருள் தர வேண்டுகின்றோம். வேறு யார்? ஆம்.அத்தி வரதரே ஆவார். அகத்தியர் உத்தரவிற்கும் வரதருக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பதிவின் முழுமையில் நீங்களே உணர்வீர்கள் என்று நம்புகின்றோம்.

























  பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம். வேண்டும் வரமெல்லாம் தரும் இந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் அப்படி என்ன ரகசியங்கள் உள்ளது என்று பார்ப்போம்....

  இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி 2019 ம் ஆண்டு  தரிசனம் தந்தார் நம் வரதர். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.அடுத்த தரிசனம் 2059 ஆண்டில் தான். இப்போது மூலவர் கற்களில் உருவாக்குகிறார்கள். கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கும் அத்திமரம், எத்தனை வருடம் நீரில் ஊறினாலும் கெட்டுப் போகாது என்பதற்கும் சாட்சியாக இந்த அத்திவரதர் விளங்குகிறார். அந்த அத்தி வரதரிடமே விண்ணப்பம் வைக்கின்றோம். நம் குருநாதர் காட்டிய வழியில் அத்தி வரதா! லோக ஷேமமாக இருக்க அருளுங்கள் என்று வேண்டுவோம்.

 மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்

 உற்சவருக்கு, “அழைத்து வாழ வைத்த பெருமாள்’ என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

 கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

 வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

 ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

 காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன

 ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, அல்லது  இருமுறைதான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும்.

அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில் உரைத்தது

"ஆவணி மாதம் சூர்யன் ஆட்சி இதனுடன் நெருப்பு கிரகமான செவ்வாய் கூடின 10.8.2019 அன்று முதல் காடுகள் நில தலைவனாகிய மால் மாயோன் நிலத்தில் (காடுகளில்) நெருப்பு  குற்றம் ,மலை சரிவு கடுமையான பாதிப்புகள் உண்டாக ஏதுவாக வரும் ஓர் திங்கள் இது தொடர அபயம் தரும் மாயோன் திருமாலை போற்றி துதி செய்து கார்மேகனிடம் வேண்டுதல் வையுங்கள்.

ஆவணி திருவோணம் (11.09.2019) மிகவும் நல்ல தருணம். நிலம், நீர் ,நெருப்பு இதிலிருந்து உயிர்களை பயிர்களை தருக்களை காக்க ஏக மனதாக திருமாலை போற்றி சங்கல்பம் செய்து காப்பவன் அருளால் நலம் அடையுங்கள்."

ஆகவே அன்பர்களே இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு செய்து இயற்கையை காக்க சங்கல்பம் வைக்க வேண்டுகிறோம்.மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆவணி திருவோணம் (11.09.2019) அன்றாவது பெருமாள் வழிபாடு செய்ய வேண்டுகிறோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா  தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக!!!

நம் தளம் சார்பில் பெருமாள் கோயிலில் ஆவணி திருவோணம்  வழிபாடு நடைபெற அகத்தியரிடம் வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அத்தி பூத்தாற்போல(40 ஆண்டுகளுக்கு ஒரு முறை) கிடைக்கும் அத்தி வரதர் தரிசனம் ! - https://tut-temples.blogspot.com/2019/07/40.html

No comments:

Post a Comment