"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 5, 2019

காவிரித் தாயே போற்றி! போற்றி!! - ஆடிப் பெருக்கு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மனின் அருள் தான். தினம் தினம் கொண்டாட்டமாக இந்த ஆடி மாதம் இருக்கின்றது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் என்று சொல்லலாம். நம் தளம் சார்பில் ஆடி அமாவாசை சிறப்பாக மோட்ச தீப வழிபாடும், அன்று அன்னதானமும் நடைபெற்றது. ஆடிப் பெருக்கு கொண்டாட இந்த ஆண்டு குருவருள் நமக்கு பணித்தது. துணைவியாரோடு ஸ்ரீரங்கம் சென்றோம். இதோ..ஆடிப் பெருக்கு பற்றியும், அன்றைய தின கொண்டாட்டத்தையும் இங்கே பகிர்கின்றோம்.



காவிரி தந்த கருணையாளர் யார்? நம் குருநாதர் அகத்திய பெருமான் ஆவார். அவரின் தாள் பணிந்து பதிவைத் தொடர்வோம்.

அண்மையில் நம் குருநாதர் நமக்காக அளித்த வாக்கின் சூட்சுமம் இதோ பின்வருமாறு;


நதி வழிபாடும்
நந்தி வழிபாடும்
ஆதி வழிபாடு ஆகும்

உலகம் உய்ய தேவை நதி , நந்தி
திமில் காளைக்கு மட்டுமே உண்டு, திமில் மூலம் விண்சக்தி பெற முடியும். கோ உலகின் சூட்சம்ம்
நந்தி. இறை வழிபாட்டிற்கு கோ ஆற்றல் தேவை

இதே போல் உயிர்கள் உய்ய தேவை நதி. இரண்டும் கெட்டால் உலகம் மலடாகும். இதனை சரிப்படுத்திக் கொள்ள அகத்தியர் இந்த வழிபாட்டை அறிவுறுத்தினார்

நதி வழிபாட்டில் ஆயிரம் பேர் கூடுவார்கள். கங்கா வழிபாடு. நந்தி வழிபாட்டிலும் ஆயிரம் பேர் கூடுவார்கள். பிரதோஷ வழிபாடு உதாரணமாக

நதி வழிபாடு தாய் வீட்டிற்கு செல்வது. இந்த உடல் நிலைக்க நீர் அவசியம். தாயின் ஸ்பரிசம் நீரில் உணரலாம்.ஆயிரமாயிரம் வேள்வி தரும் ஆத்மானுபவம் இந்த வழிபாட்டில் பெறலாம். நதி, நாதம், நந்தி உணர்த்தவே இந்த வழிபாடு. முருக வழிபாடு இதில் இலங்கும்

சித்த மரபில் நீர் முக்கியம். நகாரத் தொடர்பு இதில் அடங்கும். நகாரமே ஆதி..நமசிவாய, நாராயணாய , நதி , நந்தி

வேல் வழிபாடு சித்த மார்க்கத்தின் அடிநாதம். இன்று கலச நீர் (அருகில் உள்ள நீர் ) எடுத்து மாவிலை, மஞ்சள் வைத்து பூமியில் வேல் இட்டு வரிபடுக.நீர்,பால்,பஞ்ச திரவியமாக அபிஷேகம் செய்க

வேல் வழிபாடு தர்மம் நிறுத்தும். பூமி உய்விக்கவும் வழி செய்யும். முருக வழிபாட்டில் சிந்து கவி தேவை.நாதமாக உருகி பாடுக.

இதோ..ஆதி வழிபாடான நதி வழிபாட்டை பிரதானப்படுத்தியே ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.



தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.

அன்றைய தினம் மாலை அம்மாமண்டபம் முன்பு உள்ள படித்துறைக்கு சென்றோம். ஏன் இது போன்ற மண்டபங்கள் கட்டினார்கள் என்று யோசித்தோம்.

காவிரி ஆற்றையொட்டி கரைப் பகுதிகளில் அந்தக் காலத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டன. காவிரி பாய்ந்தோடி வருகிற வேளை என்பதால், மக்கள் நதியில் இறங்கி வணங்கும்போது சுழலில் சிக்கி, அதன் வேகத்துக்கு அவர்களை இழுத்துக் கொள்ளாதபடி, கரைப் பகுதியில் கொஞ்சம் மேடான இடமாகப் பார்த்து மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்சியில் அகண்ட காவிரியாக பிரமாண்டத்துடன் ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடுவார்கள். நாங்கள் அம்மா மண்டபத்துக்கு முன்னே உள்ள இடத்திற்கு  மாலை 5 மணி அளவில் சென்றோம். கூட்டம் சற்று இருந்தது. மாலை நேரம் இப்படி என்றால் அன்று காலை கூட்டம் அமோகமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.



ஆரம்ப காலத்தில் விவசாயம் செழிக்கவேண்டும், காடு கரையெல்லாம் நீரால் நிறைந்திருக்கவேண்டும், போட்ட விதையெல்லாம் பொன்னெனத் திகழ வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இன்று இல்லம் செழிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குடும்பம் சகிதமாக அனைவரும் வந்திருந்தார்கள்.

அனைவரும் காவிரி நீரில் நீராடி பின்னர் படையலிட்டு வணங்குவதைக் கண்டோம். புதுமண தம்பதிகள் ஆடிப் பெருக்கு அன்று தாலி பிரித்து போட்டு கொண்டாகின்றார்கள்.


நாமும் அப்படியே காவிரித்தாயை தொட்டு,உள்ளே இறங்கினோம். அகத்தியரை வேண்டினோம், சகல குருமார்களையும் சில நொடிகளில் வேண்டினோம். புனித நீரை தலையில் தெளித்துக்கொண்டு மூத்தோனின் ஆசி பெற விநாயகரை வேண்டினோம்.அங்கிருந்தே நேரே பார்த்தால் அட..நம்ம உச்சிப்பிள்ளையார். வேறென்ன வேண்டும்? அப்படியே திரும்பினோம்.


அப்படியே திரும்பி ரங்கநாதரை வேண்டினோம். பின்னர் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அகிலாண்டேஸ்வரி அம்மையையும், ஜம்புகேஸ்வரரையும் மனதார வேண்டினோம்.


இல்லத்தரசியார் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் படையலிட்டு, வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு காவிரியை
வணங்கிக் கொண்டிருந்ததை கண்டோம். அங்கே நாமும் நோன்பு இருப்பவரிடம் ஆசி வாங்கி, கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டோம்.










அடுத்து அங்கே ஒரு பிள்ளையார்  ஆல மரத்தடியில் அருள் தந்து கொண்டிருந்தார். அங்கு சப்த கன்னியர்களும் இருந்தார்கள். ஆல மர விநாயகர் மிகவும் விசேஷம் என்பார்கள்.


சப்த கன்னியரை மஞ்சள் தூவி, மஞ்சள் நூல் அந்த மரம் முழுதும் கட்டி வழிபட்டார்கள். பின்னர் தீபமேற்றி விநாயகரை வழிபட்டார்கள்.



பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார். எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்பது இங்கே:-

வில்வமர விநாயகர்: தெற்கு நோக்கியவாறு இருந்தால் சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை, ஏழைக்குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்து வணங்கினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர்.

அரசமர விநாயகர்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.

ஆலமர விநாயகர்: வடக்கு நோக்கி இருந்தால் சிறப்புடையது. நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

வேப்பமரத்து விநாயகர்: கிழக்கு முகப்பிள்ளையார் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும்.

மாமர விநாயகர்: கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு, அளித்து வந்தால் பகைமை, கோபம், பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

புன்னைமர விநாயகர்: ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீர் அபிஷேகமும் செய்து நெசவுத்துணிகளை பிள்ளையாருக்கு அணிவித்து அதனை ஏழை நோயாளிகளுக்கு அளித்து வந்தால் கணவன்-மனைவியிடையே உள்ள மனக்கசப்பு நீங்கி தாம்பத்திய உறவு சீர்பெறும்.

மகிழமர விநாயகர்: அனுஷ நட்சத்தித்தில் இந்த மகாகணபதிக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வந்தால் ராணுவம், வெளிநாடுகளில் உள்ளோர் நலம் பெறுவர். மகிழ மரப்பிள்ளையாரை முறைப்படி தொழில் செய்வினைகள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பொறாமை, கண்திருஷ்டி நீங்கி, கவுரவமான வாழ்வு மலரும்.

வன்னிமர விநாயகர்: அவிட்டம் நட்சத்திரந்தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண காரியத்தில் வரும் தடை நீங்கி, மகிழ்ச்சியான குடும்பம் அமையும். ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தும், மணவாழ்க்கையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனக்கசப்போடு பிரிந்து வாழ்பவர்கள் சஞ்சலம் அகன்று சுகவாழ்வு காண்பார்கள். வன்னிமரப் பிள்ளையாரைக் காண்பதே அரிது. வன்னிமரத்திற்கு விசேஷ அம்சங்கள் உண்டு. வன்னி மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி நள தமயந்தி முன் வினை நீங்கி நலன்பெற்றதாக வரலாறு இருக்கிறது. 



நாமும் மூத்தோனை வணங்கினோம்.








ஆடிப் பெருக்கு அன்று நம் குருநாதர் கால் பட்ட இடத்தில், நம் மனதை ஒன்றை செய்தோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்தோம். பின்னர் அங்கு பிரசாதம் உண்டு , அங்கிருந்து நகர்ந்தோம். ஆடிப் பெருக்கு நன்னாளில் நதி வழிபாடு, விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, சிவனார் வழிபாடு என அனைத்தும் ஒருங்கே பெற்றோம். இப்போது யோசித்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கின்றது.

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி.போற்றி !!

ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவர் அகத்திய மாமுனிவர்.

"இறை அணியப்பா" என்ற தலைப்பில் அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாடல் :

அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :

அந்த இறையை நீ உள்ளத்தில் அணியப்பா.

இறையணி அணியத்தான் நிறையணியாகும் வாழ்வப்பா.

இயம்புங்கால் எமை நாடும் மாந்தர்கள் அனைவரும், ஓரணியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாமும் வாக்கை சீராக்கி,

உயர்வணி ஆக்கி,

நல்வித சொல் ல அணி ஆக்கி,

அவையணி ஆக்கி,

உயர் தமிழ் அணி ஆக்கி,

நல்விதமாய், அணி, அணியாய் வாக்கை, அவ்வப்போது, பகரணியாக்கி, உரையணியாக்கி,

சொல்லணியில் சொல்லுங்கால்,

அவ்வணியை எல்லாம் செவியணியில் ஏற்று,

சிந்தனை அணியில் வைத்து,

சொல்லணியில் மீண்டும் செயல்படுத்தி, செயலணி ஆக்கிவிட்டால்,

யாம் உரைத்த வாக்கணிக்கு உயர்வான மதிப்பணி ஆகுமப்பா,

அப்பனே! அஹ்தொப்ப செய்யாது, ஒரு செவியணியில் ஏற்று, அதை மறு செவியணியில் விட்டுவிட்டால் எமது வாக்கு மதிப்பணி எப்படி ஆகுமப்பா? இவையெல்லாம் வாக்கணியா?

சித்தர்களின் போக்கணியா?

இவையெல்லாம் நான் நம்பமாட்டேன். இதனை என் மதியணி ஏற்காது.

எல்லாம் விதியணி என்றால், எதற்கு இவர்கள் முன் அமர்ந்து, அணியணியாக கூறுகின்ற வாக்கை எல்லாம் கேட்க வேண்டும்?.

அங்கே தீப அணி ஏற்றச் சொல்கிறார்கள். பிறகு தர்ம அணி செய்யச் சொல்கிறார்கள்.

இவற்றை எல்லாம் செய்வதற்கு, "தன அணி வேண்டாமா"? என்று கேட்டால்,

அதற்கும் "கர்ம அணி" என்றுதான் கூறுகிறார்கள்.

கர்ம அணியை நீக்க, தர்ம அணிதான் தேவை என்றால், தன அணி எப்போது வரும்? என்று எம்முன்னே வினவி,

"அந்த தன அணி தராவிட்டால், தர்ம அணி செய்ய முடியாது" என்று வாது செய்கிறார்கள் என்றாலும்,

பொல்லா அணி எல்லாம் மனிதனை விட்டு நீங்கி,

நல்ல அணி எல்லாம் மனதில் வைத்துவிட்டு,

ஹிம்சை அணியும், வேதனை அணியும் விட்டுவிட்டு,

அவன் "தாய்" அணி போல் எம்மை அணுகும்போது,

அவன் கர்ம அணியைக் கழிப்பதோடு,

அவனுக்கு "தர்ம அணியின்" வழியையும் காட்டி அவன் உயர் கர்ம அணியை தொடர்ந்து செய்து,

இறை அணியிலே அவனும் ஒரு அணியாக இருப்பதற்கு வழியைக்காட்டி,

எம்முன்னே இன்னும் பேத அணி கொள்ளாமல்,

அனைவரும் ஓரணியாக நின்றால்தான்,

நாங்களும் இறையணியைக் காட்டித் தருவோம்.

எனவே, இந்த நல் அணியை செவி அணியிலே ஏற்றி,

சிந்தை அணியில் வைத்து, இறைவன் திருவடியை சிந்திக்க, பல்வேறு வாக்கனிகள்,

வாக் "கனிகளாய்" இனி மலருமப்பா.

மேற்கண்ட அருள்வாக்கு அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பொது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).


 குருவின் தாள் பணிந்து மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
             
குரு திருவடி சரணம்! சரணம்!


ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம் 


மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html


கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment