"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 6, 2019

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவைக் கொண்டாடுங்கள். இறையிடம் நாம் பிரார்த்திக்கும் போது குரு வழி நிற்றல் இன்னும் நம் பிரார்த்தனையை சிறப்பாக்கும்.  நம் தலத்தில் ஏற்கனவே மாணிக்கவாசகர் குருபூசை பற்றி இரு பதிவுகள் அளித்து இருந்தோம். நாம் இன்று இந்த பதிவை அளிப்பதற்கு சுந்தரரே காரணம். ஆம்.இன்று சுந்தரரின் குரு பூசை நாள். இன்று சுந்தரரின் குரு பூசை கொண்டாட நாம் பல வழிகளில் முயற்சித்தோம். ஆனால் கூடுவாஞ்சேரி அருகில் நால்வர் தரிசனம் கிடைப்பதே அரிதாக உள்ளது. ஆனால் சிரமேற்கொண்டு தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயிலில் நடைபெறும் சுந்தரரின் குரு பூசையில் நம் தளம் சார்பில் அணில் போல் இணைத்துள்ளோம். இதோ.. இன்று ஆதனுர் கைலாசநாதர் கோயிலில் நால்வர் தரிசனம் பெற்றோம்.


இம்முறை குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயிலில் உள்ள நால்வர் பெருமக்களில் உள்ள மாணிக்கவாசகருக்கு குரு பூசை நடத்திட குருவருள் நம்மை கூட்டியது. எம் துணைவியாருடன் இந்த பூசைக்கு சென்றோம்.


நம்முடன் நம் குழு உறுப்பினர் திரு.சத்யராஜ் அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். கோயிலில் அனைத்தும் முன்னேற்பாடுகளும் செய்து இருந்தார்கள். நாம் நால்வர் பெருமக்களுக்கு வஸ்திரம்மட்டும் வாங்கிக் கொண்டு சென்றோம். சரியாக காலை 10:15 மணி அளவில் பூசை ஆரம்பமானது.





ஒவ்வொரு அபிஷேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாம் திருமுறைகளில் உள்ள சில பாடல்களை படித்தோம்.



ஒவ்வொரு அபிஷேகம் பார்க்க , இதற்குத் தானே ஆசைப்பட்டோம் என்று மனம் ஏங்கியது.





                                          இதோ. இளநீர் அபிஷேகம் பாருங்கள்.






                                                         திருநீறு அலங்காரம்










                                       சொர்ணாபிஷேகம் நடக்கும் காட்சிகள்






அபிஷேகம் முடிந்து, அலங்காரம் செய்ய தயாரான போது





எத்துணை பிறவிகள் எம் ஐயா 
இந்த தரிசனம் யாம் பெற்றிடவே 
மீண்டும் ஒரு பிறவி வேண்டாமே 
பெற்றால் குருவின் தொண்டு செய்ய வாய்க்குமோ?

என்று உள்ளம் உருகியது.





நால்வர் பெருமக்கள் தரிசனம் பெற்றுக்கொண்டு இருந்தோம். அப்போது தான் அன்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்.



                                     லோக ஷேமத்திற்காக சங்கல்பம் செய்த காட்சி





                                           இதோ மகா தீபாராதனை பெற்ற நிலை





 "வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"

என்று பாடினோம். பரவசப்பட்டோம்.






அடுத்து பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு, கந்தழீஸ்வரர் தரிசனம் பெற சென்றோம்.









வழக்கம் போல் அருமையான தரிசனம் பெற்றோம். நம் தளம் சார்பில் சிவபுராணம் தொகுப்பை அன்று கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு கொடுக்க சொல்லி, குருக்களிடம் விண்ணப்பித்தோம்.



மீண்டும் மீண்டும் நால்வர் தரிசனம் பெற்று, கோயிலுக்கு வெளியே வந்து, பெயர் பலகை ஓவியம் கண்டோம்.





அடுத்து அப்படியே திருஊரகப்பெருமாள் தரிசனம் பெற்றோம்.



குன்றத்தூரை சுற்றினாலே போதும் 
நம் வினை மாயும் 
எனபது நமக்கு உணர்த்தப்பட்டது.






திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அன்றைய தின குறு பூசையில் கண்டோம்.

 குன்றத்தூர் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? குமரன் இருக்கும் இடம். சைவம், வைணவம் என பக்திக்கு பஞ்சம் இல்லாத ஊர். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர். இன்னும் என்னென்ன சிறப்புகள் இந்த குன்றத்தூருக்கு உண்டோ யாம் அறியோம் பராபரமே என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. மீண்டும் ஒரு முறை சென்று நாள் முழுதும் குன்றத்தூரில் உள்ள ஆலய தரிசனம் பெற்று நம் ஆன்ம தரிசனம் பெற இன்றைய நாளில் சுந்தரரிடம் வேண்டுகின்றோம்.

- மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html


No comments:

Post a Comment