அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இதோ..அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த உழவாரப் பணி அழைப்பிதழ் இந்தப் பதிவில் பகிர்கின்றோம். சரி..உழவாரப் பணி பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
உழவாரம் பற்றி அறிந்து கொள்ள நாம் முதலில் சிவ புண்ணியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சைவ சமயக் குரவர் நால்வரும்,சந்தானக் குரவர் நால்வரும், திருமுறை அருளாளர்கள், மற்றும் 63 நாயன்மார்களும், 9 தொகையடியார்களும் வாழ்ந்து காட்டிய சைவ சமைய நெறிகளில் இருந்தும் மேலும் சைவ சித்தாந்த நெறிகளில் இருந்தும் சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.
1. சிவாலயம் முறையாக- வேத சிவாகம முறையில் கட்டுவது.
2. நாள்தோறும் சிவாலயம் சென்று பரம்பொருளை ( சிவபெருமானை) மூன்று வேளைகளிலும் வழிபடுவது.
3. சிவனடியார்களுக்கு அவர்கள் விருப்பம் அறிந்து திருவமுது ( அன்னம்பாளிப்பு) படைப்பது மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற நல்ல செயல்களை அனுதினமும் செய்ய வேண்டும்
4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி, நிலத்தை சமப்படுத்துவது மேலும் சிதலடைந்த திருக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வைப்பது, மேலும் வழிபாடு இல்லாத திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்ய வைப்பது மேலும் திருவிளக்கு ஏற்றி தினந்தோறும் சிவபெருமானை வழிபடுவது போன்ற நற்காரியங்களைச் செய்ய வைப்பது ,வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது மேலும் பரம்பொருளுக்கு மலர் மாலைகள் சாத்தி வழிபடுவது மேலும் பன்னிரு திருமுறைகள் பண்ணோடு பாராயணம் செய்வது அடியார் திருக்கூட்டத்துடன் கூட்டு வழிபாடு செய்வது மேலும் பெரியபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் 63 நாயன்மார்கள் தொண்டுகளை பொருள் உணர்வதும் அவர்கள் காட்டிய அன்பு போல் நாமும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டவேண்டும்.
5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், அடியார்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், பரம்பொருளுக்கும் ( சிவபெருமானுக்கும்) அவரை வணங்கும் சிவனடியார்களுக்கும் திருவமுது ( அன்னம்பாளிப்பு) செய்வித்தல் போன்ற சிவ புண்ணியங்களைச் செய்வது போன்றது ஆகியவனவாகும்
மேற்சொன்ன செயல்களை நாம் செய்தால் நமக்கு சிவ புண்ணியம் கிட்டும் என்பது உறுதி.இவற்றுள் நாம் இருக்கின்ற சூழலில் உழவாரப் பணி செய்வதும், உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல் இவை இரண்டும் நம்மால் செய்ய இயலும். சிவாலயம் நம்மால் கட்ட முடியுமா? மூன்று வேளை தவறாது சிவ திருத்தலம் சென்று தொழ இயலுமா? ஹ்ம்ம்..முடியாது. ஏனெனில் நாம் கலியில் அல்லவா ? வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் குழுவாய் சென்று உழவாரம் செய்யலாம் அல்லவா? இது நம்மால் இயலும் காரியம்.
வாருங்கள் ! உளம் ஆற, உழவாரப் பணி செய்வோம்.
உழவாரப் பணி ..உழவாரப் பணி என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் என்ன என்று சுருக்கமாக கீழே காண்போம்.இது நமக்கு நல்ல புரிதலைக் கொடுக்கும்.
ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி.
அவையாவன:
1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை, குப்பை கூடங்களில் போடுவது.
2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் திருநீறு போடுவதை சுத்தம் செய்வது.
3. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது.
4. சுவாயின் ஆடைகளை துவைப்பது.
5. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.
6. நந்தவனத்தை தூய்மைப்படுத்துவது.
7. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது.
8. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.
9. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.
10. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.
11. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.
12. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.
13. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.
14. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.
15. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..
என்று சொல்லிக் கொண்டே போகலாம்.இங்கே சிலவற்றை மட்டும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.
இப்பணிகளை தினந்தோறும் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.
உழவாரப் பணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை என்பது அடியார்களின் அனுபவம். இப்போது உழவாரப் பணி என்பது பற்றி சற்று புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம்.
நம் தலத்தில் வெகு நாட்கள் கழித்து எங்கு உழவாரப் பணி செய்ய நமக்கு இறை அழைப்பு இருக்கும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சும்மா இருப்பாரா நம் வினை தீர்க்கும் விநாயகர்.இதோ. கூடுவாஞ்சேரி கோயில் குருக்கள் நம்மை அழைத்து மாமரத்து விநாயகர் கோயிலுக்கு உழவாரப் பணி செய்யுங்கள் என்றார். அதுவும் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக என்று பார்க்கும் போது , எல்லாம் அந்த விநாயகரின் அருள் தான். வினை தீர்க்க விரும்புபவர்கள் கட்டாயம் இந்த உழவாரத்தில் பங்கு கொள்ளவும். நம் அனைவரின் வசதிக்காக இம்முறை உழவாரப்பணி இரண்டு நாள் வைத்துள்ளோம். சனிக்கிழமை முடிந்தவர்கள் சனிக்கிழமை அன்று அல்லது ஞாயிற்றுக்கிழமை முடிந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்து கலந்து கொண்டு வளங்களை அருளும் வலம்புரி கணபதியையும், இடர்களையும் இடம்புரி கணபதியை தரிசிக்க வருமாறு வேண்டுகின்றோம்.அவரிடமிருந்தே அழைப்பு வந்து விட்டது.அதுவும் வருகின்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வின் பொருட்டு உழவார செய்ய இருக்கின்றோம் என்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இதனையே அன்பர்கள் அழைப்பாக கருதி தங்களுக்கு முடிந்த நாளில் வந்து பணி செய்ய வேண்டுகின்றோம்.
நவகிரக நாயகர்கள் இங்கே தம்பதி சமதேராக அருள்பாலித்து வருகின்றார்கள். எனவே இறை அன்பர்கள் தவறாது வந்து, உழவாரப் பணியை சிறப்பிக்கும் படி வேண்டுகின்றோம்.
இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் வருகின்ற 24.08.2019 & 25.08.2019 (சனி & ஞாயிற்றுக்கிழமை) அன்று இரண்டு நாட்களிலும் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரசித்தி பெற்ற இந்த விநாயகர் கோயிலில் உழவாரப் பணி செய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்வின் நிரல்
உழவாரப்பணி
அபிஷேகம்,ஆராதனை
தீபாராதனை
பிரசாதம் வழங்கல்
நாள்:24.08.2019 & 25.08.2019 சனி & ஞாயிற்றுக்கிழமை
இடம் : ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம்
கூடுவாஞ்சேரி
நேரம்: காலை 9:30 மணி முதல் 1 மணி வரை
தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் - 7904612352
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html
திரும்பி பார்க்கின்றோம் : சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_36.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் நம்மை இன்னும் ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது. இரண்டு விநாயகர்கள் தரிசனம். அது மட்டுமா? இந்த இடத்தில இறையின் அருள் இன்பத்தை தருகின்றது. மாமரத்து ஈஸ்வரர் இருக்கின்றார். இங்கே அனைத்து திருவிழாக்களும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மை ஈர்த்து ஆட்கொள்ளும் கோயில் இது. சித்தர்களின் தலைவர் அகத்தியர் இருக்கின்றார். இதெல்லாம் வார்த்தைகளில் சொல்லும் செயல் அன்று.நேரில் வாருங்கள். இறையருளை அள்ளிப் பருகுங்கள். இதோ..இங்குள்ள அனைத்து தெய்வங்களின் அருட்காட்சிகள் பகிர்கின்றோம்.
பிரதோஷ வழிபாட்டில்
நவராத்திரி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
வள்ளலார் வழிபாடும் இங்கு உண்டு.
விநாயகர் சதுர்த்தி இங்கு சிறப்பாக இருக்கும். சென்ற ஆண்டு நம் தமிழக ஆளுநர் வந்து விழாவினை சிறப்பு செய்தார்கள்.
இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் வருகின்ற 24.08.2019 & 25.08.2019 (சனி & ஞாயிற்றுக்கிழமை) அன்று இரண்டு நாட்களிலும் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரசித்தி பெற்ற இந்த விநாயகர் கோயிலில் உழவாரப் பணி செய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்வின் நிரல்
உழவாரப்பணி
அபிஷேகம்,ஆராதனை
தீபாராதனை
பிரசாதம் வழங்கல்
நாள்:24.08.2019 & 25.08.2019 சனி & ஞாயிற்றுக்கிழமை
இடம் : ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம்
கூடுவாஞ்சேரி
நேரம்: காலை 9:30 மணி முதல் 1 மணி வரை
தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் - 7904612352
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html
திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_22.html
மகான்களின் வி(வ)ழியில்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_38.html
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html
ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_27.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html
No comments:
Post a Comment