"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 28, 2019

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019

 அன்பார்ந்த மெய்யன்பர்களே.

இறை,சித்தர்கள் என்று நாம் பேசும் போது அகத்திய பெருமான் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. நாம் உரைக்கும் வார்த்தைகள் அனைத்தும் அந்த அகத்தியரின் வார்த்தைகள் தான். நம்முடைய பயணத்தை திருப்பி பார்க்கும் போது, நம்மை எப்படி நம் குருமார்கள் செதுக்கி உள்ளார்கள் என்பது கண்கூடாக தெரிகின்றது. நாம் அது வேண்டும், இது வேண்டும் என்று தினமும் வேண்டுகின்றோம். வேண்டுவனவற்றிற்கு நம்மை நாம் தகுதியாக்கி உள்ளோமா? நம்முள் உள்ள தீமைகளை வேரறுத்து வருகின்றோமா ? ஹ்ம்ம்..ஏதும் இல்லை. பின்னர் எப்படி நாம் வேண்டுவது கிடைக்கும்.

இந்த பதிவில் நாம் ஓராண்டு நிறைவாக கொண்டாடிய ஆயில்ய ஆராதனை பற்றியும்  ஆவணி மாத ஆயில்ய அழைப்பும் இங்கே தருகின்றோம். ஓராண்டாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை நடத்தி வருகின்றோம். மாதந்தோறும் சுமார் 2000 ருபாய் வரை நாம் பூசைக்கு தந்து வருகின்றோம். பார்க்கும் போது சிறிய தொகையாக தோன்றலாம். இந்த தொகை நம் குழுவின் உள்ள அனைவரும் மாதம்தோறும் கொடுக்கும் விருப்ப தொகையே ஆகும். நாம் யாரையும் இங்கே கட்டுப்படுத்துவதில்லை. அன்பர்கள் தாங்களாகவே விரும்பி தருகின்றார்கள்...ஓராண்டு நிறைவில் இதோ..யாரும் எதிர்பார்க்கா வண்ணம் மோட்ச தீப வழிபாடும் செய்து வருகின்றோம். இதுவும் நமக்கு குருமார்கள் இட்ட கட்டளை ஆகும். ஒவ்வொரு முறை நாம் நம் தளத்தின் வாயிலாக இது போன்ற வழிபாட்டை ஆரம்பிக்கும் போது, இது எப்படி சாத்தியம் என்று நாம் மலைப்பதில்லை. வழிகாட்டும் குருமார்களும், தேனின் இனிப்பொத்த அன்பர்கள் தேனீக்களாக இருந்து வருகின்றார்கள். இப்போது யோசித்து பார்க்கும் போது ஓராண்டு நிறைவு ஆயில்ய பூசை நமக்கு மேலும் ஒரு சந்தோசத்தை கொடுத்தது. அது பதிவின் இறுதியில் தருகின்றோம்.



        இரண்டு நாட்களுக்கு முன்னரே பொருட்கள் வாங்கி வைத்து விட்டோம்.



முதலில் பூசை பொருட்களை இங்கேயே வாங்கி வைத்துக் கொண்டு இருந்தோம். பின்னர் மிக மிக தூயதாக பூசை பொருள் இருக்க வேண்டும் என்று நமக்கு உத்தரவு கிடைக்கவே, தென்பக்கம் இருந்து சுமார் 1 கிலோ  என்ற அளவில் வில்வப்பொடி, அபிஷேகப் பொடி,மூலிகைப் பொடி, அருகம்புல் பொடி, நெல்லிப்பொடி என்று வாங்கி வைத்துக் கொண்டோம். பூசை நடக்க உள்ள அன்று, இவற்றை நாம் கலன்களில் எடுத்துக் கொண்டு செல்வோம்.


பொதுவாக இது போன்ற பூசை பொருட்கள் 50,100 கி என்று வாங்கும் போது பிளாஸ்டிக்,பாலிதீன் பைகளில் தருவார்கள். ஒவ்வொரு மாத தேவைக்கும் என்று பார்க்கும் போதே, நாமே இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் வாங்குவது போல் தெரிகின்றது. இதனை குறைக்கும் வண்ணம் நாம் கலன்களில் அடைத்து செல்வதால் ஏதோ..நம்மால் முடிந்த அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து வருகின்றோம். சித்தர்களின் மார்க்கத்தில் இருக்கும் நாம் இது போன்ற விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். பேசுவது ஒன்றாக செய்வது ஒன்றாக இருக்க கூடாது.




இந்த ஆயில்ய பூசை நமக்கு மறக்க முடியாத பூசை. ஆம். எம் பெற்றோருடன் பங்குபெற்ற முதல் பூசை. இவர்கள் வந்தது தற்செயலானது, அதுவும் ஓராண்டு நிறைவு பூசையில் கலந்து கொண்டது சிறப்பானது. நாம் இதனை கனவிலும் நினைக்கவில்லை.  பஞ்சாமிர்தம் தயார் செய்யும் காட்சிகள் உங்களுக்காக.




தாம்பரத்தில் இருந்து சில அகத்திய அடியார்களும் வந்தார்கள். குருமார்கள் நம் குழுவில் புதிய புதிய அன்பர்களை இணைத்து வருகின்றார். காரணம் யாம் அறிந்திலோம். இங்கு மட்டுமின்றி பஞ்செட்டி பூசை, அமாவாசை மோட்ச தீபம் என்று இவர்கள் தொடர்ந்து வருகின்றார்கள், அருள் பெறுகின்றார்கள்.

அன்பர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டே இருந்தார்கள்.






இதோ..ஆயில்ய ஆராதனை ஆரம்பம்.



அபிஷேகத்தின் போதே நாம் சித்தர்கள் போற்றித் தொகுப்பு, அகத்தியர் துதி படிக்க தொடங்கி விடுவோம்.








அகத்தியரின் அருகில் அருள்பாலிக்கும் முருகனின் அருள் உங்களுக்காக.


குரு சீடன் பரம்பரையில் சீடன் குருவை மிஞ்சி நிற்க வேண்டும். இந்த நிலையில் குருவும் சீடனும் ஒன்றாக ஒரு நிலையில் இருப்பார்கள். அது இங்கே அகத்தியருக்கும் முருகப்பெருமானுக்கு .












அடுத்து வில்வம்,மஞ்சள்,நெல்லி,அருகு என ஒவ்வொன்றிலும் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்ததை நீங்கள் தரிசனம் செய்து இருப்பீர்கள்.
























அடுத்து பஞ்சாமிர்தம், பால்,தயிர் , இளநீர் என அபிஷேகம் தொடர்ந்தது. அடுத்து என்ன ? அலங்காரம் தான். அனைவரும் காத்துக்கொண்டு இருந்தோம்.









தீப ஆராதனைக்காக அடுத்து நிலை பெற்றோம்.









வாழ வழி காட்டும் குருவினை போற்றினோம், ஆராதனை செய்தோம். வேண்டினோம், கொண்டாடினோம்.




அடுத்து இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம். பூசைக்கு வருபவர்களுக்கு மாலை கொடுப்பது வழக்கம்.இந்த முறை எம் பெற்றோருக்கு கிடைத்தது.இதற்காக நாம் ஓராண்டல்ல..பல கோடி ஆண்டுகள் காத்திருக்கவும் தயார். சும்மா..எடுத்தோம். கவிழ்த்தோம் என்று சித்த மார்க்கத்திற்கு வந்து விட முடியாது. புல்லாகி, பூடாகி, புழுவாகி மரமாகி என்று மாணிக்கவாசகர் சொன்னது போல் பல பிறவி எடுத்து புண்ணியம் செய்தால் தான் அகத்தீசா ! அகத்தீசா !! என்று நாம் குருவின் நாமம் சொல்ல முடியும்.







வேண்டுதல் எப்படி இருக்க வேண்டும்? இதோ..நீங்களே பாருங்கள்.


1. ஆவணி ஆயில்யம் ஆராதனை அழைப்பிதழ்:

மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விகாரி  வருடம்   ஆவணி  மாதம் 12 ஆம் நாள் 29/08/2019 வியாழக்கிழமை  அன்று ஆயில்ய நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் மாலை 5 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.


2. ஆவணி அமாவாசை  மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ்:
 மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் ஆவணி  மாதம் 12 ஆம் நாள் (29.08.2019) ஆயில்ய   நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் மாலை  6:30  மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  மோட்ச தீப வழிபாடு  செய்ய உள்ளோம்.

அனைவரையும் வருக! வருக!! என்று நம் தளத்தின்  சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு;  ராகேஷ் 7904612352

குறிப்பு: பூசைக்கு வருபவர்கள் கட்டாயம்  தங்களால் முடிந்த அளவில்  கருப்பு எள்ளும், நெய்யும் வாங்கிக்கொண்டு வரவும்.


தொடர்புக்கு : 7904612352


ஆடி மாத மோட்ச தீப வழிபாடு மற்றும் ஆடி மாத ஆயில்ய ஆராதனை. ஆடி மாத சதய பூசை என ஒவ்வொன்றும் தனிப்பதிவாக தருகின்றோம்.

 - அடுத்த பதிவில் சந்திப்போம்.


மீள்பதிவாக:-

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment