"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 28, 2019

ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அழகு என்றால் முருகன். அழகு மட்டுமா? இல்லை. அனைத்தும் முருகர் தான். இன்றைய தினம் ஓதியப்பரின் பிறந்தநாள். முருக அடியார்களுக்கு தித்திப்பான நாள். நம் தளத்தின் பதிவுகளை பார்க்கும் போது என்ன! ஒரே முருகன் அருளாக உள்ளது என்று கூட தோன்றலாம். ஆம். இது முருகனின் திருவிளையாடல் தான். ஒரே ஒரு முறை 2017 ல் ஓதிமலை சென்று வந்தோம்.ஆனால் இன்றும் நம்மை இன்புற வைக்கின்றது. ஓதிமலை & வள்ளிமலை என பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.அனைத்தும் அவர் அருளாலே தான். இன்றைய பதிவில் ஒரு முருகன் பாடல் பாட உள்ளோம்.

அனைவரும் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் கேட்டிருப்பீர்கள். கந்த குரு கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் மிக மிக ஞானம் போதிப்பவை. 





உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
 அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்












நம் தளமும் அன்பையே துணையாக கொண்டு பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்பின் ஆழம் தான் அனைத்தும், அன்பே கடவுள்.எளிய சித்தாந்தம் தான். சொல்லக்கூடிய வேதாந்தம் தான். எந்த மார்க்கத்தில் சென்றாலும் அன்பைத் தான் நாம் கைவரப் பெற இருக்கின்றோம். இதற்கு மேல் எளிமையாக சொல்ல முடியாது. நம் தளம் துவக்கிய நாளில் இருந்து நமக்கு உதவிய, தற்போது உதவிக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளை முருக சிந்தனையில் திளைக்க செய்ய விரும்புகின்றோம்.

கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் தாண்டி ஒரு அருமையான பாடலை நாம் கேட்டோம். அனைவருக்கும் தெரிந்த பாடலாக இருக்கலாம். எம்மைப் போன்ற சிறியோனுக்கு இந்த பாடல் புதிது தான். இது போன்ற பாடல்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள்.





பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே

கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம்






அட..மேலே உள்ள இணைப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தால் நமக்கு தெரிவியுங்கள். இந்த பதிவை நாம் வெளியிடும் நேரத்தில் மேலே உள்ள இணைப்பில் உள்ள முருகனின் தலத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

முருகா சரணம்
குமரா சரணம்
குருவே சரணம்
திருவே சரணம்


முந்தைய பதிவுகளுக்கு :-

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment