"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 19, 2019

மனைவிக்கு மரியாதை - கூடுவாஞ்சேரியில் மனைவி நல வேட்பு நாள் விழா - 23.08.2019

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை!

அனைவருக்கும் வணக்கம்.

காதலுக்கு மரியாதை என்று நாம் கேட்டிருப்போம். ஆனால் மனைவிக்கு மரியாதை..இது வெறும் சொல்லாடல் மட்டும் அன்று. இன்று நாம் பார்க்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மனைவிக்கு மரியாதை தராததுவே. மனைவிக்கு மரியாதை கொடுத்து பாருங்கள். குடும்பம் இன்பம் கொடுக்கின்ற இடமாக இலங்கும். இது வெறும் வார்த்தையாக மட்டும் இருக்க கூடாது என்பதற்காகவே அனைத்து மனவளக்கலை மன்றங்களிலும் மனைவி நல வேட்பு நாள் விழா  கொண்டாடப்பட்டு வருகின்றது. 

உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும். 

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

என்று நம் குருபிரான் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அருளியிருக்கின்றார்கள். 


மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரை, பிறந்த ஊரை,.உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள். 






ஓவ்­வொரு கணவன் – மனைவி உறவை உயி­ரிலும் மேலா­ன­தாக மதித்துப் போற்ற வேண்டும்.
உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்­றையும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன­தார அர்ப்­ப­ணித்து, இன்ப, துன்­பங்­களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதி­க­மாக அடங்­கி­யுள்­ளது.தமது பண்­பாட்­டின்­படி பார்த்தால்,பெண்கள் இயற்­கை­யி­லேயே தியா­கிகள் என்று சொல்­லலாம். கணவன் வீட்­டுக்கு வரும்­போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்­நிலை எல்­லா­வற்­றையும் துறந்­து­விட்­டுத்தான் வரு­கி­றார்கள். திரு­மண வாழ்­க­கையைத் தொடங்­கு­வ­தற்கு முன்பே, துறந்து வரக்­கூ­டிய ஒரு இயல்பு அவர்­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றது.இப்­படி எல்­லா­வற்­றையும் துறந்து விட்டு இங்கே அன்பு நாடி வந்த பெண்­ணுக்கு ஆத­ரவு கொடுக்க வேண்­டி­யது அவ­சியம். இந்த உண்மையை ஒவ்­வொரு கண­வனும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.


ஒரு மனைவி என்ற மதிப்பு மட்­டு­மல்ல.. பெண்­மையும், தாய்­மையும் ததும்பும் எல்­லோ­ருக்கும் தர வேண்­டிய அதே மதிப்பு நம் வீட்­டுக்கு வாழ வந்த பெண்­ணுக்கும்  உண்டு என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். கணவன்- – மனைவி உறவில் இந்தப் பண்­பாடும் தியா­கமும் இருந்தால் போதும் அதை­விடப் பெரிய இன்பம் இந்த உல­கத்­தில் வேறு இருக்க முடி­யாது.ஒரு­வ­ருக்­கொ­ருவர் சச்­ச­ரவு இல்­லாத குடும்­பத்­தில்தான் குழந்­தை நன்­றாக இருக்கும். பிரச்­சினை உள்ள குடும்­பங்­களில் அடக்கு முறைக்கு குழந்­தை­களின் சுதந்திரம் பறி­போகும்.

இந்தப் போராட்­டத்தால் குழந்­தையின் உடல்­ந­லமும்,மன­ந­லமும் கெடும். ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழ்­வ­துதான் திருமண பந்தம் என்­பதைப்  புரிந்து கொண்ட வீடு­களில் இந்தப் போராட்டம் இல்லை.விட்­டுக்­கொ­டுப்­ப­தற்குப் பதி­லாக, ஒவ்­வொ­ரு­வரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்­துதான் உயர்ந்­தது” என பிடி­வாதம் காட்­டினால் பிணக்­குதான் வரும்.

கண­வனும்,மனை­வியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்­பாற்ற வேண்­டிய அவ­சி­யத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷ­யங்­களில் எந்தக் குறையும் இருக்­காது.
ஒரு குடும்­பத்தில் கணவன், மனைவி இரு­வரின் உற­வி­னர்­களும்; விருந்­தி­னர்­க­ளாக வர­வாய்ப்­புகள் உண்டு. அவர்­களை ஒத்த மதிப்­போடு இரு­வரும் உப­ச­ரிப்­பது கணவன் – மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உண­வே­யா­யினும் விருந்­தி­னரை உப­ச­ரிப்­பதில் இன்­முகம் காட்­டுங்கள்.
‘இறை­வனே மனைவி வடி­வத்தில் வந்து எனக்குத் துணை­யாக இருக்­கிறான்.’ என கணவன் நினைக்க வேண்டும். மனை­வியும் கண­வனை இப்­படி கடவுளின் வடி­வ­மா­கவே தனக்கு உற­வாகி வந்­த­தாக நினைக்க வேண்டும். இப்­படி ஒரு­வ­ரிடம் இன்­னொ­ருவர் தெய்­வ­நி­லையைக் கண்­டு­விட்டால் போதும்.எத்­தனை துன்­பங்கள் வந்­தாலும் அவற்றை சமா­ளிக்கும் வலிமை கிடைக்கும். இல்­லற வாழ்க்­கையில் யாரும் அனு­ப­வித்து இருக்காத மலர்ச்சி கிடைக்கும்.
இத்தகு சீரும் சிறப்பும் மிக்க விழா கூடுவாஞ்சேரியில் 23.08./2019 அன்று காலை 9 மணி முதல் அருணாசலா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடு நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக.

சென்ற ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் எம் பெற்றோரோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதோ. இதனை விட வேறென்னே வேண்டும்? குருவின் அருகில் எம் பெற்றோர்கள். 


சென்ற ஆண்டில் நாம் தனியாக கலந்து கொண்டோம். எப்போது தவம் செய்தாலும் தவத்தில் இனிய இல்லறம் வேண்டும் என்று சங்கல்பம் மேற்கொண்டோம். இதோ..இந்தாண்டு குருவின் அருளால் மணவாழ்க்கை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த விழாவில் எம் மனைவியோடு கலந்துகொள்ள இருக்கின்றோம். அனைத்தும் குருவருளால் தான் சாத்தியம். 

இணையத்தில் தேடிய போது மிகவும் மகிழ்ந்தேன். 2013 ஆண்டில் கூடுவாஞ்சேரியில் மனைவி நல வேட்பு நாள் விழாவின் துளிகள் கிடைத்தது.இதோ உங்கள் அனைவருக்காகவும் இணையத்தில் இருந்து இதயத்திற்கு பதிவேற்றம் செய்கின்றோம்.






                                                                வரவேற்பின் போது 








                           இந்த விழா பற்றிய விளக்கம் போன்ற பரிமாற்றத்தின் போது 












                                    தம்பதிகள் இதய பரிமாற்றம் செய்து கொண்ட போது 











                                 குருவே சரணம் என கொண்டாடத் தோன்றியது.









கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு என அன்பின் ஆழம், கருணையின் ஆழம் உணர்ந்த போது 
ஒவ்வொரு நிகழ்வினையும் பார்க்கும் போது நாமும் நேரிலே சென்று பங்கேற்றது போல் உணர்கின்றோம்.இந்த பதிவினை நாம் தயார் செய்யும் போது நாம் இந்த காட்சிகளை காண்போம் என்று நினைக்கவில்லை. தினமும் நாம் கூடுவாஞ்சேரி அறிவுத்திருக்கோயிலில் சந்திக்கும் சேகர் ஐயாவினை நாம் இங்கே கண்டு வணங்கி மகிழ்கின்றோம்.மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றோம்.
கூடுவாஞ்சேரியில் 02/09/2018 அன்று காலை 9 மணி முதல் அருணாசலா திருமண மண்டபத்தில் மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் சிறப்பு சேர்க்க இருக்கின்றன.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக.
குரு உயர்வு மதிப்பவர் தம்மை தரத்தினை உயர்த்தி பிறவிப் பயனை நல்கும்.

                                              வாழ்க வளமுடன்  

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-


குரு உரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_54.html

குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html
 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (2) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/2_12.html
 வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_40.html

2 comments:

  1. அருமையான பதிவு தங்கள்
    பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து
      நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

      Delete