"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 26, 2019

சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

முருகா...அழகென்ற சொல்லுக்கு முருகா என்று கேட்டிருப்போம். இதனை உணர ஓதிமலை சென்று தரிசியுங்கள். சித்தனருள் வலைப்பூவிலிருந்து இதோ ஓதிமலை பற்றிய பதிவை அப்படியே இங்கு தருகின்றோம்.


ஒதிமலை பற்றிய சில குறிப்புகளை முன்னரே ஒரு பதிவில் பதித்திருந்தேன்.  சமீபத்தில் ஒரு நாள் என்னவோ யோசனை வர மறுபடியும் அதை ஒரு முறை படித்துப் பார்த்தேன்.  அப்போது ஒரு எண்ணம் உதித்தது.  அகத்திய பெருமான் ஒதிமலையை பற்றி என்ன சொல்லுவார்.  தற்போது அவர் யாருக்காகவும் நாடியில் வந்து சொல்வதில்லையே.  நம் அனைவருக்கும் ஒதிமலையின் மகத்துவத்தை பற்றி அகத்தியரின் அருள் வாக்கினால் அறியும் வாய்ப்பு கிடைக்குமா?  என்றெல்லாம் தோன்றியது. எப்போதும் போல அவரிடம் வேண்டிக் கொண்டேன்.

"சித்தன் அருள்" தொடரை வாசிக்கும் அகத்தியர் அருள் பெற்ற ஒரு அடியவர், திரு குரு மூர்த்தி என்பவர் அகத்தியர் நாடியில் வந்து ஒதி மலையின் புகழை சொன்னதாக சொல்லி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.  அதை படித்ததும், அந்த மலையின், ஒதிப்பரின் புகழை படித்து யான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கில் கீழே தருகிறேன்.  அதற்கு முன் திரு.குருமூர்த்திக்கு மிக்க நன்றியுடன்......... அகத்தியரின் அருள் வார்த்தைகளை கீழே தருகிறேன்.

ங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி
சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி
சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி
சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி
சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி
சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி
சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்,
பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி
சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி
அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி
நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி
கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள்ஓதினாலும்,
கட்டிய மனைவி ஒதுகிறாளே என்று தாய்ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதைஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு.சுயநல நோக்குண்டு
பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக 
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.
ஞானத்தை நல்கும் கிரி
அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி
பேதத்தை நீக்கும் கிரி
வேதத்தை உணர்த்தும் கிரி
சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி
நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி
வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி
எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி
கர்ம நிலைகளை மாற்றும் கிரி
அக உளைச்சல் ஒழிக்கும் கிரி
பேதம் காட்டா வேத கிரி
ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி
இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி
அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி
ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி
ஓதும் கிரி அது ஓதிய கிரி
பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி
ஓம் நமகுமாராய !

 இங்கு நாம் அகத்தியரின் அருளை பகிர்ந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து தமிழ் அமுதம், அருளமுதம் பருகுங்கள்.

மீள்பதிவாக:-

 திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment