"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 15, 2025

சுவடி ஓதும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகி ராமன் அனுபவித்த உண்மை - சித்தன் அருள் - 1950 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு பகுதி 12!

                                                                இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 12

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.





சுவடி ஓதும் மைந்தனின் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவித்த உண்மையை அனைவருக்கும் எடுத்து கூற ஆரம்பித்தார் !! 

(எவ்வளவு எண்ணங்கள் உயர்வாக இருந்தால் வாழ்க்கையில் இறைவனே நேரடியாக உதவுவார் என்ற உண்மை) 

நான் என்ன பத்தியே சொல்றேன்.!!

இது புரியும். எல்லாமே படிச்சேன். முதுகலை பட்டப் படிப்பு!!! வேலை இல்லை, ஒன்னும் இல்லை, எதுவுமே இல்லை.  எங்களுக்கு எதுவும் இல்ல. அம்மா, நான் (இருவர் மட்டும்) வீட்ல இருக்கிறோம். நிறைய கோயிலுக்கு எல்லாம் போயிட்டே இருக்கிறோம். அப்ப லைஃப் அவ்வளவுதான். நெனச்சேன்   அப்ப அம்மாவும் சொல்றாங்க, ஏன்டா, இவ்வளவு படிச்ச. உங்க அப்பா இருக்கிற சொத்தை எல்லாம் எல்லாம் விட்டுட்டு, புண்ணியம் பண்ணிட்டு, (நமக்கு) ஒண்ணுமே இல்லாம ஆச்சு. 

என்னடா?? நீயும் இப்படி இப்படி சாமி கோயில் ன்னு இறைவனே நினைச்சுக்கிட்டு இருக்கின்றாய் 

 இறைவன் நம்மள இப்படி (கஷ்டப்படுத்துகின்றார்) என்று எங்க அம்மா அழுகுறாங்க. 

அம்மா நீங்க அழுகாதீங்கமா? அகத்தியர் இருக்காரு, இறைவன் இருக்காரு. கண்டிப்பா ஏதோ ஒரு ரூபத்துல வந்து நம்மள (நன்மைகளை செய்து) கூட்டிட்டு போவாருமா. நீங்க அழுகாதீங்கமான்னு சொல்றேன்.

இருந்தாலும்  அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு. 

இல்லடா, நான் இறைவன் எனக்கு சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டேன் 

உங்க அப்பாவும் இறைவனுக்காகவே வாழ்ந்துட்டு போனாரு. எல்லோருக்கும் நம்பி வந்த எல்லோருக்கும் எல்லாமே பண்ணாரு, எல்லாமே வித்துட்டாரு, எல்லாமே பண்ணிட்டாரு.

இப்ப நம்ம கையில் எதுவும் இல்லை

ஆனா உன்னை யாருடா கவனிப்பாங்க?

இப்படி எல்லாம் எங்க அம்மா கேள்வி கேட்டாங்க.

தினமும், நைட்ல எங்க அம்மா ஒரு மணிக்கு எழுந்து அழுதுட்டு இருப்பாங்க.

அப்ப (நான்) என்னமா, அம்மா (ஏன் அம்மா இரவில் எழுந்து உட்கார்ந்து அழுகின்றீர்கள் என்று)  ஒரு நாளைக்கு (நான் இதை) கவனிச்சுட்டேன். ஏன்மா அழுதுவிட்டு இருக்கீங்க இப்படி ராத்திரி ஒரு மணிக்கு ன்னு சொன்னேன். 

ஏன்டா, உங்க அப்பா பாக்குறதுக்கு எத்தனை பேர் வந்தாங்கடா, எத்தனை பேருக்கு (உன் அப்பா) நல்லது செஞ்சாங்கடா. ஆனா உன்னை கவனிக்கிறதுக்கு (யாரும் இல்லையே)  நீ எப்படிடா பிழைப்பாய்? எல்லாமே ஏமாத்தும் உலகம்டா.

நம்ம சொந்த பந்தம் எல்லாம் விட்டு போச்சு. யாருமே இல்லடா. நீ எப்படிடா பொழைப்பேன்னு சொல்லிட்டு எங்க அம்மா. 

அம்மா, அழுகாதீங்கம்மா. ஏதோ வேலைக்கு போறேன், ஏதோ பண்றேன். கவலைப்படாதீங்கம்மா. இறைவன் இருக்கிறார். 

இல்லடா. ஊர் எல்லாம் சொல்றாங்க. (இவன்) அப்பாதான் எல்லாருக்கும் புண்ணியம் பண்ணி எல்லாம் இழந்துட்டாரு. (மகன்) இவன் கோயில் கோயிலா போயிட்டு இருக்கிறான். இவன் பைத்தியம் தான் ஆகப்போறான்னு சொல்றாங்கடா எல்லாரும்.  

அம்மா அது மாதிரி எல்லாம் கவலைப்படாதீங்கமா. கண்டிப்பா இறைவன் வந்து நல்லது பண்ணுவாருன்னு அம்மாவுக்கு நான் தைரியம் சொன்னேன். 

அப்புறம் ஒரு நாள் நான் கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் எங்க அம்மா ஓ என்று அழுவுறாங்க. 

ஏன்டா, இது மாதிரி பண்ற? எல்லாருமே  ஏளனமாக பேசுறாங்கடா. வேணாம்டா, உங்க அப்பா செய்த புண்ணியமே ஒன்னும் அது காக்கலடா நம்மள.  யாரையும் காக்கலடா. வேணாம்டா. அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க.

அம்மா, இருங்கம்மா. கவலப்படாதீங்க அம்மா அப்படின்னு அம்மா கிட்ட சொல்லிட்டு நான் கோயிலுக்கு கிளம்பிட்டேன் 

(எனக்கும்) அழுகை வருது. என்னடா,??? இது??.

அம்மா கூட இப்படி சொல்றாங்களேன்னு நினைச்சுகிட்டு கோயிலுக்கு போனேன் !!

பஸ்ல ஏறி நெனச்சுக்கிட்டே அழுதுகிட்டே

நேரா திருவானைக்காவல் கோயிலுக்கு போனேன் 

அங்கே போய் கடவுளிடம்

நான் ஒண்ணுமே வேண்டல.

என் கண்ணுல அழுகை!!!

எங்க அம்மா அழுததே. அதே மாதிரி கடவுள் முன்னாடி அழுவேன் 

எதையும் வேண்டிக்கல

என் கண்ணுல தண்ணி (தாரை தாரையாக கண்ணீர்)  வருது.

என்ன வேண்டிக்கிறதுன்னு தெரியல.

எனக்கு என்ன வேண்டிக்கிறதுன்னே தெரியல!!!

(இறைவன்) அவர்கிட்ட நான் என்ன கேட்டேன்.???

இனிமேல் எதுவுமே ஒண்ணுமே இல்ல. நான் என்ன கேட்க போறேன்னு சொல்லிட்டு அப்புறம் ஒரே ஒன்னு தான் வேண்டிக்கிட்டேன். 


“””””அப்பா,  படைச்சா இனிமேல் என்ன மாதிரி யாரையும் படைக்காதப்பா.

தயவுசெய்து!!!


(அதாவது சுவடி ஒரு மைந்தன் சிறுவயதில் இருந்து வறுமையில் வாடி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாலும் பாதை மாறவில்லை இறைவனையே பிடித்துக் கொண்டு சென்றார் அவருடைய தந்தை திரு ராமராஜா அவர்களும் இறைபக்தி கொண்டு நாடிவரும் அடியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தன்னுடைய சொத்து பத்துக்களை எல்லாம் விற்று அவர்களுக்காக சேவை செய்து விண்ணுலகம் சென்று விட்டார் அதன் பிறகு... உடன் பிறந்த சொந்தங்களும் கைவிட சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவும் அவரது தாயும் மாத்திரம்.. வீட்டில் வாழ்ந்து கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்! ஒரு கட்டத்தில் தாய் அவர்கள் வெறுத்து விட்டார்கள் இப்படி இறைவா இறைவா இறைவா என்று உன் தந்தையும் இப்படியே இருந்து சென்று விட்டார் நீயும் இப்படியே இருக்கின்றாயே இறைவன் நம்மை திரும்பி கூட பார்க்கவில்லையே இந்த பொல்லாத உலகத்தில் எப்படி நீ வாழ போகிறாய் என்று ஒரு தாயின் மனதில் இருந்து மனம் விரும்பி அந்த அழுகை வெளிப்பட்டது இதையெல்லாம் நினைத்துக் கொண்டே எந்த கஷ்டம் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பாதை மாறாமல் நேர்மையாக உழைத்து தான தர்மங்கள் செய்து கொண்டு தன்னுடைய கஷ்டத்தை பிறருக்கும் வெளிப்படுத்தாமல் ஆலயம் ஆலயமாக சென்று இறைவன் இறைவன் என்று அவருடைய பயணம் இருந்தது அப்படியே ஒரு கட்டத்தில் தாய் அழுவதை கண்டு மனதிற்குள்ளே ஒரு மாறாத சோகம் ஏற்பட்டு திருவானைக்காவல் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் அப்பா போதும் நீ கொடுத்த கஷ்டங்கள் போதும் இந்த உலகத்தில் அனைவரும் எப்படி எப்படியோ இருக்கின்றார்கள் என்னை போன்ற பிறப்பு என்னை போன்ற பிறவியை இனிமேலும் நீ படைத்து விடாதே தயவு செய்து என்னுடைய பிறப்பும் பிறவியும் மட்டுமே கடைசியாக இருக்கட்டும் இதுபோன்று யாருக்கும் பிறவியை தந்து விடாதே படைத்து விடாதே என்று இந்த ஒன்றை மட்டும் வேண்டிக் கொண்டு வந்துவிட்டார் )

தயவு செய்து”””” என் கண்ணுல தண்ணி அப்படியே வழியுது. 

“””””படைச்சா என்ன மாதிரி தயவு செய்து இனிமேல் படைக்காதப்பா.”””””

அடுத்த பிறப்பிலாவது“””” நல்லா  இருக்கிற இருக்குற ஆளா படைச்சிருப்பா.

கஷ்டமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் பிறப்பாக படைச்சிருப்பா!!!

 என்ன மாதிரி எல்லாம் இனிமேல் படைக்காதப்பா. இதுதான் வேண்டிக்கிறேன். “””””

(உயர் எண்ணங்களால் இறைவனால் ஜீவநாடியை பெற்ற நம் அன்பு சுவடி ஓதும் மைந்தன் ) 

அடுத்து பாதி மாறுது பாருங்க வாழ்க்கை.  (ஜீவ நாடி கிடைத்தது) 

ஆமா, இதெல்லாம் உண்மை. 

(சுவடி போதும் மைந்தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மட்டும் தான் இது. அவருக்கு பெற்ற இறை அனுபவங்கள் அவருக்கு கிடைத்த வழிகாட்டுதல்கள் வாழ்க்கையை நினைத்து கங்கையில் நீராடிய பொழுது அவர் அழுத கண்ணீர் ஈசனை சென்றடைந்த நிகழ்வு இதை ஈசனே வாக்கில் நேரடியாக உரைத்த அனுபவங்கள் எல்லாம் சிறிது சிறிதாக வெளிவரும்... ஏனென்றால் இங்கு கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது நேர்மையாக உண்மையான பக்தியை காட்டினால் இறைவனே நம்மை தேடி வருவார் என்பதற்கு உதாரணம் திரு ஜானகிராமன் ஐயா சுவடி ஓதும்மைந்தன்!!!

கடும் சோதனைகள் கடும் கஷ்டங்கள் வந்தாலும் இறைபக்தியை கடைசி வரை கை விடவில்லை...இதனால் இறைவனே தேடி வந்து ஆட்கொள்ளப்பட்ட அனுபவத்தின் ஒரு உதாரணம் இது இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

இப்படி இவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நேர்மையாக இருந்து இறைவனே கதி என்று பிடித்துக் கொண்டதால் தான் ஜீவ நாடியின் மூலம் அனைத்து தெய்வங்களும் வரும் வரம் பாக்கியம் இறைவனை தேடி வந்து அருளிய சத்தியம் நாம் அனைவரும் அறிந்ததே.. இது நம்முடைய பாதை எப்படி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சரியான உதாரணமாக இந்த சத்சங்கத்தில் அனைவருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார்)

அதனால கஷ்டம் வருது. கஷ்டம் வருதுன்னா நொந்து போகக்கூடாது  வாழ்க்கையில. அதை சொன்னாரு பாருங்க. அகத்தியர் என்ன சொன்னாரு. கஷ்டத்தை கஷ்டத்தால் எதிர்கொள்ளனும் என்று. இன்பமா எதிர்கொள்ளனும். இருக்கணும். உங்களுக்கு வந்து தரவில்லை என்றால் என்ன? இன்னைக்கு என்ன சொன்னாரு பாருங்க. தரவில்லை என்றால் என்ன? அதுக்கு வந்து நீங்க செலக்டட் பீப்பிள் (selected people ) இல்ல. ஐயா, உங்களுக்கு திருமணம் ஆகலையா? அதுக்கு  நீங்க தகுதியான ஆளு இல்ல. இப்ப வேலைக்கே போறோம். இன்டர்வியூ வைக்கிறாங்க. நீ போடான்னு சொல்லிடுறாங்க. 

மனிதனே அது மாதிரி சொல்றான். ஏன் (என்றால்) நீங்க அதுக்கு தகுந்த ஆள் இல்லை. அவன் சொல்றது கேட்டாதான் (வேலை). இப்ப கம்ப்யூட்டர்ல இது பண்ணுமா? அது பண்ணுமா? ( என்று முதலாளி) சொன்னால், நீங்க அது பண்ணீங்கன்னா தான்,  அவர் உன்னை செலக்ட் பண்ணுவார். 

(அலுவலகத்தில்) மனிதன் சொல்றதே நீங்க கேக்குறீங்கன்னா இறைவன் சொல்றது கேட்கணும்மா. 

(அப்படிக் கேட்காமல் இருப்பது) இதுதான் மனிதனோட முட்டாள்தனம்ன்றது. அதனாலதான் சொல்றாரு. அப்ப உங்களுக்கு கல்யாணம் கேக்குறீங்கன்னா , நீங்க அதுக்கு தகுதி இல்லை. அந்த தகுதியை வளர்த்துக்கணும். 

ஏன் கல்யாணம் ஆகலன்னு சொல்லி நம்ம யோசிக்கணும். அதே மாதிரி கஷ்டம் கஷ்டம்னு சொல்றீங்க. ஏன் கஷ்டம் வருது? ஐயா, சொல்லுங்க. ஐயா. 


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

அதான் குருநாதர் ஐயா சொல்றாரு. எதுக்காக காரணம் யோசிக்கணும். நம்ம வெளியில இருந்து பார்க்கிறோம். அவர் திருமணத்துக்கு சரி, ஒரு வேலை கிடைக்க. அவருக்கு எல்லா தகுதியும் இருக்கு. படிச்சு முடிச்சிருக்கிறாரு. நல்லா சம்பாதிக்கிறாரு. சரிங்களா? நல்ல குடும்பத்துல இருக்கிறாரு. இவருக்கு ஏன் திருமணம் அமையல? திருமணம் செஞ்சு வைக்கணும். அவர் நினைக்கிறார் எனக்கு திருமணம் ஏன் ஆகல? நான் சீக்கிரம் திருமணம் செய்யணும்னு நினைக்கிறான். ஆனா நமக்கு தெரியாத காரணம் ஏதோ ஒன்னு பின்னாடி இருக்கு. திருமணமோ வேலையோ.

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொருவரும்  ஒரு குறிக்கோளாக வாழ வேண்டும். பின் யார் அவ்வாறாக வாழ்கின்றார்கள்?

அவ் குறிக்கோளோடு வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அனைத்தும் செய்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே ஒரு எய்மோட வாழனும். எய்ம்னா தெரியுங்களா? உங்களுக்கு லட்சியத்தோட வாழனும். லட்சியத்தோட யார் வாழ்றாங்களோ, அவங்களுக்கு மட்டும்தான் இறைவன் கொடுப்பாரு. லட்சியம் இல்லாத மனிதனுக்கு ஒன்னும் கொடுக்க மாட்டார். 

குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட உங்கள் தேவைகளை அழகாக யானே பூர்த்தி செய்வேன். கவலை விடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க யார் யாரெல்லாம் இங்க வந்திருக்கீங்களோ, உங்கள் கவலைகளை தானாகவே குருநாதரே சரி பண்ணுன்னு சொல்லி இருக்காங்க. அம்மா, 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்காநகரம் மீனாட்சி தாயார் ஆட்சி செய்யும் மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7






அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1950 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு பகுதி 12! - https://tut-temples.blogspot.com/2025/10/1950-12.html

சித்தன் அருள் - 1799 - அன்புடன் அகத்தியர் - குமாரவள்ளி முருகன் திருக்கோயில். சுண்டேகுப்பம். காவேரிப்பட்டணம்! - https://tut-temples.blogspot.com/2025/10/1799.html

சித்தன் அருள் - 1175 - அன்புடன் அகத்தியர் - சஞ்சீவிராயன் மலைக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/10/1175.html


சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html

சித்தன் அருள் - 1191 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1191.html

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html

 பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

 அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment