"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, July 24, 2024

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024

                                                             இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தற்போது ஆடி மாத வழிபாட்டில் நாம் இணைத்துள்ளோம். சிவனும்,சக்தியும் நம் உடலில் இருப்பதாய் சரிபாதியாய் அர்த்த நாரீஸ்வரர் உருவில் நாம் காண்கின்றோம்.சிவம் பெரிதா? சக்தி பெரிதா? என்று கேள்விகள் தொடுப்பதைவிட்டுவிட்டு,சிவம் இல்லையேல் சக்தி இல்லை.சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே அர்த்த நாரீஸ்வரர் உருவின் தாத்பரியம்.மேலும் இந்த உடலில் வலதுபக்கம் சிவன் என்றும், இடப்பக்கம் சக்தி என்றும் எண்ணலாகா.நம் உடலின் இயக்கத்தில் ஒரு சக்தி பெறுகின்றோம்.அந்த ஆற்றல் திணிவு தான் சக்தி. நாம் தியான யோகத்தில் அல்லது ஒரு அமைதி நிலையில் ஒரு உணர்வு பெறுகின்றோம் அல்லவா? அந்த உணர்வே சிவம். இத்தகு சிறப்பு பெற்ற நம் உடலின் இயக்கமே சிவசக்தி தரிசனம்.

இந்த சக்தி தரிசனத்தை பெற ஆடி மாதம் சிறந்து.ஏனெனில் நம் பண்பாடு,கலாச்சாரம் மற்றும் வானியல் இணைந்த இயற்கை மாறுபாடுகள் வைத்து,ஆண்ட்ரே நம் முன்னோர்கள் ஆடி மாதத்தை  "சக்தி மாதம்" என்றே வரையறை செய்தனர்.ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.

மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.


தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடி விரதம், ஆடித் தள்ளுபடி என ஆடி மாதம் என்பது மக்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்தது. இத்தகு மகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும். அந்த வகையில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை(28.07.2024) அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.




அன்றைய தினம் 108 பால் குடம் பெருவிழா, கூழ் வார்த்தல் நடைபெறும்.மேலும் அன்றைய தினம் மாலை சந்தனக் காப்பு அலங்கார தரிசனம் நாம் காணலாம். 

ஆடிக்கூழ் 

உடல்சூட்டினைத் தணித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது கூழ். எனவேதான் ஆடி மாதத்தில் வேப்பிலையும், கூழும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சிறப்பான நாட்களாகும். இந்த நாட்களில் அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றி கொண்டாடுவார்கள்.


இத்தகு சிறப்புமிக்க ஆடி மாதத்தை நாம் தவற விடலாமா? கிராம வாழ்க்கையில் இருந்து நகர வாழ்க்கைக்கு நாம் நகர்ந்தாலும், நாம் நம்மைச் சுற்றியுள்ள காவல் தெய்வங்களை மறக்கலாகாது.அனைவரும் அவரவர் இருப்பிடம் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு இந்த மாதம் முழுதும் செவ்வாய்,வெள்ளி அன்று செல்லுங்கள். தங்களால் முடிந்த அளவில் ஏதேனும் உதவி செய்யுங்கள்.ஏனெனில் அவள் இட்ட பிச்சையில் தான் இந்த வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ளது.கோவில் கைங்கர்யத்தில் கண்டிப்பாக பங்கு பெறுங்கள்.தங்கள் பகுதியில் உள்ள ஆடி  மாத விழாக்கள் பற்றிய செய்திகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவற்றை நாம் இங்கே இனிவரும் பதிவுகளில் பகிர்வோம்.

வாருங்கள்.அம்மன் புகழை ஒலிக்கச் செய்வோம்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_31.html
 
காவிரித் தாயே போற்றி! போற்றி!! - ஆடிப் பெருக்கு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_5.html

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

No comments:

Post a Comment