"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 31, 2022

மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ் என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று  மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.





வேலூரை அடுத்த சைதாப்பேட்டையில் கி.பி 1850ஆம் ஆண்டு பங்குனி திங்கள் 27 ஆம் நாள் புதன்கிழமையில் பிரதமைதிதியோடு கூடிய ரேவதி நட்சத்திரத் தினத்தில் ஸ்ரீ தோபா சுவாமிகள் ஜீவசமாதியானார் . இந்த ஜீவ சமாதி வேலூர் சைதாப்பேட்டை 209 மெயின்பஜார் ரோட்டில்  அமைந்துள்ளது. ஸ்ரீ தோபா சுவாமிகள் மடம் எது எனக்கேட்டால் கூறுவார்கள்.

திருச்சிராப்பள்ளியில் வேளாளர் குலத்தில் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அருளால் சிவபாத பிள்ளைக்கும், சிவகாமி அம்மைக்கும் பிறந்தவர் தான் இன்றைய தோபா சுவாமிகள் என்கிற இராமலிங்கம்.

சிறு வயதிலேயே ஆங்கிலேய அரசின் காலாட்படையில் பணி செய்து வந்தார். தோபா சுவாமிகளின் பெற்றோர் மூப்பின் காரணமாக இறந்து விட தோபா சுவாமிகள் காலாட்படையில் இணைத்துக் கொண்டார் சுவாமிகள் திறமையை கண்டு வியந்து ஆங்கிலேயஅரசு சென்னைக்கு அனுப்பியது. இடையறா சிவபக்தி, முருக பக்தியும், முருகன் மேல்தீவிர பற்றும் கொண்டவராய் இருந்தார் .

திரு முருகப்பெருமானின் மீது “அருட்பா” என்ற பாடலைப்பாடியுள்ளார் குருவருள் இன்றி யோக கலையிலும்,சிவபக்தியிலும் தெளிவுற முடியாதென உணர்ந்தார். ஞானசம்பந்தரை நினைத்து தியானம் மேற்கொண்டார் .




சுவாமிகளுக்கு சம்பந்தர் காட்சியளித்து ” சிவம் மட்டுமே உண்மையானதால் சிவத்தைத் தொடர்க” என்றருள் புரிந்தார். . சம்பந்தரின் அருள் பெற்ற சுவாமிகள் எல்லையற்ற ஆனந்தமடைந்தார் ..இந்நிலையில் எதிரி நாட்டுடன் போர் புரிய அழைப்பு வர, பணியில் இணைந்தார். எதிரி நாட்டுடன் போர் புரிந்த பல அற்புதங்கள் செய்து போரில் அரசுக்கு வெற்றி பெற வைத்த சுவாமிகளை ஆங்கிலேய அதிகாரிகள் தேடினர் ஆனால். அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து தியானத்தில் “தோ ” “பா ” “தோ” “பா” என்ற வார்த்தை மந்திரத்தை உச்சரித்து வந்தார் சுவாமிகள். எதிரிப்படை வீழ்ந்ததை தளபதி ஸ்வாமிகளிடம் விளக்க நடந்தது இறைவனின் திருவிளையாடல் எனப் புரிந்துக் கொண்டு வணங்கியது மட்டும் அல்ல. சுவாமிகளின் அதீதமான சக்தியை உணர்ந்து வணங்கினார்கள்.அன்றில் இருந்தே இராமலிங்கம் என்கிற ஞானி ஸ்ரீ தோபா சுவாமிகள் என அழைக்கபட்டார்.

“தோடுடைய” என்ற வார்த்தையைக்குழந்தை சம்பந்தர் தனக்கு திருவமுது ஊட்டச் சொன்னது ஐயனே,அம்மையாரும் திருவமுது ஊட்டியவர் இருவரையும் ஒரு சேர அம்மையப்பராகக் குறித்துவிட்டார் ஒரு சொல்லில்.சம்பந்தரைக் குருவாக கொண்டு சுவாமிகள் தோடுடைய என்ற பாடலையே மந்திரமாக உச்சரித்து வந்ததால் தோபா சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார் .

ஈசனையும் தம் குரு சம்பந்தரையும் எண்ணி துறவறம் மேற்கொண்டு. பல த்தலங்கள் சுற்றி வந்தார் .ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார புருஷர் ஆவார் . ஒரு நாள்திருவெற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்திருந்தார் .

அந்த தெருவில் போவோர் வருவோரின் பாவங்களை தம்மனக்கண்ணால் கண்டு ” இதோ நாய் போகிறது ” என்பார்கள்மற்றொருவர் கத்துவதை கண்டு பேய்,கழுதை கத்துகிறது எனக்கூறிக்கொண்டு இருப்பார். இது அங்கிருந்தோரை சுவாமிகளை ஆச்சர்யர்த்துடன் பார்க்க வைத்தது.

அவ்வழியே ஸ்ரீ வடலூர் இராமலிங்க அடிகளார் வருவதைக் கண்டு தோபா சுவாமிகள் அடிகளாரைப்பார்த்து இதோ “மனிதர் வருகிறார் ” எனக்கூற அங்கிருந்தோர் இதைக்கேட்டு திகைத்து விளக்கம் கேட்டனர்.மற்றோரெல்லாம் மனித உருவில் உலவும்மிருகங்கள் இவர் மட்டுமே மனித உருவில்வந்த மகான் என்றார் .

சுவாமிஒரு சித்தர் என்பதை உணர்ந்து அறிந்த அடிகளார்அவரிடம் அருகே அமர்ந்து சுவாமிககளுடன் சந்தோஷமாக பேசி உறவாடி விட்டு கிளம்பினார் .

அந்த நேரத்தில்தோபா சாமிகளை சுட்டி காட்டி ஒருவர் ” இவர் யாரென வினவ ” இவரும் நானும் ஒன்று தான் வணக்கத்திற்குரியவர், இவர் ஆடை துறந்த நிர்வாண புருஷர் ,நான் வெண்ணிறயாடைகளைமட்டுமே அணிகிறேன் . இருவரிடையே ஆடையணிந்த நிலையும், ஆடையற்ற நிலையும் மட்டுமே வித்தியாசம் எனக்கூறி பயணித்தார் .

ஒரு நாள் முகமதியர் வசிக்கும் வீதி வழியே நிர்வாணமாய் நடந்து சென்றார்.இவரைப்-பார்த்த முஸ்ஸீம் ஒருவர் இவரை சித்தர் என அறியாது தன் வேலைக்காரனிடம் சுவாமிகளை துரத்தச்சொன்னார் .

ஓர் கோணூசியை தோபா சுவாமிகளின் மீது வேலைக்காரன் விட்டெறிய. அது சுவாமிகள் மீது படாமல் விட்டெறிந்த வேலைக்காரன் வயிற்றிலே குத்தியது. அவன் ஊசியை பிடுங்க முடியாமல் கத்த அப்பகுதியில் மக்கள் கூடினர். விபரம் தெரிய வர எல்லோரும் இவர் அதிக தெய்வீகத்தன்மை கொண்டவர் என அறிந்தனர் .

பின் ஊசியை விட்டெறியச்செய்த முகமதிய அன்பர் மன்னிக்க வேண்டினர்.பின் சுவாமிகள் மேல் பற்றுகொண்டு சுவாமிகள் பெயராலேயே “தோபா மசூதி ” ஒன்றை நிறுவியதாக வரலாறு. சென்னையில் உள்ள தோபா மசூதி சான்றாகும் .

இவ்வாறு சித்துகள் பல செய்த சுவாமிகளுக்காக பக்தர்கள் கூடி ” தோபா சுவாமிகள் பரிபாலன சங்கம் “ஒன்றை சென்னை மயிலாப்பூரில் நிறுவினர் . வேளச்சேரிக்கு சென்று சிதம்பரம் சுவாமிகளுக்கு ஞான திருஷ்டி வழங்கினார் .

ஓர் முறைஒரு காவாலாளி சுவாமிகளை ஏளனம் செய்து கையை ஓங்கிட கை செயல்படாமல் நின்று போனது. தான் செய்த இழிசெயலை உணர்ந்து மன்னிக்குமாறு வேண்ட அந்த காவலாளிக்கு மன்னிப்பு அளித்ததோடு கைகளை சரிசெய்தார் சுவாமிகள் .ஓர் முறை வேளச்சேரி வந்த சுவாமிகள் நடு நிசியில் ஓர் குயவர் வீட்டு வாசலில் திண்ணையில் அமர்ந்து அருட்பெரும் சோதியாய் ஆன்ம ஒளிபரப்பி நிற்க அப்போது .

நடு நிசியில் அவ்வீட்டு பெண்மணி வெளியே வர சுவாமிகள் ஜோதிப்பிழம்பாக ஒளி பெருக்கி நின்றார்.அப்படி நிற்க கண்டு அதிர்ச்சி முகம், ஆச்சர்யமும், பயத்துடன் உள்ளே சென்று கணவரிடம் விவரம் சொல்லி அழைத்து வந்து காண்பிக்க அங்கு வந்து பார்க்க சுவாமிகளை காணவில்லை .

தமக்கு அப்பெரியோரை காண பாக்கியமில்லையே என்றெண்ணி வருந்தி தேட ஆரம்பித்தனர்.பின் அத்தம்பதிகள் ஓரு வழியாக சுவாமிகளைச் சந்தித்தனர் .

அப்போது சுவாமிகள் உங்களுக்கு என்ன வேண்டுமென கேட்டார்.அதற்கு அவர்கள் தங்களுக்கு குழந்தைப்பேறு வேண்டுமெனக்கேட்க சுவாமிகள் தம் சட்டியில் இருந்த சோற்றை அத்தம்பதிகளை ஆசிர்வதித்து உண்ணச்செய்தார் .

பின் உங்களுக்கு மகன் பிறப்பான் அவன் சித்தனாக வளருவான் என்றார் சுவாமிகள். அத்தம்பதிகள்மிகுந்த சந்தோஷத்துடன் சென்றனர் . பின் அப்பெண்மணி கருவுற்று ஓர் அழகிய ஆண்மகனை ப்பெற்றார் .

அக்குழந்தை பின்னாளில் துறவறமேற்று “ஏகாம்பரசிவயோகி” என்ற நாமத்துடன் முக்தி அடைந்தாராம் . இப்படி பல அற்புதங்கள் சித்துக்கள் செய்தார்.

இந்த சமயத்தில் சீடராக சித்த நாத சுவாமிகள் என்பவரை ஏற்றுக்கொண்டார். இவரே தற்போதுள்ள மடத்தின் முதல் மடாதிபதி. ஒரு நாள் தம் சீடர் சித்த நாத சுவாமிகளை அழைத்து தாம் ஜீவசமாதி அடையப் போவதைக் கூறி அதற்கான ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். தம் சக்தியை இச் சிவலிங்கத்தில் ஏற்றிவிட்டதால் .இனி இச்சிவலிங்கமே தோபா சுவாமியாகும் எனக்கூறி தம் சீடர் சித்த நாத சுவாமிகள் அமைத்த ஜீவசமாதி குகைக்குள் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து ஸ்ரீ தோபா சுவாமிகள் ஜீவ சமாதியானார் . ஏராளமான அன்பர்கள் சிவனடியார்கள் புடை சூழ தேவார திருப்பதிகங்கள் பாடி தோபா சுவாமிகளை அபிஷேகித்து அக்குகைய மூடினர் .

ஸ்ரீதோபா சுவாமிகள் கூறியது போலவே ஓர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர் . அண்ணாமலை அண்ணலின் திருவடிகளுக்கு சமர்ப்பணம். என் குருநாதர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

ஸ்ரீதோபா சுவாமிகள் பற்றி பேசுவதென்றால் இந்த ஒரு பதிவு போதாது. பதிவின் முதலில் குருபூஜை அழைப்பிதழ் பகிர்ந்து உள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் ,திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

அருநிறை கடலே! கற்பகக் கனியே! அளவிலா இன்பசா கரமே!

குறுநிறை மணியே! தொளைபடா முத்தே! கோதிலா நற்குண மணியே!

பொருண் மலி சைவதீபமே என்று போந்தனன் விரைந்தருள் தெய்வத் 

தருநிகர் பவர்சேர் சைதைவாழ் தோபா சாமியே ஞானநா யகனே !

குருவே சரணம்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Tuesday, March 29, 2022

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - 29.03.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி மாத சதய நட்சத்திரம். இன்று பகல் 12  மணி முதல்  நாளை காலை  11 மணி வரை   சதயம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் தண்டியடிகள் நாயனார்  குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார்,  அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், காரைக்கால் அம்மையார்  பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள்.அதுபோல்  இன்று நாம்  தண்டியடிகள் நாயனார் பற்றி அறிய உள்ளோம்.

எம்பெருமானின் அருளால் கண்பார்வையைப் பெற்ற நாயன்மார் தண்டியடிகள் நாயன்மார். சோழநாட்டில் திருவாரூர் என்னும் ஊரில் பிறந்த இவர் சிறுவயது முதலே எம்பெருமானை மனக்கண்ணில் கண்டு பக்தியுடன் விளங்கினார்.

தண்டியடிகள் வாழ்ந்த காலத்தில் சமணர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. அவர்களது மதத்தைப் பரப்பும் பொருட்டு அவர்கள் செயல்பட்டார்கள். சைவ தொண்டர்களுக்கும் இடையூறுகள் விளைவித்தார்கள். தண்டியடிகள் எம்பெருமானை நினைத்து நீராடும் குளத்துக்கு அருகில் சமணர்கள் மடங்களைக் கட்டி வந்தார்கள். பெருகிவரும் கூட்டம் குளத்தை மூடிவிடுமோ என்று அச்சம் கொண்ட தண்டியடிகள் குளத்தை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

கண்ணற்ற நிலையிலும் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாளத்துக்கு கயிறுகள் நட்டு மண்ணை வெட்டி கூடையில் எடுத்து வந்து கொட்டினார். இதைக் கண்ட சமணர்கள் இவரையும் ஏளனத்துக்கு உள்ளாக்கினார்கள். நீங்கள் கண்பார்வை அற்றவர்கள்.  மண்ணைத் தோண்டி கொட்டுவதால் குளத்தில் இருக்கும் ஜீவராசிகள் இறந்துபோக வாய்ப்புண்டு என்றார்கள்.

அறத்திற்கு செய்யும் புறம்பான செயலை செய்துகொண்டிருக்கிறாய் என்று சமணர்கள் சொன்னாலும் ஜீவ ராசிகளைக் காக்கும் பொறுப்பு எம்பெரு மானுக்கே உரியது  அதனால் யாருக்கும் ஏன் உங்களுக்கும் கூட நல்லதே நடக்கும் என்றார். அப்போதும் அவரைக் கண்டு கொக்கரித்து நகைத்தார் கள். உனக்கு கண் மட்டும்தான் குருடு என்று நினைத்தோம். ஆனால் காதும் மந்தமாகத்தான் இருக்கிறது அதனால்தான் நாங்கள் சொல்வது உனக்கு ஏறவில்லை என்றார்கள்

எம்பெருமானின் திருவருளை திவ்வியமாய் மனக்கண்ணில் காண்கிறேன். அவனது நாமத்தை திருநாவால் சொல்லி மகிழ்கிறேன். ஆலயத்தில் ஒலிக்கும் வேத முழக்கங்களைக் கேட்கிறேன். எனது புலன்கள் அனைத்திலும் எம்பெருமானின் மகிமையை உணருகிறேன். ஆனால் நீங்கள் தான் கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும், வாய் இருந்தும் ஊமையாகவும் இருக்கிறார்கள் என்றார். அப்போதும் நகைத்து எள்ளியாடிய சமணர்களின் மீது வெறுப்பும் கோபமும் வந்தது.

தண்டியடிகள் சமணர்களிடம் எம்பெருமானின் அருளால் எனக்கு கண் ஒளி கிடைத்து தாங்கள் ஒளியிழக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.  நாங்கள் இந்த ஊரை விட்டு ஓடிவிடுகிறோம் என்றவாறு அடியாரின் கைகளிலிருந்த கூடையை பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் மனம் உருகி  எம்பெருமானிடம்  தம் குறையைத் தீர்த்துவைக்குமாறு வேண்டினார். இறைவனும் கனவில் காட்சிதந்து உன் குறைகள் எனக்கு நேர்ந்த குறைகளே அதனால் கலங்காமல் இரு நான் தீர்த்துவைக்கிறேன் என்றார்.

அரசன் கனவில் காட்சி தந்து என் அன்பன் ஒருவன் எனக்காக குளத்தை  செப்பனிட்டு திருப்பணி செய்கிறான். அவனை சந்தித்து அவன் வேண்டி யதைச் செய்து கொடு என்றார்.மறுநாள் அரசனும் தண்டியடிகளைச் சந்தித்தான். தட்டுதடுமாறி குளத்தை ஆழமாக்கும் அவரைக் கண்டு வணங்கி இறைவனது கட்டளையை கூறினான். சமணர்கள்  செய்த இடையூறுகளை அரசனிடம் சொல்லி வருத்தப்பட்டார் தண்டியடிகள்.

அரசன் இடையூறு செய்த சமணர்களை அழைத்தான். அவர்களும் தாங்கள்  தண்டியடிகளை ஏளனம் செய்ததையும் இடையூறு உண்டாக்கியதும் ஒப்புக்கொண்டார்கள். தண்டியடிகள் சொன்னது போல் அவர் பார்வை பெற்று தாங்கள் பார்வை இழந்தால் ஊரை விட்டு வெளியேறிவிடுவதாக உறுதி கூறினார்கள். அரசன் அரண்மனை பெரியோர்களிடம் ஆலோசித்து  தண்டியடிகள் அடியாரை அழைத்து தாங்கள் விரும்புவது போலவே எம்பெருமானை வேண்டி கண் பார்வை பெற்று காட்டுவீராக என்று பயபக்தியுடன் கூறினான்.

தண்டியடிகள் நாயனாரும் அதற்கு இசைந்து குளத்தில் இறங்கி உள்ளத்தில் மனக்கண்ணில் நிறுத்தியிருக்கும் எம்பெருமானை அழைத்து ஐயனே நான் தங்களின் அடிமை என்பதை உலகறியச் செய்ய அருள்வீர்களாக என்று உருகி கேட்டார். எம்பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரி்த்தவாறு தலைமேல் கைகூப்பியவாறு நீரில் மூழ்கி எழுந்தார். எம்பெருமானின் அருளால் தண்டியடிகள் கண்பார்வையைப் பெற்றார். மனக்கண்ணில் தரிசித்த எம்பெருமானின்  வசிப்பிடமான திருக்கோபுரத்தைக்  கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அரசனை வணங்கினார் தண்டியடிகள். தண்டியடிகள் பார்வை பெற்ற நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் தங்கள் ஒளியை இழந்தார்கள். பார்வையற்ற நிலையை அடைந்தார்கள். தர்மம் தவறாமல் ஆட்சி செய்த அரசன் சமணர்களிடம் நீங்கள் கூறியபடி இந்த நாட்டை வெளியேறுங் கள் என்றார். கூடியிருந்த அமைச்சர் பெருமக்களிடமும் சமணர்களை விரட்ட கட்டளையிட்டார்.

தண்டியடிகள் செப்பனிட்ட குளத்தைச் சுற்றி பார்த்தார். எம்பெருமானை ஆலயத்தில் தரிசித்து மனம் குளிர்ந்தார். தண்டியடிகள் திருக்குளத்தை பெரியதாக கட்டிமுடிக்க அரசப்பெருமான் உதவி புரிந்தார். அடிகளாரின் பணியை  அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். நாயனார் வாழும் வரை சிவத்தொண்டு புரிந்து   சிவனின் திருவடியை பணிந்தார்.

பங்குனி மாதம்  சதயம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.


தண்டியடிகள் நாயனார் புராணம்

பாடல் எண் : 1

தண்டி யடிகள் திருவாரூர்ப்

பிறக்கும் பெருமைத் தவமுடையார்

அண்ட வாணர் மறைபாட

ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்

கொண்ட கருத்தின் அகனோக்கும்

குறிப்பே யன்றிப் புறநோக்கும்

கண்ட வுணர்வு துறந்தார்போற்

பிறந்த பொழுதே கண்காணார்.


பாடல் எண் : 2

காணுங் கண்ணால் காண்பதுமெய்த்

தொண்டே யான கருத்துடையார்

பேணும் செல்வத் திருவாரூர்ப்

பெருமான் அடிகள் திருவடிக்கே

பூணும் அன்பி னால்பரவிப்

போற்றும் நிலைமை புரிந்தமரர்

சேணு மறிய வரியதிருத்

தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.


பாடல் எண் : 3

பூவார் சடிலத் திருமுடியார்

மகிழ்ந்த தெய்வப் பூங்கோயில்

தேவா சிரியன் முன்னிறைஞ்சி

வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி

நாவால் இன்ப முறுங்காதல்

நமச்சி வாய நற்பதமே

ஓவா அன்பில் எடுத்தோதி

ஒருநாள் போல வருநாளில்.


பாடல் எண் : 4

செங்கண் விடையார் திருக்கோயில்

குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்

கெங்கும் அமணர் பாழிகளாய்

இடத்தாற் குறைபா டெய்துதலால்

அங்கந் நிலைமை தனைத்தண்டி

யடிகள் அறிந்தே ஆதரவால்

இங்கு நான்இக் குளம்பெருகக்

கல்ல வேண்டும் என்றெழுந்தார்.


பாடல் எண் : 5

குழிவா யதனில் குறிநட்டுக்

கட்டுங் கயிறு குளக்கரையில்

இழிவாய்ப் புறத்து நடுதறியோடு

இசையக் கட்டி இடைதடவி

வழியால் வந்து மண்கல்லி

எடுத்து மறித்துந் தடவிப்போய்

ஒழியா முயற்சி யால்உய்த்தார்

ஓதும் எழுத்தஞ் சுடன்உய்ப்பார்.


பாடல் எண் : 6

நண்ணி நாளும் நற்றொண்டர்

நயந்த விருப்பால் மிகப்பெருகி

அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்

கண்ட அமணர் பொறாராகி

எண்ணித் தண்டி யடிகள்பால்

எய்தி முன்னின் றியம்புவார்

மண்ணைக் கல்லிற் பிராணிபடும்

வருத்த வேண்டா வென்றுரைத்தார்.


பாடல் எண் : 7

மாசு சேர்ந்த முடையுடலார்

மாற்றங் கேட்டு மறுமாற்றம்

தேசு பெருகுந் திருத்தொண்டர்

செப்பு கின்றார் திருவிலிகாள்

பூசு நீறு சாந்தமெனப்

புனைந்த பிரானுக் கானபணி

ஆசி லாநல் லறமாவது

அறிய வருமோ உமக்கென்றார்.


பாடல் எண் : 8

அந்தம் இல்லா அறிவுடையார்

உரைப்பக் கேட்ட அறிவில்லார்

சிந்தித் திந்த அறங்கேளாய்

செவியும் இழந்தா யோஎன்ன

மந்த வுணர்வும் விழிக்குருடும்

கேளாச் செவியும் மற்றுமக்கே

இந்த வுலகத் துள்ளனஎன்

றன்பர் பின்னும் இயம்புவார்.


பாடல் எண் : 9

வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்

விரையார் கமலச் சேவடிகள்

அல்லால் வேறு காணேன்யான்

அதுநீர் அறிதற் காரென்பார்

நில்லா நிலையீர் உணர்வின்றி

நுங்கண் குருடாய் என்கண்உல

கெல்லாங் காண யான்கண்டால்

என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.


பாடல் எண் : 10

அருகர் அதுகேட் டுன்தெய்வத்

தருளால் கண்நீ பெற்றாயேல்

பெருகும் இவ்வூ ரினில்நாங்கள்

பின்னை யிருக்கி லோமென்று

கருகு முருட்டுக் கைகளால்

கொட்டை வாங்கிக் கருத்தின்வழித்

தருகைக் கயிறுந் தறியுமுடன்

பறித்தார் தங்கள் தலைபறித்தார்.


பாடல் எண் : 11

வெய்ய தொழிலார் செய்கையின்மேல்

வெகுண்ட தண்டி யடிகள்தாம்

மைகொள் கண்டர் பூங்கோயில்

மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி

ஐய னேஇன்று அமணர்கள்தாம்

என்னை யவமா னஞ்செய்ய

நைவ தானேன் இதுதீர

நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.


பாடல் எண் : 12

பழுது தீர்ப்பார் திருத்தொண்டர்

பரவி விண்ணப் பஞ்செய்து

தொழுது போந்து மடம்புகுந்து

தூய பணிசெய் யப்பெறா

தழுது கங்கு லவர்துயிலக்

கனவி லகில லோகங்கள்

முழுது மளித்த முதல்வனார்

முன்னின் றருளிச் செய்கின்றார்.


பாடல் எண் : 13

நெஞ்சின் மருவும் கவலையினை

ஒழிநீ நின்கண் விழித்துஅந்த

வஞ்ச அமணர் தங்கள்கண்

மறையு மாறு காண்கின்றாய்

அஞ்ச வேண்டா வென்றருளி

அவர்பால் நீங்கி அவ்விரவே

துஞ்சும் இருளின் அரசன்பாற்

தோன்றிக் கனவி லருள் புரிவார்.


பாடல் எண் : 14

தண்டி நமக்குக் குளங்கல்லக்

கண்ட அமணர் தரியாராய்

மிண்டு செய்து பணிவிலக்க

வெகுண்டான் அவன்பால் நீமேவிக்

கொண்ட குறிப்பால் அவன்கருத்தை

முடிப்பா யென்று கொளவருளித்

தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்

தருளி னார்அத் தொழிலுவப்பார்.


பாடல் எண் : 15

வேந்தன் அதுகண் டப்பொழுதே

விழித்து மெய்யில் மயிர் முகிழ்ப்பப்

பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப்

போற்றிப் புலரத் தொண்டர்பால்

சார்ந்து புகுந்த படிவிளம்பத்

தம்பி ரானர் அருள் நினைந்தே

ஏய்ந்த மன்னன் கேட்பஇது

புகுந்த வண்ணம் இயம்புவார்.


பாடல் எண் : 16

மன்ன கேள்யான் மழவிடையார்

மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்

துன்னும் அமணர் அங்கணைந்தீ

தறமன் றென்று பலசொல்லிப்

பின்னுங் கயிறு தடவுதற்கியான்

பிணித்த தறிக ளவைவாங்கி

என்னை வலிசெய் தியான்கல்லுங்

கொட்டைப் பறித்தா என்றியம்பி.


பாடல் எண் : 17

அந்த னான வுனக்கறிவும்

இல்லை யென்றா ரியானதனுக்

கெந்தை பெருமா னருளால்யான்

விழிக்கி லென்செய் வீரென்ன

இந்த வூரில் இருக்கிலோம்

என்றே ஒட்டி னார்இதுமேல்

வந்த வாறு கண்டிந்த

வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.


பாடல் எண் : 18

அருகர் தம்மை அரசனும்அங்

கழைத்துக் கேட்க அதற்கிசைந்தார்

மருவுந் தொண்டர் முன்போக

மன்னன் பின்போய் மலர்வாவி

அருகு நின்று விறல்தண்டி

யடிகள் தம்மை முகநோக்கிப்

பெருகுந் தவத்தீர் கண்ணருளாற்

பெறுமா காட்டும் எனப்பெரியோர்.


பாடல் எண் : 19

ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்

என்னில் இன்றென் கண்பெற்று

வேந்த னெதிரே திருவாரூர்

விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்

ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே

யாவ தென்றே அஞ்செழுத்தை

வாய்ந்த தொண்டர் எடுத்தோதி

மணிநீர் வாவி மூழ்கினார்.


பாடல் எண் : 20

தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்

தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்

பொழுது தெரியா வகையிமையோர்

பொழிந்தார் செழுந்தண் பூமாரி

இழுதை அமணர் விழித்தேகண்

ணிழந்து தடுமா றக்கண்டு

பழுது செய்த அமண்கெட்ட

தென்று மன்னன் பகர்கின்றான்.


பாடல் எண் : 21

தண்டி யடிகள் தம்முடனே

ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்

அண்டர் போற்றுந் திருவாரூர்

நின்றும் அகன்று போய்க்கழியக்

கண்ட அமணர் தமையெங்கும்

காணா வண்ணந் துரக்கவென

மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனங்கலங்கி.


பாடல் எண் : 22

குழியில் விழுவார் நிலைதளர்வார்

கோலும் இல்லை எனவுரைப்பரார்

வழியீ தென்று தூறடைவார்

மாண்டோம் என்பார் மதிகெட்டீர்

அழியும் பொருளை வழிபட்டுஇங்கு

அழிந்தோம் என்பார் அரசனுக்குப்

பழியீ தாமோ என்றுரைப்பார்

பாய்க ளிழப்பார் பறிதலையர்.


பாடல் எண் : 23

பீலி தடவிக் காணாது

பெயர்வார் நின்று பேதுறுவார்

காலி னோடு கைமுறியக்

கல்மேல் இடறி வீழ்வார்கள்

சால நெருங்கி எதிரெதிரே

தம்மில் தாமே முட்டிடுவார்

மாலு மனமும் அழிந்தோடி

வழிக ளறியார் மயங்குவார்.


பாடல் எண் : 24

அன்ன வண்ணம் ஆரூரில்

அமணர் கலக்கங் கண்டவர்தாம்

சொன்ன வண்ண மேஅவரை

ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்

பன்னும் பாழி பள்ளிகளும்

பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து

மன்ன னவனும் மனமகிழ்ந்து

வந்து தொண்டர் அடிபணிந்தான்.


பாடல் எண் : 25

மன்னன் வணங்கிப் போயினபின்

மாலு மயனும் அறியாத

பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்

புரிந்த பணியுங் குறைமுடித்தே

உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்

ஓதி வழுவா தொழுகியே

மின்னுஞ் சடையார் அடிநீழல்

மிக்க சிறப்பின் மேவினார்.


பாடல் எண் : 26

கண்ணின் மணிக ளவையின்றிக்

கயிறு தடவிக் குளந்தொட்ட

எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்

பாத மிறைஞ்சி யிடர்நீங்கி

விண்ணில் வாழ்வார் தாம்வேண்டப்

புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்

உண்ணி லாவும் புகழ்த்தொண்டர் மூர்க்கர் செய்கை யுரைக்கின்றாம்.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பேயார்க்கும் அடியேன் - 21.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/21032022.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

Saturday, March 26, 2022

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022  என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.


அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா குருபூஜை நாளை 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது.அடியார்கள், பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இடம் : ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்  மடாலயம், முதல்  தெரு,  சாமியார் மடம், வியாசர்பாடி -39.(அம்பேத்கர் கல்லூரி எதிர்ப்புறம்  உள்ள தெரு

நம்முள் உள்ள இருளை நீக்கி, அஞ்ஞானம் அறுத்து , ஞானம் புகுத்தி நம்மை உயர்வுற செய்பவர் குரு. நமக்கு தெய்வத்தை உணர்த்துபவர், குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். இது ஏதோ மேம்போக்காக சொல்லும் வாக்கியம் அல்ல. நம்மால் நம்மை பார்க்க முடியுமா?

முடியும் என்றால் நம் முதுகை பார்க்க முடியுமா? முடியாது அல்லவா? முதுகை பின் எப்படி பார்ப்பது? நம் முதுகிற்கு பின்னே ஒரு கண்ணாடி வைத்தால் பார்க்கலாம் அன்றோ? அடுத்து நம் முகத்தை நம்மால் பார்க்க முடியுமா? கண்ணாடியின் துணையின்றி நம் முகத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆக மொத்தத்தில் நம் முதுகு,முகம் இரண்டும் பார்க்க கண்ணாடி வேண்டும். குருவருள் என்ற கண்ணாடியும்,திருவருள் என்ற கண்ணாடியும் இருந்தால் தான் நாம் நம்மை முழுமையாக காண முடியும். நம் புறத்தோற்றம் பார்க்கவே இப்படி என்றால். நம் அகத்தோற்றம் காணவும் கட்டாயம் குருவருள் வேண்டும். அப்படியொரு குருவை இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் - நாம் இரண்டு முறை தரிசித்து இருக்கின்றோம். முதல் முறை எடுத்த காட்சி படங்கள் இல்லாததால் நாம் பதிவை அளிக்க முடியவில்லை. இந்த ஆண்டும் மீண்டும் தரிசனம் பெற்றோம். தரிசன துளிகளை அந்த பெருங்கடலில் இருந்து எடுத்து தருகின்றோம். தாகம் உள்ள அன்பர்கள் சுவைத்து கொள்ளவும். வியாசர்பாடியில் அருள்பாலிக்கும் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பற்றி இதோ உணர உள்ளோம். அதற்கு முன்பாக வியாசர்பாடி பற்றி சுருக்கமாக...

இந்த கோவில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். வியாசர் வழிபட்ட ஸ்தலம். அதனால் தான் இந்த ஊருக்கு வியாசர்பாடி என்னும் பெயர் வந்தது. இந்த ஸ்தலத்து சிவன் சூரியனால் பூஜிக்கப்பட்டவர். அதனால் தான் இந்த ஸ்தலத்து சிவனுக்கு ரவீச்வரன் என்னும் பெயர் வந்தது.சூரியனின் பல பெயர்களில் ரவியும் ஒன்று. வியாசர் முதலான ஞானிகள் வந்த பொழுது இது ஒரு அழகிய கிராமமாக இருந்தது. சென்ற நூற்றாண்டில் கூட. அந்த பசுமையை குறிக்கும் விதமாக அம்மனுக்கு மரகத அம்மன் என்னும் பெயர் வந்ததாம்.பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலில் ஒரு மரகத அம்மன் இருந்ததாக கூட செவி வழி செய்தி உண்டு. தினமும். இன்றும் இந்த ஸ்தலத்து சிவனை சூரியன் உதிக்கும் பொழுது, உச்சி வேளையில், மற்றும் மாலையில் வழிபடுவதாக ஐதீகம். அதற்கு ஏற்றவாரே. மூன்று வேளையும் சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீது மாலை போல் விழுமாறு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று நிறைய கட்டிடங்கள் முளைத்து விட்டதால் முன்பு பட்ட அளவு இப்பொழுது சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீது படவில்லையென்றாலும். சூரியன் சிவனுக்கு செய்யும் வழிபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


அடுத்து கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் தரிசனம். 




தூய மாதவம் செய்தது தொண்டை நன்னாடு என்று பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாராலும், தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று ஓளவ்வையாராலும் போற்றப்பட்ட தொண்டை நன்ணாட்டில் அவதரித்தவர் தான் கரபாத்திர சுவாமிகள். தொண்டை நன்னாடு. 
அன்று 24 கோட்டங்களாக இருந்தது அவை.

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம்,4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9.களத்தூர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14.இளங்காட்டுக் கோட்டம், 15. காலியூர்க்கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. பழுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவர்த்தனக் கோட்டம், 21.வேங்கடக் கோட்டம், 22. சேத்தூர்க் கோட்டம், 23. வேலூர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம் என்பவையே அவை.


இக்கோட்டங்களில் சென்னையையும் அதைச் சூழ்ந்துள்ள ஊர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கினவை புழல், புலியூர்,மணவில் என்னும் மூன்று கோட்டங்களாகும்.சென்னை திருப்போரூரில் செங்கமலத்தமையாருக்கும், முத்து சாமி அய்யா அவர்களுக்கும் மகனாக அவதரித்தவர் தான் சிவப்பிரகாசர்.


விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்னும் முதுமொழிக்கு ஏற்ப்ப சுவாமிகள். 3, 4 வயதில் கூட விளையாட்டில் நாட்டம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு மௌன நிலையில் மணிக்கணக்காக அமர்ந்து விடுவார். ஒரு குழந்தைக்கு இயற்கையாய் இருக்க வேண்டிய குறும்பு இல்லை, சுட்டி தனம் இல்லை, எந்த வித சேட்டையும் செய்வதில்லை. எப்பப்பாரு மௌனமாக, அமைதியாக எங்கோ சிந்தித்து கொண்டு இருந்தால். அந்த குழந்தையின் பெற்றோர்கள் என்ன? நினைப்பார்கள். குழந்தையின் மூளையில் ஏதோ குறைபாடு என்று நினைப்பார்கள். சுவாமிகளின் பெற்றோர்களும் அவ்வாறே நினைத்தார்கள். பயந்தார்கள். இது தெய்வீக குழந்தை என்பதை அவரது பெற்றோர்களாலும் சரி. உடன் பிறந்தவர்களாலும் சரி. புரிந்து கொள்ள முடியவில்லை. ரத்தின வேல், மாணிக்கம், சிவ ஞானம் ஆகிய மூவர் பிறக்க கடை குட்டியாக பிறந்தவர் தான் சிவப்பிரகாச சுவாமிகள்.


சிவப்பிரகாச சுவாமிகளுக்கு 16 வயது இருக்கும் பொழுது அவரின் தந்தை முத்துசாமி காலமானார். அப்பொழுது அவரின் வயது 60. அதன்பிறகு. இவர் தனது அண்ணன்களோடு சேர்ந்து வெற்றிலை ஏல வாணிகத்தை சற்று பெரிய அளவில் நடத்தினார். அந்த சமயத்தில் வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் கரைக்கண்ட ரத்தின தேசிகரிடம் இவர் பல நூல்களை பயின்றார். அதில். இவர் மனத்தின் கண் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நூல் ரிபு கீதை. இவரது குரு பரிசாக அதை சிவபிரகாச ஸ்வாமிகளுக்கு கொடுத்தார்.

 பகவத் கீதை தவிர்த்து மொத்தம் 26 கீதைகள் உள்ளன. அவை.
1. ரிபு கீதை, 2. பிட்சு கீதை, 3. பராசர கீதை, 4. போத்திய கீதை, 5. ஷடாஜ கீதை, 6. உதத்திய கீதை, 7. ராம கீதை, 8. தேவி கீதை, 9. ஹம்ச கீதை, 10. ஹரித கீதை, 11. சம்பக கீதை, 12. வாமதேவ கீதை, 13. சூரிய கீதை, 14. சிவ கீதை, 15. கபில கீதை, 16. மங்கி கீதை, 17. ரிஷப கீதை, 18. விருத்திர கீதை, 19. வசிஷ்ட கீதை, 20. உத்தவ கீதை, 21. பிரம்ம கீதை, 23. பாண்டவ கீதை, 24. உத்தர கீதை, 25. அவதூத கீதை, 26. வியாச கீதை.


ரிபு கீதை- காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே. சிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது.


காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே பேதத்திலுள்ள மோகத்தை விலக்கு என்று பிரும்ம புத்திரரான ரிபு அவரது சீடர் நிதாகருக்குஅருளியது ரிபு கீதை.

சுவாமிகளுக்குப் பதினாறு வயதாகும்போது, அவரது குடும்பம் சென்னைக்கு வந்து சேர்ந்தது. எதிலும் பற்றற்று இருந்த சிவப்பிரகாச சுவாமிகள், வேதாந்த பானு சைவ இரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

அடிக்கடி தனியிடம் நாடி யோகப் பயிற்சியிலும் ஈடுபட்ட சுவாமிகள், ஒருமுறை நிர்விகற்ப சமாதி நிலையை அடைந்தபோது, அவர் இறந்துபோனதாகக் கருதி அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சுவாமிகள் அந்த நிலையிலிருந்து மீண்ட பின், அவரது பெற்றோர் அச்சமுற்று அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர்.

அடிக்கடி தனியிடம் நாடி யோகப் பயிற்சியிலும் ஈடுபட்ட சுவாமிகள், ஒருமுறை நிர்விகற்ப சமாதி நிலையை அடைந்தபோது, அவர் இறந்துபோனதாகக் கருதி அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சுவாமிகள் அந்த நிலையிலிருந்து மீண்ட பின், அவரது பெற்றோர் அச்சமுற்று அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர்.

சுவாமிகள் அதிலிருந்து விடுபட எண்ணித் திருவொற்றியூர் பட்டினத்தடிகளின் ஆலயத்திற்குச் சென்று தாம் அணிந்திருந்த உடைகளைத் துறந்து, கோவணத்தை உடையாகக் கொண்டார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது.சுவாமிகளைத் தேடி வந்த அவரது தமையனார் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தார். அவரது கோலத்தைக் கண்ட சுவாமிகளின் தாயார் திடுக்கிட்டு அவரை இல்லத்திற்குள் அழைத்தார். சுவாமிகள் இல்லத்திற்குள் வர மாட்டேனென்று திண்ணையில் அமர்ந்துகொண்டார். அவரது அன்னையார் உணவு கொடுக்க முன் வந்த போது இதுதான் விதி என்று கூறித் தமது கரத்தினை நீட்டினார் . அதில் மூன்று பிடி அன்னம் பெற்று உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கரத்தில் அன்னம் பெற்று உண்டதால் சுவாமிகளுக்குக் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது.
பின்னர் திருவான்மியூரில் ஓரு ஆசிரமத்திற்குச் சென்று அங்கிருந்த மரத்தினடியில் தவமியற்றினார். அன்பர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று சூளை செங்கல்வராயன் தோட்டத்திற்குச் சென்று ஒரு கிச்சிலி மரத்தினடியில் ஐம்புலன்களை ஒடுக்கிச் சமாதி நிலையிலிருந்தார். இங்கு தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களால் தமது தவத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று ஒருவருமறியாமல் பொதிகை மலைக்குச் சென்றார். அங்கு அகத்தியர் ஆசிரமத்தின் அருகில் ஒரு மரத்தினடியில் நிஷ்டையில் இருந்தார். அங்கு அவர் தேடிய ஞானம் சித்துக்கள் அனைத்தும் கிட்டின. மூன்று ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டார். அவருடைய அன்பர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அழைத்துவந்தனர்.

சுவாமிகள் தங்கியிருந்த தோட்டத்தில் அவருக்கு ஓரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தனர். அந்த ஆசிரமத்தினுள் நாற்பத்தெட்டு நாட்கள் வரை உணவின்றி சமாதி நிலையில் இருந்தார். பின்னர் தமது அன்பர்களுக்கு உபதேசம் செய்ததுடன் ‘ஞானசகாய விளக்கம்’, ‘மனன சிந்தாமணி’ போன்ற நூல்களையும் இயற்றினார். மொழி விற்பன்னர்களை அழைத்துவந்து யோக நூல்களைத் தமிழில் இயற்றச் செய்தார்.

சாதுக்களுக்கு நிரந்தரமாக ஒரு மடம் அமைக்க விரும்பினார் . இதனையறிந்த அவரது தொண்டர் ஒருவர் வியாசர்பாடியில் நாகர் ஆலயம், குளம் உட்பட்ட தோட்டத்தைக் கிரயம் பெறுவதற்கு உதவினார். சுவாமிகள் அங்கு ‘ஆனந்தாசிரமம்’ அமைக்கத் துவங்கியதும் அது சாமியார் தோட்டம் என்ற பெயரைப் பெற்றது.

தமது ஞான யோகத்தால் பல சித்துக்களைப் பெற்ற சிவப்பிரகாச சுவாமிகள் வெளிப்படையாக எந்த சித்துக்களையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. தம்மை நாடி வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தமது பார்வையாலும் வார்த்தையாலும் தீர்த்து வைத்திருக்கிறார்.

தமது உடலிலிருந்து ஆன்மாவைப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டதை அறிந்து மூன்று நாட்களுக்கு முன்பே அதனைத் தமது பக்தர்களுக்கு அறிவித்துவிட்டு ‘சம்போ சம்போ’ என்று உரத்துக் கூறிக்கொண்டே யோகத்தில் ஆழ்ந்துவிட்டார். பிங்கள ஆண்டு, பங்குனி மாதம், குரு வாரம் உத்திராட நட்சத்திரத்தில் சுவாமிகள் விதேக கைவல்யம் அடைந்தார்.

பக்தர்கள் சுவாமிகளின் திருமேனியை முறைப்படி சமாதி செய்து சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தனர். இப்போது சுவாமிகளின் ஜீவசமாதி மிகப் பெரும் சிவாலயமாக உருவாகியுள்ளது.



ஒரே ஒரு ஞானி அதிஸ்டானம் என்று நினைத்து போய் கடைசியில் ஒன்பது ஞானியர்கள் கோவில் என்றதும் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு ஞானியை தரிசிக்க போக ஒரே இடத்தில் ஒன்பது ஞானியர்களின் அதிஸ்டானம் என்று அங்கு பூஜை செய்பவர் சொன்னதும் நமக்கு  எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.  9 இல் 6 பேர் சமாதி தான் இப்பொழுது அங்கு இருப்பவர்களுக்கு தெரிகிறது  என்பது இங்கு கண்கூடாய்த் தெரிகின்றது.




அன்பே உருவான ஆற்றல் இங்கே வெளிபட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளே நுழைந்து இடப்புறம் சென்றால் சுவாமியைத் தரிசிக்கலாம். சித்தர்களை நாம் தரித்தால் அவர்கள் நம்மிடம் சிக்கலாம். அதான் "தரி"சிக்கலாம் என்பதன் தாத்பர்யம்.




இந்த ஆலயத்தைக் கட்டி முடித்த ஸ்ரீ முக்தாநந்தா சுவாமிகள் கண்டோம். பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்தோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சித்தர்கள் ஜீவ நிலை கண்டோம்.








இவர் அதிஷ்டானம் உள்ள் இதே இடத்தில் இவரது ஒன்பது சீடர்க்ளின் அதிஸ்டானமும் இருக்கிறது. அதில் யதிராஜர் எனும் ஒரு வைஷ்ணவரின் அதிஸ்டானமும் இருக்கிறது. வெளியில் சங்கு, சக்கர முத்திரைகள் பொறிக்கப்பட்டு இருக்கிறது. அவரை பற்றிய விவரங்கள் நமக்கு  கிடைக்கவில்லை. ஆனால் நாம் தரிசனம் பெறலாமே.







அங்கிருந்த  தாயம்மா ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஜீவ ஆலயம் மேலே. இது போல் தான் கிட்டத்தட்ட 6 சித்தர்கள் இங்கே அருள் பாலித்து வருகின்றார்கள். 

நாம் நம் நீண்ட நாள் நெருங்கிய நண்பரை( ராணிப்பேட்டை சார்ந்த திரு.ஸ்ரீதர் ) இங்கே சந்தித்தோம் என்பது மகிழ்வாய் இருந்தது. இணைய உறவுகளை இதய உறவுகளாக மாற்றிய அந்த தருணம் இன்னும் உயிர்ப்பாய் இருக்கின்றது.

இது போன்ற ஆலயங்களுக்கு செல்லுங்கள். கர்ம வினைகளை கரைத்துக் கொள்ளுங்கள்.

இடம் : ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்  மடாலயம், முதல்  தெரு,  சாமியார் மடம், வியாசர்பாடி -39.(அம்பேத்கர் கல்லூரி எதிர்ப்புறம்  உள்ள தெரு

குருவே சரணம்.

 ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html