"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, March 5, 2022

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் குடமுழுக்கு விழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளாசியால் ஒவ்வொரு நாளும் வழிகாட்டப்பட்டு வருகின்றோம். வாழ வழிகாட்டும்  குருமார்களின் பாதம் என்றும் பணிகின்றோம்.இந்த நூற்றாண்டின் மிக முக்கிய சன்மார்க்க நிகழ்வு திண்டுக்கல்லில் நடந்து கொண்டு உள்ளது.முக்கிய சன்மார்க்க தயவாளர்கள் திண்டுக்கல்லில்...சுவாமி சரவணானந்தா தயவு இல்லம் குடமுழுக்கு விழா கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்நிகழ்வை நம் தளத்தில் பதிக்க விரும்புகின்றோம்.


திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப்பாக்கள், தயாவிளக்கமாலை, தயவுப்பெருநெறி, தயவுக்குறள்என்றபலஉரைநடைநூல்களும்பலபாக்களும்யாத்துள்ளார்கள். சுவாமிஅவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களதுஇளம்வயதிலேயேகிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மாதந்தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவுநூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் சின்னாளபட்டி வந்த பிறகு வள்ளலார் சபை எங்கே என்று தேடியபோது இரண்டு சபை கிடைத்தது. இவற்றைப்பற்றியும் தனிப்பதிவில் காண்போம். திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா சுவாமிகள் சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி வள்ளலார் சபையை திறந்து வைத்தார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தோம். இந்தப் பதிவின் மூலம் மேட்டுப்பட்டி வள்ளலார் சபை தரிசனம் பெறுவோம்.































குருவருள் நிலை கண்டு இன்புறுகின்றோம். திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா பாதம் பட்ட இடத்தில் நம் மனம் வைத்து, நம் தளம் சார்பில் சிறு உபயம் செய்கின்றோம் என்றால் குருவின் அருள் இன்றி இது வேறென்ன! அடுத்து சுவாமி சரவணானந்தா தயவு இல்லம் குடமுழுக்கு விழா அழைப்பிதழும் , அருளாளர்களின் தரிசனமும் காண உள்ளோம்.





நமது கோவை தலைவர்கள் தயவு ராமதாஸ் ஐயா, தயவு பிரபாகர் ஐயா, தயவு சிவகுமார் ஐயா....சிறப்பாக நமது கண்டியன் கோவில் சுவாமிகள் அருட்திரு திருவடிதாசன் ஐயா வுமே கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் உள்ள அருள்காட்சிகளை கீழே தருகின்றோம்.








மீண்டும் ஒருமுறை சுவாமிகள் பற்றி அறிய உள்ளோம்.

நமது தயவுக் குருநாதர் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், 1910ல் தோன்றினார். இவர், 1929-ம் ஆண்டு சத்திய ஞான சபாபதி சுவாமிகளைச் சார்ந்தார். 1930ல் திருவருட்பாவைப் பயிலும் பேறு பெற்றார். தினசரி ஜீவ தயவுப் பணியில் ஈடுபட்டு, எஞ்சிய நேரத்தில் எல்லாம், திரு அருட்பாவினை, ஆழ்ந்த நிலையில் ஆராயவும், அதற்கான புதிய புதிய கருத்துக்கள், விளக்கங்கள் தினமும் வெளியாகக் கண்டு உணர்ந்து வந்தார்.
1938ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச விழாவிற்குச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தங்கி இருந்த போது கற்பூர நன் மணத்தையும், வள்ளற் பெருமானின் காட்சியையும் ஒருங்கே காணும் பேற்றினைப் பெற்றார். அடுத்து சத்திய ஞான சபைத் தத்துவ விளக்க நூல் வெளியிட அவருக்கு, திருவருளே உதவியது.

1943ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து தயாவிளக்க மாலை உருவாக்கப் பெற்று விட்டது. இதை ஏற்கும் வகையில், இயற்கையில், அக அனகச் சான்றாக, 1.8.1943ல், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்சி, வானக் கோளின் கணித முறைப்படி, கடக நடு பூசத்து ஒரே காலில் சூரியன், சந்திரன், குரு விளங்கின போது, கலி முடிந்து கிருத யுகம் தோன்றும் என்ற குறிப்புக்கும் மேலாக, திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் தமது சிரநடு சிற்றம்பலத்தில், கடக நடு பூச காற்குளத்து ஒரு அணுப்புள்ளி அருட்ஜோதி ஒளியில் வெளிப்பட்ட இரவி மதி குருவுமே சுத்த ஞான பிரணவ தேகத்தை குறிப்பதாய்க் கண்டு கொண்டதோடு, வள்ளலாரின் திரிதேக சித்தி உண்மையும், தமது ஆன்ம அகத்தில் கண்டு உணர்ந்து பதிவாக்கிக் கொண்டார்.
இந்தப் பதிவு அக்கணமே எல்லா ஆன்மாக்களிலும் அனகமாகப் பதிவாகி விட்டது.

1.8.1943-ல் சரவணானந்த சுவாமிகள், தமது சிரநடு பூசமாகிய காற்குளத்தே பெற்ற சூரிய, சந்திர, குரு எனும் முக்கோட் காட்சியின் மூலம், மூவியல் கொண்ட இறை இயல் உண்மை அருட்பெருஞ்ஜோதியே, ஒரு தயவு அனுபவம் வழங்குவதை கண்டு உணர்ந்தார்.

இந்த தயவு அனுபவத்தைத் தொடர்ந்து சுவாமிகள் தயவுப்பாக்கள் இயற்றினார். தொடர்ந்து பலவான உரை நூல்களும் அடுத்தடுத்து வெளியாயின.
. இதன்பின்தான் அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் எழுத ஆரம்பித்தார். 1.1.1960 முதல் 8.3.1962 முடிய 798 நாட்களில், அருட்பெருஞ்ஜோதி அகவல் அடிகள், 1596க் கும் விளக்கம், சுருக்கமாக எழுதப்பெற்றன.

இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் எழுதும்போது ஒரு உச்சக் கட்டத்தில் .. அதாவது 4.2.1962 ஞாயிற்றுக் கிழமை நடு இரவிலும், 5.2.1962 திங்கட் கிழமையிலும், உலகத்தார் எல்லாம் உலகம் அழியப் போகின்றது என அஞ்சிய நிலையில், அண்டத்தில் மகர ராசியில் எட்டு கிரகங்கள் ஒன்று கூடிய நிகழ்வு நடைபெற்றது.

இதனை சுவாமிகள், தமது சிரநடு பகர பீடத்தில் கடக நடு பூச நட்சத்திர ஒளியை, திரைகள் எல்லாம் விலக்கப்பட்டு, எல்லாப் பக்கங்களிலும் எல்லாவற்றையும் கண்டு உணரும் வண்ணம்

“திரையெல்லாம் தவிர்த்துச் செவ்வியுற்று ஆங்கே
வரையெலாம் விளங்க வயங்கு செஞ்சுடராக” (அருட்பெருஞ்ஜோதி அகவல்)க் கண்டு உணர்ந்தார்.

இந்த அனுபவம் எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானதாகும். பின்னால், இதன் விரிவினில் “பூசமும் நாமும்” என்ற சிறு நூலும் வெளியானது.
இதன் பின் 1969ஆம் ஆண்டு, சாலை சகாப்த திங்களாகிய வைகாசி முதல், 4 மாதங்களில் அகவலுக்கு விரிவான உரை விளக்கத்தை1,000 பக்கங்களைக் கொண்ட 4 பெரிய நோட்டுப் புத்தகங்களில் பதிவாகி நிறைவுற்றது.

சுவாமிகள் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க பெரு நூலினை. வள்ளலாரின் சித்தி நிலைப் பேறு உற்ற நூற்றாண்டின் நிறைவாக வெளியிடத் திருவுள்ளம் கொண்டார்.

திருவருள் கூட்டி வைக்க - அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அய்யா அவர்களுக்கு, 14.6.1973ல் சுவாமி சரவணானந்தரை தயவு சத்திய ஞான கோட்டத்தில் தரிசிக்கும் பேறு கிட்டியது.

அவரது வேண்டுகோளின்படி, சுவாமிகளும், தாம் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை கையெழுத்துப் பிரதிகளை அருட் செல்வரிடம் அளித்தார்.

இராமலிங்கர் பணிமன்றம் மூலம் அதனை அச்சிட்டு, வடலூர் சாலை சகாப்த நாளான வைகாசி, 11ம் நாள் அதாவது, 18.5.1974-ல் வடலூர் வள்ளலார் குருகுலம் மேனிலைப் பள்ளியில் உள்ள O.P.R. மண்டபத்திலும், சத்திய தருமச் சாலை மேடையிலும், முதன் முதலாக சுவாமிகள் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க நூல் வெளியிடப்பட்டது.

இப்படிப்பட்ட உண்மைகளை எல்லாம் இன்று நாம் கருத்திற் கொண்டு சுவாமிகளின் அருட்பெருஞ் ஜோதி அகவல் இரண்டு வரிகளுக்கான உரை விளக்கத்தை பிரதி மாதந் தோறும் வாசிக்கும் பணி தொடங்கப் பெற்றுள்ளது – என்பதை இந்த சத்திய ஞான சபையில் தெரிவித்துக்கொள்கின்றோம் 

வாய்ப்புள்ள அன்பர்கள் அழைப்பிதழ் கண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி


- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

 திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு - 2 - https://tut-temples.blogspot.com/2021/10/2.html

திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_49.html

உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment