அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
திருமூல பெருமான் திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம் ஞானி செயல் என்ற தொகுப்பில் கூறியுள்ள திருமந்திர பாடலோடு இன்றைய பதிவை துவக்குவோம்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே
தன்னை அறிந்துகொண்டவர்கள் தான் மெய்ஞானிகள். அவர்கள் தன்னை அறிந்து தாமே சிவமாகிவிட்டதால் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணிய முடிச்சுகளை இப்பிறவியில் இல்லையென்று ஆக்கிவிடுவார்கள். அடுத்த பிறவியென்ற ஒன்றே அவர்களுக்கில்லை. இப்பிறவியிலும் வரக்கூடிய வினைகளையும் தடுத்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தமது தலையில் சிவனுடைய அருளை வைத்திருப்பதால். அதாவது, அவர்கள் ஞானயோகப் பயிற்சிகளின் மூலம் குண்டலினி சக்தியைத் தங்களது சகஸ்ராரத்திலே நிலை நிறுத்தியவர்கள் என்று திருமூலர் கூறுகிறார்.நமது வினைகளும் அறுபடும்.
முன்னை வினை, பின்னை வினை என்பது அவர்களுக்கு மட்டும் பொருந்துவதன்று. சிவனுக்கொப்பான அந்த ஞானிகளால் நமது வினைகளையும் அறுக்க முடியும் என்றே பொருள் கொள்ளவேண்டும். அதனால் தான் ஜீவசாமதியில் சமாதி நிலையில் வீற்றிருக்கும் சித்தர்களைத் தரிசித்தால் நமது வினைகள் அறுக்கப்படுவதோடு, பின்னை வினைகளை அறுக்கும் ஞானமும் நமக்குக் கிடைக்கும்.
ஓரு சித்தரின் ஜீவசமாதியைத் தரிசித்தாலே நமக்கு இத்தனை பயன்கள் கிடைக்கின்றது. இதனால் தான் சித்தர்கள் பற்றி பேசுவதற்கு எப்போதுமே நமக்கு இனிக்கத் தான் செய்யும். அது போல் தான் சித்தர்கள் கொடுக்கும் அருள்நிலையும் என்று தோன்றுகின்றது. சித்தர்களின் வழிபாட்டை நாம் சிறந்த வழிபாடு என்றும் சொல்லலாம். நம் தளத்தில் சித்தர்களைப் பற்றி தொட்டு காட்டி வருகின்றோம்.
நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022, குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று 99 ஆம் ஆண்டு குருபூஜையில் சின்னாளபட்டி ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் தரிசனம் இங்கே காண உள்ளோம்.
நேற்று காலை வழக்கம் போல் அன்னசேவைக்கு வாழை இலை வாங்க கடைக்கு சென்றோம். அப்போது ஒரு ஆட்டோவில் ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை பற்றியும், அன்னசேவையும் பற்றியும் கூறிக் கொண்டு இருந்தார்கள். சின்னாளபட்டியில் எங்கே? இந்த கோயில் உள்ளது என்று அங்கே விசாரித்து விட்டு வந்தோம். அவர்கள் கூறிய இடம் நமக்கு தெரிந்த இடம் தான். ஆனால் பல முறை அந்த வழியே சென்ற போதும், இது போன்று அங்கே கோயில் இருக்கின்றது என்று நமக்கு தெரியவில்லை.
நேற்று காலை வரை இப்படியொரு குருபூஜை தரிசனம் நாம் பெற உள்ளோம் என்று கனவிலும் நினைக்க வில்லை. ஆனால் இறையருள் கருணையினால் நம் அனைவருக்கும் இப்படியொரு அருள்நிலை கிடைத்துள்ளது. இது போன்று தான் நித்தமும் குருவருளால் நாம் வழிநடத்தப்பட்டு வருகின்றோம். மதியேது விதியேது..கதி உந்தன் பொற்பாதமே என்று மனதுள் நினைத்து வாழ வழிகாட்டும் குருமார்களின் பாதம் என்றும் பணிகின்றோம்.
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
No comments:
Post a Comment