"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 29, 2020

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை என்ற பதிவில் குருமார்களின் தரிசனம் கண்டோம். இன்றைய பதிவிலும் மகான்களின் மகத்துவம் அறிய இருக்கின்றோம். பதிவின் தலைப்பை பார்க்கும் போது புதிதாக இருக்கின்றது அல்லவா? சித்தர்கள், மகான்கள் தேடலில் உள்ளவர்கள் சட்டென்று பிடிப்பார்கள். நமக்கும் புதிது தான். இதில் நாம் பெரிய ஐயாவின் தரிசனத்தை வட பழனியில் பெற்றோம். வட பழனி என்றதும் யார் என்று தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆம். பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் ஸ்ரீலஸ்ரீ சத்குரு பரஞ்சோதி பாபா தான் பெரிய ஐயா ஆவார். அப்படி என்றால் சின்னையா என்ற கேள்விக்கு ஸ்ரீலஸ்ரீ சத்குரு பகவான் வெங்கட்ராம சுவாமிகள் ஆவார். இருவரையும் இங்கே தொட்டுக்காட்டி சின்னையா அவர்களின் 13 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் பகிர உள்ளோம்.

கடவுள் தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோர் கூடும் இடத்தில் வெகு சிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நின்று தரிசனம் செய்து இருக்கின்றார்கள்.தற்போது அவர் சித்தியாகி விட்டார். நாமும் அவரது பெயரை பலமுறை கேட்டிருக்கின்றோம். ஆனால் நேரில் சென்று தரிசிக்கும் நாள் எந்நாளோ? என்று காத்திருந்தோம். அவர் தான் பரஞ்சோதி பாபா. ஆம்.!‘பரஞ்சோதி பாபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் இவரை, ‘அய்யா, அப்பா, தாத்தா’ என்றும் அழைக்கிறார்கள். பதிவின் இறுதியில் முக்கிய அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. நாம் இன்றைய பதிவில் பரஞ்சோதி பாபா  பற்றி உணர்த்த வேண்டும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் இன்று  நம்மை உணர்த்த வைத்தது பரஞ்சோதி பாபா  தான் என்பதில் துளி கூட ஐயமில்லை.







கலைத்துறையினர் அதிகம் பேர் இவருடைய பக்தர்கள்..இசையமைப்பாளர் சிற்பி, ஸ்ரீகாந்த் தேவா, டிரம்மர் சிவமணி, நடிகர்கள் விவேக், மோகன், நடிகை நீலிமா ராணி, இயக்குநர் வின்சென்ட் செல்வா ஆகியோர் இம்மகானின் தீவிர பக்தர்கள் என பட்டியல் நீளுகின்றது. இவர்களின் அனுபவத்தை தான் இனி நாம் காண இருக்கின்றோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் சீடர்கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.



பாபா வாழ்ந்த காலத்தில்யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்...

பல பேர் பல வித பிரச்சனைகளுடன் பாபாவை தரிசித்திருக்கிறார்கள் அவர்கள் பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் தீர்த்திருக்கிறார் பாபா என பல திரைப்பிரபலங்கள் கூறுகிறார்கள்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது.

இசைப் பயணத்துக்கு இடையே பக்திப் பயணத்தையும் தவம் போலவே செய்துவருகிறார் டிரம்ஸ் சிவமணி. பரஞ்சோதி பாபாவின் தீவிர பக்தர். வார்த்தைக்கு வார்த்தை அவரை ஐயா என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பரஞ்சோதி பாபாவுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் சிவமணி.

நதி மூலம், ரிஷி மூலம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். நானும் ஐயாவை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சென்னை வடபழனி வீதிகளில் வாழ்ந்த மகான் அவர். யாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். நான் ஐயாவைத் தரிசித்த அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இது நடந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் இருக்கும். பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுடன் பாடல் பதிவில் இருக்கிறேன். அப்போது சவுண்ட் இன்ஜினியர் முரளி என்பவர்தான் ஐயாவைப் பற்றி என்னிடம் சொன்னார். நானும் உடனே கிளம்பி சிவன் கோயில் தெருவுக்குச் சென்றேன். அங்கே ஜடைமுடியுடன் சாலையில் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். என்னை அருகில் சேர்க்கவே இல்லை. நாளைக்குப் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இப்படியே மூன்று மாதம் நான் போவதும் அவர் என்னைத் திருப்பி அனுப்புவதுமாகவே இருந்தது. நான் கொஞ்சம்கூட சளைக்கவில்லை. ஒருநாள் மாலை என்னை உற்றுப் பார்த்தவர், ‘என்ன... என்னைக் கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்டார். என்னை அவர் அருகில் அமரவைத்துக்கொண்டார். தோசை வாங்கிவரச் சொல்லி, ஒரே இலையில் இருவரும் சாப்பிட்டோம். அதுதான் துவக்கம். அதற்குப் பிறகு தினமும் ஐயாவைத் தரிசித்தால்தான் அன்றையநாள் நிறைவுபெற்ற திருப்தி எனக்கு. சமயங்களில் இரவு அவருடனேயே தங்கியும் விடுவேன்.



இடையில் ஆறு மாதம் ஜெர்மனிக்குச் சென்றிருந்தேன். ஐயாவைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை மனதை அரித்தது. அப்போது இந்தியாவைப் பற்றிய டாகுமெண்ட்ரி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மனம் ஐயாவையே சுற்றிச் சுற்றி வந்தது. சென்னையைக் காட்டினால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அடுத்த நொடி சென்னைத் தெருக்கள் திரையில் தோன்றின. வடபழனியைக் காட்டுவார்களா என்று மனம் ஏங்கியது. அடுத்தக் காட்சியில் வடபழனி வந்தது. ஐயா எனக்குக் காட்சி தருவீர்களா என மனம் அரற்றியது. சட்டென்று திரையில் ஐயாவின் திருவுருவம்! அது அப்படியே வடபழனி கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டது. நானும் அந்தக் காட்சியை ரீவைன்ட் செய்து பார்த்து சிலிர்த்துவிட்டேன். கண்டம் தாண்டி காட்சி தந்த ஐயாவின் உருவம் ஆயுளுக்கும் மறக்காது.

இப்படித்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. நான் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டில் இருந்து இரண்டு பேர் என்னை இசை நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருந்தார்கள். ஐயாவிடம் கேட்டுவிட்டு ஒப்புக்கொள்ளலாம் என்று அவரிடம் சென்றேன். என்னைப் பார்த்ததுமே, ‘என்ன, ரெண்டு பேர் வந்தாங்களா?’ என்று கேட்டார். அதிகம் பேசமாட்டார். ஆனால் எதையுமே அருகிருந்து பார்த்தது போலவே பட்டென உடைத்துச் சொல்லிவிடுவார். என்ன நடக்கும் என்பதையும் சொல்வார். ஆனால் தன்னிடம் இருக்கும் இந்த தீட்சண்யத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. பரதேசிக்கோலத்துடன் தான் இருப்பார். மழையோ,வெயிலோ பொருட்படுத்த மாட்டார். மழை அடித்துப் பெய்தாலும் அவர் நிற்கிற இடம் நனையாது.
ஒருமுறை அவருக்கு மிகவும் முடியாமல் போனது. அவர் மருந்து, மாத்திரைகளை அனுமதிக்கவே மாட்டார். அருகில் இருந்தவர்கள் அழைத்தும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல சம்மதிக்கவில்லை. எனக்குத் தகவல் கிடைத்து நான் சென்று அவரை அழைத்தேன்.



அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. யாரையும் தொடக்கூட அனுமதிக்கவில்லை. தன்னைத் தேடி வருகிறவர்களின் வியாதை வாங்கி தன் காலில் வைத்துக் கொண்டதால்தான் காலில் புண் வந்து, புறையோடிப் போயிருக்கும். கால் வீக்கம், செப்டிக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக என் மருத்துவ நண்பரை வரவழைத்தேன். அப்போதும் சிகிச்சைக்கு உடன்படவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காபியில் மாத்திரையைக் கலந்து அவரிடம் கொடுத்தேன். ‘இதை நான் குடிச்சுதான் ஆகணுமா?’ என்று கேட்டார். பாதியைக் குடித்துவிட்டு மீதியை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். நானும் வாங்கிக் குடித்தேன். காபி, ரசமாக மாறியிருந்தது.
தங்கள் மகளின் இதய அறுவை சிகிச்சைக்குத் தேதி குறித்துவிட்டு ஐயாவைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வடநாட்டு தம்பதி வந்திருந்தனர். அந்தக் குழந்தையை அருகே அழைத்து ஆரஞ்சுப்பழத்தைக் கொடுத்து அனுப்பினார் ஐயா. மருத்துவமனையில் அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு சரியாகியிருந்ததைப் பார்த்து அதிசயித்துவிட்டார்கள். அறுவை சிகிச்சைக்காக கட்டிய பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு ஐயாவைத் தரிசிக்க வந்தார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து ஐயாவுக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.


இதோ அடுத்து ஜுனியர் விகடன் குழுவின் சந்திப்பு...

அய்யா... உங்களைப் பார்க்க பத்திரிகைல இருந்து வந்திருக்காங்க’’ என்றவாறு ஜூ.வி.யை அவர் மடியில் வைத்தார் அவரது சீடர் கிருஷ்ணமூர்த்தி. ‘‘தெரியுமே! ஜூனியர் விகடன்’’ என்றபோது நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் நம் வருகை குறித்து பாபாவிடம் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிப்பது சாத்தியமும் இல்லை. சிபாரிசுகளுக்கு அங்கே வேலை இல்லை. ‘‘நீ நூறு ரூபா கொடு’’ என்றார், பாபா நம்மிடம்.

நாம் பணத்தைக் கொடுத்ததும், ‘‘உங்களுடைய கடன் தீர்ந்துவிட்டது. இனி உங்களுக்கு அடுத்த பிறவி கிடையாது’’ என்றார் அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி. ஒரு நிமிடம் நம்மைப் பார்த்த பாபா, படீரென முகத்தைத் திருப்பிக்கொண்டார். நாம் அவர் அருகே உட்கார்ந்தோம். பாபாவின் வேட்டியை முழங்காலுக்கு மேல் உயர்த்திவிட்ட கிருஷ்ணமூர்த்தி, அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார். நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.
பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. நாமாக விடைபெற்று வெளியே வந்தோம்.

செங்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் நம்மிடம், ‘‘என் அம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தேன். ‘48 மணிநேரம்தான் இருக்கு. ஆக வேண்டியதைக் கவனியுங்கள்’ என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். நாம் பாபாவிடம் வந்து அழுதேன். என் கரங்கைப் பற்றியவர், இரண்டு நாட்களும் தன்னுடனே என்னை தங்க வைத்துக்கொண்டார். மூன்றாம் நாள் ‘அம்மாவை ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண பெட்டுக்கு மாற்றிவிட்டதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை’ எனவும் எனக்குத் தகவல் வந்தது. அதன் பிறகுதான் என்னை வெளியேற அனுமதித்தார்’’ என்கிறார்.

அங்கு வந்திருந்த நடிகை நீலிமாராணி, ‘‘நம்பிக்கையோடு பாபாஜியை தரிசிக்கவேண்டும். என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல், வாரத்தில் பல நாட்கள் ஆஸ்பிட்டலிலேயே கிடந்தோம். கடுமையான பணப் பிரச்னை வேறு. நான், நாள் முழுக்க பாபாஜியின் காலடியில் கிடந்தேன். அடுத்த ஒரு வாரத்தில் கலைஞர் டி.வி, கன்னடத்தில் விசா டி.வி இரண்டிலும் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் எனக்கு கைகூடியது. இன்றோடு என் அப்பா இறந்து பத்து நாட்கள் ஆகிறது. இதுவும் பாபாவின் கட்டளைதான்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

நம்மிடம் பேசிய சில சினிமா தொழிலாளர்கள், ‘‘பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளர் சங்கமான ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் சம்பளப் பிரச்னை உருவாயிற்று. பாபாவிடம் வந்த நாங்கள், ‘சாப்பாட்டுக்கே வழியில்ல சாமி. பட்டினி கிடந்து சாகிறோம்’ என்று கதறியழுதோம். அன்றிரவு நடு வீதிக்கு வந்த பாபாஜி, ‘வேலை செய்றவனெல்லாம் சோத்துக்கு வழியில்லாம கஷ்டப்படுறான். நீங்க ஏ.சி. ரூம்ல பொம்பளைங்களோட கூத்து நடத்துறீங்களா?’’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, ‘உடனே அவங்களைக் கூப்பிட்டுப் பேசுங்கடா’ என்று வெற்றிடத்தைப் பார்த்து கட்டளையிட்டார். அடுத்த நாளே எங்கள் இரு தரப்புக்கும் சமாதானமாகிவிட்டது’’ என்றனர்.

‘‘பாபா, யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்.

நாமும் கடந்த முறை வடபழனி சென்ற போது, தரிசனம் செய்தோம். நகர இரைச்சலில் அந்த இடம் பேரமைதியாய் இருந்தது. உள்ளத்தில் சற்று அமைதி கிடைத்தது. மனம் ஒடுங்கியது. அவரை பார்க்க பார்க்க, அந்த பரத்தை பார்த்தது போலவே உணர்ந்தோம்.



இதற்கு முந்தைய பதிவில் சொன்னது போல், எந்த ஒரு உபதேசமும் இங்கே இல்லை. வரலாம், தியானத்தில் அமரலாம். தாத்தாவிடம் கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைப்பதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. நாமும் நமது அகத்தை கொஞ்சமேனும் உணர்ந்து திருத்த வேண்டும். பிறகென்ன? மற்றவற்றை பரஞ்சோதி பாபா பார்த்துக் கொள்வார்.



இதோ..அன்றைய தினம் அடியார் ஒருவர் சிவ புராணம் பயாடிக் கொண்டு இருந்தார். அதுவும் தன்னிலை மறந்து, அந்த பரத்துடன் கலந்து என்பது அவரை பார்த்த போது புரிந்தது. இதோ. நம் தள உறவுகளுக்காக..பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா வின் திருப்பாதம் இங்கே தருகின்றோம். கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். நம் பாவத்தை துடைக்க இவர் போன்ற மகான்கள் நமக்குக் கிடைத்தது நமது பாக்கியமே.




அடுத்து ஸ்ரீலஸ்ரீ சத்குரு பகவான் வெங்கட்ராம சுவாமிகள்  13 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் பகிர உள்ளோம்.







ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

2 comments:

  1. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
    Replies
    1. குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி
      வழக்கம் போல் தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete