அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சதாசிவன் கோணா மலையேற்ற பதிவில் இரண்டு பதிவுகளை பார்த்து விட்டோம். சுமார் 5 கி.மீ தூரம் நடந்து மலையேற்றம், பின்னர் சில கி.மீ மலையிறக்கம். தொடர்பதிவில் மலையிறக்கத்தோடு நிறுத்தியிருந்தோம். பொதுவாக மலையாத்திரைகளுக்கு செல்லும் போது அவசரப்பட்டு செல்ல வேண்டாம். மெதுவாக செல்லுங்கள், பசுமையை ரசியுங்கள். கண்களில் பசுமை நிரப்பி, அதனை அப்படியே இதயத்திற்கு அனுப்புங்கள்.
ஏன் சித்தர் பெருமக்கள், மகான்கள் இது போன்ற மலைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒன்று அமைதி, இரண்டு பசுமை போர்த்திய இயற்கை. இது போன்ற திருக்கோயில்கள் சமதளப் பரப்பில் இருந்தால், அவ்ளோ தான் ..நீங்களே பார்த்திருப்பீர்கள். எத்துணை கோயில்கள் எப்படி இருக்கின்றது என்று? அதனால் தான் இது போன்ற மலை யாத்திரை உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் தெம்பு அளிக்கின்றது. மலை யாத்திரைக்கு செல்வதெற்கென சில விதிமுறைகள் உண்டு. அசைவம் குறிப்பிட்ட நாட்களுக்கு தவிருங்கள். கூடுமானவரை செல்லும் நாட்களிலாலாவது வேண்டாமே. தினசரி பூசை அவசியம். இயலவில்லை என்றால் யாத்திரை செல்லும் நாள் அன்றாவது மறவாது பூசை செய்யுங்கள். நெகிழி ..அதான் பிளாஸ்டிக் தவிர்க்கவும்.
கூடுமானவரை இது போன்ற யாத்திரைகளின் போது துணிப்பைகளை பயன்படுத்தவும்.
சரி. மீண்டும் யாத்திரையை தொடர்வோமா? மலையிறக்கத்தில் சில கி.மீ. தூரம் இறங்கிய பிறகு, வழி என்றொரு வழிகாட்டிப் பலகை கண்டோம். தரிசனத்திற்கான வழியை மட்டுமா நாம் இங்கு காண்கின்றோம். வாழ்க்கைக்கான வழியையும் இவர் காட்டுவார் என்ற நம்பிக்கை பிறந்தது.
அப்படியே கீழே இறங்க, அழகான நீர்வீழ்ச்சி , அருகிலேயே அன்பே சிவமாய் சதாசிவம். அனைவரும் சென்று குளியல் போட்டோம். சுமார் 30 நிமிடம் வரை நீரிலேயே ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் தான்
சிலர் அமர்ந்து தமக்குத் தெரிந்த யோகத்தில் ஈடுபட்டனர்
அங்கிருந்த மரங்களின் வேர்களைப் பார்க்கும் போது நமக்கு பிரம்மாண்டமாய் இருந்தது. சிவனாரின் சடை போல் உணர்ந்தோம்.
மதிய உணவை அங்கேயே முடித்து விட்டு, ஆனந்த குளியல் , பேரானந்த தரிசனம், தேவாமிர்தம் போன்ற உணவு என அனைத்தும் மகிழ்ச்சிக் கடலில் நம்மை ஆழ்த்தியது. பின்னர் சுமார் மதியம் 3 மணியளவில் மீண்டும் இறங்க ஆரம்பித்தோம்.
சுமார் 7 மணியளவில் மலையடிவாரத்தை அடைந்தோம். இரவின் மடியில் தவழ்ந்தது மீண்டும் ஒரு சுகானுபவம்.சொல்லில் அடங்கா யாத்திரையை நமக்கு தந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றியை இங்கே தெரிவித்து மகிழ்வுடன் நிறைவு செய்கின்றோம்.
TUT - சதுரகிரி யாத்திரை அறிவிப்பு
உதவலாம்.
18 சித்தர்களுக்கு வஸ்திரம், நெய் விளக்கேற்றி, அபிஷேகம் செய்து வழிபட உள்ளோம்.
- அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:
மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_5.html
சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html
No comments:
Post a Comment