"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, February 28, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. 

காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.

நம் தலத்தில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா 2018 மற்றும் 2019 அழைப்பிதழ் மற்றும் நிகழ்வின் துளிகள் பற்றி சொல்லி இருந்தோம். இன்றைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ் தந்து அனைவரையும் விழாவிற்கு அழைக்க உள்ளோம்.



சுமார் இரண்டாண்டிற்கு முன்னர் நம் தளம் சார்பில் எம் சகோதரர் இந்த யாகத்தில் 2018 ல் கலந்து கொண்டார். அன்று முதல் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் திரு. பாலா ஐயா அவர்களுடன் நமக்கு வழிகாட்டப்பட்டு வருகின்றது. அதன் பின்னர் ஜீவ நாடி உத்தரவின் படி கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் அமாவாசை தோறும் மோட்ச தீபம் ஏற்றி வருகின்றோம். இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு 2019 க்கான மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பும் நமக்கு கிடைத்தது. அப்போது திரு.பாலா ஐயா அவர்கள்  இம்முறை யாகத்திற்கு வருபவர்கள் வாழ்வில் கண்டிப்பாக அடுத்த கட்டம் நகர்வதற்கு ஆசி உண்டு என்று கூறினார்.

நாமும் சென்ற ஆண்டு யாகத்திற்கு காலை 10 மணி அளவில் சென்று பார்த்தோம். யாகம் முடிவில் கோ பூசை கண்டு அன்னதானம் பிரசாதம் உண்டு வந்தோம். அந்த நாளில் தான் எம் மண வாழ்விற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. என்னே! குருவின் கருணை!! அடுத்தடுத்த ஜீவ நாடி ஆசியின் படி சென்ற ஆண்டு ஜூன் மாதம் திருச்செந்தூரில் எமக்கு திருமணம் நடைபெற்றது. இப்போது நினைத்து பார்த்தாலும் எப்படி இது நடந்தது என்பது ஒரே ஆச்சர்யமாக உள்ளது. எல்லாம் குருவருளாலே என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதே போன்று மற்றொரு அகத்தியர் அடியவருக்கும் அன்றைய தினம் மண வாழ்விற்கு உத்தரவு கொடுத்து இன்று அவர்கள் ஒரு ஆண் பிள்ளையோடு இருப்பதை காண முடிகின்றது. இங்கே இருவரது ஆசிகளை தந்துள்ளோம்.இது போல் எத்துணையோ அன்பர்களின் வாழ்வில்  நம் குருநாதர் வழி நடத்தி வருகின்றார். சரி.இந்த ஆண்டிற்கான மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் தர விரும்புகின்றோம்.





இந்த அழைப்பிதழ் மூலம் குரு சரணம் பற்றினோம் அல்லவா? ஆம். குருவை எப்படி பற்ற வேண்டும்? கண்களில் ஒளியாக அவரை நிறைக்க வேண்டும். கண்களில் ஒளியாகி என்றால் காணும் அனைத்தும் குருவின் அருளாக என்று கொள்க. இதே போல் நாம் எண்ணும் எண்ணம் அனைத்திலும் குருவின் செயலாக கருத வேண்டும். எப்பிறப்பில் என்ன புண்ணியம் செய்தோமோ? நாம் அனைவருக்கும் நம்மை வழிநடத்த சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய், அன்பில் நின்று ,அகத்தின் ஈசனை உணர்த்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமதே ஓம் ஸ்ரீ அகத்தியர் கிடைத்து இருக்கின்றார்.இப்பிறவி விட்டால் மீண்டும் எப்பிறப்பு என்று தெரியமா நமக்கு. ஆம். நம் கண்ணீர் கொண்டு நம் குருநாதரின் தாள் பற்றுங்கள். நம் சிரசில் தினமும் குருநாதரை வைத்து கொள்ளுங்கள்.

நம் மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் 2018,2019 நம் தலத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஸ்ரீ வாஞ்ச கல்பித கணபதி ஹோமத்தில் ஹோமத் திருவிழா தொடங்கியது. அடுத்து ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ அகத்திய மகரிஷி ஹோமம், சர்வ இரட்சார்த்த அஸ்திர ஹோமம் என நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டிலும் சிறப்பான முறையில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா நடைபெற்றது.

இது நாமாக நடத்தும் ஹோமம் அன்று. நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ நாடியில் வழிநடத்தும் ஹோமத் திருவிழா ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீ அஷ்டம கணபதி ஹோமம், ஸ்ரீ கால பைரவர் ஹோமம், ஸ்ரீ நவக்கிரக தம்பதி சமேத ஹோமம் , ஸ்ரீ அகத்திய மகரிஷி ஹோமம், ஸ்ரீ பத்ரகாளி ஹோமம் நடை பெற உள்ளது. இந்த ஆண்டில் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா ஞாயிறு அன்று வருகின்றது.எனவே அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.


ஹோமத்திருவிழா முடிவில் சுமார் 1000 பேருக்கு குறையாமல் அன்னதானம் நடைபெறும். முடிந்தவர்கள் பொருளுதவி செய்யலாம். இல்லையேல் தங்கள் உடலுழைப்பை தந்து குரு சேவை செய்யும் படி வேண்டுகின்றோம்.



2018 மற்றும் 2019 ஆண்டில் நடைபெற்ற ஹோமத் திருவிழா காட்சிகள் கீழே தருகின்றோம். மீண்டும் கண்டு அருள் பெறுங்கள்.

2018 ஆம் ஆண்டில் 

குருவருள் பற்றிட இந்த யாகம் காட்டியது.




அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. அந்த இடம் முழுதும் யாகத்தீயின் அருளில் மிளிர்ந்து கொண்டிருந்தது. காணவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. பூக்களின் வாசத்தில், யாகத்தீயின் வெம்மையில் ஐந்து புலன்களும் ஒடுங்கியது. உடலுக்கு மட்டுமே தினமும் உணவை கொண்டிருக்கின்றோம். நம்மையும் அறியாமல் உயிருக்கான உணவு இந்த யாகத்தில் கிடைத்து. உயிர் உணர்வு பெற, மனோ லயம் பெற்றதை உணர்ந்தார்கள்.






மாசி மக சிறப்பு நாளில், தீர்த்தமாடி, ஹோமம் பார்ப்பது என்றால் சும்மாவா? குருவருளோடு இறையருளும் கிடைத்தால் தான் இது போன்ற நிகழ்வில் நாம் கண்டு கேட்டு உணர முடியும். அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழு அன்பர்களுக்காகவே இந்த சிறப்பு பதிவு என்ற யாம் எண்ணுகின்றோம். மீண்டும் மீண்டும் ஹோம நிகழ்வுகள் இங்கே.




அடுத்த யாகம் நம் அகத்தியருக்குத்  தான்.


நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

என்று உண்மை நிலை காட்டி, நம்மை வாழ்விக்க வந்த குருவின் பொற்பதம் அடையும் நிலையில் அகத்திய ஹோமம் நடைபெற்றது.







நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார். அகத்தியம் என்றால் என்ன? அது சத்தியம் தான். சத்தியம் என்றால் என்ன? அது அகத்தியம் தான் . அகத்திய அடியார்களை சோதனைக்கு உள்ளாக்கி, சத்தியம் நிலைபெற செய்வது அகத்தியமே சத்தியம், சத்தியமே அகத்தியம் என்று உணர்த்தவே.





பின்னர் சர்வ இரட்சார்த்த அஸ்திர ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத சிவா சஹஸ்ர நாம அர்ச்சனை , ஸ்ரீ மாதா லோபாமுத்ரா தேவி சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷி அபிஷேகம், புஷ்பாஞ்சலி என விழாக் கோலம் பூண்டது. ஹோமத்தில் காலை 8மணி முதல் காலை உணவாக இட்லி,பொங்கல்,பூரி,கேசரி என தேவாமிர்த சுவாமியை உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.




இறுதியில் அனைவருக்கும் ஹோம பிரசாதமாக திருநீறு,அகத்தியர் மகரிஷி அருள் வழங்கும் காட்சிப் படம் அடங்கிய பை வழங்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. நமக்கு பிரசாத பை அனுப்பி வைத்தார்கள். குருவருளினால்  இந்த ஹோமம் சாத்தியப்பட்டது. திருவருளினால் இந்த ஹோமம் அருளப்பட்டது. இந்த ஹோமத்திற்காக இரவு, பகல் பாராது உழைத்த அத்துணை நல் உள்ளங்களுக்கும், பொருளுதவி செய்து நமக்கு உற்றதுணையாய் இருந்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் வாழ்வில் மென்மேலும் உயர,சித்தர் பெருமக்களின் ஆசி வேண்டி பிரார்த்தித்து, இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம்.





2019 ஆம் ஆண்டில் 















 அந்த இடம் முழுதும் யாகத்தீயின் அருளில் மிளிர்ந்து கொண்டிருந்தது. காணவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. பூக்களின் வாசத்தில், யாகத்தீயின் வெம்மையில் ஐந்து புலன்களும் ஒடுங்கியது. உடலுக்கு மட்டுமே தினமும் உணவை கொண்டிருக்கின்றோம். நம்மையும் அறியாமல் உயிருக்கான உணவு இந்த யாகத்தில் கிடைத்து. உயிர் உணர்வு பெற, மனோ லயம் பெற்றதை உணர்ந்தார்கள்.







அங்கே ஒரு ஓரமாக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் நம் தல அன்பர்களுக்காக சங்கல்பம் செய்தோம்.


ஹோம காட்சிகள் நம்மை வெகுவாக ஈர்த்தது. பொதிகையடி பாபநாசத்தில் சாஸ்தா ஆலயத்தில் இது போன்ற இயற்கை சூழல் நம்மை இன்னும் உரம் போட்டது.

































பூராணாகுதி இடப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்ட காட்சிகள் இங்கே தருகின்றோம்.





தாளமும், மேளமும் , நாதஸ்வரமும் என மங்கல இசை ஒலிக்க, அந்த ஹோம மூலிகை வாசத்தில், சாஸ்தாவின் அருளில் இன்னும் அந்த ஹோமம் நம் உடல் சிலிர்க்க வைக்கின்றது.














அடுத்து அன்னை லோபாமுத்ரா சமேத அகத்தியருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.











அகத்தியரின் அருளில் திளைத்தோம்.



  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!




ஆம். அன்றைய தினம் நெஞ்சார அகத்தியரை மனதுள் வைத்தோம்.



அடுத்து கோ பூஜை நடைபெற்றது.



















எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.
மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷட் வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் மேலானவளும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் உயிர்களையும் படைத்து காத்து ரட்சிப்பவளானா தேவி மனோன்மணியான பராசக்தியின் அம்சமே கோமாதா என்கிறது கோமாதா மகாத்மியம்.





கோ பூஜை மிக மிக உயர்ந்த பூஜை ஆகும். நாம் முதன் முதலில் பாலா ஐயாவை சந்தித்த போதும் பௌர்ணமி யாகமும், கோ பூஜையும் சின்னாளபட்டியில் கண்டோம். அதே போல் தான் அன்றைய தினமும் கண்டோம்.








அடுத்து மீண்டும் அகத்தியர் தரிசனம் பெற்றோம்.











அடுத்து அன்னதானம் பாபநாசம் கோயிலில் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.சும்மா சொல்ல கூடாது..? என்ன ருசி. குருவின் அருளாலே அந்த ஜீவ அமிர்தம் உண்டோம். இந்த யாகம் நமக்கு குரு சீடர் பரம்பரை பற்றி சில செய்திகளை உணர்த்தியது.

யாகம் என்றால் வெறும் யாகம் மட்டுமல்ல. அதனோடு சேர்ந்து கோ பூஜை, அன்னதானம் போன்றவற்றை செய்ய வேண்டும் போன்ற செய்திகளை உளவாங்கி அங்கிருந்து நாம் முழுமை பெற்றோம்.

மீண்டும் அடுத்த மாசி மக கும்ப பௌர்ணமி யாகத்திற்கு நாம் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அதனால் தான் கடைசி நிமிட ஏற்பாடாக சென்று வந்தோம். அகத்தியரின் அருள் வாக்கின் படி, இந்த யாகம் எம் வாழ்வின் திருப்புமுனையாகவே அமைந்தது.வழிநடத்தும் குருவின் பொற்பாதம் சரணம் அடைகின்றோம்.

நம் தளம் சார்பில் இந்த யாகத்திற்கு நம்மால் இயன்ற தொகையை நேரில் வழங்கினோம். பொருளுதவி செய்த அனைவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னதானத்திற்கு அரிசி வாங்கிக்கொடுத்த திரு.பத்ம குமார் அவர்களுக்கு இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

2 comments:

  1. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
    Replies
    1. குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி
      நன்றி ஐயா

      Delete