"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, May 31, 2019

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்


அனைவருக்கும் வணக்கம். 


இன்று வைகாசி  பரணி   நட்சத்திரம். சித்திரை பரணியில் சிறுத்தொண்டர் நாயனார் பதிவோடு நம் 
புதிய தளத்தை ஆரம்பம் செய்தோம். இன்று வைகாசி பரணியோடு ஒரு மாதம் கடந்திருக்கின்றோம். வெறும் நாட்களை நாம் கடத்த விரும்பவில்லை. ஏதாவது இந்த சமுதாயத்திற்கு உதவும் வகையில் ஒரு சிறு எறும்பு செய்யும் பணியைத் தான் நாம் இதுவரை செய்து வருகின்றோம். நம் புதிய தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2500 எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் அகத்தியர் ஆயில்யம் பூசை சிறப்பாக நடைபெற்றது.  நாம் நம் தளம் சார்பில் கொடுத்த சிறு தொகையில் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயிலில் சிவ தாளம் காண சென்றோம். இன்றைய பிரதோஷ தரிசனத்தில் நாமும் அதனை இசைத்தோம். இதெல்லாம் நடக்கும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் குருவருள் நமக்கு வழி நடத்தி வருகின்றது.

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.







இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று கழற்சிங்கன் நாயனார்   பற்றி சிறிது உணர்வோம்.

    "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத்தொகை.

கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.



பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனே, கழற்சிங்க நாயனார் என்பது ராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி நூல் தகவல். இராஷ்டிர கூட அரச மரபில் வந்த சிறந்த சமண பக்தரான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா தான் தண்டிக்கப்பட்ட பட்டத்துஅரசி என்பதும் ராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி முடிவு.

சற்று விரிவாக காண்போம்.

 கழற்சிங்க நாயனார், பல்லவ மன்னர்களின் குலத்தின் வழி வந்தவர். சிவபெருமானின் மீது அளவற்ற அன்பு கொண்ட இவர், தன்னுடைய அன்றாடப் பணிகளில் எது விடுபட்டாலும், சிவ வழிபாட்டை தவறாது செய்து விடும் சிறந்த சிவ பக்தர் ஆவார். சிவ அருளின் காரணமாக நாட்டையும் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களையெல்லாம் வென்று வாகை சூடி பொன்னும், பொருளும் பெற்றார். அவற்றையெல்லாம் இறைவனின் ஆலய வழிபாட்டிற்கும், அடியார்களுக்கும் வழங்கி வந்தார்.

இந்த நிலையில் கழற்சிங்க மன்னருக்கு திருவாரூரில் கோவில் கொண்டிருக்கும் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார். திருவாரூரில் உள்ள எம்பெருமானின் கோவிலை அடைந்ததும், பிறைசூடி அருள் பாலிக்கும் ஈசனை மனமுருக வேண்டினார். சிரம் தாழ்த்தி வீழ்ந்து வணங்கினார். பின்னர் இறைவனின் அருள்வடிவத்திலே தன்னை மறந்து, கண்ணில் நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்க பக்தியிலே மூழ்கிப்போனார்.

அந்த நேரத்தில் கழற்சிங்க நாயனாரின் பட்டத்து அரசியானவர், திருக்கோவிலை வலம் வந்து அங்கிருந்த மண்டபங்களைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு வலம் வரும் வேளையில் மணி மண்டபத்தில் சிலர், இறைவனுக்கு அணிவிப்பதற்காக மலர்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருப்பதை அரசியார் கண்டார். கண்ணை கவரும் வண்ணத்துடனும், கருத்தைக் கவரும் நறுமணத்துடனும் இருந்த அந்த மலர்களை கண்டதும் அரசிக்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமணம் வீசும் மலர்களைக் கண்டதும், தன்னிலை மறந்தார். அங்கிருந்த ஒரு மலரை எடுத்து மூக்கின் அருகே வைத்து முகர்ந்துப் பார்த்தார்.

 மணி மண்டபத்தில் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அடியார்களில், செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அடியவர்களுக்கும், ஆண்டவனுக்கும் யாராவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்தால் அதனை உடனே கண்டிப்பார், இல்லாவிடில் தண்டிப்பார். அப்படிப்பட்ட செருத்துணை நாயனாருக்கு, அரசியின் செயலைப் பார்த்ததும் கடும் கோபம் வந்தது. இறைவனுக்கு அணிவிக்கும் மாலைக்காக தொடுக்க வைத்திருந்த மலரை முகர்ந்து பிழை செய்தவர், அரசி என்பதைக்கூட அவர் சிந்தனைச் செய்யவில்லை. தவறு என்பதை அறிந்ததும் தான் வைத்திருந்த வாளால், அரசியின் மூக்கை வெட்டினார்.

பூவினும் மென்மையான பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது சாய்ந்தாள். இந்தச் செய்தி, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னருக்கு எட்டியது. மன்னர் அரசியிடம் விரைந்து வந்தார். நிலத்தில் துவண்டு விழுந்து துடித்துக் கொண்டிருந்த அரசியாரின் நிலையைக் கண்டு மன்னனின் நெஞ்சம் பதைபதைத்தது.

‘அஞ்சாமல் இந்தக் கொடிய செயலைச் செய்தவர் யார்?’ என்று கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டார்.

அந்த அச்சுறுத்தும் குரலோசையைக் கேட்டு, ‘மன்னா! இச்செயலை செய்தது நான்தான்’ என்று துணிந்து கூறினார் செருத்துணை நாயனார்.

உடலில் சிவ சின்னத்துடன், சைவத் திருக்கோலத்தில் நின்றிருந்த செருத்துணை நாயனாரைப் பார்த்ததும் மன்னன் ஒருகணம் சிந்தித்தான். ‘சிவனடியார் தோற்றத்துடன் காணப்படும் இவர், இச்செயலை செய்யும் வகையில் என் மனைவி செய்த பிழைதான் என்னவோ!’ என்று எண்ணியவர். அதுபற்றி அந்த அடியவரிடமே கேட்டார்.

‘அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன்காரணமாகவே அவரது மூக்கை நான் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது’ என்றார் செருத்துணை நாயனார்.

மன்னர் மனம் கலங்கினார். இரு கரம் கூப்பி செருத்துணை நாயனாரை வணங்கியவர், ‘ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை’ என்று கூறியபடியே தன்னுடைய உடைவாளை கையில் எடுத்தார். மேலும் கழற்சிங்க நாயனார் கூறுகையில், ‘கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!’ என்று கூறியவர், அத்துடன் நில்லாமல், சட்டென்று அரசியின் மலர் கரங்களை வெட்டினார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவ பக்தி கொண்ட மன்னருக்கு தலைவணங்கினார் செருத்துணை நாயனார்.

அப்போது சிவபெருமான், உமா தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சியவர், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார்.

சிவபக்தியும், சிவ அடியார்களை பணிந்தும் வாழும் கழற்சிங்க நாயனாரை, அனைவரும் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் சிவ பெருமானின் திருவருளால், சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html


எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html


 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

சித்த மருத்துவம் - கலிக்கம் மற்றும் நசியம்

அன்பர்களுக்கு வணக்கம்...

 இன்றைய நவீன காலத்தில் ஆன்மிகமும்,மருத்துவமும் இன்று பல்வேறு நிலைகளை தொட்டு விட்டது .இருப்பினும்  நாம் தத்தளித்து 
கொண்டிருக்கின்றோம். என்ன தான் நவீன யுகம் வந்தாலும் நம் பாரம்பரியம் மற்றும் பண்பாடே நம்மை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் 
இந்த பதிவின் மூலம் நாம் சித்த மருத்துவத்தின் இரு வகையான மருத்துவ முறைகளை காண இருக்கின்றோம். 
அவை முறையே கலிக்கம் மற்றும் நசியம் என்பது ஆகும்.
 கலிக்கம் - தோல் நோய்களுக்கு கண்கள் வழியாக மருந்து அளித்தல்
வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை.காரணம் ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும்!!!
கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர்  பாரம்பரியமாக  கையாண்டு வந்த சில அரிய   மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால் விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொரியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறது. தோல் நோய் உள்ளவர்கள்  முசக்காத்தான் இலை, குப்பைமேனி இலை, வேப்பிலைமூன்றும் சம அளவில் வைத்து 10 மிளகுடன் அரைத்து 2 நாளைக்கு ஒரு தடவை இரவில் பூசிக்கொள்ள வேண்டும்.

அவசியம் அசைவம். கத்தரிக்காய், புளி தவிற்க  வேண்டும். ஒருவர்  மூன்றுமுறை மருந்திட்டு நோய் நீக்கம் பெறலாம்.  திண்டுக்கல் சித்த வைத்தியர்  திரு. கயிலை முத்துக்கிருஷ்ணன் அவர்கள்  இந்த சேவையை தம் தந்தையாரின்  காலத்திலிருந்து இலவசமாக செய்து வருகிறார்கள் . தற்போது அருட்தந்தை வேதாத்தரி  மகரிஷி  அவர்களின்  அருளாசியோடு மாதம் முழுவதும் இந்த சேவையை அனைத்து மன்றங்களிலும் மனநிறைவோடு ஆற்றி வருகிறார்கள்.
கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.
இந்தக் கண்ணில் விடும் மருந்துகள் கண்ணில் உள்ள நோய்களைக் குணமாக்குவதோடு,இரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலப்பதன் மூலம்
1)உடலில் ஏறிய விஷம்,
2)வர்மம்,
3)வாதம் 80,
4)நெடு மயக்கம்(கோமா),
5)மூளையில் ஏற்படும் இரத்த உறைவு(அதன் மூலம் ஏற்படும் பக்க வாதம்)
ஆகியன தீரும்.

நாங்கள் சைதாப்பேட்டை மனவளக்கலை மன்றத்தில் இந்த மருத்துவ முறையை கடந்த 3 முறை செய்து உள்ளோம். இந்த சேவையில் சைதை மன்றத்தின் பணி பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை. நேர்த்தியான அணுகுமுறையில் மாதம் முதல் ஞாயிறு அன்று இந்த இலவச 
சேவை நடைபெற்று வருகின்றது. தற்போது ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மகன் திரு சதிஷ் ஐயா இந்த சேவையை ஆற்றி வருகின்றார்கள். எனவே அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி தங்கள் உடல் நலம் காக்கும்படி கேட்டுக்  கொள்கின்றோம்.இத்துடன் முந்தைய நிகழ்வின் படங்களை இணைத்துள்ளோம்.






Place:
Government Higher Secondary School, Chinnakammiampatty, Jholarpet,Chennai

அரசுமேல்நிலைப்பள்ளி, சின்னகம்மியாம்பட்டு, ஜோலார்பேட்டை, சென்னை
Time:
First Sunday of Month 4 Pm to 6 Pm

முதலாவது ஞாயிறு மாலை 04.00 முதல் 06.00 மணி வரை
Cont:
94438 97694
Place:
Sky Yoga&Meditation Centre, Vazhga Valamudan Illam, no 48/18 Jones Road, Opp Subiksha Super Market, Saidapet, Chennai- 600015

ஸ்கை யோகா மற்றும் மெடிட்டேசன்மையம், வாழ்கவளமுடன் இல்லம்,  எண் - 48/18 ஜோன்ஸ்ரோடு, சுபிக்ஷா சூப்பா் மார்க்கெட் எதிரில், சைதாப்பேட்டை, சென்னை-600015
Time:
First Sunday of Month 7.00 Pm to 9.00 Pm

முதலாவது ஞாயிறு மாலை 07.00 முதல் 09.00 மணி வரை
Cont:
94441 02603, 9080888883,9566888883
Place:
Nanganallur Manavalakkalai Mandra Arakkattalai, Teachers Colony, 10/12 First Street, Nanganallur Chennai – 620114

நங்கநல்லூா்மனவளக்கலைமன்றஅறக்கட்டளை, ஆசிரியா்காலனி, 10/12 முதல்தெரு, நங்கநல்லூா், சென்னை - 620114
Time:
First Sunday of Month 11.00 Am to 12.00 Noon

முதலாவது ஞாயிறு காலை 11.00 முதல் 12.00 மணி வரை
Cont:
98400 41303
Place:
Pallikaranai Sky Centre, 187, Velacherry Main Road, Near Ishwarya Kalyana Mandapam, Pallikaranai, Chennai – 620100

பள்ளிக்கரணைஸ்கைமையம், 187, வேளச்சேரிமெயின்ரோடு, ஐஸ்வா்யாகல்யாணமண்டபம், பள்ளிக்கரணை, சென்னை - 620100
Time:
First Sunday of Month 12.00 Noon to 1.00 Pm

முதலாவது ஞாயிறு மதியம் 12.00 முதல் 01.00 மணி வரை
Cont:
9445114486
Place:
Jain Mahal, Periya Maniyakarar Theru, Chenkalpattu – 603002

ஜெயின்மகால்பெரியமணிகாரா்தெரு, செங்கல்பட்டு – 603002
Time:
First Sunday of Month 5.30 Pm to 6.30 Pm

முதலாவது ஞாயிறு மாலை 05.30 முதல் 06.30 மணி வரை
Cont:
99761 42615 , 94431 76236
Place:
No 4, R.E.Nagar, 1st Cross Road, Maruthur Kesari Jain Hall, Near Vetri Driving School, Porur, Chennai- 620116

எண் 4, ஆா்..நகா், 1வதுகுறுக்குசாலை, மருதூா்கேசரி ஜெயின்ஹால், வெற்றி ஓட்டுநா்பள்ளி அருகில், போரூா், சென்னை - 620116
Time:
First Sunday of Month 6.30 Pm to 8.00 Pm

முதலாவது ஞாயிறு மாலை 06.30 முதல் 08.00 மணி வரை
Cont:
94441 39824. Email: tendollarshipping@gmail.com
Place:
Mathur MMDA, 2377/D, 3 rd Main Road, Chennai – 600068

மாத்தூா்எம்.எம்.டி., 2377/டி, 3வதுமெயின்ரோடு, சென்னை - 600068
Time:
Second Sunday of Month 7.00Am to 8.30Am

இரண்டாவது ஞாயிறு காலை 07.00 முதல் 08.30 மணி வரை
Cont:
99411 06793

நசியம்-  மூக்கிற்கு மருந்து இடுதல் 
 மூக்கில் இடும் முக்கிய நசிய (மூக்கிலிடும் மருந்து) மருந்தை இங்கே காண்போம்.
நசியம் என்பது மூக்கிற்கு மருந்திடுவதாகும்.இரு மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு முறையாக நசியம் செய்து வந்தால் தலைக்கனம், தலைவலி, கழுத்து வலி, நரம்பு வலி, வாய்க் கோணுதல் போன்ற வாதம்(முக வாதம்), பக்க வாதம், காக்காய் வலிப்புப் போன்ற கடுமையான நோய்கள் நம்மை அணுகா, வேலைப் பழுவினாலும் வரும் கோபம், பரபரப்பு, போன்ற உணர்வுகளாலும் தலைவலியில் மன இறுக்கம் (STRESS) உண்டாகிறது.
இதனால் பலவித பிணிகள் உண்டாகின்றன.பிணிகளில் 70% மன இறுக்கத்தினால் உண்டாகின்றது. இரத்த அழுத்தம், இருதய நோய் சம்பந்தமான வியாதிகளும் மன இறுக்கத்தினால்தான் உண்டாகின்றன.மன இறுக்கம் தலைப்பாகத்தில் உண்டாக்கும் வெப்பத்தினால்(காப்பி, டீ, குளிர் பானங்கள் குடிப்பதனாலும்,வெந்நீரில் குளிப்பதனாலும்,இதே விளைவுகள் உண்டாகின்றன.) இரத்தக் குழாய்களின் கன பரிமாணம்(DENSITY) மாறுபட்டு அவைகளின் சுருங்கி விரியும் (ELASTICITY) தன்மை பாதிக்கப்படுகின்றது.
 அல்லோபதி மருத்துவர் நோயாளர் அவரிடம் சென்றால் என்ன செய்கிறது என்று நோயாளரிடம் கேட்பார்.ஆனால் ஒரு தேர்ந்த சித்த மருத்துவர்(எனெனில் நன்கு நாடிப் பரிசோதனையில் தேர்வதற்கே குறைந்தது நான்கு வருடங்கள் ஆகும்) உங்களுக்கு இதெல்லாம் செய்கிறதா?இந்த வகை நோய் இருக்கிறதா?உடலின் இந்த இடத்தில் பிரச்சினை என்பதை புட்டு புட்டு வைப்பார்.நாடிப் பரிசோதனையில் கால் பங்கு வியாதி,சித்த மருத்துவரிடம் வந்துவிடும்.மேலும் அரைப் பங்கு மருந்தால் தீரும்.மீதமுள்ள கால் பங்கு செய்யும் தர்மத்தால்தான் தீரும் என்று அகத்தியர் கூறுகிறார். 
சுருங்க கூறின், 45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்யவேண்டும். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, ஒற்றைத்தலைவலி போன்றவை இந்த சிகிச்சை  முறையால் குணப்படுத்தலாம்.
இந்த நசியம் சிகிக்சை முறையானது  சைதாப்பேட்டை மனவளக்கலை மன்றத்தில் மாதத்தில்  மூன்றாம் ஞாயிறு அன்று நடைபெற்று வருகின்றது. வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.



மேலதிக விபரங்களுக்கு :
இதே போன்று கூடுவாஞ்சேரி அறிவுத்திருக்கோயிலில் மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று மாலை 6 மணி முதல் கலிக்கம் சிகிச்சை நடைபெற்று வருகின்றது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறவும்.



இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் உடல் நலம் மேம்படுத்த வேண்டுகின்றோம். சில விஷயங்கள் கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்கப் பெறா. அது போன்றது தான் நமது சிகிச்சை முறை. இலவசம் தானே என்று நினைக்க வேண்டாம். நமக்கு இலவசமாக கிடைக்கின்றது. ஆனால் பின்புலத்தில் பொருளாதார உதவி தேவை. வாய்ப்புள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவதும் நன்று.

 மீண்டும் சிந்திப்போம் 
மீள்பதிவாக:-

 வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html



அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் 

காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே....



என்ற சித்தர்கள் காப்புடன் பதிவை தொடங்குவோம். இன்று எங்கு பார்த்தாலும் சித்தர்கள் என்ற வார்த்தை மிக எளிதாக காண கிடைக்கின்றது. சித்தர்கள் யார்?சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன? மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு என்ன?  என இது போன்றுஇன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின்  அருளால் வரும் பதிவுகளில் நாம் உணரும் செய்திகளை பகிர உள்ளோம். இது ஒரு புறமிருக்க..ஏன் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள்,ரிஷிகள், குருக்களை வணங்க வேண்டும் என்ற மற்றொரு கேள்வியும் எழுகின்றது . மகான்களை வணங்குவதால் நம் தலையெழுத்து மாறிவிடுமா என்ன?

பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள்.பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.

ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ தருகிறார் .


என்ன நடந்தது ..? இப்போதும் அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறதுஆனால் சுமை தெரியவில்லை ..! பாரம் குறைந்து விட்டது.இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்...!!

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ வினை ஒழியும் என்பது மற்றுமோர் அசைக்க முடியாத உண்மை அவர்கள் சமாதியிலும் கூட இன்றும் இது நிகழ்கிறது ..!

இதை வார்த்தைகளால் சொன்னால் புரியாது.அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் ..!

சித்தர்களை,மகான்களை தரிசிப்பதால் எவ்வளவு பெரிய மாற்றம் நம்மில் உருவாகின்றது என பார்த்தீர்களா?

சரி...இனி போகர் பற்றி சிறிது உணர்வோம்.

போகர் (Bogar, Boyang Wei) பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று தமிழர்களால் நம்பப்படுகிறது. இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற என்னற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்கு கிடைக்கப்பெருகின்றன. உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாடாணங்களை கொண்டு போகர் வடிவமைத்தார் என்று நம்பப்படுகிறது. 




 பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன்சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.

மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில்பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள்.

இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகி விட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார்.

அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார்.

 அந்த முனிவர் ” போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும்துணையாக இருக்கும் என்று கூறி பேசும்சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார். 



சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது, ஆச்சரியத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விட்டு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது.

சிவன் சித்தத்தை தெளியவைத்தார், என்று நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின்கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.

பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர்.

மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். 



வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார்.

இன்றும் பழனிமலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்அருள் பெறுவர்.

சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும். அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும். கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.

செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும். 




இதோ..போகர் குருபூஜை பற்றிய தகவல் கீழே 



குருநாதர் ஶ்ரீ மத் போகநாதர் ஜெயந்தி விழா 1.6.2019 சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு அபிஷேகம் ஶ்ரீ மத் போகர் ஜீவசமாதி மலைகோயில் ( பழனி)





மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

Thursday, May 30, 2019

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019)

 அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் பல அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது கேரளா நிவாரண சேவைக்கு அகத்தியர் வனம் மலேசியா குழுவோடு இணைந்து பல தளங்களில் பங்கெடுத்தோம். அனைவருக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் வைகாசி  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.

சென்ற மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா?


விகாரி வருட முதல் அமாவாசை அன்றைய தினம். நாம் அன்று முழுதும் அன்னசேவை செய்ய விரும்பினோம்.நம்முடைய விருப்பம் சரியானதாக, நியாயமானதாக இருந்தால் அது நிறைவேறும் என்பது மீண்டும் அன்று நிரூபணமானது.


அன்று காலை சுமார் 30 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் போன்ற பகுதியில் வழங்கினோம்.





அன்று மதியம் எங்கு நம் அன்னசேவை தொடர்வது என்று சிறந்தித்தோம்.


இதோ..நம் வள்ளலார் கோயில் நினைவிற்கு வந்தது.


உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும் அன்று மதியம் அன்னசேவை செய்தோம்.






அடுத்து அன்று மாலை மோட்ச தீப வழிபாட்டிற்கு தயாரானோம்.


இதோ..அகல் விளக்குகள் நீரில் கழுவி தூய்மை செய்யப்பட்டது.

கீழே பூஜைக்கான ஆயத்தப்பணிகள் தயார்.




தீபத்திரிகள் தயார் செய்யப்பட்ட காட்சி.


இதோ..சித்தர்களின் அருளாலும், மாமுனி அகத்தியரின் கருணையாலும் முதல் தீபம் ஏற்றப்பட்ட காட்சி



அடுத்து ஒவ்வொரு அன்பராக தீபங்களை ஏற்றினார்கள். நமக்கு தீபம் ஏற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நமக்கு இந்த பூசையை முன்னின்று நடத்த வாய்ப்பும் இல்லை.ஆனால் குருவின் அருளால் இது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.







தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு ஆரம்பமானது. இந்த மோட்ச தீப வழிபாட்டில் பற்பல நன்மைகள் நடைபெற்று வருகின்றது. சில அன்பர்கள் நம்மிடம் இது பற்றி சொல்லும் போது நமக்கு மிக மிக மகிழ்வாக உள்ளது. அனைத்தும் குருவின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.












பார்க்க, பார்க்க வழிபாட்டில் நமக்கு சில உன்னதம் கிடைக்கின்றது. தீபங்கள் மிக மிக நேர்த்தியாக ஒளிர்ந்தது கண்டோம். அப்படியே சென்று அகத்தியர் தரிசனம் பெற்றோம். நெஞ்சார நினைத்தோம்.




நெஞ்சார துதித்தோம்.







இங்கே நீங்கள் பார்க்கும் இந்த தம்பி நம்மை ஆச்சர்யப்படுத்தினார். பொது வெளியில் நாம் மேற்கொண்டு சொல்ல முடியவில்லை. ஆனால் இவர் மீண்டு வருவார் என்று நமக்கு நம்பிக்கை உள்ளது.



அடுத்து பூஜையில் மலர் தூவி பிரார்த்தனை செய்ய வேண்டும்.அதற்கு மலர்கள் கொடுக்கப்பட்ட காட்சிகள்


அடுத்து அன்னசேவை தான். தயிர் சாதமும், புளியோதரையும் தயார் நிலையில் இருந்தது.



எப்பொழுதும் நாம் எத்தனை பேருக்கு உணவிட்டோம் என்று கணக்கில் வைப்பது கிடையாது. அன்றும் அப்படி தான். ஆனால் நெகிழி பயன்பாடு தடைவிதித்ததால், நாம் தட்டு வாங்கினோம்.



சரியாக 100 பேருக்கு அன்று உணவு வழங்கினோம். அனைவரும் சிறு சிறு குழுவாக அமர்ந்து , சிரித்து,பேசி, மகிழ்ந்து உணவு சாப்பிட்டார்கள். வழக்கமாக உணவு கொடுக்கும் போதே, அரக்க பறக்க செல்வார்கள்.இம்முறை அப்படி இல்லை. நிதானமாக அனைவரும் சாப்பிட்டு சென்றார்கள்.



நமக்கும் மனதிற்கு திருப்தியாக இருந்தது.




அன்றைய தினம் வழிபாடு முடித்து, அனைவருக்கும் நன்றி கூறி மோட்ச தீப வழிபாட்டை முழுமை செய்தோம். மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் வைகாசி  மாதம் 19 ஆம் நாள் (02/06/2019) ஞாயிற்றுக்கிழமை மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.


தொடர்புக்கு : 7904612352
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html


 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html