"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 16, 2019

வைகாசி பௌர்ணமி வழிபாட்டை வரவேற்போம்

அன்பின் உறவுகளே...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தற்போது தான் முழுமதி வழிபாடு என்ற ஒரு பதிவிட்டு இருந்தோம். நாமும் கடந்த ஓராண்டாக பௌர்ணமி வழிபாட்டை திருஅண்ணாமலை கிரிவலம் என்ற அளவில் செய்து வருகின்றோம். வானத்தில் உள்ள மதியைப் பார்த்து இன்று அம்மாவாசையா? பௌர்ணமியா? என்று சொன்னவர்கள் நம் தாத்தாக்கள். இணைய யுகத்தில் வாழும் நாம், வானம் பார்த்து இது போல் சொல்ல முடியுமா என்றால் அது கேள்விக்குறியே ? நம் இயற்கை வழிபாட்டில் சில வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம் என்பதே உண்மை.

நிலா/ நிலவு/ சந்திரன் என்று சொன்னால் தெரியாத குழந்தைகள் மூன் (moon ) என்று சொன்னால் விளங்கும் வகையில் இன்று வளர்கின்றன. இதில் பௌர்ணமி என்றால் என்ன? என்று கேட்கும் காலமும் வரும். அந்த வகையில் ஞாயிறு வழிபாடு, பௌர்ணமி வழிபாடு என்று சொல்லிக்கொண்டே செல்லலாம்.இயற்கை வழிபாட்டில் ஞாயிறு போற்றுதல் ஆதி வழிபாடாக இருந்திருக்க வேண்டும். ஆதிவாரத்தை ஓய்வு நாளாக இல்லாமல் ஆன்ம விழிப்பை தரும் பிராத்தனை நாளாக கொள்வோம்.
அந்த வகையில் சித்திரை பௌர்ணமி வழிபாடு பற்றி இங்கே நாம் தொகுக்க விரும்புகின்றோம்.

சின்னாளபட்டியில் உள்ள ஞானக் குடிலில் நாம் சித்திரை மாத பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள குருவருள் நமக்கு அருள் வழங்கினார்கள். ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் இங்கே குடிலில் யாகம் நடைபெறும். யாகத்தைத் தொடர்ந்து  அகத்தியர் அபிஷேகம், கோ பூசை, அன்னதானம் என பல சேவைகள் இங்கே உண்டு.

நமக்கு தெரிந்து யாகம்,ஹோமம் அனைத்தும் பகல் நேரத்தில் தான் கண்டிருப்போம். நேரத்தை முகூர்த்தம் என்று சொல்வார்கள். அதில் பிரம்ம முகூர்த்தம் சிறப்பு. காலை 4 முதல் 6 மணிக்குள் இதனை குறிப்பிட்டு சொல்வார்கள்.ஆனால் இங்க யாகமானது ரிஷி முகூர்த்தத்தில் அதாவது அதிகாலை 3 மணி அளவில் நடைபெறும். யாகம் முடித்து காலை 6 மணி அளவில் அகத்தியருக்கு அபிஷேகம் நடைபெறும். 

சரி...யாகத்திற்கு செல்வோமா?














































பூரணாகூதி சமர்ப்பித்த போது 



குருவே சரணம் 







ஒவ்வொரு இணைப்பு படத்தையும் மெதுவாக பாருங்கள். யாகத்தில் அருள் நிலை, அதனை செய்கின்ற விதம் என அனைத்தும் தெளிவாக புரியும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் அகத்தியர் குடிலில் இது போன்ற பௌர்ணமி யாகம் நடைபெற்று வருகின்றது. நமக்கு கிடைத்த இந்த மாத அறிவிப்பு இதோ.


Sri Lalita a Shasranama Homa will be performed at Shri Agastiyar Gana Kudil ,cinalapati on 18/05/2018 3Am.You are requested to attend the ceremony and obtain blessings and benediction of Mother Godess Shri Lalithambika.

மேலும்  முழு நிலவு வழிபாடு கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. விபரங்கள் கீழே



இடம்: அகத்தியர்/18 சித்தர்கள்  ஆலயம், பட்டிவிநாயகர் திருக்கோயில் வளாகம்,
ஐஓபி காலனி, மருதமலை, கோயம்புத்தூர்.

நாள்: 18.05.2019, சனிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு

கட்டளை: தினேஷ் பொற்செழில், ஐஓபி காலனி

மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சித்தர்கள் அருளாசி பெறுக!
அகத்தியர் மெய்யன்பர்கள் குழு,
ஐஓபி காலனி பேசி: +91 86107 33409
 கருத்தப்பாண்டியன் M K
சித்தமருத்துவர்         

ஓம் அகத்தியர் அய்யா திருவடிகள் போற்றி!


அடுத்த பதிவில் அகத்தியர் ஆராதனை தொடரும்.


மீள்பதிவாக :-
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html
    அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html


No comments:

Post a Comment